Saturday 20 April 2013

நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 22

நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 22

தடங்கலுக்கு வருந்துகிறோம்

இந்த கால்கட்டத்தில் பொங்கலுக்கு கொடைக்கானல் தொலைகாட்சி நிலையம் துவங்க காத்திருந்தோம். சென்னையில் மட்டும் தெரிந்த தொலைக்காட்சி தரிசனம் இனி எங்கள் பகுதிக்கும் தினசரி மாலை 6 மணி முதல் 9 மணி வரை ஒலிபரப்பாகும்

கிரேஸி மோகனின் மாது சீனு, எஸ்வி சேகரின் தேவை ஒரு மாப்பிள்ளை , மௌலியின் போயிங் 747 மிகப் பிரபலமான நாடகங்ளாயின. வெள்ளிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு ஒளியும் ஒலியும் அவ்வபோது தடங்கலுக்கு வருந்துகிறோம்   என்ற போர்டுடன் வலம் வரும் . எதிரொலியில் டிவி நடராஜன் அவரது உதவியாளர் படிக்கும் கடிதங்களுக்கு பதில் கூறுவார். இவர் தொட்டியத்தை சேர்ந்தவர் என்பது பின்னாளிலேயே அறிந்துகொண்டேன்.

இந்த அற்புதமான வளர்ச்சி எனது டைம் மேனேஜ்மென்டுக்கு சவால் விடுத்த்து.  தமிழில் நிகழ்ச்சிகள் வர ஆரம்பித்த்தால் எங்கள் வீடுகளில் டிவி பெட்டி வர ஆரம்பித்த்து. முதலில் வேணி மாமி வீட்டீல் கருப்பு வெள்ளை டிவி பெட்டி வர அனைவரும் நாடக்ங்களை பார்க்க் அங்கு கூடிவிடுவோம். பின் சிவாஜி வீட்டிலும் அப்படியே ஒவ்வொருவர் வீடாக கருப்பு வெள்ளை டிவி பெட்டிகள் குடிபுகுந்தன.

டிவிக்களில் இரவு பகல் மேட்சுக்களாக வண்ண ஒளியில் கிரிக்கெட் நடைபெற ஆரம்பித்த்து. வக்கீல் பாலு வீடுதான் எங்கள் ஒளிபரப்புக் கூடம் கிரிக்கெட் என்றால் வக்கீல் பாலு வீட்டிற்கும் டென்னிஸ் என்றால் வக்கீல் லக்ஷ்மி நாராயணன் வீட்டிற்கு எதிரே இருந்த சத்திய நாராயணன் செட்டியார் வீட்டிற்கும் சில வருடங்களாக படையெடுக்க ஆரம்பித்து இருந்தோம். போரிஸ் பெக்கரும் , இவர்ன் லெண்டிலும் டென்னிஸை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள்.

பிரபலமாக இருந்த இலங்கையின்  ரூபவாஹினி செய்திகள்  மவுசு குறைய ஆரம்பித்தன ,கருப்பு வெள்ளை டிவி என்றாலும் பிறர் வீட்டுக்கு செல்லும்  படையெடுப்புகள் குறைய ஆரம்பித்தன.

ஒருவழியாக இந்த முறை +1ல் தேர்வு பெற்றேன். +2 என்பதால் கிரிகெட் வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் என்று மாறியது. விடுமுறை நாட்களில் ஸ்பெஷல் கிளாஸ் இருந்த்தோ இல்லையோ கிரிகெட் இருந்த்து. மற்றபடி என் தேடலும் , கேள்விகளும் எனக்குள்ளேயே இருந்த்து. அது உண்மையிலேயே தேடல் என்று கூட செர்ல்ல இயலாது.

என்னதான் படிக்கவேண்டும் என்று இருந்த போதும் மற்றவைகளை தவறவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அதிலும் முக்கியமாக கிரிக்கெட். அதனால் ஞாயிறு அன்று டியுஷனும் இல்லாமல் போனது மிக சௌகரியமாகப் போனது.

எங்கள் ஊர் அரசு கல்லூரியில் புதிதாக சேர்ந்த புரபசர் ஒருவர் , செட்டியார் சமுகத்தை சார்ந்தவராக இருந்த்தால் த்ங்களது புதிய வீடு கிரகப்பிரவசேத்திற்கு எனது தந்தையை பார்க்க வந்திருந்தார். அப்போது என்னைப் பற்றி அவரிடம் கூறியிருந்த்தால் , தன்னை வந்து பார்க்கச் சொல்லிவிட்டு போயிருந்தார்.

என்னைப் பற்றியும் , எனது படிப்பை பற்றியும் ,டியுஷன்களை பற்றியும் அறிந்து கொண்ட பிறகு தாவரவியல் மற்றும் விலங்கியல் படிப்புகளுக்கு தான் உத்வி செய்வதாக கூறி எனது பாடப் புத்தக்க்ஙகளை பெற்றுக் கொண்டு ஒரு வாரம் கழித்து வந்து பார்க்கச் சொல்லி விடைகொடுத்தார். 

வாரத்தில் 4 நாட்கள் அவரிடம் நானும் , முரளியும் சென்றோம். மிக எளிமையாக அதே சமயம் புரியும் படி சொல்ல ஆரம்பித்த்தால் அப்பாடங்களின் மீது ஈடுபாடு வரலாயிற்று. முக்கியமாக அவர் படிக்க் நான் நோட்ஸ் எடுக்க என்ற முறை அதிகம் இல்லாத்து ஆனந்தமாயிற்று.

இயற்பியலும் , வேதியலும் பாபு சார் உண்மையிலேயே மிக அற்புதமாக டியுஷனில் நட்த்தினார். ஏனோ பள்ளியில் இதே பாடங்களை ஆசிரியர்கள் நடத்தும் போது கண் விழித்துச் சொப்பனம்தான் நான் கண்டு கொண்டிருந்தேன் ” . அது இன்னமும் புரியாத புதிராகவே இருந்த்து

கணித்த்தை மோகன் டியுஷனில் கவனித்துக் கொள்ள , நாமகிரி அம்மன் கோவிலுக்கு சென்று அமர்ந்து கொள்ளவும் தடைபடவில்லை. பாபு சாரின் டியுஷனுக்கு காலையிலும் , கணிதம் மற்றும் தாவரவியல், விலங்கியல் படிப்புகளுக்கு மாலை வேலைகளிலும் அதுவும் ஒருநாள் விட்டு ஒருநாள் என இருந்த்தால் நேரம் மிச்சமாயிற்று.

பள்ளியில் பாடங்கள் நடத்தும் போது கண் விழித்து உறங்கினாலும் லேப் வகுப்புகள் உற்சாகம் தந்தன. நான் என் அப்பாவை விட அதிகம் படித்து பட்டம் பெறுவதற்காக ஒரு சில எலிகளும், கரப்பான் பூச்சிகளும் தங்களை உயிர் தியாகம் செய்தன

முதன் முதலில் ரத்த்த்தைக் கண்டு மயங்கி விழுந்த அந்த நண்பன் இன்று கையில் கத்தியோடு அலையும் மருத்துவராகி மக்களின் நோய் மயக்கத்தை போக்குவதை காணும் போது  வாழ்க்கை ஆச்சரியமாகித்தான் போகிறது. யார் யார் எப்படி ஆகிறார்கள் என்பது யாருமே நிர்ணயிக்க முடியாது என்பதைப் போல தோன்றுகிறது.

டியுஷனுக்கு கோட்டையில் இருந்து புவனா என்று ஒரு தோழி வந்தாள் . அவளையும் மற்ற தோழிகளையும் வைத்து நண்பர்களுடே ஆளுக்கு ஆள் கலாய்த்துக் கொண்டு இருப்போம். ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த அவளோ படிப்பே கண்ணும் கருத்துமாய் இருப்பாள்.

சீரியஸாக நாங்கள் யாரும் யார் பின்னாலும் சுத்தவில்லை யென்றாலும் அவர்கள் எங்கள் கவனத்தை ஈர்க்க தவறவில்லை. அதில் இநத் புவனா (புவனேஸ்வரி) ரொம்ப நேர்மையாக படிப்பில் மட்டும் கவனமாக இருப்பாள். மிக சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவள். சினிமாக்களில் காட்டுவது போல படிப்பு , பிறரிடம் அதிகம் பேசாமை , ரொம்ப பவ்யம் , பருவத்திற்கேற்ற எளிமையான அழகு என இருப்பது போதாதா எங்களைப் போன்ற மாணவர்களுக்கு கலாய்ப்பதற்கு.

மேலும் நாங்களோ வீட்டில் இருந்து தப்பிக்க டியுஷன் செல்பவர்கள். ஆசிரியர்களோ (யாராயினும் சரி) மனப்பாடம் செய்விப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தார்கள். எப்படியோ பெயில் ஆகிவிடக்கூடாது என்பதற்காக குறைந்த பட்ச மனப்பாடத்தை ஏற்றுக் கொண்டவர்கள். 
 
அதே சமயம் அவளது குடும்ப சூழலும், குடும்ப நபர்களையும் , அவளையும் எங்கள் நண்பர் குழு நன்கு அறியும் என்பதாலும் டியுஷனுக்கு வரும் போதும் , போகும் போதும் கலாய்ப்போமே தவிர மற்றபடி காதல் கீதல் என்று செல்லும் அளவிற்கு எங்களில் எவருக்கும் தைரியம் இல்லை, நோக்கமும் இல்லை. அதை நாங்கள் நன்றாகவே புரிந்து வைத்திருந்தோம்.

இந்த ஒரு விஷயத்தில் பாபு சாரும் , மோகன் சாரும் கூட கவனமாகவே இருந்தார்கள். அவர்கள் மேல் அள்ப்பரிய நம்பிக்கை குடும்பத்தினருக்கு இருந்த்து. இத்தனைக்கும் பாபு சார் இஸ்லாமை பின்பற்றுபவராகவும் , மோக்னோ பிராமண குடும்பத்தை சர்ர்ந்தவராகவும் இருந்தார்கள்.

ஆனால் ஒரு போதும் மதங்களை பற்றி இருவருமே பேசியதில்லை. தங்களது ஆசாரத்தையும் , மதகோட்பாடுகளையும் கைவிடாமல்  அதேசமயம்  அவர்கள் கொண்டிருந்த முற்போக்கு சிந்தனைகள், நாங்கள் இரண்டைய்யுமே புரிந்து கொள்ள உதவியது என்றால் அது மிகையாகாது.

இந்த சமயத்தில் கணேஷோ அல்லது சாலை மாணிக்கமோ அல்லது வேறு யாரோ விளையாட்டாக, புவனாவின் பெயரை எனது நோட்டில் சில பக்கங்களில் கிறுக்கி இருந்தனர். நாங்கள் இப்படி ஒருவருக்கு ஒருவர் செய்வது வழக்கம். அவர்களுக்கு தெரியாமல் இப்படி ஏதாவது எழுதிவைத்து விட்டு , எதேச்சையாக அவர்களது நோட்டை பார்ப்பது போல பார்த்து , இதை கண்டுபிடித்ததாக மற்றவர்கள் முன் காட்டி அவர்களை கலாய்ப்பது வழக்கம்.  இந்த சமயங்களில் அவர்கள் தான் அப்படி செய்யவில்லை என்பதை நிறுபிக்க படும் தடுமாற்றங்களை ரசித்துக் கொண்டு இருப்போம். 

உண்மை வெளிப்பட்டவுடன் அடுத்தவர் சிக்கிக் கொள்வார். இதெல்லாம் இயல்பாக மனதில் எந்த கல்மிஷமின்றி ரசித்த வாழ்க்கை நொடிகள். அப்படி பட்ட எங்களது இந்த குறும்புகள் , எங்கள் எதிர்காலத்தை குறித்து கவலைகள் கொண்டிருந்த எங்களது பெற்றோர்கள் கையில் கிடைத்தால் ,,,,,,,,,, ஆனால் இந்த ஒரு விஷயத்தை என் அம்மா எப்படியோ பார்த்திருந்தார்கள் .

இதனால் என் அம்மா நான் ஏதாவது இப்படிப் பட்ட் பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டேனா என சந்தேகம் கொண்டது சில நாட்கள் கழித்துதான் எனக்கு தெரிய வந்த்து அதுவும் எதேச்சையாக.

என்னிடம் நேராக கேட்காமல் என்மீது நம்பிக்கையின்றி பிறரிட்ம் கேட்டது எனக்கு கோபம் வந்த்து. அப்போது நேரடியாக அவரிடம் செர்ன்னேன். நான் அப்படி செய்ய வேண்டும் என நினைத்தால் யாரையும் கேட்க வேண்டிய அவசியமும் இல்லை , அதற்காக பயமும் இல்லை. ஆனர்ல் என்மீது நம்பிக்கையின்றி இந்த மாதிரி பின்னால் உளவு வேலைகள் பர்ர்ப்பதும். அல்லது சந்தேகம் கொள்வதும் எனக்கு பிடிக்காது.

அப்படி இனியொரு தடவை கேள்விபட்டேனாயாகில் என் முகத்தை தாங்கள் காணமுடியாது . உங்களிடம் சொல்லாமலே நான் வீட்டை விட்டு வெளியேறிவிடுவேன். அதுமட்டுமல்ல உன்னை ஏமாற்ற வேண்டும் என்று எண்ணினால் இங்கிருந்தே உனக்கு தெரியாதமாறு இதை செய்ய இயலும் ஆனால் எனக்கு விருப்பமில்லை என்று கூறினேன்.

கடுமையாக பேசியது அவர்களுக்கு வலித்திருக்க்க் கூடும் , ஆனால் அதைவிட வலி நான் அதிகமாக உணர்ந்த்தர்ல் சில நாட்கள் அவர்களிடம் பேசாமல் இருந்தேன். இது நான் பேசியதைக் காட்டிலும் அவர்களுக்கு அதிக வலியை கொடுத்த்து. இனிமேல் எப்போதும் இந்த மாதிரி பெண்கள் விஷயத்தில் என்னை சந்தேகபட்மாட்டேன் என்று உறுதி கூறினார்கள். அதோடு அதை மறந்தும் விட்டேன்.

ஆனாலும் இந்த ஒரு விஷயம் இன்றும் என்னிடத்தில் இருக்கிறது. என்னை சந்தேகபடுகின்றார்கள் என உணர்ந்தால் அந்த ஷணமே அவர்களிடம் இருந்து விலக ஆரம்பித்து விடுகிறேன். ஆனால் அதே சமயம் என் தவறுகளை நான் மறைத்திட விரும்பியதும் இல்லை . என் பார்வையில் சரியெனப் படும் விஷயங்களும் பிறர் தவறென சுட்டிக்காட்டிய போது மௌனமாக ஏற்றுக் கொள்ள முடிந்த்து. என்னை எனக்குள் ஆராய்ந்து கொள்ள முடிந்த்து.

நான் உண்மையை பேசினாலும் அது அடுத்தவருக்கு பாதிப்பை விளைவிக்கும் என்று உணர்கிற போது நான் பேசாமலேயே இருந்து விடுவதும் , அதனால் அந்த  தவறையும , பழியையும் சுமந்து கொள்வதும் கூட ஆனந்தம் தருகிறது. பிறர் என்னை எப்ப்டி பார்ப்பார்கள் என்ற கவலை ஏற்பட்டதில்லை. என்னை என் இறைவன் அறிவான் என்று சமாதானமாகிவிடுவேன்.  இது எனக்கு நனமையே அருளி உள்ளது.

பெரும்பாலும் வகுப்பில் நோட்ஸ்கள் எழுத முடியாமல் போய்விடுவதால் அவசியமானவற்றை கணேஷ் நோட்டை பார்த்து காப்பி அடித்துக் கொளவ்து வழக்கம். கணேஷின் கையெழுத்து டிராயிங் வரைவது போலவே இருக்கும். அடிக்கடி ஏதாவது ஒன்றை வரைந்து கொண்டே இருப்பான்.

வெகு காலம் கழித்து தற்போது அவனது பெயின்டிங்குகள் என்று பார்க்கும் போது அவை எனக்கு பெரிய ஆச்சரியம் அளிக்கவில்லை. மாறாக அவற்றை இன்றும் அவனுக்குள் உயிரோட்டமாக வைத்திருந்த்து சற்று ஆச்சரியம் அளித்த்து என்பேன். ஏனெனில் இன்போசிஸிஸ் , மைக்ரோசாப்ட் என்று உலகம் சுற்றி வந்து கொண்டிருக்கும் போது இதற்கும் அவன் சில மணித்துளிகள் ஒதுக்கி இருப்பதை எண்ணி பெருமைப்படுகிறேன்

உண்மையில் இதுதான் அவன். அதுவும் அவன் இன்னமும் வெளிப்படுத்தாத அவன். வெகுசில நெருங்கிய நண்பர்களே இதை அவனிடம் உணரமுடியும். இதே கம்பெனிகளில் பணிபுரியும் பலரை வாழ்க்கை எனக்கு இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த உயிரோட்டத்தை பலர் தொலைத்திருப்பதை நான் காண்கிறேன்.

டியுஷனில் அடிக்கடி தேர்வுகள் நடக்கும். அதில் மார்க் குறைந்தால் இம்போசிஷன் அதிகம் கிடைக்கும். இதற்காக பள்ளி இல்லாத காலங்களில் அங்கு சென்று விடுவோம். கையில் சாக்பீஸுடன் 8ம் வகுப்பு கூரை கொட்டகைக்குள் ஆளுக்கு ஒரு வகுப்பாக புகுந்து கொள்வோம் .  பல மணி நேர எழதி படித்த பிறகு முடிந்தால் சில ஓவர்கள் கிரிக்கெட் விளையாடி வீடு திரும்புவோம்.

அப்படி ஒரு வழியாக அரையாண்டுத் தேர்வை எழுதி முடித்தோம். 70 சதவிகித் மதிப்பெண்கள் பெற்றது எப்படியோ பெயில் ஆகாமல் பாஸாகிவிடுவோம் என்ற நம்பிக்கையை எனக்குள் அதிகப்படுத்தி இருந்த்து. மேலும் மேற்ப்டிப்பு குறித்து எல்லாம் எனக்கு பெரிய  நோக்கங்கள் இல்லை.

ஏதோ ஒரு டிகிரி பெற வேண்டும் என்பதும் சீக்கிரம் வேலை பெற்று வெளியூர் செல்வதால் இந்த கோவில் பணி மற்றும் புரோகிதங்களில் இருந்து தப்பிக்க முடியும் என்றே என் சிந்தனை இருந்த்து. உண்மையில் இதற்காகவே எப்படியாவது படித்து பாஸாகி விட வேண்டும் என்று விரும்பினேன்.

பெயில் ஆகி காலம் பூராவும் புரோகித்ம் என்று உட்கார்ந்து விட்டால்.............. அந்த எண்ணமே எனக்குள் வயிற்றை கலக்கியது. உண்மையில் புரோகித்தின் மேல் எனக்கு வெறுப்பு இல்லை. ஆனால் அந்த அற்புதமான விஷயத்தை ஈடுபாடு இன்றி செய்கிறார்கள் என்று எண்ணம் மேலோங்கி இருந்த்து. அவர்கள் கொடுக்கும் பணத்திற்காக நானும் அதை சப்போர்ட் செய்ய வேண்டுமா என்பதுதான் எனது போராட்ட்ம்

அதற்கு வேறு ஏதோ வேலை செய்து அதே பணத்தை பெற்றுவிடலாமே என்று தோன்றியது. மற்றபடி யாரும் இல்லா தனிமையில் கோவில் பணிகளில் மிக ஆனந்தமானேன். விக்ரக்ங்களை தேய்த்து அபிஷேகம் செய்யும் போது , அவை ஆனந்தமாக பளீரென மின்னலடிக்கும் விதமாக பளிச்சிட வேண்டும் என்பதற்காக கைகள் கீறலாகும் வரை தேய்த்துக் கொண்டிருப்பேன்.

மறுபடி டிசம்பர் மாத பனி பொழிய ஆரம்பித்த்து. மார்கழி கோலங்களும் , சாணியில் பூசணிப் பூக்களும் வீதியில் நடமாட ஆரம்பித்து இருந்தன. பெரும்பாலான வீடுகளில் லாந்தர் விளக்குகள் போய் மின் விளக்குகள் அலங்கரிக்க ஆரம்பித்து இருந்தன

இந்த சமயத்தில் 1987ம் ஆண்டு உலகப் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இந்தியா , இலங்கை மற்றும் பாகிஸ்தான் இணைந்து நடத்தியது. 
ஆலன் பார்டர் கோப்பையை வென்றார். இந்தியா கல்கத்தாவில் செமி பைனலில் தோற்ற வருத்த்த்தைக் காட்டிலும் பாகிஸ்தானும் கோப்பையை வெல்லவில்லை என்பதே மகிழ்ச்சியாக இருந்த்து. இந்த இனம்புரியாத துவஷேம் எதனால் எனக்குள் புகுந்த்து எனப்து புரியவில்லை.

ஆனால் இந்தியா பாகிஸ்தான் என்றாலே விளையாட்டை விட அவர்கள் நமது எதிரி என்கிற எண்ணத்தை நமக்குள் நம்மை அறியாமலே வெள்ளைக்காரன் விதைத்து விட்டு போயிருந்தான் . அதன் பலனை அவன் இன்னமும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறான் . நாமோ ...................

ஆனால் இவையெல்லாம் எங்கள் கிரிக்கெட்டை சிறிதளவும் பாதிக்கவில்லை. அரையாண்டுத் தேர்வு விடுமுறையும் , டியுஷன் விடுமுறையும் சேர்ந்த்தால் காலைக் குளிரில் கிரிக்கெட் விளையாடியது..

இந்த சமயத்தில் டிசம்பர் 24ம் நாள் காலை விளையாடி வரும் போது  செய்திகளில் எம்ஜிஆர் மரணச் செய்தி வாசிக்கப்பட்டது.  இந்திரா காந்தி இறந்த பொழுதுக்கும் தற்போதய நிலைக்கும் வித்தியாசம் நன்றாக உணர முடிந்த்து. வீதிகளில் ஆங்காங்கே இருந்த தொலைக் காட்சி பெட்டிகள் அவரைக் காட்டின.

அரசியல் கணக்குகள் அதிகமாயின. செல்வி ஜெயல்லிதா, நாவலர் நெடுஞ்செழியன், திருநாவுக்கரசு மற்றும் சாத்தூர் ராமச்சந்திரன் பத்திரிக்கைகளிலும் மக்களிடையேயும் வலம் வந்தனர். திருமதி ஜானகி ராமச்சந்திரன் முதலமைச்சரானார். அவருக்கு பக்கபலமாக திரு ஆர்எம் வீரப்பன் போன்றவர்கள் இருப்பதாக பாலாஜி பாவா கூறினார்.

சட்டசபையில் அமளி ஏற்பட்டு அமைச்சரவை கலைக்கப்பட்டது. பின்னாளில் நடந்தவைகளை அரசியல் வரலாறு என்னை விட நன்கு அறியும்.

இதே காலகட்டத்தில் முரளியின் அப்பா தவறினார். அவன் வீட்டிறகு சென்றிருந்தேன். அவன் மேலும் என்னோடு நெருக்கமானான்.
ஆனால் இந்த அரசியல் மாற்றங்கள் , சமுக நிகழவுகள் எங்களை அதிகம் பாதிக்கவில்லை. நாங்கள் கடமையே கண்ணாக கிரிக்கெட் விளையாடினோம்

எப்படியும் பாஸாகி விடுவோம் என்ற நம்பிக்கையும். எனது நண்பர்கள் ஒத்துழைப்பும் இருந்த்தால் , அதை விட இம்போசிஷன் எழுத முடியாத்த்தால் குறைந்த பட்சம் இயற்பியல் மற்றும் வேதியில் டியுஷன்களில் இருந்து விடுதலை பெற முடிவு செய்து , பாபு சாரிடம் முதலில் நேரடியாக சொன்னேன்.

இப்படி மனப்பாடம் செய்வது மதிப்பெண்களை கூட்டும் என்றாலும் அதற்காக நான் இந்த வாழ்க்கை கால கட்டத்தை இழப்பது கடினமாக இருந்த்து. அவருக்கு என் சிரம்ம் புரிந்த்து.

ஒத்துக் கொண்டார். டியுஷனில் இருந்து விடுதலை அளித்தார். அதே சமயம் எந்த சந்தேகம் என்றாலும் எப்போது வேண்டுமானாலும தொடர்ப்பு கொள்ளச் சொன்னார். இவரைப் போன்ற ஒரு அற்புதமான மனிதரை எங்கள் வாழ்வில் பெற்றமைக்கு நான் நன்றி கூறியே ஆகவேண்டும்

எங்கிருந்தோ வந்தான்
இடைசாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே
என்னதவம் செய்துவிட்டேன் 

அதன் பின் கணக்கு பாடத்தை தவிர மற்ற டியுஷன்களில் இருந்தும் விடுதலை ஆனேன். அதற்கு காரணம் கணக்கு டியுஷன் முடிந்தவுடன் நாமகிரி அம்மன் கோவிலுக்கு சென்று அமர்ந்து கொள்ளும் வாய்ப்பு இருந்த்தும், சுந்தரின் நையாண்டித்தனமும் ரசிக்க வாய்ப்பிருந்த்த்தும்தான்.

பாபு சார் என் வீட்டின் வழியாகத்தான் தினமும் செல்வார் என்பதால் என் அப்பாவிற்கும் நெருங்கிய நண்பரானார்.. ஒரு வழியாக 749 மதிப்பெண்கள் பெற்று +2வில் தேர்வு பெற்றேன். முதன் முதலாக ஸ்டெபி கிராப்பும் விம்பிள்டெனில் இறுதி போட்டியில் மார்டினா நவரெத்தினாவுடன் மோதினார். டென்னிஸ் பிடித்தமான விளையாட்டாகியது நான் விளையாடாவிட்டாலும்.

நான், முரளி, சாலைமாணிக்கம் மற்றும் கணேஷ் சேர்ந்து எங்களது மாநகரப் பயணத்திற்கு திட்டம் தீட்டினோம். ஒரு சுபதினத்தில் திருச்சி கோட்டைக்கு படையெடுத்தோம். நால்வரும் திருச்சி கல்லூரிகளில் அப்ளிகேஷன்கள் வாங்கி வருவது என்று முடிவு செய்தோம். இந்த பயணமே ஏதோ நாங்கள் அட்மிஷன் கிடைத்து படிக்கச் செல்வதைப் போன்ற பிரமையை ஏற்படுத்தியது,

அதைவிட வெளியூரில் சென்று படிக்கும் அளவிற்கு மதிப்பெண்கள் வாங்கியதாக் நான் நினைத்துக் கொண்டது என்னை மேலும் ஆனந்தபடுத்தியது. அதற்கு காரணம் என் சுற்றமும் நட்பும்தான்.

அவர்கள் இந்த 749 ஐ ஆஹா ஓஹோ என புகழ்ந்தார்கள் . எனக்கோ இது சாதாரண நிலையில் ஏதோ பாஸானதே பெரிசு என்று நினைத்து இருந்த போது இவர்கள் புகழ்ச்சி . நாம் ஏதோ ஒன்றை உண்மையாகவே சாதித்து விட்டோம் எனறு எண்ணத் தோன்றியது

நேஷனல் காலேஜில் சென்று முதலில் அப்ளிகேஷன் வாங்கினோம் . என்னுடைய மார்க்கை பார்த்துவிட்டு பிஎஸ்சி கணித பிரிவிக்கு அப்ளை செய்ய்ச் சொன்னார்கள் . ஒன்றுமில்லை 168 மதிப்பெண்கள் பெற்றிருந்தேன் மற்றவை எல்லாம் 100ல் இருந்து 140க்குள்தான்

அங்கிருந்து வயலுர் ரோடில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரிக்கு வந்தோம். அங்கிருந்து மிக அருகில் செயின்ட் ஜோசப் கல்லூரி என்றே நினைத்தோம். கிருத்துவ கல்லூரிகள் அருகருகேயே இருக்கும் என்று எண்ணினோம். கிமீ கணக்கு தெரியாத்தால் நடந்து செல்லும் தூரம் என்றே எண்ணினோம்.

ஒருவழியாக தில்லைநக்ரில் புகுந்து சத்திரம் பஸ் ஸ்டேன்ட் வந்த்டைந்த போது மாலை 4 மணி ஆகி இருந்த்து. அப்போதே வெகுநேரம் நடந்த்தாகவும் . அங்கிருந்து இங்கு வர டவுன் பஸ் வசதி உண்டு என்பதையும் உணர்ந்தோம். அப்ளிகேஷன் கவுண்டர் மூடும் சமயம் நெருங்கியிருந்த்து. அந்த கிளார்க்கோ கிளம்பும் அவசரத்தில் இருந்தார். சீக்கிரமா வரவேண்டியதுதானே என்று கேட்டார். நாங்கள் விபரத்தை சொன்ன போது , ஏற இறங்க பார்த்தார்.

ஆனால் எல்லா கதைகளையும பேசிக் கொண்டு , கண்ணில் தெரிந்த மலைக் கோட்டை கோவிலை பார்த்துக் கொணடே கணக்குகள் இல்லாது நடந்த கிராமத்தான்களாய் ஆனந்தம் அடைந்திருந்தோம், மாலை உச்சி பிள்ளையாரை தரிசித்து ஊர் திரும்பினோம்.

இதை பிற்பாடு நான் திருச்சி சென்ற பிறகு அங்கு சேர்ந்த நண்பர்களிடம் கூறிய போது வித்தியாசமாக பார்த்த்தார்கள். அதிலும் ஒருவர் அவ்வளவு தூரம் நடந்தா வந்தீங்க என்றார். அநேகமாக அது எங்கள் வீட்டில் இருந்து பள்ளி செல்லும் தூரம் அல்லது அதை விட இன்னும் இரு மடங்கு இருக்கலாம் , அவ்வளவுதான்.

முரளி ஈரோடு போக்குவரத்துக் கழக் பொறியியிற் கல்லூரியிலும், கணேஷ் நாமக்கல் அரசு கல்லுரியின் இயற்பியல் பாட்த்திலும் சேர முடிவெடுத்தார்கள். எனக்கும் அரசுக் கல்லூரியில் கணித பாடத்தில் இடம் கிடைத்திருந்தாலும் நாம்க்கல் புரோகித்த்தில் இருந்து தப்பிப்பதில் குறியாய் இருந்தேன்,

திருச்சி பிஷப் கல்லூரி தனது மாலை நேரக் கல்லூரியில் கணித பிரிவிற்கு இடம் அளித்து இருந்த்து. காலை நேரக் கல்லூரியில் சேரவேண்டுமெனில் மனப்பாடம் செய்யும் மங்காத்தாவாக இருக்க வேண்டும் என்பதை பின்னர் தெரிநது கொணடேன். நான்தான் இருக்கிற டியுஷனையும் நிறுத்தியவனாயிற்றே.

பாபு சார் உதவிக்கு வந்தார். என் அப்பாவை நேரில் பார்த்துசமாதானப் படுத்தி ஒத்துக் கொள்ள வைத்தார். என் பாட்டி தன் பென்ஷனில் இருந்து என் மாத செலவிற்கு ரூ 50 அளிப்பதாக பெரிய மனது செய்து ஆசீர்வதித்தார்கள். என் இன்னொரு பாட்டியான நரசு பாட்டியும் அவரது தம்பியுமான தாசு மாமாவும் தங்கள் வீட்டில் தங்கவைத்து சாப்பாடு போடுவதாக முன்வந்தனர்.

ஆனாலும் என் அப்பாவிற்கு மனமில்லை அதற்கு காரணம் கட்டணத் தொகை அதிகமாக இருந்த்து. 300 ரூபாய் சம்பளத்தில் குடும்பத்தை நடத்தி வருபவருக்கு இந்த கடன் தொகை மிக அதிகமாக இருந்த்து , அதுவும் என் அம்மாவிற்கு அன்றாட மருத்துவ தேவைகள் இருந்த்தால்.

அதை கேள்விப்பட்ட என் சித்தப்பா நடராஜன் , எனக்கான பணத்தை கட்டி அட்மிஷன் வாங்கிக் கொடுத்த்தோடு தன்னுடைய 3 பேன்ட் சர்ட்களை கொடுத்து ஆசீர்வதித்தார்.  பேண்ட்களை சிறிது செய்து கொள்ள வேண்டி ஆஸ்தான டெய்லரிடம் சென்றேன். 

இவர் கடைவீதிக்கு செல்லும் வழியில் ஒரு வீட்டின் திண்ணையில் கடை வைத்திருந்தார். பெரியசாமி என்ற பெயருக்கும் , இஸ்லர்ம் மார்க்கத்திற்கும் என்ன பொருத்தம் என்பதை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. ஆனால் இவர்தான் எனது சிறுவயது முதல் பெரும்பாலும எனது  டிரஸ்களை தைத்தவர். என் சித்தப்பாவின் பேண்டை நான் போட்டுக் கொள்ளும் வகையில் ஆல்டர் செய்து தந்தார். ஒருவழியாக காவிரிக் கரைக்கு பயணம் கிளம்ப தயாரானேன்.

மந்திரங்களில் இருந்தும் , புரோகிதங்களில் இருந்தும் தப்பித்த உணர்வோடு அந்த காவிரிக் கரையில் , மேல சிந்தாமணியின் மாதுலங்கொல்லை அக்ரஹாரத்தில் அடியெடுத்து வைக்க தயாரானேன்.

நான் தங்கப் போகும் அந்த கரையின் எதிர்புறம் சத்குரு /ஸ்ரீ பிரம்மா கொலு வீற்றிருந்த இடம் என்பதை நான் அறியாமலே கிளம்பினேன். என்னை சுமந்து கொண்டு பஸ் திருச்சிக்கு கிளம்பியது. நானோ விடுமுறையில் நடந்த நாமு அக்காவின் திருமணம், பாலாஜி பாவாவின் திருமணம் என சித்தூரிக்கும் கோவைக்கும் சுற்றியடித்த நினைவு அலைகளில் மூழ்கியிருந்தேன்

வாழ்க்கையின் மிக அற்புதமான தருணங்கள் அழகாக ருசிக்க என்னை அந்து பேருந்து அழைத்துச் செல்கிறது என்பதை நான் அறியாதவனாக இருந்தேன்.

என் நினைவையும , வாழ்வையும் அழகாக்கிய தெய்வங்களை சுமந்து கொண்டு மீண்டும் உலாவருவேன்.

அதுவரை காத்திருங்கள்..................................

2 comments:

  1. முதன் முதலில் ரத்த்த்தைக் கண்டு மயங்கி விழுந்த அந்த நண்பன் இன்று கையில் கத்தியோடு அலையும் மருத்துவராகி மக்களின் நோய் மயக்கத்தை போக்குவதை காணும் போது வாழ்க்கை ஆச்சரியமாகித்தான் போகிறது. யார் யார் எப்படி ஆகிறார்கள் என்பது யாருமே நிர்ணயிக்க முடியாது என்பதைப் போல தோன்றுகிறது.

    அருமையான பதிவு. நன்றி.

    ReplyDelete
  2. romba naal aayiruchu swami.. post pannave illa...

    ReplyDelete