Monday 4 November 2013

பேசாமல் பேசினான்

a poem written after had an experience being with an sanyasi on the banks of river ganga,  on the way when i went to submit a document " project kedar " 

பேசாமல் பேசினான்

வழியில்தான் தரிசனம் – அது
அவன் வரமாய் தந்த கரிசனம்
கண்கள் பார்த்து அழைக்கவில்லை- ஆயினும் என்
கனவை ஆசிர்வதிக்க கருணை கொண்டான்

காந்தமாய் எனை ஈர்த்தான்
கருணையாய் சிலேடையில் பேசினான்
கண்ஜாடையில் அவ்வப்போது
கணைகள் எழுப்பினான்

கண்கள் கிறங்கி கிடந்த வேளையில்
மண்ணும் விண்ணும் கூட மறக்குமாறு
ஒலிகளால் ஓம்காரத்தை விளக்கினான்
ஓய்ந்த சமயத்தில் ஒற்றை கேள்வியால்
ஒன்றை மறக்க செய்து பதிலை வாங்கினான்

வணங்கி விடை கொண்ட போது
வராது வரச் சொன்னான்
அந்திநேரம் வந்த போது
அவன் காலடியில் ஒரிடம் ஒதுக்கி வைத்தான்

கறந்த பால் கன்னல் ஒடு என
கண்களில் கசிந்துருகச் செய்தான்
நான் மட்டுமல்ல என் கனவுகள் கூட
அவன் பாதத்தில் ஆசிர்வாதம் பெற்றன

அறிந்த போதும் அறியாதவனாய்
அமைதியாய் அமர்ந்திருந்தான்
எல்லாம் மறந்து என்னை இழக்கிறேன்
யாதும் அறியாதவன் கனவுகளை சுமக்கின்றேன்

சூதும் வாதும் கொள்ளவில்லை
சூழ்நிலைகளும் அறியவில்லை
ஆனால் பேசாமல் பேசிய மௌனம்
என்னை என்னுள் தொலைக்க வைக்கின்றது

அமைதியாவேனா அல்லது ஆவேசமாய்
ஆர்பரிப்பேனா எதுவும் நான் அறியேன்
எதுவானலும் அவனருள்
மௌனம் நீண்டு வார்த்தைகளாய் அவன்
வார்த்தைகள் கடந்து வாழ்க்கையாய் நான்




No comments:

Post a Comment