Thursday 29 August 2013

நானே இருக்கிறேன் நானாய் இருக்கிறேன்

தவிக்கின்ற போது தானாய் வருகிறார்கள்
தருவதையெல்லாம் ஆகா ஓகோ என புகழ்கிறார்கள்
அன்பென்றும் அக்கறையென்றும் அனுதினமும் பேசுகிறார்கள்

சரியென்று காலம் கடந்தால்
எதிர்பார்ப்புகளால் ஏமாற்றங்களை நிரப்பிக் கொள்கிறார்கள்
என்னையும் பிறரோடு ஒப்பிட்டு ஏதேதோ கேட்கிறார்கள்
எல்லாவற்றையும் ஒதுக்கி ஓரத்தள்ளி
என் இயல்பில் நான் நின்றால்
ஏதோ காரணம்  கொண்டு  விலகிச் செல்கிறார்கள்

இயல்பே இல்லாதவன் நான்
என்பதால் காலத்தின் கையில் அனைத்தையும்
எடுத்துக் கொடுத்து விட்டு
இனிதே பயணித்துக் கொண்டிருக்கிறேன்

மனிதன்  செய்வதை  மட்டுமே  என்னால்  செய்ய முடியும்
மறந்தும்  தவறென்றும்  சரியென்றும்  பிரித்து போராடுவதில்லை
மற்றபடி  வேறுஎதுவும்  என்னிடத்தில்  தவறில்லை
மானுடர்  நீர்  கொள்கைகளையும்,  காரணங்களையும்
மூக்கு கண்ணாடியாய் மாட்டிக்  கொள்ளதிருந்தால் ...........


வானம் முழுவதையும் எல்லையாக்கினேன் அதன்
வண்ணங்கள் அனைத்தும் என் முகமாக்கினேன்
நதியின் நீர்சுழி போல கலைந்து
முட்டி மோதி , கரைந்து பின் காண்பவைகளை
காலத்தோடு கரைத்துச் செல்வது
கண்டிப்பாய் எனக்கு பிடிக்கும்
என்னை  நானே  முழுமையாய்  அறிந்ததிலா போதும்
எனக்குள்  முழுதாய்  நானிருக்கின்றேன்

வாழ்தலுக்காவே அனுக்கணமும் சாதலை நேசிக்கிறேன்
சாதலுக்காவே சலிக்காது நான் வாழ்கிறேன்
வாழ்தலும் சாதலும் பிரபஞ்ச போர்களத்தில்
அவரவர்க்கு அளிக்கப்படும் அற்புத வரம்
அனுபவித்தவர்க்கு மட்டுமே அது புரியும்


அந்த வரத்தை பெறவே இந்த யுக்தகளத்தில் நிற்கிறேன்
இந்த குருஷேத்திரத்தில் யுக்தம்  மட்டுமே  வரைமுறை
இங்கு  என்னை விட  என்  எதிரிக்கே  முக்கிய பங்கு
என் ஆயுதத்தை தீர்மானிப்பதில் இருந்து
என் போர்வியுகத்தை தீர்மாணிப்பது வரை
அவனே என்னை முழுமைப்படுத்துகிறான்

அவனே என்னை ஆசீர்வதிக்கிறான்
அவனே மரணத்தையும் வாழ்வையும் ஒரு சேர எனக்களிக்கிறான்
அவனே எனக்கு போர்முறையை கற்றுத்தந்தவன்
அவனே குருதி வலியை கொப்பொளிக்க காட்டியவன்
அவனே  எனக்கு  என்னை   காட்டியவன்
அவனை  நீங்கள்  எப்படி  வேண்டுமானாலும்  அழைத்துக்  கொள்ளுங்கள்
ஏனெனில்  அவனை  அழைக்கும்   உரிமையை  நான்  பெறவில்லை
வணங்கும்  வாழ்க்கையை  மட்டுமே  நான்  பெற்றுள்ளேன்

எதிரிலே  வந்ததால்  எதிரி  என்றழைத்தேன்
என்னுள்ளே  வாழ்வதால்  ஹிருதய  கமல வாசனாக்கினேன்
எல்லைகள்  தாண்டி விரிவதால்  என் குருநாதானாக்கினேன்

அவனோ  வருவதும் இல்லை   போவதும் இல்லை
தானே தனியனாய் தன்னிகரில்லா தலைவனாய்
தனக்குள்ளே சிக்கல்கள் நிரம்பியவர்கள் மட்டுமே
தானே வருகிறார்கள் தானே போகிறார்கள்

வருபவரையும் நான் தேர்வு செய்யவில்லை
செல்பவரையும் நான் தடுத்து நிற்பதில்லை
வருவதற்கும் போவதற்கும் என்னால் கவலைப்படமுடியாது
வந்தவர் செல்வதும், சென்றவர் வருவதும்
என்றளவும் இயற்கை


வந்ததை உணர்ந்ததால் செல்வதற்கு சித்தமாய் இருக்கிறேன்
செல்லும் வரையிலும் , சென்ற பின்னரும்
வந்தவருக்கும் சென்றவருக்கும்
எனதன்பு கலந்த நன்றி சுமந்து

நானே இருப்பேன் நானாய் இருப்பேன்

No comments:

Post a Comment