Saturday 20 January 2018

நன்றிகள் எனது மதிப்பிற்குரிய நண்பருக்கு

He never said bhakthi.  He said sakthi.  You are making too many assumptions in your postings on this subject and swording with a shadow. I know where he erred but its being blown out of proportion
---- நண்பர்

My response

மதிப்பிற்குரிய ....... அவர்களுக்கு

நமஸ்காரங்கள் .

மீண்டும் ஒரு முறை கேட்டேன். ஆம். ஒத்துக் காெள்கிறேன் . சக்தி பிறக்கிறது என்று தான் உரைக்கிறார்.

அதை பக்தி என்று குறிப்பிட்டு எழுதியுள்ளேன்.  அப்படி மாற்றி எழுதிடல் கூடாது. இது எனது தவறே. ஏற்றுக் கொள்கிறேன்.
தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றிகள்.

இது போன்றே தாங்கள் கூறிய படி  கவிஞர் அவர்கள் எங்கு எப்படி தவறு செய்தார் என்பதை குறிப்பால் உணர்த்தும் விதமாகவாது ஒரு சிறு கருத்தை வெளிப்படுத்தியிருந்தால் வழக்கமான அரசியல் கலந்த சர்ச்சைகள் என்று  என்னைப் போன்றவர்கள் அமைதியாக இருந்திருக்கலாம்.  (எங்கெல்லாம்  எடுத்துரைக்க வேண்டுமோ அங்கு எடுத்துரைத்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன் )

அதே போல் அவரும் தான் மேற்கோள் காட்டிய புத்தகம் மற்றும் கட்டுரை குறித்த சர்ச்சைகள் பலர் வாயிலாக பலவகைகளில் அதுவும் சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்த வாதங்களும் எதிர்வினைகளுமாக கடுமையாக வெளிவர ஆரம்பித்த பிறகும்....

குறைந்த பட்சம் எல்லாவற்றுக்கும் மேலாக அந்த கட்டுரையை எழுதியவரே அக்கருத்தும் வரியும் ஆதாரமற்ற அனுமானம்தான் என்று தொலைக்காட்சியில் நேரடியாக கூறியதாக தகவல் பரவ ஆரம்பித்த பிறகாவாது .....

அப்படி ஒன்று நிகழவில்லை என்றோ அல்லது  அப்படியா அதை திரும்பப் பெறுகிறேன் என்று அவரும் கூற முடியாத போது ...... என்னைப் போன்று எங்கோ இருப்பவர்கள் சூழல்களில் இருந்து வரும் வினைகளுக்கு ..... அனுமானங்களாயினும் அதை கேள்விகளாக எழுப்பத்தான் செய்வார்கள்  என்பதை தாங்கள் அறியாதவர்களா என்ன ?

அதற்கு மிக முக்கிய காரணம் ... ஆண்டாளின் சிறப்பை பாடும் மார்கழி மாதமும்  , பக்தியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட கலாசாரமும்தான் .

சர்ச்சையான பிறகு பக்தி உலகம் ஏற்றுக் கொள்ளும் விதமாக பதிலும் வருத்தமும் வெளியாகி இருந்தால் தங்களது கருத்தும் அதற்கான இந்த பதிலும் அவசியமற்று சென்றிருக்கும்.

அடியேனும் நிழலை நோக்கி வாள் சுழற்றியிருக்க வேண்டியிருக்காது. போகட்டும் விடுங்கள் .

மேலும் நாயன்மார்கள் ,ஆழ்வார்கள் மற்றும் பல்வேறு பக்தர்கள் , கம்பன் கழகத்தால் நிகழ்த்தப்பட்ட ஏராளமான பட்டிமன்றங்கள் என பல மேடைகளில் தங்களைப் போன்ற தமிழறிஞ்ஞர்கள் பக்தி ரசத்தை பிழிந்தெடுந்து தந்ததை பருகி வளர்ந்த அடியேன் ,

அவர்களை பற்றி அவதூறாக , அவர்களை அசிங்கப்படுத்தும் விதமாக ஒருவர்,  அதுவும் தமிழை நன்கு அறிந்த ஒருவர் , நிகழ்த்திய வினையும் அதன் விளைவையும் உணர்ந்த பின்னர் , சிலரால் கடுமையான எதி்ர்வினையும் ஆற்றிய பின்னர் , கவிஞருக்கு வக்காலத்து வாங்கிய சிலரால் உமிழப்பட்ட துவேஷங்களூம் திசை திருப்பப்பட்ட பிரசாரங்களையும் வெளிப்பட்ட பல்வேறு சூழல்களை கண்ட பின்னரே  அவர் மீது எந்த துவேஷமும் இல்லாத என்னைப் போன்றவா் வாள் சுழற்றினார்கள். 

இது போன்று வைணவப் பெரியோர்களும்  ஆதீனங்களும் அகில இந்திய துறவியர் சம்மேளனமும் ஒன்றிணைந்து சாலையில் இறங்கி ஓங்கிய ஒற்றை குரலாக ஒலித்தும் ....சர்ச்சைக்கு வித்திட்டவரின் மன்னிப்பு அறிக்கை வேண்டியிருக்குமா என்பது  சமீபகாலத்தில் ஏன் கடந்த 30_40 ஆண்டுகால தமிழக வரலாற்றில் நிகழ்ந்திருக்குமா என்பது சந்தேகமே.

தாங்கள் பெருமதிப்பு வைத்திருக்கும் பேருர் அடிகளாரும் சுகி சிவம் மற்றும் கவிஞர் ரமணன் அவர்களும் கூட அறிக்கை வெளியிட நேர்ந்தது.

அத்தகைய பெருங்கூட்டத்தில் குறைந்த பட்சம் முகநூலிலாவது (காற்றிலாவது ) என் வாளை  சுழற்றியிருக்கேனே அதுவும் தாங்கள் ஒப்புக் கொள்ளும் அளவிற்கு , அதுவே என் எல்லையில் நின்று என் பொறுப்பாற்றிய திருப்தியை தருகிறது.

உம்மீது கொண்ட அன்பும் மரியாதையும் நீர் எடுத்துக் கொண்ட அக்கறைக்கும் மதிப்பளித்து , ஏற்கனவே தாங்கள் நன்றாகவே உணர்ந்திருந்தாலும், பொது வெளிச் சமூகம் புரிந்து கொள்ளும் விதமாக என் தரப்பை சமர்பிக்கிறேன்.

மற்றுமொரு காரணம் ஒரு சிலர் (ஒரு சிலர் என்றுதான் கூறுகிறேன் ) நான் சண்டை போடுவதில் ஆர்வம் கொண்டிருப்பது போன்றும் ,  நேரத்தை விரயம் செய்வது போன்றும் நினைத்துக் கொள்வதாலும் இதை கட்டாயம் எழுத வேண்டிய நிலை.

அதற்கு காரணம் இதே மனிதர்கள் (தாங்கள் அல்ல ) கடந்த வருடம் ஈஷாவை பற்றி  அவதூறுகள் முகநூலில் பரவிய தினங்களில் அந்த கருத்துக்களுக்கும் இதே போன்று கேள்வி எழுப்பி பெரிய பெரிய பதிவுகளாக எழுதிய போது நான் சண்டை போடுவதாகவோ அல்லது  நேரத்தை வீணடிப்பதாக கருதவில்லை.

சிவனின் அங்கமாகிட வேண்டி பக்தி பாதையில் வந்த பின்னரும் ......நாயன்மார்களைப் போல ஈசனை துற்றிடும் மனிதருக்கு எதிராய் எழுந்து நிற்காது ......சிவனது அங்கமாக செயல்படாமல்  ....

வழக்கம் போல பூசி மெழுகி  எல்லோருக்கும் நல்லவராய் உறவு பேணாமல்  தர்மம் என்று உணர்வதில் அடியேன் இருக்க வேண்டும் என்று  உணர்வதால்தான்.

இது போன்ற சூழலில் நடுநிலையில் சீர்தூக்கிப் பார்த்து எழுதும் தங்களின் ஒறறை பதிவு ஒரு சிறு குறிப்பு அல்லது ஒரு சில வார்த்தைகள்  எங்களை அமைதி கொள்ள வைத்திருக்கும் என்பதை எப்படிச் சொல்வது.

ஆதலால் .... தங்களளைப் போன்றவர் மீது பரிபூரண நம்பிக்கை இருந்த போதும் சூழலின் தாக்கம் சர்ச்சையின் வீர்யம் தனிமனித கடமையை ஆற்ற பொறுப்புணர்ந்து  கண்டிக்க வேண்டி நேர்ந்தது.

பொறுப்பு துறப்பு என்று போர்டு மாட்டிக் கொண்டு பேச ஊடகத்திலோ அல்லது பத்திரிக்கையலோ பணி செய்யவும் இல்லை அல்லது பிரபலமான நபரும் இல்லை.

ஆனால் பல்வேறு அன்பர்கள் தங்கள் லாப நட்டங்களுக்காக வேண்டி அவரை எதிர்ப்பதும் ஆதரிப்பதுமாய் அறிக்கைகளும் கருத்துக்களூம் வெளியிடும் சமூக சூழல் , காலச்சூழல் , கருத்துக்களின் அடிப்படைகள் எடுத்துக் கொண்டு வினையாற்றுவது சாமான்யனின் இயல்பு.

அந்த வினையில் வெறுப்பை உமிழ்ந்திருந்தாலோ மொழிப் பிரயோகத்தின் தரம் தாழ்ந்திருந்தாலோ கண்டிப்பாக திருத்திக் கொள்ளப் பட வேண்டியது மட்டுமல்ல கண்டிக்கப் பட வேண்டியதும் கூட.

ஆனால் என் மண்ணில் மாபெரும் ஆலயங்களாக காலம் கடந்து நிற்கும் மகோன்னதமான மனிதர்களின் பக்தியை மட்டும் உள்வாங்கும் சாமான்யர்களின் மனவலி உணராது..... அறிவு தளத்திலும் சமூக தளத்திலும் மட்டும் இயங்கி .... இவர்களின் கதைகளை கேட்டு வளர்ந்த அவர்களது பணிகளை ஆலயங்களாக கண்டு வியந்த என்னைப் போன்றவர்களுக்கு ...... குரு என்கிற பரிமாணத்தின் பல அம்சங்களை உணரச் செய்திட இவைகளே எனக்கு ஆதாரம் என்பதறியாது கருத்து சொன்னவர்களை கண்ட போது..... இந்த பக்தியை அறிவு தளத்தில் மட்டும் இயங்கி ஆராய்ச்சி செய்து வெளியிட்ட அடிப்படையான மனிதர் மேல் வருத்தமும் கோபமும் திரும்பாவிடில் நானும் ஒரு ஜடமே.

ஆம்

பக்தியும் யோகமும் பரமனருளாலேயே சித்திக்க வேண்டும் என்று எம் வீட்டு பெரியோர் சொல்லி வளர்க்கப்பட்ட நான் ...

தர்மம் என்று நான் உணர்வதை காத்திட , அதர்மம் என்று உணர்வதை எதிர்த்து குரல் எழுப்பிட , சண்டை போடுவேன் .

அதுவும் ஏதோ சமூக பிரச்சினைக்கோ அல்லது அரசியல் பிரச்சினையிலோ அல்லது இரு தனிமனித பிரச்சினையிலோ அடியேன் களமாற்றவில்லை.

இதனால் என்னை பிடிக்காது , இவர் திருந்த மாட்டார் என்று நினைப்பவர்கள்  எனது  முகநூல் வட்டத்தில் இருந்து தாரளமாய் விலகிக் கொள்ளலாம்.

இதுவும்  நல்லதே.

எல்லோரும் எல்லோருக்குமானவர்கள் அல்ல.

எனக்கு என் ஆழ்வார்களூம் நாயன்மார்களும் அவர்களின் பக்தி பரிசளித்த என் குருநாதனும் , அவரின் தரிசனமும் இருப்பும் உணர்த்திடும் அவர்களது ஆழமான பக்தியும் போதும்.

_______________\\__________\\

ஈசனின் பூஜைக்கு எடுத்துச் சென்ற மலர்களுக்கும்  பூஜை பொருட்களுக்கும் ஐந்தறிவே உள்ள பட்டத்து யானை அவமரியாதை செய்ததை கண்டு சினந்த எறிபக்த நாயனாரை அறிவார்களா என்பது தெரியவில்லை.
இன்றைய காலத்தில் எறிபக்த நாயனார்கள் உணர்ச்சிகளை சமநிலையாக கையாளத் தெரியாது கொலை செய்பவர்களாகத்தான் தெரிவார்கள் என்பது அடியேன் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இஸ்லாமிய படையெடுப்புக்களின் போது இந்து தர்மத்தின் ஆலயங்களை காத்திட வேண்டி தன்னுயிரையும் துச்சமென மதித்து தீவிரமாய் வாள் சூழற்றிய அடியார்களை உருவாக்கி பின் அவர்களை வைத்து வீர சைவ பாரம்பரியத்தை உருவாக்கிய கதை அறிவார்களா எனத் தெரியவில்லை.
இன்றும் மதுரை மீனாட்சி ஆலயத்திற்குள் அந்நிகழ்வின் எச்சம் அம்மனிதர்களின் வலியும் பக்தியுமாய் சாட்சியாக நிற்கிறது.

அத்தகைய மகோன்னதமான மனிதர்கள் அந்த காலத்திய சிவாங்காக்கள். அதனாலேயே அவர்கள் எனக்கு பிரியமான பூதகணங்கள்.

இது ஒரு புறமிருக்க ... சக்தி என்பது பக்தி என்று மாற்றமடைந்ததற்கு....

என் பாதையும் பயணமும் வாழ்வும் இப்படிப் பட்ட கதைகளையே எப்போதும் நினைத்து உருகும் விதத்தில் அமைந்துள்ளதால் சக்தி என்று உரைத்ததை பக்தி என்று உணர்ந்து எழுதியிருக்கலாம்.
  அல்லது
அடியேன் அப்படி புரிந்து கொண்டமைக்கு ஆண்டாளையும் ஆழ்வார்களையும் நாயன்மார்களையும் ஆராய்ச்சி மாணவனாக அறிவுப் பூர்வமாக அணுகாது,  பக்தி என்கிற கோணத்தில் மட்டும் கண்டதால் , அணுகுவதாலேயே கூட இருந்திருக்கலாம்.

ஒரு பாடலை அறிவு சார்ந்து உவமான உவமேயங்களை சார்ந்து கருத்தின் அடிப்படையில் வெறும் கவிதையாக மட்டுமே உணர்தல் என்பதும் ..... அதன் வார்த்தை பிரயோகங்களுக்கான பின்புலத்தை ஆராய்வதும் கவிஞர்கள்  இலக்கியவாதிகளுக்கு ஆராய்ச்சிமனம் கொண்டவர்களுக்கு  வேண்டுமானால் சாத்தியம்.

ஆனால் அவர்களது வாழ்விலும் வெளிப்பாடுகளிலும் அதில் உள்ள சாரத்தை மட்டும் பக்தி என்கிற பெயரில் ஊட்டி வளர்த்த சமூகத்தில்  வளர்ந்த
என்னைப் போன்ற சாமான்யர்களூக்கு கவிஞர் போன்றவர்கள் ஆழ்வார்களையும் நாயன்மார்களையும் பற்றி பேசுகிறார் என்றால்....

அவரது அழகு தமிழில் ஆழமான தமிழில் அவர்களின் பக்திப் பார்வையையும் நிலையையும் இன்னும் ஆழமாக உணர்ந்திட மட்டுமே ஆவல் இருப்பது இயற்கை.

இதை உணர்ந்திட முடியாத நிலையில் அவரும் இல்லை , அவரது தமிழும் அனுபவமும் கூட இல்லை என்பதை நிச்சயம் ஒத்துக் கொள்வீர்கள்.

அடுத்து அடியேன் நானே ஏற்படுத்திக் கொண்ட அனுமானங்களின் அடிப்படையில் நிழலை நோக்கி வாளை வீசுவதாகவும் அருளியிருக்கிறீர்கள்.

முகநூலில் அனைத்துமே நிழலே. சமூக வலைதளங்களில் தங்கள் பெயரில் தங்கள் படத்தைப் போட்டு தாங்கள் சொன்னதாக ஒரு கருத்தை உருவாக்கவும் இயலும் என்பதை தாங்களும் அறிவீர்கள். ஆனால் படிப்பவருக்கு அல்லது் ஊடகங்களில் காண்பவருக்கு இதை நிசமென்றே நினைத்து எதிர் வினை ஆற்றுவது நிகழ்வு. காரணம் அந்த வரிகள் அதைப் பற்றிய செய்திகள் ஏற்படுத்தும் உணர்வுகள் , அதே விஷயத்தை பற்றி நாம் உணர்ந்த பரிமாணங்களின் அனுபவங்கள்.

ஆனால் எழுதுபவர்களில் நிசமானவர்களும் இரூக்கிறார்கள் நேர்மையானவர்களும் இருக்கிறார்கள். தன்னை மறைத்து வேறு பெயரில் இயங்குபவர்களும் இருக்கிறார்கள். இதில் என்னை அறிந்திருப்பதால்தான் எனக்கு மட்டுமே புரியும் விதமாக ஒரு  சில எழுத்துக்களில் உரைத்து என்னை சாந்தப்படுத்தவும் தங்களால் இயலுகிறது.

இதே காலகட்டத்தில் தங்களின் வெளிப்பாடும் கவிதைகளையும் ஜீரணம் செய்திட எவர் இயலும். அது இந்த காலத்தோடு என்றேனும் பகிர இயலுமா என்று கூட அறிய இயலாது. நீர் கவிதைக்குள் அடங்கி அமைதி கொள்வீர். யான் ....

ஆனால் பாருங்கள் அந்த நிழலை நோக்கி வீசும் வாளை தாங்களும் தங்கள் கருத்தால் செம்மையும் கூர்மையும் செய்கிறீர்கள். இது வேடிக்கைதானே. விந்தையான உலகம்தான்.

அதுவே அந்த வாளுக்கும் அதை வீசியவருக்கும் கிடைத்த ஆசீர்வாதம்

நம்மைச் சுற்றி நடப்பவைகள் எதுவாயினும் அது குறித்து சாமான்யர்கள் இன்று முகநூலில் விவாதிப்பதும் தங்கள் கருத்துக்களையும் பார்வையும் வைக்கின்றனர் என்பதும் அதன் தாக்கமும்  தாங்கள் அறியாதது அல்ல.

வன்மும் துவேஷமும் தெளிப்பதை மட்டுமே வாடிக்கையாக கொண்ட மனிதர்கள் தவிர ...... இதர மனிதர்களின்  பெரும்பாலான கருத்துக்களில் பிழைகள் இருக்கலாம். புரிதல் இல்லாமலிருக்கலாம்.

ஆனால் கருத்துக்களாலும் எதிர்கருத்துக்களாலும் ஆதாரங்களினாலும் முன்வைக்கப்படும் கேள்விகளினாலும் இன்றைய கால கட்டத்தில் இவை நீதிமன்றத்தில் கூட கவனிக்கப்படுகிறது.

அதன் தாக்கம் முடிவுகளில் பிரதிபலிப்பதை தாங்களும் மறுக்க இயலாது.

ஏன் இந்த சர்ச்சையிலும் கூட வெளிப்பட்ட , தாங்கள் கண்ட பல விஷயங்களில்  எத்தனை உடன்பாடானவை எத்தனை உடன்பாடற்றவை என்பதையே ஒரு ஆய்வுக்கட்டுரையாக்கிட இயலும்.  ஒரு சில தமிழறிஞர்கள் வினையாற்றலாம் என்றுதான் அவருமே எதிர்பார்த்திருப்பார் .

ஆனால் திராவிட கலாசாரம் என்று பேசி வந்த சமுதாயத்தில்... தமிழர் கலாசாரம் என்று சில கருத்துக்கள் பரவி வரும் காலகட்டத்தில் .... மாறிப் போன காலச் சூழல்களில் ... வினையும் எதிர்வினையுமாக வேகமாக விஸ்வரூபம் எடுக்கும் ஒரு உணர்ச்சி சூழலில்............தன் பொறுப்பும் எல்லையும் உணராது செயல்பட்டவர்களால் ........

இன்று அப்படி இப்படி என்று வளைத்து எடுத்துச் செல்லப்பட்டு தற்போது  பிராமமணீயத்திற்கு எதிரானதாக வாசிக்கப் படுகிறது.

அக்ரஹாரங்களே அழிந்து போன நிலையில் இப்படிப்பட்ட திசை திருப்பலை மக்கள் நல்வாழ்வை விரும்பும் ஒருவர் எப்படி ஏற்றுக் கொள்ள இயலும் .

எத்தனை பேர் அடக்கி வாசித்தனர் என்பது என்னை விட தாங்கள் நன்றாக கவனித்திருப்பீர்கள் .

எனது கட்டுரைகளில் அனுமானங்கள் இல்லையென்று அடியேன் கூறவில்லையே.

ஆனால் நெஞ்சத்தின்  ஆழத்தில் இருந்து வெளிப்பட்ட  தீவிரமான எழுத்துக்கள் என்பதை ஏற்பீர்கள் .

என் எழுத்து வெளிப்படுத்தும்  அனுமானங்களையும் கோபக்கனைகளையும் அனைவருமே உணர்வார்கள் என்றே நம்புகிறேன்.

 அப்படியாயின் நான் அதை தீர்மானமாகவோ அல்லது முடிவாகவோ வைக்கவில்லை என்பதை தாங்களூம் பிறரும் நிச்சயம் ஒப்புக் காெள்வீர்கள்.

தங்கள் பாடலில் அல்லது தங்கள் வார்த்தை பிரயோகத்தில் இப்பிடிப் பட்ட பொருளை உணர்கிறேன். இது மனதுக்கு வலிக்கிறது. என்று தங்களிடம் சொன்னால் என்ன செய்வீர்கள்..

அது அப்படியல்ல அதன் பொருள் இங்கு இப்படித்தான் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.  என்று கூறும் போது தங்களின் விளக்கம் பொருந்தி போய்விட்டால் கேட்பவர்  தெளிவடைந்து அமைதியாகிவிடுவதுதானே இயற்க்கை.  இதுதானே தங்கள் அனுபவமும் .

அரசியலும் காழ்ப்புணர்ச்சியும் கொண்ட கூட்டத்தினரால் போரட்டமும் கண்டனங்களும் அதிகமாகும் . என்னைப் போன்றவர்களூக்கும் மருதாசல அடிகளாருக்கும்  கவிஞரிடத்தில் என்ன காழ்ப்புணர்ச்சியும் வெருப்பும் இருக்கும்.

இத்தனைக்கும் அவரது பாடல்களில் பலவற்றை அணு அணுவாக ரசிப்பவன் யான். இத்தனைக்கும் இசையில் கலந்து வரும் கவிதை வரிகள் மட்டுமே எனது அனுபவம்.

நண்பர்கள் சுகி சிவமும்  கவிஞர் ரமணனும் தமிழை ஆராதிக்கும் மருதாசல அடிகளாரும் எந்த ஒரு விஷயத்திலும் அவ்வளவு சீக்கிரமாக மறுப்பை எதிர்வினை ஆக்கமாட்டார்கள்.

அவைகள் கூட கவிப்பேரரசின் கருத்துக்கு எதிர் குரலாக ஒலித்த போது அவர்களைப் போன்றவர்கள் மூலம் ஆழ்வார்களையும் நாயன்மார்களையும் அறிந்த எம்மைப் போன்றோர் வாள் சுழற்றி களமிறங்குவது இயற்கைதானே........ இல்லையெனில்  எறிபக்த நாயனாரை வணங்கி நிற்பதில் பின் என்ன அர்த்தம் .

தங்களுக்கு எதிராக கருத்து சாென்னவர்கள் கூட தங்களது விளக்கமோ அறிக்கையோ திருப்தி தருமாயின் அமைதியாகி விடுவார்களே.
அதற்கு காரணம் தங்கள் தமிழின் ஆழம் தங்கள் மேல் உள்ள நம்பிக்கை இது தங்களோடு ஏற்பட்ட நேரடி வாழ்க்கை அனுபவம் என்பதால் அல்லவா. ஆனால் அது ஒரு சிறு வட்டத்திற்கு மட்டுமே சாத்தியம் அல்லவா.

அந்த சிறு வட்டத்தில் ஒரு புள்ளியில் இருந்துதானே  நெறுப்புப் பற்றிக் கொள்கிறது.

அந்த சிறு நெருப்பு தீயென பற்றி எரிய ஆரம்பித்த பின்னரும் அணைக்க முற்படாது மேலும் மண்ணென்ணையை ஊற்றினால்......

அல்லது எனது பார்வையும் கருத்தும் தங்களூக்கு சரியெனப் பட்டால் வேறு வார்த்தைகளை மாற்ற முயல்வீர்கள் அதுவும் சரியாகாது  என்று உணரும் போதோ அல்லது அதை இப்படித்தான் நம்மால் சொல்ல இயலும் என்று உணரும் போதோ பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த வெளிப்பாட்டையே திரும்ப பெற்று உலகில் பதிவு பெறாது பார்த்துக் கொள்வோம்.

காரணம் பிற்காலத்தில் ஒரு தவறான முன்னுதாரணத்திற்கோ  பிரயோகத்திற்கோ அதை சுட்டிக் காட்டிவிட /பயன்படுத்திடக் கூடாது என்பதற்காகத்தானே

ஒரு பெருங்கூட்டத்தில் அதுவும் அவரைப் பற்றி தகவல்கள் அவரது செயல்கள் கருத்துக்கள் மற்றும் அதில் எடுத்துள்ள நிலைகள் காரணமாக மாறுபடும் பக்தியுலகில் ....

அதுவும் தன் தமிழின் உச்சத்தால் தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள் அனைவரிடத்தும்  கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் நிலையில் உள்ள ஒரு மனிதர் அதுவும் தன் கொள்கைக்கு மாறான புதிய தளத்தில் உரையாற்றுகிறார் என்றால் எத்தனை உன்னிப்பாக உலகம் கவனிக்கும் .......

எனக்கே இத்தனை புரியும் என்றால்
இதையெல்லாம் என்னை விட அதிகமாகவும் தெளிவாகவும் தன் அனுபவங்களால் உணர்ந்த தங்களைப் போன்ற , அவரை போன்ற மனிதர்களூக்கு ......

அப்படி திரிபு செய்திடும் உலகில் தன் பார்வையையும் கருத்தையும் எவ்வித சந்தேகத்திற்கோ அனுமானத்திற்கோ இடமின்றி பதிவு செய்வது கூடுதல் பொறுப்பும் திறமையும் ஆகிறதே.

அந்த திறமையின் உச்சத்தினால்தானே அவர் அந்த ஆளுமையையும் உயர்ந்த நிலையையும் அடைந்துள்ளார் . அப்படி இல்லாவிடின் இத்தனை காலம் எப்படி தான் அடைந்த இடத்தில் இருந்து  கோலோச்ச இயலும்.

இதே பிரச்சினையில் தமிழை சற்றும் படிக்காதவர்கள் கூட அவரை பேசுகிறார்கள். அதை நான் என் வாதத்திற்கு ஆதாரமாக எடுத்து காட்ட இயலுமா ?

ஆதாரத்தோடே எடுத்து பேசுகிறேன் என்று கூறினாலும்  அதை என்னிடமிருந்து ஏற்றுக் கொள்ள இயலுமா ?

ஏன் ?

என்னைக் குறித்த தங்களின் பார்வைதானே

அதை யான் உணர்ந்து எழுத சரியான வார்த்தைகளில் வெளிப்படுத்த கூடுதல் கவனமும் பொறுப்பும் தேவைப்படுகிறதே. அதை யான் சுமையாக கருதலாமா.

இதோ இன்று ஆண்டாள் சர்ச்சை ஒரு இஸ்லாமியப் பார்வை என்று கூட்டம் அறிவித்து அழைப்பு விடுத்திருக்கின்றனர்.

இது போன்ற கூட்டங்களின் வினையும் எதிர்வினையும் தமிழகம் மட்டுமல்ல இந்திய சமூகம் முழுவதும் ஏற்கனவே நாம் சந்தித்துதான் கொண்டிருக்கிறோம்.

மலிவான அரசியல் காரணமாக ஏற்கனவே பிரச்சினைகளை சந்திந்துக் கொண்டிருக்கும் சமூகத்தில் .....இது போன்ற பொறுப்பற்ற செயல்களக்கும் கருத்துக்கும் எதிராக குரல் கொடுத்தால்...........

இந்த தேசத்தில் கருத்துரிமை காணமல் போய்விட்டது என்று சில பிரபலங்கள் உடனே  எதிர்குரல் எழுப்புவது இத்தேசத்தில் இன்று  வாடிக்கையாகிவிட்டது.

பிரபலங்கள் என்றாலோ தலைவர்கள் என்றாலோ உண்மையைத்தான் பேசுவார்கள் , மாற்றியும் மறைத்தும் பேசமாட்டார்கள் , அரசியல் காழ்ப்புணர்சியால் பொய் சொல்ல மாட்டார்கள் என்கிற பிம்பம் இன்றைய மீம்ஸ் உலகில் கரைந்து போய் வெகுநாட்களாகிவிட்டது என்பதை சாமான்யனிடம் இருந்து விலகி நிற்கும் பிரபலமும் தலைவனும் உணர்வதே இல்லை. 

பல்வேறு வெளிப்பாடுகளால் தனிமனிதனும்  பத்திரிக்கையும் ஊடககமும் பொறுப்பு துறப்பு செய்து செயல்படுவதால் சாமான்யன் யாரை நம்புவது என்று சிதைந்து போய் இருக்கிறான்.

அத்தகைய காலகட்டத்தில் இத்தகைய பிரபலங்களின் பொறுப்பற்ற செயல்கள்  ஆதாரங்கள் இல்லாத சர்ச்சையை ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்தும் கருத்துரிமை ஆராய்ச்சிப் பார்வை என்று தன் அடிப்படை பொறுப்பிலிருந்து நழுவுவதல் ........ என்ன சொல்வது வேதனைதான் எழுகிறது.

ஆனால் அதே சமயம் இதே கருத்துரிமை பேச்சுரிமை எழுத்துரிமை அடிப்படையில் அடியேன் வேறு யாராவது  வணங்கும் தெய்வத்தை எனக்கு தெரிந்தவிதத்தில்  ஒரு இந்து சந்நியாசியின்  பார்வை என்று பேச அனுமதிப்பார்களா. கருத்தை கருத்தால் மட்டும் சந்திக்க வேண்டும்தானே. ஏன் இப்போது மட்டும் தங்கள் உணர்வுகளோடு போட்டு குழப்பிக் எதிர்வினை ஆற்றுகிறீரீர்கள்.

ஆண்டாள் பிரச்சினைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். இந்த மண்ணில் கடந்த 40_50 ஆண்டுகளாக இங்கு நடக்கும் அரசியல் களமும் பிற தளங்களில் உள்ள பிரச்சனைகளையும் அறியாதவர்கள் யார் உளர்?

விதைகளை விதைக்கும் வினையை இதுவரை அவர்கள் செய்தார்கள் தற்போது இவர்களும் செய்ய ஆரம்பிக்கின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பதி உண்டியல் பற்றி பேச்சும் காஞ்சிபுரம் மற்றும் மதுரை ஆலயங்களை இடிப்பது பற்றியும் உலாவந்த பேச்சுக்களை தாங்கள் அறியவில்லையா ?

இதை நான் சுட்டிக் கேட்டால் அல்லது கேள்வி எழுப்பினால் இந்துத்வா தீவிரவாதம். ஆனால் அவர்களுக்கு கருத்துரிமை. இது எப்படி ....

தங்களுக்கு தெரியும் என்னை.

என்றாவது இந்த கருத்துக்களை சிறு கோடிட்டாவது பேசியிருப்பேனா ?

இது போன்ற சிதைவுகளால் மதசார்ப்பற்ற விஞ்ஞானம் என்று எல்லா மத நம்பிக்கை உடையவர்களூம் பயன்படுத்தி வரும் யோகப் பயிற்சிகளையும் தியானலிங்கத்தையும் இந்து மதம் ஒரு எல்லைக்குள் முடக்கவும் நாளை முயற்சிப்பார்களே .

எனது குருநாதன் தன் உயிரை பணயம் வைத்து அர்ப்பணித்த இந்த உயரிய விஞ்ஞானம் எந்த மத எல்லைக்குள்ளூம் அடங்காது இப்படியே காலத்திற்கும் செல்ல வேண்டுமென்றால்.....

எனது மண்வாசனையாக மணம் பரப்பும் ஆழ்வார்களூம் நாயன்மார்களும் அவர்தம் பக்தி மார்கம் இது போன்ற ஆய்வு கட்டுரை என்கிற பெயரால் அறிவால் ஆராய்ந்து சிதைவடைந்த திரிபடைந்த கருத்துக்களை பதிவு செய்திட அனுமதிக்க கூடாது.

அப்போதுதான் நாயன்மார்களைப் போன்று ஆழ்வார்களைப் போன்று  தியாகராஜர்களைப் போன்று , அனுபவப் பூர்வமான மனிதர்கள் பக்தியில் திளைத்து சமூகத்தில் உயிராட்டமாக நடமாட இயலும்

இப்படியெல்லாம் என்னைப் போன்றவர்கள் கூட எழுதிட , எது மூலகாரணம் ஆனது.

ஏற்கனவே இங்கொன்றும் ஆங்கொன்றும் குமைந்து காெண்டிருந்த குளத்தில்  , சற்று நிச்சலனமான நேரத்தில் இவர் வீசியெறிந்த அந்த ஒற்றைக் கல்தானே.

தன் வீட்டு குளத்தில் கல்லெறிந்தவர்களை  பற்றி எழுதிய கவிஞர் , பிறர் வீட்டுக் குளத்தில் கல்றெிந்து செல்லலாமா ?

அது அதிர்வை ஏற்படுத்திய போது அமைதியாகவும் இருந்ததும் , பின் அறிக்கை என்கிற பெயரில் வெளிவந்த சந்தேகமான வார்த்தைகளும் அவற்றை அவர் உளப்பூர்வமாக உணர்ந்து செய்யவில்லை என்பதை உணர்ந்ததால்தானே பல ஆன்றோரும் சான்றோரும் உரக்க குரல் எழுப்பினார்கள் .

என் தாயாக காண்கிறேன் என்கிறவர் பலரது வணக்கத்திற்குரியவரை , பலரது வீட்டில் தன் மகளை அவரது வடிவில் காணும் சமுதாயத்தில் ....

இப்படி சம்பந்தமே இல்லாத மேடையில் ஆண்டாள் சர்ச்சை _ஒரு இஸ்லாமியப் பார்வை ,பகுத்தறிவு பார்வை , கடவுள் மறுப்பு பார்வை , ஆராய்ச்சிப் பார்வை என்கிற பெயரில்  பக்தியை ஒதுக்கி  கொச்சைப் படுத்துதலை யார்தான் அனுமதிக்க இயலும்.

இத்தனைக்கும் விதை இவர் கலந்த அந்த ஒரு துளிதானே.

தாங்கள் வணங்கும் அபிராமியை இப்படி பேசினால் உள்ளம் கொதிக்காதா ? மன்னியுங்கள் . இப்படி எழுத நேர்ந்ததே என்று எனக்கு கண்களில் நீர் முட்டுகிறது. யார் இவருக்கு இந்த அதிகாரத்தை அளித்தார்கள்.

அதுவும் தங்களைப் போன்ற நெகிழ்ந்த பக்தியில் திளைத்து மகிழும் அன்பர்களை அருகில் உணர்ந்து கொண்டே....

தன்னோடு வாழும் மனிதரின் உணர்விற்கு மதிப்பு தரத் தெரியாத கவித்துவம் என்ன கவித்துவம் . கவிஞர் எப்படி உணர்வை உணராது ஜடம் போல பேச இயலும்.

................

ஏன் 1998 களில் நாம் இருவரும்  பேசியதைப் போல உணர்ச்சி வசப்பட்டு மட்டும் வினையோ எதிர்வினையோ ஆற்றிச் செல்லலாமே. அதில் ஏதாவது தவறா என்ன.

ஆனால் இத்தனை காலம் நிகழ்ந்த எத்தனையோ அனுபவங்களூம் பரிமாற்றங்களும் ...

அதன் அடிப்படையில்தானே தங்களை யானும் அடியேனை தாங்களூம் கையாளூகிறீர்கள்

தமிழ் கவிப் பேரரசின் சமூக பந்தமும் தமிழ் பந்தமும் அப்படிபட்டது தானே.

ஒரு மேடையில் ஒரு நிகழ்வில் உரையாற்றும் போது தங்கள் கருத்தில் உடன்பாடு இல்லாத போதும் எதிர்வினை நிகழாது. பேசுபவருக்கு மதிப்பளித்து எதிர்வினையும் செய்திடலாகாது. அவரது பார்வையை கருத்தை கோணத்தை அதற்கான அடித்தளத்தை பகிர்ந்திட அனுமதிக்க வேண்டும் அல்லவா?

சபை நாகரீகம் என்பது என்னை விட தாங்கள் நன்கு உணர்ந்தவர் ஆயிற்றே. அங்கு வீசும் கருத்தும் பார்வைக்கும் அதன் பின்னர்தானே எதிர்வினையும் ஆராய்ச்சியும் நிகழும் .

இத்தனை தமிழை படித்தவர் இத்தனை அனுபவம் பெற்றவர் இத்தனை வயதான பிறகும் அதுவும் ஆண்டாளின் பத்தியில் ஊறி திளைக்கும் மாதத்தில்... தினசரி காலையில் அவளது பாடலைப் பாடி வீதியில் நடந்து பிறரை எழுப்பி கண்ணனை நினைத்திட மாதவம் வேண்டுமே என்று அனைவரும் ஏங்கும் காலத்தில் .... அவளது பெருமையை பேசுகிறேன் என்று அவளது பிறப்பையும் நடத்தையையும் ஆராய்ச்சிதான் செய்தேன் என்றால் .... 

அதுவும் தான் மேற்கோள் காட்டிய கட்டுரையின் ஆசிரியரே அது அனுமானம்தான் ஆதாரமற்றது என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொண்ட பிறகும் .. தன் கருத்தை திரும்ப பெறாத பிடிவாதம்தான் புலமையா ?

___________//_________///

காலத்தின் கோலத்தில் சமூகப் பார்வைகள் , இலக்கிய பார்வைகள் மற்றும் கையாடல்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு , அவர் அடைந்த உயர்பரிமணத்தின் பக்தியின் உணர்வு மட்டுமே அவரது வாழ்க்கை சாரமாக எடுத்துச் செல்லப்படும் சமூகத்தில் .....

என்றோ வாழ்ந்த ஒருவரின் வார்த்தை பிரயோகங்களை எடுத்துக் கொண்டு  அனுமானங்களின் அடிப்படையில் ஆராய்ச்சி என்கிற தன் பார்வையில் அவரை பதிவு செய்து எதிர்கால சந்ததியினருக்கு அளிக்கும் உரிமை ஒருவருக்கு இருக்குமானால்.....  சமகாலத்தில் இருப்பவர்க்கு அதே உரிமை இல்லையா என்ன.

இந்த காலம் இப்படி எத்தனையோ சர்ச்சைகளை சந்தித்துதானே வந்துள்ளது.

திருக்குறள் எழுதிய காலத்தில் முதலில் அதை யாருமே ஏற்றுக் கொள்ளவில்லை பின் அதில் சத்தியம் இருந்தால் காலம் திருப்பி தரட்டும் என்று நதியில் போட்டதாகவும் அதை சரஸ்வதி திருப்பி தந்ததாகவும் கதையுண்டே.

இதில் மிகைப்படுத்தல்களும் திரபுகளும் இருந்தாலும் சத்தியம் இருப்பதால்  அது காலத்தால் திருப்பி தரப்பட்டதாக இன்றும் காலம் கடந்து நிற்கிறது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தானே செய்கிறோம். அது போலத்தானே விஷயங்கள்...கருத்துக்கள்..

ஏராளமான மனஉளைச்சல் பெற்றேன் என்று கூறுபவர் பல்வேறு மனிதர்களுக்கு இவரின் பிரயோகம் ஏற்படுத்திய வலியை உணர தவறியதேன்.

அதுவும் அவர் மீ்ண்டும் மீண்டும் ...

ஒரே ஒரு வாக்கியத்தை அதுவும் யாரோ எழுதியதைத்தான் பயன்படுத்தினேன் . அது என் கருத்தல்ல என்கிறார்.

அப்படியாயின் வழக்காக பதிவு செய்யவும் எதிர்கொள்ளவும் எதற்காக இடைக்கால தடை வாங்க வேண்டும் என்று கேள்வி எழுகிறதே.

சிலரது மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன் என்றுதானே முதலில் அறிக்கை விட்டார். புண்பட்டிருந்தால் என்பது சந்தேக தொனிதானே.

அதுவும் இக்கருத்து பக்தர்களால் ஏற்றுக் கொள்ளப்படாது. சமய மறுப்பாளர்களால் ஏற்றுக் கொள்வார்கள் என்று மேடையிலேயே அக்கட்டுரையிலேயே கூறியதன் மூலம் .........

ஏற்றுக் காெண்டதன் மூலம் பக்தியின் அடித்தளத்தில் மட்டுமே இயங்கும் ஒரு உலகில் சென்று சமய மறுப்பாளனாக கடவுள் மறுப்பாளனாக மட்டுமே பேசுகிறேன் பார்க்கிறேன் என்பது .....

தன் தமிழையும் அதில் ஆண்டாளின் பெருமையையும் மட்டுமே கேட்டு்உருக காத்திருக்கும் , கூடியிருந்த . கூட்டத்தை  அவமதிப்பதாக ஆகாதா ?

ஒருவேளை இதையே நேர்மையாக அழைப்பாளர்களிடம் மறுப்பு தெரிவித்து இருந்தால்  கூட அவளை கொண்டாடும் மாதத்தில் அவளுக்காக எடுக்கப் பட்ட விழாவில் அவளின் பெருமைகளை பேசிட வேறு யாரேனையும் அழைக்கும் சாத்திய கூறுகளூம் கூட உண்டே.

எதிர்குரல்கள் எழுந்த பின்னரும் ... சமய மறுப்பாளர்கள் மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள் என்பதையும் விழிப்போடும் கவனத்தோடும்  உணர்ந்தே செய்த போதும் ....

கால மாற்றிங்களினால் பக்தர்கள் இப்பார்வையையும் பார்க்க ஆரம்பிப்பார்கள் என்று எண்ணி செயல் செய்த போதும் ........

வழக்கம் போல பக்தர்கள் ஏற்றுக் கொள்ள மறுதலித்து ஆன்றோரும் சான்றோரும் சாமான்யரும் எதிர் குரல் எழுப்பிய பின்னரும் .....

எல்லா காலத்திலும் பக்தர்கள் பக்தர்கள்தாம்.

ஏற்படுத்திய காயத்திற்கு , தங்கள் மனம் புண்பட்டமைக்கு வருந்துகிறேன் என்றுதானே கூறியிருக்க வேண்டும் .

ஆனால் வார்த்தை ஜாலத்தினால் சந்தேக தொனியில் வெளிப்படுத்தியதால் தானே இதை இவரே இன்னமும் துண்டிவிட்டதாயிற்று.

அதன் பின் அரசியல் ரீதியாகவும் துறை சார்ந்த நண்பர்களுமாக பல்வேறு திசைகளில் வந்த அறிக்கைகள் எரிகிற வீட்டில் எனக்கென்ன கிடைக்கும் என்பதுதானே.

குறைந்த பட்சம் அதன் பின்னர் வெளியிட்ட சமீபத்திய விளக்க அறிக்கையில் அத்தகைய முயற்சிகளை செய்தவர் யாராயினும் அவர்களையும் அவர்தம் அறிக்கையின் வரிகளையும் சுட்டிக்காட்டி கண்டனம் எழுப்பி இருக்க வேண்டுமே.

அதுதானே சமூக நல்லிணக்கத்தை விரும்பும் மலிவான அரசியலை எதிர்க்கும் ஒரு மனிதர் செயலாக இருக்கும்.

நேரடியாக சுட்டிக் காட்டுவதன் மூலமே இத்தகைய மலிவான அரசியலை இறுபுறமும் செய்தவர்களை தமிழ் சமூகத்திற்கு அடையாளம் காட்டியிருக்க இயலும்.

அதுதானே தமிழ் சமுதாயத்தின் நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்காது இருக்கும்.

ஆனால் மதம் சார்ந்த அரசியலாலும் அரசியல் சார்ந்த மதங்களாலும் பூதாகரமாக்கப்பட்டு விட்டது என்று பொதுப் போர்வைக்குள் ஔிந்து கொண்டால்.....

இதோ ஆண்டாள் சர்ச்சை ஒரு இஸ்லாமிய பார்வை என்று கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கின்றனர். அதில் எத்தகைய மனிதர்கள் பேசுவார்கள் என்ன பேசுவார்கள் எப்படி பேசுவார்கள் என்பது நான் சொல்லி தங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. இதையும் அனுமானம் என்று ஒதுக்கிவிட்டால் விளைவுகளை சந்திக்கும் சமூகத்திற்கு என்ன பதில் உரைப்பீர்கள். இந்த ஒரு போஸ்டர் என்ன எதிர்விளைவை ஏற்படுத்தும் என்பது தாங்கள் உணர இயலாதவர் அல்ல.

இதை எதிர்த்து , இது போன்ற முயற்சிகளில் ஈடுபடுபவர்களை நேரடியாக சுட்டிக் காட்டி ஒற்றை அறிக்கை விடலாமே. அதுதானே கம்பீரமும் எதன் போர்வையிலும் ஔிந்து கொள்ளாத நிலை.

நான் ஒரே ஒரு வரி மட்டும்தானே கையாண்டேன் ஒரே ஒரு வார்த்தையை மட்டும் அதுவும் அந்த காலத்தில் இருந்த பயன்பாட்டில் குறிப்பிட்டே பேசினேன் என்கிற தன்னை நியாயப்படுத்தும் வாதமும் வியாக்கியானமும் பேசுபவர் எப்படி இதையெல்லாம் கண்டிப்பார்.

பொதுவாக தமிழக்கத்தில் நிகழும் பிரச்சினைகளில் எழுத்தாளர் சாரு நிவிதிதா கருத்துக்களின் நிலைப்பாடு தாங்கள் அறிவீர்கள். அப்படிப்பட்டவர் கவிஞரை கைது செய்திட வேண்டும் என்று மிகக் கடுமையாக பதிவு செய்தார்.

பொதுவாக பலரோடும் முரண்படும் ஒருவருக்கே அது முரண்பாடாய் தெரிகிறதென்றால் .. அதுவும் கவிஞரைப் போன்றே தமிழ் இலக்கிய உலகில் அவரை அறியாதவர்கள் அதிகமில்லை....... என்னைப் போன்றவர்கள் மிக மிக சாதாரணமானவர்கள்.

உண்மையில் கவிஞரின் வீட்டின் முன் சாத்விகமான உண்ணாவிரதம் இருந்திட வேண்டும் என்றே தோன்றியது. அதைத்தான் நாட்டுப்புற கலைஞர் விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் செய்தார்.

ஆனால் அவர் சொல்வது போல வெற்று சமுதாய பார்வையில் மட்டும் ஒருவரை எடுத்துக் கொள்வேனாயாகில்  , அவரது வாழ்வின் சாரமான அந்த உன்னத பக்திநிலை அடைய இயலுமா ? அவர் மீது பக்தி கொண்டு யான் இயங்குவேனா?

அவரது உயர்வான பரிமானங்களை , உணர்வுகளை அனுபவமாக அடியேன் பெறஇயலுமா

இதுதானே ஒரு மகானுக்கும் ஞானிககும் சித்தர்களுக்கும் தான் வாழும் சமகாலத்தில் நிகழ்கிறது.

அப்படியிருக்க சொன்னதையே திரும்ப திரும்ப பேசி , பல விதங்களில் நியாயப்படுத்த முயற்சிப்பது அவரது நோக்கத்தை சந்தேகம் கொள்ள வைக்கின்றதே.

விளக்க வீடியோவை காணும் போது என் தமிழின் ஆளுமையும் கம்பீரமும் எங்கே போயிற்று என்று கேட்க தோன்றுகிறது.  ஏன் கெஞ்ச வேண்டும் என்கிற உணர்வையே மேலிடுகிறது. யாருக்கு எப்படியோ எனக்கு இப்படித்தான் தோன்றியது.

சத்தியம் என்றும் கம்பீரமாகவே  வெளிப்படும் ஆளுமையாகவே ஆட்கொள்ளூம் என்பதை அறியாதவரா தாங்கள்.

எதிர்காலத்தில் இவரது பார்வையும் பரிமாணமும் கருத்தும்தானே ஆதாரமாக மேற்கோள் காட்டுவார்கள்.. அது ஆண்டாளையும் அவர்தம் பக்தியையும் உணர தடையாகாதா ..

அவளை வெற்று காம ரசம் ததும்பிய ஒரு பெண்ணாக மட்டும் காணும்படியான பார்வையை பிறர் பெற வைப்பது அவளை அவமரியாதை செய்வது ஆகாதா ?

இன்னும் சொல்லப் போனால் பக்தியின் சாரமே இதுதான். ஆண்டாளின் வலிமையே இதுதான்.

பிறரைப் போல குற்ற உணர்வு கொள்ளாது , மனதுக்குள் குமையாது , மனிதரிடத்தில் தேடாது மாதவனிடத்தில் சரணடைகிறாள். அதில் அனைத்தும் கடந்து அவனையே அடையவும் செய்கிறாள். எத்தகைய கள்ளமில்லாத பக்தி. உன்னதமான கருவி. அதற்கு அவளுக்கு அடித்தளமாக அமைந்தது அவர்தம் தந்தையின் வழிகாட்டல் .

இன்றைய சமகால பெண்ணை பற்றி இப்படி மேடையில் பேசினால் சமூகமும் அவளும் பகிரங்கமாக ஏற்றுக் கொள்வாளா............

காரணம் அது அவளை பற்றியது மட்டுமே அல்லவே. என் சமகாலத்திய பெண்களை பற்றிய எனது பார்வையும் என்பது போன்றுதானே பொதுவான உலகம் காணும்

கல்லூரி காலங்களில் புத்தக கடைகளில் பல வார மாத இதழ்களோடு  நாலந்தர எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களூம் தொங்க விட்டிருந்ததை கண்டிருக்கிறேன்.

அவர்களின் சொல்லாடல்களும் பல சித்தர் பாடல் மொழியும் ஒன்றுதான்.

ஆனால் சித்தர்கள் வெளிப்பாடு சிந்தனையை தூண்டும். கடந்து செல்ல பணி புரிய வைக்கும்.  இது போன்ற எழுத்துக்கள் வெற்று உணர்சிகளில் மூழ்கடிக்கும்.

வெளிப்பாடுகள் பார்வைக்கு ஒன்று போல தெரிந்தாலும் காலம் கடந்தும் சித்தர் பாடல் நிலைக்கின்றன. ஆனால் இவை....

காரணம் அடியேன் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவர்கள் வெளிப்பாடுகள் அவர்களின் உன்னதமான பரிசுத்தமான உள்நிலையை சுமந்து செல்வதால்... ஒரு விதத்தில் அவர்களையே சுமந்து செல்வதால்தான்... சிரஞ்ஞீவியாய் இன்றும் அவர்கள் வழிநடத்துகிறார்கள் .

ஆண்டாளின் மொழி கையாடல் யான் அறியேன். திருப்பாவை மட்டுமே அதுவும் ஒரளவு மட்டுமே . மற்றபடி அப்பாடல்களுக்கு தங்களைப் போன்ற பெரியோர் உரைத்த உரைகளின் சாரம் மட்டுமே எனது பக்தியின் அடித்தளம். அதுதான் பெரும்பான்மையோருக்கு உண்மையும் கூட.

நாச்சியார் திருமொழி பற்றி யான் அறியேன் திருவாளர் மறைந்த ஞானி அவர்களும் இன்னும் சிலரும் பதிவு செய்திருக்கிறார்கள்.

இலக்கியவாதிகள் என்பதால் அவர்கள் ஆண்டாளின் அனைத்து பணிகளையும் எடுத்துக் கொணடிடுக்கலாம்

பக்தனுக்கு திருப்பாவை ஒன்றே போதும் என்பதை விட அதுதான் தேவை.

அப்படி உயர்வாக காண்பவரை பற்றி பலவிதமாக பிறர் பேச இவர் மேடையமைத்து கொடுத்தது நியாயமா ?

அடுத்த தலைமுறைக்காக பதிவு செய்யும் முயற்சியில் அவர் எத்தகைய மனிதராயினும் உயர்வானவற்றை எடுத்துச் செல்லும் விதமாக செயல்படுவீர்களா அல்லது ஏற்கனவே உயர்வாக வணங்கி கொண்டிருப்பவரை அவமரியாதை செய்யும் விதமாக .... அதுவும் ஆதாரமின்றி எழுதப்பட்ட ஒரு் கட்டுரையின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய விதமாக பதிவு செய்வீர்களா ? ஒரு பக்தனாக இதை கண்டனம் செய்தே தீருவேன்.

அதற்கு எனக்கு என்ன உரிமை என்றால்....

கருத்து வேறுபாடும் செயல்முறை வேறுபாடும் கொண்டவரைப் பற்றி கூட எவ்வித ஆதாரமும் இன்றி பதிவு செய்து எதிர்கால சந்ததிக்கு விட்டுச் செல்லுதல் சரியல்ல என்பது எனது தாழ்மையான கருத்து என்பதே. இதை தாங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன

குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் காெளல்

வாய்மையெனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீது இலா சொல்

தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாது நாவினாற் சுட்ட வடு

வள்ளூவப் பெருந்தகையின் வாக்கு
..........

மூதறிஞர் ராஜாஜி சொன்னதை எடுத்துக் கொள்வதா கோதையின் மொழியும் வார்த்தையும் எடுத்துக் கொள்வதா என்று எனக்குள் அறிவு போராட்டம் நிகழுமானால் கோதை ஆண்டாள் சொல்வதையே எடுத்துக் கொள்வேன்.

வைணவ பெரியோர்கள் எதிர்குரல் எழுப்பிய போது ராஜாஜியும் தன் கருத்தை திரும்ப பெற்றதாக வரலாறு . அவருக்கு எதிர் குரல் எழும்பவில்லை என்று யார் சொன்னது.

அவளை பற்றி அறிந்தவள் அவளே யன்றி வேறு எவரும் இல்லை. அடுத்து ராஜாஜியின் கருத்தும் பார்வையும் அனுமானங்களின் மேல் கட்டமைக்கப்படுவது. அவரது காலமும் கோதையின் காலமும் ஒன்றல்ல. கோதையின் மொழி அவளது வாக்குமூலம்.

ஆம் தாங்கள் சுட்டிக்காட்டியது போல இந்த குறிப்பிட்ட பதிவில் அனுமானங்கள் நிறையவே உணர்ந்தே வெளிப்படுத்தினேன் . அதுவும் சற்றும் அறியாத தளம் பற்றி எழுதியதனைத்தும் அனுமானமே.

காரணம் கடந்த மற்றும் நிகழ் கால சூழல் நிகழ்வுகளின் அறிவுத் தாக்கம் .

எல்லாகாலத்திலும்  பக்தியையும் பக்தர்களையும் மட்டுமல்லாது ஞானிகளையும் சித்தர்களையும் யோகிகளையும் அறிவு கொண்டு ஆராய்ந்து வீசியெறிந்த குப்பைகள் அதை உணரும் வலி

இவற்றையெல்லாம் ஒரு சேர வெளிப்படுத்த நேரடி அனுபவமில்லாத எனக்கு இந்த அனுமானங்கள் அவசியப்பட்டது.

மேலும் தமிழக அரசியலையும் அதன் சூழலையும் ஒரளவு அறிந்த யாரும் கொண்டிருக்கும் அனுமானங்களைத்தான் யானும் வெளிப்படுத்தினேன்.

இன்று இது போன்ற கருத்துக்களை எழுதும் பத்திரிக்கைகளினாலேயே  ஊடகங்களின் கருத்துக்களினால் வாசகர் உலகம் நிறைந்து வழிகிறது என்பதை அறியாதவர்களா தாங்கள்.

அப்படி இருக்கும் சுழலில் எப்படி கருத்துக்களும் வார்த்தைகளும் திரிபு செய்யப்படும் என்பதை அறியாதவரா அவர போன்ற பெரியோர்.

தங்களின் கவன ஈர்பிற்காக  எழுதாவிடினும் தங்களின் பணிகளூக்கிடையில் பதில் அளித்தமைக்கு நன்றிகள்.

அதே சமயம் தாங்கள் இதை செய்திடும் விதமாக என் அறிவிலும் உணர்விலும் எண்ணி செயல்படவில்லை என்பதை தெளிவு படுத்தும் அதே சமயத்தில்....

பலரும் படிக்கின்ற ஒரு பதிவில் தங்களது கருத்து பலருக்கு தெளிவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்றே செய்திருப்பீர்கள் என்கிற நம்பிக்கையிலும்

அதே சமயம் என் மீது பேரன்பு கொண்டு என்னையும் நான் கூடுதல் கவனம் கொண்டு வழிநடத்திக் கொள்ள உதவியுள்ளதாகவும் எண்ணிக் கொள்கிறேன்.

இருப்பினும் எனது எழுத்துக்கள் தங்களது மனத்தை ஏதேனும் ஒரு விதத்தில் காயப்படுத்திருப்பின் மனப்பூர்மான மன்னிப்பையும் சமர்பிக்கிறேன்.

இறுதியாக

தான் உபயோகப்படுத்திய மேற்கோளால் பக்தர்கள் மனம் காயப்படும் என்று அறிந்திருந்தும் அவரே அதிலேயே ஒப்புக் கொண்டும்

தன் கருத்துக்கும் பார்வைக்கும் அனுமானத்திற்கும் எதை ஆதாரமாக சுட்டிக் காட்டினாரோ அதை எழுதியவரே அது ஆதாரமற்றது என்றுஒப்புக் கொண்ட பின்னரும் தன் கருத்தையும் பார்வையையும் திரும்ப பெறாது பிடிவாதமாக செயல்படும் கவிஞரிடத்தில் தன் அனுமானங்களை ஒப்புக் கொண்டு திரும்பப் பெற சொல்லுங்கள்.

உயர்ந்த பரிமாணத்தில் கரைந்துபோன பக்தியை உணர வந்த பக்தர் கூட்டத்தில் அதுவும் அவரே கூறும் விதமாக எதிர்கால சந்ததியினருக்கு பதிவு செய்யும் முயற்சியில் தமிழை ஆண்டாளை  தமிழின் தற்காலத்திய கவிப் பேரரசு பதிவு செய்ய முற்பட்டது ஏற்றுக் கொள்ள இயலாத ஒன்று.

அது ஆண்டாளை அவர்தம் பக்தியை கேலியும் கிண்டலும் பரிகசிக்கும் கூட்டத்திற்கு தீனி போட்டு வளர்ப்பதை போல.. அதுதான் தற்போது ஆண்டாள் சர்ச்சை ஒரு இஸ்லாமிய பார்வை என மேடையேறுகிறதோ என்று தோன்றுவது இயற்கைதானே. இப்படித்தானே இதுகாறும் அனுபவம் உள்ளது.

பக்தர்கள் முட்டாள்தனமாக தம்மை வெளிப்படுத்தியிருக்கலாம்.

ஆனால் அவர்களது பக்தியை மட்டுமே காலமும் உலகமும் மக்களும் சுமந்து செல்கிறார்கள்.

அவர்களுக்கு  காயத்தை ஏற்படுத்திய பிரயோகத்தை திரும்ப பெறுவதும்
காயப்பட்ட மனங்களூக்கு உளப்பூர்வமான வருத்தம் தெரிவிப்பதும் (மன்னிப்பு என்கிற வார்த்தையை விலக்கி கொள்கிறேன் ) அதை அவர் பெருமதிப்பு வைத்தருக்கும் அருந்தமிழை தந்த ஆண்டாள் சன்னதியில் அறிவிப்பதுமே சரியான செயலாகும்.

அன்னை அபிராமியின் அற்புத தமிழை அள்ளி தெளித்தவரும் ஆன்மிக அனுபவங்களில் திளைத்து தெளிந்தவருமான தாங்களும் என்கருத்தை ஏற்றுக் கொள்வீர்கள் என்பதை நம்புகிறேன்.

எத்தனை முறை பிழை திருத்தம் செய்தே ஒரு கட்டுரையையை வெளியிட்டாலும் யாருக்கும் பிழை ஏற்படுவது சகஜமே.

அதை ஆன்றோரும் சான்றோரும் சுட்டிக் காட்டும் போது  திருத்தி எழுதும் போதே உயர்வாய் செல்கிறார்கள் என்பது தாங்கள் அறியாது அல்ல.

என் விளக்கத்திலும் குறையிருப்பின் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன்.

பக்தர்களை என்றுமே முட்டாள்களாய்தான்  உலகம் கண்டிருக்கிறது.

ஆனால் அவர்களது பக்தியை சுவைத்தவர்களும் அனுபவித்தவர்களுமே அவரை உயர்வாக காண்கிறார்கள்.

அத்தைகைய அடியவர்களின் அடியார்களை மனம் நோகடிப்பது .....

நேர்மையாகவே எனக்குள் சீர்தூக்கி பார்த்து எந்த வித துவேஷமும் இல்லாமலேயே இதை பதிவு செய்துள்ளதாக கருதுகிறேன்.

காலம் என்றேனும் ஒரு நாள் யார் மூலமாகவாது இக்கடிதத்தை அவர் பார்வைக்கு எடுத்துச் செல்லும் என்று நம்புகிறேன்.

அவரும் எம்மைப் போன்ற பக்தர்களின் மனதின் வலி போக்க மருந்தை தருவார் என்று நம்புகிறேன்.  தங்களைப் போன்ற பெரியோர் இருக்கும் தமிழ் உலகில் அது இப்படித்தான் இருக்க வேண்டும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற நிபந்தனை விதித்தல் சரியாகாது.

ஆயினும் கூட அந்த கருத்துக்களை திரும்பப் பெறுவதும் மனப்பூர்வமான மன்னிப்புமே அவரது தாய் என்றழைத்த ஆண்டாளின் பக்தர்களின் மனத்தில் ரணம் ஆறச் செய்யும்

இதற்கும் மேல் வினையாற்றினால் .... இந்த குளத்தில் அந்த கல்லை வீசியெறிந்ததன் பின்னால் இருக்கலாம் என்று அனுமானிக்கும் அரசியல் எனக்குத்தான் புரியவில்லை என்பதுதான் நிறுபணமாகும்.

அதற்கு என் அனுமானமே தேவையில்லை.

அரசியல் எனக்கு புரியாது என்பது மட்டுமல்ல மற்றும் தேவைப்படவும் இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல...

அனுபவங்களினால் நிற்கும் பக்தி , பெரியோர்களின் ஆசியாலும் குருநாதனின் கருணையினாலும் ஈசனின் அனுக்கிரஹத்தாலும்  ஸ்திரமாகவே உள்ளது . இது போன்ற விஷயங்கள் உரமாகி மேலும் ஸ்திரப்படுத்துகிறது.

துங்குபவர்களை எழுப்பலாம் ....

ஆதலால் அமைதி கொள்கிறேன்.

வினை ஹிம்சையை ஏற்படுத்தினால் விளைவும் ஹிம்சையாகவே முடியும்

பகுத்தறிவு வேண்டும் என்று பரப்பி மண்ணில் கால மாற்றத்தால் பக்தி என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்று சாமான்யர்களின் குரலோடு வீதியில் இறங்கி நடக்க வைத்ததே நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களின் அஸ்திவாரமும் பணியும்

இம்மாதிரி சோதனை காலங்களில் ஆன்றோர்களும் சான்றோர்களும் ஆச்சார்யர்களும் பீடாதிபதிகளும் ஆதீனங்களும் அகில இந்திய துறவியர் சங்கமும் முன்னின்று எடுத்து செல்லும் போது அவர் வழி நடத்தலே சிறப்பு என்பதால் அமைதி கொள்கிறேன்.

ஆனால் சமூக வலைதளங்கள் எழுப்பிய கேள்விகள் , இனி கவிப்பேரரசு என்று கேட்கும் போதோ , கவிஞர் வைரமுத்து என்கிற போதோ இவைதான்  பலரது மனதில் நிற்கும்.

அவர் போன்றோர் இப்பழியை சுமக்க வேண்டாம் என்பது என் போன்றோர் ஆசை ..

எனக்கு புரிந்தது அவருக்கு புரிய வேண்டுமே

கடவுளே ஆனாலும் காலத்தின் கேள்விகளுக்கு பதில் உரைத்தே ஆகவேண்டும்.

செயல்களை நாம் தீர்மானிக்கிறோம்
விளைவுகளை காலம் தீர்மானிக்கிறது

ஒருவர் தவறு செய்துவிட்டதாக , தான் வணங்கும் தெய்வமகளை அவமதித்துவிட்டதாக , தன் வீட்டு பெண்டீருக்கு அவமானம் நேர்ந்ததாக ஒருவர் உணர்ந்து விட்டால்............நீங்கள் எத்தனை விளக்கங்கள் சொன்னாலும் எடுபடாது. மனப்பூர்வமான மன்னிப்பு ஒன்றே மாமருந்தாய் காயம் போக்கும் என்பது தங்களைப் போன்றோருக்கு தெரியாததல்ல.

அதனால்தான் மீண்டும் ஒருமுறை விண்ணப்பம் வைக்கிறேன்.

எறிந்த கல்லின் அதிர்வலைகளை , எறிந்தவன் என்கிற பொறுப்பு உணர்ந்து ஆண்டாளிடம் மன்னிப்பு வேண்டி  குளத்தை அமைதியாக்கச் சாெல்லுங்கள்

கல் அவருடையது  இல்லாமல் இருக்கலாம் ஆனால் வீசியெறிந்தவர் அவர்தான்

இனியும் எழுதி தங்களை  தொல்லை செய்திட மாட்டேன் . ஆனால் காலத்திற்கும் சமுகத்திற்கும் மன்னிப்பை கோற அவர் கடமை பட்டவர் என்பதை கடுமையாகவே சொல்கிறேன்.

அதுவும் அவரை நியாயப்படுத்துவதாக பாதுகாப்பதாக சில அறிவீலிகள் ஆயுதம் எடுப்போம் என்று ஜாதி பிரச்சனைகளை உருவாக்க முயன்றதும் , அக்ரஹாரங்களே அழிந்து போன சமுகத்தில் பார்ப்பனிய சூழ்ச்சி என்று திசை திருப்ப முயன்றதும் , தமிழன் பிரசன்னா என்பவர் திமூகவின் பேச்சாளர் என்று கூறிக் கொண்டு _ இந்து மதம் போன்ற ஒரு கேவலமான மதம் இல்லை என்று கருத்து சொல்வதும் அதை வன்மையாக கண்டிக்க இயலாத கட்சித் தலைமை இருப்பதும் இது போன்று பல நிகழ்வுகளால் எதிர்விளைவுகள் என அசம்பாவீதங்கள்  நிகழாது தடுக்கும் தன் பொறுப்பை உணராது.....

தமிழ் சமூகமே நீ ஒரு ஞானச் சமூகம், மதக்கலவரங்கள் தூண்ட நினைப்பவர்களை புரிந்து கொள்வாய் : வைரமுத்து.

என்று அவரது கருத்து வெளிவருவதோ அல்லது அவரே அறியாது அவர் பெயரில் கருத்துக்கள் புனையப் படுவதை கண்டுணர்ந்து மறுக்காமல் /தடுக்காமல்  இருப்பதோ

அவர் தமிழையுணர்ந்த அளவிற்கு தன் பொறுப்பை உணரவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது .

தங்களது அன்பு என்னை மௌனப்படுத்தலாம் . ஆனால் என் கேள்விகள் திருப்தியான பதில் கிடைக்கும் வரை  காலத்தில் எட்டு திக்கும்  எதிரொலிக்கும் என்பது நிச்சயம்.

கடவுளை மறுத்து விடலாம் ஆனால் மனசாட்சியை யாராலும் மறுக்க இயலாது.

அது என் போன்ற சாமனியர் கேள்விகளை மீண்டும் மீண்டும் எழுப்பி உறக்கம் தொலைக்கும் .

When you silenced a voice more louder voice will arise

அடியேன் அமைதி கொள்வது எனதன்பு மனிதனுக்காக

நாத்தீகம் என்பது கடவுளை மறுப்பது மட்டும்தான். தன்னுணர்வையோ பிறர் உணர்வையோ மறுப்பதல்ல.

தன்னோடு வாழும் மனிதர்களின் நம்பிக்கையை பரிகசிப்பதல்ல.

நாத்தீகம் பேசுபவர்கள் அவர்கள் வீட்டில் இருப்பவர்களின் நம்பிக்கைகளை கேலி செய்திடமாட்டார்கள். அவர்கள் ஆலயத்திற்கும் செல்லலாம். வீட்டில் யாகங்களையும் வளர்கலாம். அது அவர்களது தனியுரிமை.

அதே தனியுரிமையை என்னைப் போன்றவர்கள் செயல்படுத்தினால் எமக்கதிராக வன்முறையில் குதிப்பது. 

கடவுளைத்தானே மறுக்கிறோம் என்று சொல்கிறார்கள் . அப்படியாயின் எங்களை ஏன் மறுக்கிறார்கள். எங்கள் மீது எதற்காக வன்முறை தெளிக்கிறார்கள்.

ஏன் ஆலயத்திற்கு வரவில்லை என்று என்றேனும் வன்முறையில் ஈடுபட்டோமா . இல்லையே. இல்லை கிருஸ்துவத்தைப் போல தங்களது வருமானத்தில் தசம பாகம் கண்டிப்பாக தந்தே ஆகவேண்டும் என்று நிர்பந்திக்கிறோமா? அல்லது இஸ்லாமியர் போன்று தினம் ஒன்றுக்கு ஐந்து முறை தொழுகை செய்ய கட்டாயப்படுத்தினோமா? எதுவுமே இல்லையே.

பின் எதற்காக இந்த வன்மம். அதுவும் அக்ரஹாரங்களே அழிந்து போன காலத்திலும் பிராம்மண துவேஷம். இந்துக்கள் என்பது பிராம்மணர் மட்டுமா.

மனது வலிக்கிறது.

வன்மத்தாலும் வன்முறையாலும் பாதிக்கப் படுவது யாராயினும் என் மண்ணின மைந்தர்களே அல்லவா ?

__________//__________//

எனது நண்பருக்கான பதிலுரையான இக்கட்டுரையை படிக்க நேர்ந்த அன்பர்களே நட்புக்களே தமிழ் மக்களே , உங்களக்கு ஒரு வேண்டுகோள்..... இந்த எழுத்துப் பூர்வமான சம்பாஷனை எனக்கும்  எனது பிரியமான மதிப்பிற்குரிய நண்பருக்கும் பிரத்தேயகமானது.

எக்காரணம் கொண்டும் தங்கள் கருத்தை தெரிவிக்க முயற்சிககும் போது கவிஞரை வசை பாடாதீர். மீறுபவர்கள் எனது முகநூல் வட்டத்தில் இருந்து பிளாக் செய்யப்படுவீர்கள்.

அதே போல் எனது நண்பருக்கு ஆலோசனைகளையோ அல்லது அவர் மீது விமர்சனங்களையோ வைத்திடாதீர். அவர் மீது எனக்கு பரிபூரண நம்பிக்கை உண்டு.

இப்படியெல்லாம் சொல்வதற்கு மன்னியுங்கள். காலச் சூழல் அதனால் சொல்ல கடமைப் பட்டுள்ளேன். இது அவருக்கான அவரது தமிழுக்கான எனக்கு பிரியமான எனதன்னையின்  மைந்தனுக்கான எனது மரியாதை.

_____________//________//

இன்று தமிழகத்தின் இந்துஅறநிலையத் துறையை பற்றி ஆலயங்களின் நிலமை பற்றி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெற்று  ஆதாரங்களின் மீதான கருத்தை சமர்ப்பிக்கும் ஒரு காணொளியை முகநூலில் பகிர்ந்துள்ளேன். துரதிர்ஷடவசமாக ஆங்கிலத்தில் பேசியுள்ளனர் முடிந்தால் தமிழ் டைப் செய்து இணையுங்கள்..

அதே போன்று சத்குரு அவர்கள் பேசிய ஒரு காணொளியும் (அதுவும் ஆங்கிலத்தில் இருக்கிறது துரதிர்ஷடமே ) என் நாடு என் கலாசாரம் என்பதை நாம் உணராது வாழ்வதாலும் அரசியலிலும் தலைமைப் பொறுப்பில் வருபவர்களூம் அந்த தன்மையில் செயல் புரியாததால் சந்தித்த இழப்பையும் பேசியிருக்கிறார். ஒட்டு மொத்த தேசமாக விழிப்பையும் எழுச்சியையும் பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.

அரசியல் நமக்கு தேவையில்லை. ஆனால் அரசுகள் நமக்கு ஆதாரமானவை. அதன் பொறுப்புக்களை சுமக்க பலரும் முன்வரும் போது சரியான நபர்களை தேர்ந்தெடுப்பது நமது கடமையும் பொருப்பும்.

இத்தனை படித்த பிறகும் அன்னையின் திருப்பாதங்களில் மனமுவந்து சரணடைய விருப்பம் எழவில்லையன்றால் ...........

மற்றவரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கத் தெரிந்தவன் மனிதனாகிறான் .

_____________//_________//

முடிப்பதற்கு முன் மீண்டுமொருமுறை எனது வேண்டுகோளை நினைவு படுத்துகிறேன்.

கட்டுரையை பற்றி கருத்தெழுதுங்கள் ஆனால் தயவுசெய்து யாரும் கவிஞரைப் பற்றி கருத்தை இதற்கான கருத்தெழுதும் போது தவிர்த்திடுங்கள்.
அது போலவே எனது பிரியமான நண்பரை பற்றியும் கூடாது.

மீறுபவர்கள் பிளாக் செய்யப் படுவிர்கள்

___________//_______//

எனது குரலாக ஓங்கி ஒலியுங்கள்
சாலையில் இறங்கி போராடுங்கள்
சனாதன தர்மத்தை காத்திடுங்கள்

பின் துறவிகள் வாள் சுழற்றத் தேவையில்லை.

ஆழ்வார்களையும் நாயன்மார்களையும் பட்டி தொட்டியெல்லாம் எழுச்சியோடு எடுத்து செல்லுங்கள்

அவர்தம் உயர்ந்த வாழ்வுதனையும் உன்னதமான பக்தியையும் உலகறியச் செய்வோம்.

அடுத்த ஒரு வருடத்திற்குள் தங்கள் எல்லைப் பகுதியில் தேவார திருவாசகம் ,திருமந்திரம் , திருப்பாவை திருவெம்பாவை ,திருப்பள்ளியழுச்சி , அனைவரையும் ஆனந்தமாக பாடி உலா வரச்செய்யுங்கள்

அதுவே அந்த மகான்களுக்கான நன்றிக்கடன்

அந்த பக்தி சுடர் விட்டு பிரகாசிக்கட்டும் 

நன்றியும் அன்பும்
தங்கள் சுவாமி சுஷாந்தா
22/01/2017