Monday 4 December 2017

Turn the page and learn the work

டிசம்பர் 5
அது 1990ம் ஆண்டு
இந்தியன் வங்கியின் சிங்காரப்பேட்டை கிளையில் முதன் முதலாக வருகை பதிவேட்டில் கையெழுத்து இடுகிறேன்.
சங்கர்லால் , மணிவண்ணன் , ராஜகோபால் ஆகியவர்களோடு நான்காவது குமாஸ்தாவாக
ராமலிங்கம் உதவியாளராகவும் எப்போதும் புன்னகைக்கும் தங்கமணி தற்காலிக ஊழியராகவும் இருந்தார்கள்

அங்கிருந்த புகழ் பெற்ற அய்யர் ஹோட்டலில் காலை உணவு எடுக்கச் செல்லும் போது எமெனேரும் வாகனமாம் எருமை மாடு மிரண்டு வந்து தூக்கி வீசியிருந்தது. கிரிக்கெட் பயிற்சி (விக்கெட் கீப்பரும் கூட )அதன் கூர்மையான கொம்புகளை திசை திருப்பியதால் குடல் கிழிபடலில் தப்பித்தேன். தூக்கி வீசியது என்னைத்தான் என்றாலும் நால்வராக சென்ற நாங்கள் ஆளுக்கொரு திசையில் பிரிந்திருந்தோம்.

பின் அலுவலகத்திற்கு வந்து தனகோடி எனும் மேலாளர் முன்னிலையில் கையெழுத்துப் படலம் .

இன்னுமொறு அலுவலரும் இருந்தார் அவரும் தஞ்சாவூர் காரர். அவரும் ராஜகோபாலும் பாங்க் ஆஃப் தஞ்சாவூரில் இருந்து இணைந்தவர்கள்.

எல்லோரும் சூழ்ந்திருக்க கையெழுத்து போட தயாராகிறேன்.

இருப்பா . பகவான வேண்டிகிட்ட மொத கையெழுத்தை போட ஒரு சேர சங்கர்லாலும் ராஜகோபாலும் சொல்ல.
ஒரு ஷணம் இதுகாறும் என் வாழ்வில் பயணித்த அனைவருக்கும் கண்களை மூடி நன்றிகளை கூறினேன்.

பணக்காகிதங்களை சேமிக்கவே தெரியாத எனக்கு சேமிப்பு கணக்கில் இடம் அளிக்கப்பட்டது.  ராஜகோபால் . சங்கர்லால் , மேலாளர் தனகோடி , ராஜகோபால் ஆகியோர் ஒரே வயதுடையோர். (40+)

சங்கர்லால் விமானப்படையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். அற்புதமான மனிதர். சர்குலர் (சுற்றறிக்கைகள் )எது வந்தாலும் தவறாது படித்து தனது அறிவை ஆழமாக்கிக் கொள்பவர்.  கிரிகெட் , பாட்மிட்டன் , ஷட்டில் என மைதான விளையாட்டுகளில் ஆர்வம் . இரு பெண் குழந்தைகளின் தந்தை.

ராஜகோபாலுக்கு இங்கு மாற்றலாகி வந்த பிறகு அவரது மனைவி கருவுற்றிருந்தார்கள் கடைசி வரை இங்கேயே வாழ்ந்துவிட்டார்

மணிவண்ணனுக்கு ஒரிரு மாதங்களுக்கு முன்புதான் குழந்தை பிறந்திருந்தது.

ஆக இருக்கையில் அமர்ந்தேன். பக்கத்தில் ராஜகோபால். அவருக்கும் எனக்கும் பார்த்தவுடன் பிடித்துப் போனது வகை. காரணம் அவர் ,நான் , அலுவலர் காவிரி கரை பழக்கம் உடையவர்கள். ஒன்றுமில்லை கும்பகோணம் கொழுந்து வெத்தலைதான்.

மேலும் புகையிலை சேர்க்காதவர்களும் கூட...

என்ன படிச்சிருக்க ?
அக்கவுன்ட்ஸ் படிச்சிருக்கியா ? இது ராஜகோபால்

சார் ஈவினிங் காலேஞ்தான் . கணக்கு மெயின் . அக்கவுன்ட்ஸூம் உண்டு. எப்படியோ ஒருதடவை அரியர் வைச்சி பாஸ் போட்டுட்டாங்க.

அதென்ன பாஸ் போட்டுடாங்க .

கரெக்டா 35 வாங்கினா போட்டது தெரியாதா சார் .

வெடிச்சிரிப்பு மத்தப்பாய் அனைவரும் இணைந்தனர்

பரவாயில்லை ஜோக்கா பேசறயே.

உண்மை பேசறதே ஜோக்காகி போன இத்தேசத்தில இப்படியாவது சந்தோஷமா இருப்போமே சார்.

சரி சொல்லு செக் , டிமாண்ட் டிராப்ட் , கிரிடிட் , டெபிட் இதாவது தெரியுமா ?

இன்டர்வியூலயே இதெல்லாம் தெரியாதுனு சொல்லிட்டேனே. டிரியினிங் கொடுத்தா கத்துகுவேன் அப்படினு சொன்னேனே. அவங்க இங்க பிராஞ்சுக்கு தகவல் சொல்லலையா சார். அப்பாவியாய் நான்.

மறுபடி சிரிப்பு. சரி கவுண்டர் டைம் ஆகுது. நான் சிம்பிளா ஒன்னு சொல்லி தர்றேன். சந்தேகம் வந்தா கேளு.

பணம் எடுக்க வந்தா லெட்ஜர்ல இந்த பக்கம் எழுது

பணம் போட்டாங்கன்னா இந்த பககம் எழுது. இதுக்கு நேர்மாறா அவங்க பாஸ்புக்ல எழுது.

இவ்வளவுதானா . இதுக்கு எதுக்கு சார் அத்தனை டிபிட் கிரிடிட் எல்லாம். தமிழ்ல பாருங்க எவ்ளோ சுலபமா இருக்கு. கேட்டது இன்னமும் நினைவில்

முக்கியமா சந்தேகம் வந்தா , கேட்கறதுக்கு முன்னாடி பக்கத்துல இருக்கற அக்கவுண்டல நாங்க எழுதியிருக்கறத பாரு. அதுவும் புரியலன்னா அப்புறம் கேளு.

ட்ர்ன் த பேஜ் லேர்ன் த வொர்க்

ஒரு வாசகம்னாலும் திருவாசகமா சொல்லிட்டு போயிட்டீங்க ராஜகோபால்

உங்க கிட்ட சொன்ன மாதிரியே வங்கியோ , ஈஷாவோ எங்கயுமே இவரை வைச்சி என்ன பன்றதுனு யோசிக்கறதுக்கு முன்னாடி (சரியான சமயத்துவ டென்டுல்கரும் நினைவு படுத்தினார் ) ரிசைன் (நிறைவாய் நிறைந்து வெளியே வந்துட்டேன் சார் ) பண்ணிட்டேன் சார்

இதோ அடுத்த ஒரு இலக்குக்கு இன்னும் இரண்டு வருசம் இருக்கு. 50 வயது வரை ஏதோ ஒரு வகையில் யாருக்கேனும் பரோபகாரமாக இருப்பேன் அதன் பின் எனக்காக மட்டுமே என் ஆரோக்கியத்தையும் ஆனந்தத்தையும் கொண்டாடிக் கொண்டு அடைந்த நிறைவை பரிமாறிக் கொண்டு என்கிற என் கனவு.

இன்னும் எனக்கு எதுவும் தெரியாது.
அதனால்தான் உங்கள் வாசகம் உயிரோட்டமாய்.

அன்று லெட்ஜரை திருப்பி பார்த்து கற்றுக் கொள்ள கற்று கொடுத்தீர்கள். அதை விளையாட்டிற்கும் அங்கிருந்து வாழ்க்கையிலும் கூட விரிவு படுத்திக கொண்டேன் யான்.

அதை பார்த்து ஆனந்தப் படுவதற்குத்தான் தாங்கள் இவ்வுலகில் இல்லை.

இந்த நாள் இனிய நாள்

இதையும் எழுத வாய்ப்பு தந்த நாள்

Saturday 2 December 2017

ஒரு சிறு விளக்கம்

வீடு வாடகைக்கு எடுப்பது குறித்த ஒரு சிறிய விளக்கம்

1. பலரும் இந்த வீட்டின் இரு பகுதிகளையும் வாடகைக்கு எடுப்பதன் மூலம் உடனடியாக டியுஷன் சென்டர் மற்றும் நூலகம் போன்று உருவாக்க அடியேன் திட்டமிட்டிருப்பதாக நினைத்து கேட்டிருக்கிறார்கள்

2. இதன் இன்னொரு பகுதியையும் சேர்த்து வாடகைக்கு எடுப்பதன் மூலம் இப்படியான ஒரு படியை , சேவைப் பணியை நோக்கி நமது அன்பர் குழுவை நகர்த்த ஒரு வாய்ப்பு ஏற்படும் என்பதைத்தான் குறிப்பிடுகிறேன்

3. முதலில் வாடகைப் தொகை செலுத்துவதற்கே நிரந்தரமாக ஒரு 30 பேர் கொண்ட குழுவாது மாதம் ரூ 500 உரிய காலத்தில் அனுப்பிடல் வேண்டும்.

4. கடந்த வருடம் இதே போன்ற முயற்சியை அடியார் சங்க மூலமாக துவக்கினேன். எத்தனை பேர் வாக்கு அளித்தனர். எத்தனை பேர் செய்து கொண்டிருக்கின்றனர் என்பது அனுபவம்.

5. இப்படியான சூழலில் வீட்டு உரிமையாளரிடம் பேசிய பிறகு வீட்டில் குடிபுகுந்த பிறகு அடியார் சங்கத்தால் வாடகையை செலுத்த இயலாத சூழல் ஏற்படின் நிர்வாகிகள் தங்கள் கைகளில் இருந்து என்னிடம் சொல்லாமலே செய்து வரக் கூடிய சூழல் உருவாகும். அவர்கள் அப்படித்தான். இந்த சூழல் உருவாககூடாது என்பதால்தான் வைப்பு நிதி உருவாக்கி அதிலிருந்து வரும் வட்டி மூலமாக அளிக்க அன்பர் ஒருவர் ஆலோசனை கூறிய போது ஏற்றதோடு அல்லாமல் எழுதவும் செய்தேன்

6. அதற்கு சுமார் 25 லட்சம் தேவைப்படுகிறது என்று உணர்ந்த பின் , அதைவிட சிலர் இந்த சமூக திட்டங்களை கூறி நன்கொடை பெறலாமா என்று கேட்ட போது என்ன புரிதல் ஏற்பட்டுள்ளது என்று உணர்ந்தேன். ஒரு சமூக திட்டத்தை சிறப்பாக நிகழ்த்துவதற்கு நிர்வாகம் இன்னும் பலப்படவில்லை. நிர்வாகிகளை நன்கொடை பின்னால் அலைய விடுவதில் எனக்கு ஆர்வமும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை.

7. தற்போது ஆர்வமாக முன் வரும் ஒருவர் அடுத்த சில மாதங்களில் தன் பங்களிப்பை அளிக்க இயலாத சூழலில் என்னிடம் எவ்வித மாற்று ஏற்பாடுகளும் இல்லை. அதைவிட இதுவரை உருவாக்கிய பல விஷயங்கள் நொடர இயலாது போகும். வீட்டு உரிமையாளரோடு தர்மசங்கடமான சூழல் சந்திக்க நேரிடும் . அதனால் 5 வருடங்களுக்கான வாடகைத் தொகையான ரூ 7.5 லட்சம் கையிருப்பாக இருக்க நேரிடும் போது உறுதியான முறையில் ஒரு 5ஆண்டுகளுக்கு பணி செய்திடும் வாய்ப்பு ஏற்படுகிறது

8. மேலும் இடம் இருப்பதால் விருப்பமுள்ள தன்னார்வ தொண்டர்களின் மூலம் அதிக செலவில்லாது சில முயற்சிகளை மேற்காெள்ளவும் முன்னடுக்கவும் வாய்ப்பாகிறது. அவ்வளவுதான்

தற்போது இதை ஒட்டி மட்டுமே பணி புரிகிறேன். இதற்கே குறைந்த பட்சம் 9 லட்சமாவது கையிருப்பில் சேர்ந்தால்தான் அவரிடம் மேற்கொண்டு பேசவே இயலும் . குறைந்த பட்சமாக 5 வருட அவகாசமாவது கிடைக்கும் .

அதற்குள் ஒரு அன்பர் குழுவை உருவாக்குவதற்கும்  அதற்கான நிர்வாகத்தையும் கட்டமைக்கப்படுவதற்கான வாய்ப்பும் அமைகிறது. எனது சாதனாவிற்கான இருப்பிடம் என்கிற வகையில் மட்டும் எடுத்து இச் செயல்களில் ஈடுபட வேண்டுமெனிலும் சுமார் 7 லட்சம் குறைந்தபட்சமா தேவைப்படும். வாடகைக்கே இப்படி. நிரந்தரமான சேவைகளை செய்திட உறுதியான தன்னார்வ தொண்டர்களூம் சரியான நிர்வாக அமைப்பும் நிச்சயம் தேவை. 7 லட்சத்திற்கு பணி புரிவதற்கு 9 லட்சத்தை உருவாக்குதன் மூலம் ஒரு வகையில் வலிமையான அஸ்திவாரத்தை உருவாக்கிடலாமே என்கிற எண்ணம்தான்.

இந்த 6 ஆண்டுகளில் எனக்காகவும் எவரிடமும் நன்கொடை கேட்டு கையேந்தவில்லை. எப்போதும் ஏதோ ஒரு நோக்கத்தை வைத்து முகநூலில் எழுதியுள்ளேன். விருப்பமுள்ளவரகள் அளித்ததை வைத்து முடிந்த வரையில் சிறப்பாகவே செய்துள்ளேன்.
இல்லையெனில் சேவா சமிதி என்றோ அடியார் சங்கம் என்றோ இரு குழுக்கள் விதையென முளைத்திருக்காது .

இன்று வரை எனது உணவு பிக்ஷையில்தான். ஆனால் இது போன்ற அஸ்திவாரம் அமையுமானால் என்னுடைய ஆரோக்கியத்திற்காக ஒரு சம்யமா உணவும் , அன்பர்கள்  சாதனாவிற்காக பிரத்தேயகமான ஒரு சிறு அறையும்  , இன்னும் சிலருக்கான சேவைகளுக்கான அடித்தளமும் அமைக்கப்பட ஏதுவாகிறது.

சத்குரு ஸ்ரீ பிரம்மா வாழ்ந்த இந்த புண்ணிய பூமியில் இந்த வாய்ப்பு இறையின் திருவுள்ளமும் ஆசிகளுமேயாகும்

ஆதலால் 1000மோ  ,5000மோ , 10000மோ என தங்களால் இயன்றதை அளித்து அஸ்திவாரமாய் நிற்க வேண்டி விண்ணப்பிக்கிறேன். எவ்வளவு தொகை அனுப்புகிறீர்கள் என்பது எனக்கு முக்கியமல்ல. இந்த நோக்கத்தில் எனக்கு பின்புலமாக இத்தனை அன்பர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்கு பலம். அதுவே வரமும் கூட.

நன்காெடை அனுப்ப விரும்புகிறவர்கள்

Swami sushantha
Savings bank account no
7863000100009075
PNB , guptakashi
IFSC code:- PUNB0786300

Pls send ur address with Pin code & phone no

நன்றிகளோடு

சுவாமி சுஷாந்தா
02/12/2017