Monday 9 September 2013

எனக்கு வந்த கோரிக்கையும் நான் அளித்த பதிலும்

எனக்கு வந்த கோரிக்கை


வணக்கம். தங்களின் கங்கையின் கோர தாண்டவம்! மீண்டுவரும் சிவனார் பூமி! (மினி தொடர்) படித்தேன்.
கோவிலே கூடாது என்பதல்ல கோவில் கொள்ளையடிப்பவர்களின் கூடாரமாகிவிடக் கூடாது என்பதுதான்! - இந்த வசனத்திற்காக கைதட்டிய கைகள் எல்லாம் இன்று அந்த கோவில் தரும் டென்டருக்காக கையேந்தி நிற்கின்றன.
இவை மிக கசப்பான, உண்மையான வார்த்தைகள்!
நானும் பலமுறை இது குறித்து யோசித்துள்ளேன்.
ஏழை சொல் அம்பலமேறாது!
நல்லவை எவர் காதிலும் ஏறாது!
நல்வழி காட்ட வேண்டிய சாமியார்கள், அல்வழி சென்று ஆடம்பர வாழ்க்கை வாழும்போது, சாமான்யன் என்ன செய்வான்!
இறையச்சம் குறைந்ததும், அல்லோர் வாழும் சுகபோக வாழ்க்கையும், நல்லோர் படும் அவஸ்தையும் மக்களை நல்வழியிலிருந்து, அல்வழியில் பயப்பட தூண்டுகிறது.
தங்களைத் தாங்களே இந்து மதத்தலைவர்கள் என அழைத்துக்கொள்ளும் பல சுயநலம் மிக்கவர்களால், மதப்பற்று குறைந்து வாழும் மக்களை குறிவைத்து தம் மதத்திற்கு மாற்றும் அவலங்களுக்கு யார் முற்றுப்புள்ளி வைப்பது என பலமுறை கண்ணீர் வடித்துள்ளேன்.
கல்வியையும், மருத்துவத்தையும், ஆடம்பரத்தையும், . . . காட்டி இந்துக்களை மதம் மாற்றும் அவ்லங்களை யார் தடுப்பார்?
ஆசிரமங்களையும், மடங்களையும், வழிபாட்டுத் தலங்களையும் வைத்திருக்கும் (கோட்டீஸ்வரர்கள்) மதத்தலைவர்கள் நினைத்தால் மற்ற மதத்தினர் வழங்கும் அனைத்து உதவிகளையும், இந்தியாவில் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் வழங்கி, அவர்கள் ஏழ்மையையும், ஆரோக்கியமின்மையையும், கல்வியறிவின்மையையும், வறுமையையும், அறியாமையையும் அதிகபட்சம் ஓராண்டிலேயே போக்கிடமுடியும்! சிவனருள் இருந்தால் இவை சாத்தியமே!

சிவனருளால் மறுபிறவி கண்ட தாங்கள் ஏதாவது செய்யுங்களேன்.


நான் அளித்த பதில்


நான் தாங்கள் சொல்லும் பல பெரிய ஆசிரமங்களுக்கு சென்று வந்துள்ளேன்

எல்லோரும் அப்படி அல்ல அவர்கள் பயணத்திற்காகவும் பல பணிகளை செய்வதற்காகவும் இன்றைய அன்றாட தேவைகளாக நல்ல வாகனம் மற்றும் இதர வசதிகள் தேவைப்படுகிறது

பலர் சுற்றும் பயணம் சாமன்ய மனிதர்களால் சற்றும் எண்ணிப் பார்க்க முடியாது அந்த அளவிற்கு ஒரு நாளைக்கு சுமார் 18 முதல் 20 மணி நேரம் பயணம் மற்றும் பணிகளோடு சங்கமித்து இருக்கின்றனர் அத்தகைய அலைச்சலை இந்திய ரோடுகளில் தினமும் தாங்கள் செய்திருந்தால் நிச்சயம் இப்படி பேச முடியாது

நான் கூட இப்படி வெறித்தனமாக சுற்றி இருக்கிறேன் இன்றும் கூட என் செயல்களை பார்த்து என் பின்னால் ஏதோ கோடிஸ்வரர் இருந்தால் மட்டுமே இப்படி செலவு செய்ய முடியும் என்று புரிந்து கொண்டு என்னை விட்டு விலகியவர்கள் உண்டு அது துரதிர்ஷடம் என்றே சொல்வேன் ஏனென்றால் அவர்கள் வாழ்வில் எத்தகைய ஒரு காரியத்தையும் மிக முனைப்பாக செய்ததே இல்லை எப்படி செய்ய முடியும் எப்போதும் பிறரைப் பற்றியே எண்ணிக் கொண்டு இருப்பவனுக்கு தன் காரியமும் தன்னை பற்றிய கவனமும் சற்றும் இருக்காது 

அரசாங்கத்தைக் காட்டிலும் இத்தகைய ஆசிரமங்களே தினமும் ஆயிரக்கணக்கில் மக்களுக்கு சத்தான உணவை அளிக்கின்றன என்னோடு சில நாட்கள் வந்தால் சில ஆசிரமங்களுக்கு கூட்டிச் சென்று காண்பித்தால் அசந்து விடுவீர்கள் அவை சாதாரணமாக எத்தகைய ஒரு தனிமனிதனாலும் செய்திட முடியாது நிச்சயம் அவை சாம்ராஜ்யங்கள்தான் ஆனால் அந்த அன்பின் சாம்ராஜ்யத்தின் அடுத்த பகுதி தெரிய வேண்டுமானால் அவைகளின் திட்டப்பணிகளில் பணியாற்றினாலோ அல்லது அதன் திட்டங்களில் ஏதோ ஒரு நிலையில் ஒருங்கிணைப்பாளராகவோ பணியாற்றினால் அவர்களது சுமை புரியும் அத்தகைய சுமை தாங்கி கொண்டு ஆனந்தமான முகத்தில் அவர்கள் இருப்பதை பார்த்தாலே கண்கள் பனித்து விடும்

இது ஏதோ கற்பனை செய்தி அல்ல நிஜம் இன்று கூட இங்கு மிகப் பெரிய ஆசிரமங்களை சந்தித்து விட்டுத்தான் வந்துள்ளேன் அவர்களுக்கு பணம் என்பது கங்கையைப் போல் பாய்கிறது என்றுதான் நானும் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன் அப்படி இருந்தும் ஏன் இதை யெல்லாம் அவர்கள் செய்ய வில்லை என்று எண்ணி இன்று நானே நேரில் சென்று இத்திட்டங்களின் நிலையை கண்ட போது , நான் என்னையும் தங்களோடு இணைத்துக் கொள்கிறேன் என்பதைத் தவிர வேறு எதுவும்  சொல்ல இயலவில்லை

காரணம் ஒரு புறம் மக்களின் எதிர்பார்ப்பும் தேவையும் நம்பிக்கையும் மறுபுறம் அதை நிறைவேற்ற தேவையான பொருளாதாரத்திற்காக ஒயாமல் அலைய வேண்டிய --- கையேந்த வேண்டிய நிலை 
இதை விட அங்கு வந்து செல்லும் ஆயிரக்கணக்கான அன்பர்களுக்கு உணவும் இன்முகத்தோடு பணி செய்திட அன்பும் எப்போதும் தம்முள்ளே அள்ள அள்ள குறையாத நிலையில் இருக்க வேண்டும்

நீங்கள் சொல்வது போல அவர்களை , அந்த ஆசிரமத்து தலைவர்கள் மிக மிக பெரிய முதலாளிகள் கண்டுதான் செல்கின்றனர் அவர்களில் ஒருவர் தான் செய்யும் விளம்பரங்களில் சுமார் 10 சதவிகிதம் நன்கொடையாக தந்தாலும் கூட போதும் பல காரியங்கள் மிக எளிதாக நடைபெறும் 

தங்கள் அனுபவத்தில் இல்லாததை தயவு செய்து பேச வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
இந்த கட்டுரைகளை படித்து எனக்கு -- என்னோடு பல திட்டங்களை ஆலோசனை செய்தவர்கள் பலர் -- எனக்காக கூட நான் எதுவும் கேட்கவில்லை ஆனால் திட்டத்தின் முழு பரிமானத்தையும் கூட நான் பேசவில்லை மிக ஆரம்ப நிலை மட்டும்தான் அவர்களிடம் அதற்கு மேலேயே பொருளாதாரம் இருந்தது 

ஆனால் பேசியதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை அடுத்து நான் சந்திக்க நேரம் கிடைக்குமா என்று கேட்டதற்கு கூட இதுவரை பதில் வரவில்லை இத்தகைய மக்களை நம்பி நான் மட்டுமல்ல எவரும் வேலை செய்ய முடியாது ஆனால் இப்போது இத்திட்டத்திற்காக என் நேரம் செலவழித்துக் கொண்டிருக்கிறேன் 

இதற்கான என் வாகன மற்றும் உணவுத் தேவைகளை கூட அவர்கள் உதவ வில்லை ஆனால் அதனாலேயே நான் கிடப்பில் போட வேண்டியதாயிற்று ஆனால் அதையும் மீறி எளிமையான சில அன்பர்கள் சிறுக சிறுக உதவும் போது அதற்கான பணிகளை செய்து வருகிறேன் 

குறை சொல்வது மிக எளிது அன்பரே யாரோ ஒருவர் தவறு செய்கிறார் என்று எண்ணி அனைவரையும் அலைய விடுகிறோம் எனக்கு யார் மீதும் அக்கறை இல்லை எதற்காக இருக்க வேண்டும் அவர்களுக்கே அவர்கள் வாழ்க்கை மீது அக்கறை இல்லாது போது எனக்கு எதற்காக இருக்க வேண்டும்

ஒரு உதாரணம் சொல்கிறேன் இதை செய்து பாருங்கள் நான் சொல்வது மிக தெளிவாக புரியும் . உங்கள் குடும்பத்திலும் நண்பர்கள் இடத்திலும் உள்ள பழக்க வழக்கங்களை பாருங்கள் அதில் தேவையற்றதை , உடலுக்கும் பொருளாதாரத்திற்கும் தேவையற்றதை தேர்ந்தெடுங்கள் உதாரணமாக சிகரெட். புகையிலை, மது , சினிமா, கூல்டிரிக்ஸ் , நொறுக்கு தீனிகள் , அதிகப்படியான ஆடைகள் , நடந்து செல்லும் தூரத்திற்கும் வாகனத்தில் செல்லுதல் என...... அவற்றிற்கான பணத்தை மட்டும் சேகரித்து சொல்லுங்கள் 

 அவற்றைக் கொண்டு தாங்கள் செய்யும் பணியினால் ஒரே ஒரு  மனிதனையாவது தங்களை கடவுளாகவே  நான்  காண வைக்கிறேன்


No comments:

Post a Comment