Thursday 1 May 2014

பெயரில்லாத நொடிகள்

நொடிகளுக்குள் தொலைந்து போகிறேன்
தொலைந்திடாத என்னை மீட்டெடுக்கிறேன்

படிகளில் நடனமாடுகிறேன் – ஆனால்
அவை மேலே செல்பவையா அல்லது கீழிறிங்குபவையா
என்பதை அறியாமலே ஆனந்தப்படுகிறேன்

அவ்வப்போது உளறல்களை எழுதித்தள்ளுகிறேன்
ஆனால் உண்மையில் என்னை உள்வாங்குகிறேன்

நொடிகளின் உலகம் பிரபஞ்சத்திற்கு அப்பால் விரிந்து

வாழ்வதற்கு நேரமின்றி வாழ்கிறேன்
அந்த வாழ்வினுடே என்னை தொலைக்கிறேன்

உறங்கும் போதே கனவுகள் நினைவடுக்கில் எட்டி பார்க்கிறது
நித்தம் நித்தம் பிரசவித்து நீள் நொடியை எதிரொலிக்கிறது
கண் விழித்த தருணம் காலை சூரியன் தன் பயணம் தொடங்கியிருந்தான்
என் பயணம் தொடங்குவது எப்போது ?
எவராவது சொல்லுங்களேன்

பயணத்தில் இளைப்பாறுகிறேனா அல்லது
இளைப்பாறுதலே பயணமா என்பது அறியாமலே
நொடிகளுக்குள் என்னை தொலைத்துப் போகிறேன்

தொலைப்பதற்கு கூட
மறதி மட்டும் போதாது திறமையும் வேண்டும்
மீண்டும் அதை தோண்டி எடுக்காதவகையில்

தோண்டி எடுப்பவை எல்லாமே ஞானம்தான்
ஆனால் விழித்தபின் உறங்க முடிவதில்லை



No comments:

Post a Comment