ஈசனின் அடியார்களை பூதகணங்கள் என்று தங்களை அழைக்க ஆசைப்படுவதன் காரணம் அறிவீர்களா ?
பூதகணங்கள் என்பவர்கள் இறைவனின் மேல் அதிதீவிர அன்பு செலுத்தியவர்கள். மனிதர்களை பயமுறுத்தும் மரணத்தையும் துச்சமென நினைத்து தங்களை அர்ப்பணமாக்கியவர்கள்.
அத்தகைய மனிதர்களால் உருவாக்கப்பட்ட பல அற்புதமான ஆலயங்கள் காலம் கடந்து இன்றும் அம்மனிதர்களின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் இம் மண்ணில் சொல்லிக் கொண்டு இருக்கிறது.
இப்போது கையிலெடுக்கும் இந்த சிறிய சேவை திட்டம் பலவிதங்களில் மிகச் சிறந்த ஒரு அஸ்திவாரமாக எதிர்காலத்தில் மாற வாய்ப்பு உள்ளது. இதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒரு இடம் (கட்டிடம்) தேர்வு செய்யப்பட்டுள்ளது . மாதவாடகையாக ரூ 15000 ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. காரணம் இது இக்கிராமப்புற மாணவர்களுக்கு வெறும் டியுஷன் சென்டராக மட்டும் இல்லாது , யாத்ரீகர்கள் /சாதுக்கள் சேவை மட்டுமல்லாது , என்னுடைய ஆரோக்கியம் மற்றும் சாதனாவையும் மேலும் ஸ்திரப்படுத்திக் கொள்ள உதவும் .
இதற்காக வங்கி டிபாசிட் மூலம் மாதந்தோறும் சுமார் ரூ 15000 வட்டியாக வரும் வகையில் கிளொடு பண்டிங் முறையில் ரூ 25 லட்சம் திரட்ட தீர்மாணித்துள்ளேன். இதன் மூலம் திட்டம் செயல்பட ஒரு இடத்தை வாடகையில் பேசி முடிப்பதோடு , 5 ஆண்டுகள் கழித்து இத்தொகை கையிருப்பின் மூலம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல பேருதவியாக இருக்கும்
இந்த தொகை இலக்கை சேகரிக்க சுமார் 2500 அன்பர்கள் தலா ரூ 1000 அளித்தால் போதும் . மிக குறுகிய காலத்திற்குள் அடுத்த கட்டமாகிய ஒரு சில தன்னார்வ தொண்டர்களை உருவாக்கிடலாம்.
இன்னும் சொல்லப் போனால் 250 அன்பர்கள் சுமார் 10 அன்பர்களிடம் தலா ரூ1000 நன்கொடை பெற்றுத் தந்தால் போதும். அடித்தளம் உருவாகிவிடும்
செய்து முடிக்க நீங்கள் முன் வருவீர்களா ?
அப்படியாயின் நிச்சயமாக நம்மால் கிராமப்புறத்தில் உள்ள இக் குழந்தைகள் வாழ்வில் நல்ல அடித்தளத்தை உருவாக்கிட ஒரு சப்போர்ட் சிஸ்டம் அமைத்திட இயலும்
ரூ 1000ம்தான் அளிக்க வேண்டும் என்றில்லை. அவரவரால் இயன்றதை அள்ளித் தரலாம்.
நன்கொடை சேகரித்து தருபவர்கள் , நன்கொடை அளிப்பவர்களின் பின் கோடு மற்றும் தொலைபேசி எண் கூடிய முழு முகவரியை சேகரித்து அளிக்கவும்.
அவர்களுக்கு எனது அன்பளிப்பாக எனது புத்தகம் ஒன்றும் கேதார்நாத் பூஜா விபூதி பிரசாதமும் அனுப்பி வைக்கப்படும்
கேதார்நாத் சேவா சமிதி மற்றும் அடியார் சங்கம் நிர்வாக ரீதியில் இன்னமும் முழுமையாக தயாராகாத காரணத்தால் இத்திட்டத்தை எனது தனிப்பட்ட திட்டமாக நடத்த பொறுப்பேற்பதன் மூலம் அவர்களுக்கும் தங்களை தயார்படுத்திக் கொள்ள உரிய கால அவகாசத்தையும் அளித்தவனாவேன்.
டிசம்பர் 31ககுள் இத்தொகை சேருமானால் 2018 புதிய வருடம் புதிய அடித்தளத்திற்கும் சேவைக்கும் அஸ்திவாரமாக அமையக்கூடும் என்பதில் சந்தேகமில்லை.
ஆர்வமுள்ளவர்கள் முன்வருக
அப்படியே பத்தே நபரை அழைத்து வருக
அவர்களின் நன்கொடையும் தொலைபேசியோடு கூடிய முகவரியையும் கூட பகிர்ந்து கொள்க
அழகான பூ மலர்ந்திட ஒரு அஸ்திவாரமாய் அமைந்து கொள்க
பணியாற்ற விரும்புவர்கள் தொடர்பு கொள்க.
நன்றிகளை சமர்ப்பணம்் செய்து
சுவாமி சுஷாந்தா
28_11_2017
வெறுமனே லைக் இட்டு செல்லாதீர்கள் . உடனடியாக தங்களையும் ஒரு நனகொடையாளராக பதிவு செய்திடுங்கள் கூடவே ஒரு 10 நன்கொடையாளர்களையும் அளித்திடுங்கள். :) 5 வருடத்தில் நிச்சயமாக பல மாணவர்களுக்கு தீபம் பரிசளித்திடலாம்
குறிப்பு :_ சாது சம்ரோக்ஷண சேவை என்கிற நிலையில் தனிநபர் செய்யும் சேவைப்பணிக்கு நன்கொடையாக பெறுவதால் கேதார் அடியார் சங்கத்தில் இருந்தோ , கேதார்நாத் சேவா சமிதியில் இருந்தோ நன்கொடை ரசீதுகள் அளிக்கப்படமாட்டாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்
No comments:
Post a Comment