Wednesday, 1 October 2014

தீபாவளி மத்தாப்புக்களை எங்கள் வானத்திலும் கொஞ்சம் பகிருங்கள்

தீபாவளிக் கொண்டாட்டங்கள் என்பது நமது கலாசாரத்தில் மிகவும் ஒன்றிப்போன ஒன்று. மதம் சார்ந்த நம்பிக்கைகளை விட , மத்தாப்புகளும் புத்தாடைகளும் கொண்டு வரும் ஆனந்தம் அளவிட முடியாதது. அதுவும் குழந்தைகளோடு என்றால் குதுகலம்தான்.

கடந்த வருடம் கேதார்நாத்தில் ஏற்பட்ட ஊழிப் பெருவெள்ளம் சுமார் 20- 25 நிமிடங்களே நீடித்த போதும் , அவை உண்டாக்கிய ரணங்கள் இப்பகுதியில் வாழும் மக்களிடையே இன்னமும் ஆறவில்லை.

இன்னும் சில தினங்களில் நான் கேதார்நாத் செல்ல இருந்தாலும், முதல் முறையாக வரப்போகிற தீபாவளியை இங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து வந்துள்ள (பெற்றோர்களை இழந்த) மாணவ, மாணவிகள் தங்கிப் படிக்கும் ஹாஸ்டல்களில் சென்று கொண்டாட தீர்மாணித்துள்ளேன்,

எனது வாழ்க்கையில் முதன் முதலாக இப்படி ஒரு செயலை செய்ய தீர்மாணித்து இருக்கும் நான் , மாணவ மாணவிகளுக்கு புத்தாடைகள் வழங்கி , ஒரு நல்ல விருந்தையும் பகிர்ந்து கொள்ள தீர்மாணித்திருக்கிறேன்.

தங்களது நெருங்கிய உறவினர்களை இழந்தும் , வீடுகளை இழந்தும் , வெள்ளத்தின் பாதிப்புகளை சுமந்து நிற்கும் இந்த குழந்தைகளின் குதுகலம் நிச்சயமாக ஒரு ஆனந்தமான வாழ்வின் கொண்டாட்டத்திற்கு துவக்கமாக அமையக்கூடும்.

மாணவ மாணவிகளுக்கு ஒரு நல்ல உடைக்கு சுமார் ரூ 2000 மற்றும் அவர்களுக்காக பணிபுரியும் ஆண் மற்றும் பெண் தொண்டர்களுக்கான உடைகளுக்கு சுமார் ரூ3500 ம் ஆகும் என தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது.

சுமார் 200 குழந்தைகளுக்கும் மேல் பாதிக்கப்பட்டவர்கள் இருந்த போதிலும் முதல் தடவையாக இருப்பதாலும் , கால நேரம் குறைவாக இருப்பதாலும்  சுமார் 50 மாணவர்கள் ,  30 மாணவிகள் மற்றும் 10 ஆண் தொண்டர்களுக்கும் 5 பெண் தொண்டர்களுக்கும் உதவிட முடிவு செய்துள்ளேன்

இதைத் தவிர  ஒரு ஹாஸ்டலுக்கு  விருந்திற்கான நன்கொடையாக சுமார் 5000 ரூபாய் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ( 3 ஹாஸ்டல்கள்)

இத்தகைய பொருளாதார கணக்குகள் காரணமாகவே இதுவரை இது போன்ற சமுக பணிகளை மேற்கொள்ளாமல் இருந்து வந்தேன். பணியை செய்வதை விட அதற்கான பணம் சம்பாதிப்பதே பெரும் பணியாக இருந்து விடுகிறது. ஆனால் கேதார்நாத்தில் கண்ணெதிரே பேரழிவை தரிசித்த நொடிகள், இந்த குழந்தைகளுக்காக , அவர்களது கொண்டாட்டங்களுக்காக கையேந்திட வைக்கிறது என்றால் அது மிகையாகாது.

உங்கள் வீட்டு குழந்தைக்கு செய்வது போன்று , உங்கள் சகோதர சகோதரி குழந்தைகளுக்கு செய்வது போன்று தங்கள் குடும்பத்தில் இன்னொரு குழந்தையின் குதுகலத்திற்கும் தங்களால் இயன்ற அளவு உதவிட வேண்டுகிறேன்.

முதலில் ஆடைகளாகவே பெற்றிட நினைத்தேன். ஆனால் அதில் உள்ள பல்வேறு பிரச்சினைகளாலும் , குழந்தைகளிடையே பேதங்களை உருவாக்க விரும்பாததாலும் ரொக்கமாகவே பெற்று இயன்றதை செய்து ஆனந்தத்தை பகிர்ந்திட விரும்புகிறேன்.

இந்த உயரிய நோக்கத்திற்கு தங்களால் இயன்ற அளவு நன்கொடையை கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் செலுத்த வேண்டுகிறேன். மறவாது எனது மெயில் ஐடிக்கும் (swami.sushantha@gmail.com) தங்களது விபரங்களோடு கூடிய ஒரு தகவலை தர வேண்டுகிறேன்,

தங்களது மகிழ்ச்சியையும் மத்தாப்புக்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புவோர் , வங்கி கணக்கு விபரம் பெற எனது மெயிலுக்கோ அல்லது பேஸ்புக் இன்பாக்ஸிலோ தகவல் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்


ஒரு வங்கிக் கணக்கு பயன்படும் விதங்களை எண்ணி மகிழ்கிறேன். ஒரு உள்ளுர் அன்பரால் உருவாக்கித் தரப்பட்ட இந்த கணக்கு ஏற்கனவே ஒரு மாணவியின் படிப்பிற்கு உதவி பெருமை சேர்த்துக் கொண்டது
தங்களது நண்பர்களோடும் உறவினர்களோடும் இத்தகவலை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.


குழந்தைகளின் உள்ளத்தில் மத்தாப்புகளாய் குதுகலத்தை தூவ முன்வரும் தங்களை வணங்குகிறேன். நன்றி

An Appeal – for Diwali

Diwali, the festival of light is one of the greatest celebrations in our country and culture. Irrespective of its mythology or belief, new clothes and crackers will bring the smile in every one’s life, especially among children.

Though the flood in Mandagini River just lasted 20 to 25 minutes only, but the wounds caused in the local people’s life in Kedar valley is not yet get cured.

Though I am going to Kedarnath in few days , I would like to come down and celebrate  Diwali with a group of children whom affected by last year flood and living in orphanages.

These children migrated here from interior villages to continue their education, after their family got affected by the loss of their father or some earning person in the last year flood.

As a first attempt of such kind in my life, after i decided to move to Himalayas since 2011. I decided to offer them a few set of new clothes and one day special dinner. It is estimated a budget of Rs.2000 per boy or girl, Rs.3500 per volunteer (gents and ladies).

There are nearly 200 affected children living around Guptakashi. But I have identified 50 boys and 30 girls who are living in few hostels(orphanages) in this initial phase.  Apart from this there are 10 Gents and 5 ladies who are serving for them in this noble cause.

Apart from this, For the Diwali Dinner cost, I expect donors for one girl’s hostel and  2 no’s of boy’s hostel. (Rs.5000 for each)

Only because finance and economics, past 3 yrs I preferred to stay out of these kind of social projects. But when life toppled them with such huge wave of flood, as a survivor and witnessed of Himalayan tsunami at Kedarnath itself, I could not able to restrain myself without reaching them.

That’s why I came down in my policy, to bring the joy in these faces. As children of your family, as a brother and sister who are wishing them for better life, I kindly request you to support the cause by sponsoring at least one person or one thing of your choice.

Initially I thought of asking clothes but later I discarded because of wastage of cost in transportation. Above all each cloth will be in different quality, so I thought of collecting donation and do it uniformly for every child.

Those who wish to share their joy and colors with these people, kindly requesting you to send your donations.

You also can come forward to donate generously for this noble cause in the following bank account, along with an email swami.sushantha@gmail.com.

Now only I am realizing the use of that local devotee’s offering (bank account). A bank account not for our life, you can use it for reaching out other life's too. Earlier the same is useful to support a college girl’s education.

those who interested to donate your joy and light on diwali kindly msg me either in mail or in fb for bank account details

Kindly circulate this letter among your friends and relatives, so as to share a colorful moment with these children.

please come forward to contribute whatever you can, in case if you can't sponsor for a child or a volunteer totally

Bow down to you. Pranams.

Swami Sushantha