மதிப்பிற்குரிய திரு
பாரதி மணிக்கு ஒரு அன்புக் கடிதம்
(சென்னைக்கு கொண்டு
வந்த கடவுளை எங்கள் கிராமங்களுக்கு அழைத்துச் செல்ல அவர் இட்ட அன்பு
கட்டளைகளுக்காக - என் அனுபவத்தினாலும் சிற்ற்றிவினாலும் பிழைகள் இருக்கலாம்
பொருத்தருள வேண்டுகிறேன்)
Bharati Mani ஐயா தங்களுக்கு என்ன
சொல்வதென்று தெரியவில்லை இந்த சாதாரண மனிதனையும மதித்து தங்கள் நேரம் செலவழித்து
பதில் எழுதியுள்ளீர்கள்.
நீங்கள் ஏற்கனவே சரண்டர் ஆகிவிட்டதாய் சொல்லி விட்டீர்கள் நானும் சண்டை
போட்டதாய் உரிமையோடு கூட சொல்ல வில்லையே
இருப்பினும் இக்கடிதம் எழுதிகிறேன். ஒரே காரணம்தான் . படிப்பவர்கள் எல்லாம்
சற்று சிந்திக்கட்டும் . இந்த உலகில் இன்னமும் மழை பொழிய இத்தகைய பாரதி மணிக்கள்
தான் காரணம் என்று.
பாரதி மணி வெறும் நாடக கலைஞர் மட்டுமல்ல என்னைப்போன்ற தான் சந்தித்தே இராத
மனிதனையும் , அவனது கருத்திற்காக ஆசீர்வாதம் செய்யும் ஒரு அற்புதமான மனிதரும் கூட
என்பதை அறியட்டும்.
இந்த மனிதரைப் பற்றி என்ன சொல்ல. இந்த இளமையான 76 வயதிலும் இரவு 12 மணிக்கும் தூங்காது விழித்திருந்து
தனக்கு கருத்து சொன்னவர்களுக்கு பதில் கருத்தை அற்புதமாய் எழுதியிருந்தார்
எனது 76வது வயதிலும் நான் இவரைப் போலவே கடவுளை வரவைக்க கூடிய மனிதராய் , செயல் புரியும் வகையில் இருக்க
வேண்டும் என்று ஆசை தோன்றுகிறது. (ஆனால் நடிப்பில் இல்லையப்பா , நமக்கு ரசிக்க மட்டுமே தெரியும், அதனால் பயப்படாதீர்கள்.)
தர்ன் கற்றதையும் பெற்றதையும் தானமாகத்தான் தருவேன் என்று குழந்தை போல்
அடம்பிடிக்கும் இந்த தன்னலமற்ற வியாபாரியை** பார்த்தாவது தாங்கள் அற்புதமான மனிதராய் இல்லாவிடினும் சரி , அர்பணிப்பான மனிதராக
இல்லாவிடினும் சரி , குறைந்த
பட்சம் கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் தானமாக கொடுப்பதற்கு சில விதைகளையாவது விதைக்கும் மனிதராகவேணும் ஒவ்வொருவரும் தம்முள் மலரட்டும்
பாரதி மணி சார் , இது உங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கு உறுதுணையாய் நின்ற ,
நிற்கின்ற, நிற்கப் போகிற அனைத்து உள்ளங்களுக்கும் நான் சமர்பிக்கும் என் அன்பு
கலந்த ஒரு சிறிய அங்கீகாரம்
நான் 10ம் வகுப்பு வரை லாந்தர் விளக்கில் படித்தவன் என் படிப்புக்களுக்கு பலர்
பலவிதமாய் உதவி புரிந்தத்ர்ல் இன்று ஏதோ நாலு எழுத்துக்களை எழுதும் அளவிற்கு
தேர்ச்சி பெற்றுள்ளேன்
எனது வலைதளத்தில் எழுதி வரும் நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் கட்டுரையில்
கூறியுள்ளது போல சுஜாதா உள்பட இந்த
சமுகத்தின் அங்கமாக உள்ள உங்கள் எல்லோரிடம் இருந்தும் ஏதோ ஒன்றை பெற்றுள்ளேன்
அதே சமயம் அதே தொடரில் நான் படித்த பள்ளியின் இன்றைய நிலையை பார்த்த போது உணர்ந்த
வலிதனையும் அதில் பதிவு செய்திருந்தேன் என்பதை தாங்கள் அறியமுடியும்
தங்கள் கருத்தை நான் முழுவதும் ஒத்துக் கொள்கிறேன். கல்வியையும் வித்தையையும்
தானமாகத்தான் தரவேண்டும் . அது உங்களிடம் கற்றுக் கொள்ள வருபவருக்கு அல்லவா
பொருந்தும். ஆனால் அவரே உங்களிடம் கற்றுக் கொண்டு விட்டு அதைக் பிறருக்கு தானமாக
கொடுக்காமல் விற்பானேயாகில்...................
அப்படித்தானே இன்றைய பல கல்வி நிறுவனங்களை குறித்து கேள்விபடுகிறோம் .
சமுகத்தில் அதிகமாக ஒட்டாமல் வாழும் என்னைக் காட்டிலும் அதே சமுகத்தின் அங்கமாக
வாழும் தங்களைப் போன்றவர்கள் இன்னும் நன்றாகவே உணரமுடியும்
இதை யாரோ தங்களுக்கு தானமாக கொடுத்ததோடு , செர்ல்லியும் கொடுத்ததால்தானே இன்று தாங்கள்
சொல்லுகிறீர்கள். அது போகிறது கல்வியையும் வித்தையும் காசுக்கு விற்க வேண்டாம்
உங்கள் நேரத்திற்கும் . உழைப்பிற்கும் உரிய மதிப்பை மற்றவர் தர வேண்டாமா எனக்
கேட்கிறேன். , அவர்கள்
பெற்ற கல்விக்கும் மற்றவற்றிற்கும் அவர்கள் உரிய மரியாதையை செலுத்த வேண்டாமா என்று
கேட்கிறேன்
தங்கள் காலத்தில்
பார்க்காத கதாகாலேச்சபமா , நாடக கம்பெனிகளா உங்களுக்கு அடுத்த தலைமுறையினரான
நாங்கள் கண்டிருக்கிறோம். நான் பார்த்த வாரியார், புலவர் கீரனைப் போல எத்தனை பேர்
, இன்றைய தலைமுறைக்கு எத்தனை பேர் அறிமுகம் ஆகியிருக்கின்றார்கள்.
நாதஸ்வர வித்வானைக் கூப்பிடாமல் ஒலி நாடாக்களை வைத்து வைபவங்களை நடத்திக்
கொண்டிருக்கின்றனர். ஏன் பல இசைக் கலைஞர்கள் வாழ்வு நலிந்து போனதால் அதை மட்டுமே
நம்பி வாழமுடியாது என்று அவர்கள் வீட்டு
அடுத்த தலைமுறையே அதை கற்றுக் கொள்ள தேவையான சரியான உழைப்பையும் கல்வியையும் பெறாமல் போனதால்தானே
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை பழமொழியாக பேசிய இந்த மண்ணில் , இன்று
மனப்பாடம் செய்து மதிப்பெண்கள் வாங்குவதை கொண்டாடுகிறோம்.. பள்ளிகளை விட மனப்பாடம்
செய்விக்கும் ஆசிரியர்களும் , டியுஷன்களும் மிக பிரபலமாகி இருக்கின்றனர்.
கற்றல் என்பது இல்லாமல் போய்விட்டது நாடகமோ , இசையோ , சமையலோ, (வியாபாரத்தை
தவிர) எத்தகைய தொழிலையும் வெற்று புத்தகத்தை பார்த்து கற்றுக் கொள்ள முடியாது.
உள்ளிருந்து வரவேண்டும் அதற்கு கூர்ந்த கவனம் தேவை. அந்த கவனத்தை உங்களைப்
போன்றோருக்கு உங்கள் முந்தைய தலைமுறையினர் கொடுத்திருந்தனர்.
நாம்தான் நமக்கு அடுத்த தலைமுறைக்கு தராமல் போய்விட்டோம் என்பது எனக்கு
உறுத்துகிறது. அதற்கு காரணம் வறுமை கடந்து செல்லவேண்டிய அந்த காலகட்டமாக
இருந்திருக்கலாம். கடந்து வந்தவர்களில் பலர் இதை உணரவே இல்லை.
எல்லாவற்றையும் வியாபாரமாக்கி விட்டார்கள். அதை பிடிக்காத தங்களைப் போன்றவர்
கோட்பாடுகளுக்குள் சுருக்கிக் கொண்டு விட்டார்கள். இரண்டுமே வாழ்க்கைக்கு தேவை
அல்லவா
சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி என த்மிழ்நாட்டின்
அனைத்து பெரிய நகரங்களில் ஆவது ஏதோ ஒரு தியேட்டர் இத்தகைய நாடகம். நாட்டியம், என
ஏதோ ஒன்றை தினசரி நடத்த வேண்டும் அல்லவா. இதனால் நாடகமும் காப்பாற்றப்படும். நாடக
கலைஞர்களும் வாழவார்கள்
அதையெல்லாம விட மனிதனுக்குள் இந்த உயிர்தன்மை உயிரோடு இருக்குமே. இந்த 76 வயதிலும் தாங்கள் இவ்வளவு துடிப்போடும் , ஆரோக்கியத்துடனுட்ம, அதை விட வாழ்க்கையை ஹாஸ்யமும் , அன்பும் நிறைந்ததாக கொண்டிருக்க இந்த கலைகளும் , அதன் மேல் கொண்ட ஆர்வமும்தானே காரணம்.
உங்கள் சமகாலத்தில் உங்களோடு மேடையில் நிற்க ஆசைப்பட்ட மனிதர்கள் இன்று எங்கே? நிரந்தர
வருமானம் இருக்கிறது என்றால் இன்னும் பல கலைஞர்கள் உருவாகுவார்களே . அதற்கு
பொருளாதாரம் தேவைப்படுகிறதே
சொல்லித்தர சில பள்ளி, கற்றுத்தர சில ஆசிரியர், படிக்க சில மாணவர்கள், எல்லா
வற்றுக்கும் மேலாக அதற்கு அனுமதிக்க இன்றைய பெற்றோர்களின் மனநிலை. என அனைத்திற்கும்
பொருளாதாரமாக இருக்கிற்தே. உங்கள் பெற்றோர்களுக்கு உங்களை பற்றி என்ன பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. நிரந்தர வருமானம் ஒன்றுதான் எதிர்ப்ர்ர்த்தார்கள் என்றே கூறுவேன். மற்றபடி டாக்டாராகவோ , இன்ஞீனியர் ஆக வேண்டியோ pre kg ஸ்கூலுக்கு டியுஷன் வைக்கவில்லை.
இவைகளை பொருளாதாரம் இல்லாமலா உருவாக்க முடியும். அதுவும் தரத்தை காட்டிலும்
விளம்பரமே பிரதானமானது என்கிற த்த்துவத்தில் இந்த நாடும் , மக்களும் மேலை நாட்டு தாக்கத்தால் டாஸ்மார்க்கில் மூழ்கி டிவியில் தோன்றும் பெருமைக்காகவும் , பொய்யான அங்கீகாரத்திற்காகவும் , அதனுடைய டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்த வேண்டி வெற்று விவாதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கையிலே இருக்கையிலே
அவர்களிடத்தில் தான் பணம் இருக்கிறது. நான் சென்று நாடகம் போடுகிறேன் என்றால்
யார் எனக்கு உதவ வருவார்கள்? அதற்கேனும் குறைந்த பட்ச வெற்றியை நான் பெற வேண்டுமே
. அந்த குறைந்த பட்ச வெற்றியை பெறவாவது எனக்கு ஆதரவு தர மனிதர்கள் வேண்டுமே
திரையுலகில் உங்களைப் போன்றவர்கள் சந்தித்திராத மனிதர்களா. கனவுகளோடு வந்தவர்
பலர் இருக்கின்றார்கள். ஆனால் அதில் ஓரளவேணும் கனவையும சும்ந்து கொண்டு .
போராட்டங்களற்று வாழ்பவர் எத்தனை பேர்
சமீபகாலத்தில் கொண்டாபட்ட இயக்குநர் சேரனின் தற்போதைய பேட்டியை படியுங்கள் .
திரையுலகம் தன்னை ஒதுக்கிவிட்டதாக புலம்புகிறார். எத்தனையோ காரணங்கள் இதற்கு
இருக்கலாம். அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால் ஒரளவு அங்கீகாரம் பெற்ற
மனிதனுக்கே இன்றைய நிலை இப்படியெனில் மற்றவர்களை பற்றி நான் என்ன சொல்வது
இதற்குக் காரணம் தங்களைப் போன்ற எண்ணத்தில் இன்னும் பலர் இல்லாத்துதான்.
கல்வியை காசு இல்லாமல் கற்றவர்கள், வித்தையை காசு இல்லாமல் கற்றவர்கள் இன்று அதை
தங்கள் பெயரில் விற்பனை செய்கிறார்கள்
வியாபாரத்தை நம் மண்ணிலும் செய்தார்கள் ஆனால் வியாபாரமாக செய்தார்கள் வெற்று
லாபத்திற்காக மட்டும் எதையும் செய்ய் வில்லை. ஆனால் தனக்கு லாபம் வராது என்றால்
எதற்கும் முதலீடு இன்று கிடைப்பதில்லை
சுற்றுச் சூழுலை மாசுபடுத்தும் வாகனத்திற்கு கடன் தருகின்ற வங்கிகள்,
விவசாயிகளுக்கோ அல்லது அவர் தம் பயிர்களுக்கோ கடன் தருவதில்லை. தனியார்களின் நகைக்
கடன் மோசடிகள் பற்றி பேஸ்புக்கில் செய்திகள் உலா வருகின்றன.
கல்விக்கும் , மருத்துவமும் இலவசமாக கிடைக்காத போது ஓட்டுக்காக உடலைக்
கெடுக்கும் டாஸ்மார்க் இலவசமாக கிடைக்கின்றது இவ்வுலகில்.
சினிமா பாடல்களையாவது கவிஞர்கள் இதற்காகவே எழுதுகின்றனர். அதற்காக சம்பளமும்
பெற்று விடுகின்றனர்.
ஆனால் இந்த பாரம்பரிய இசையை உயிர்ப்போடு வைத்திருப்பதாகவும் , வளர்ப்பதாகவும்
கூறும் இசைக் கலைஞர்கள் பாடுவது எல்லாம் தாங்க்ள் எழுதிய பாடல்கள் அல்ல.
தியாகபிரம்ம்மும், தீட்சதரும், பாபநாசம் சிவனும் , பாரதியும் உருகி உருகி எழுதிய
வரிகள். அதே வரிகளை , ராகங்களை இலவசமாக தானமாக யாருக்காவது சொல்லித் தருகிறார்களா
?
அல்லது இவர்களது இசை நாடாக்களுக்கு கொடுக்கப்படும் ராயல்டியில் ஒரு சிறு
அளவாவது அந்த மாமனிதர்களுக்கு நன்றி சொல்லும் வகையில் , இந்த வித்தையை , க்ல்வியை
தானமாக அடுத்த தலைமுறைக்கு வழங்க முயற்சி எடுத்துள்ளார்களா ? இது எல்லாம்
உங்களுக்கே வெளிச்சம்
எம்எஸ் எத்தனையோ கச்சேரிகளை இலவசமாக நடத்தி தந்திருக்கிறார் என்று
படித்திருக்கிறேன். அத்தனை வருமானமும் அற்புத பணிகளுக்கு சென்றுள்ளது. அவர்
முன்னின்று நடத்துகிறார் என்பதாலேயே பலர் பலவிதமாய் அப்பணிகளில் பங்கு கொள்ள
முடிந்த்து. அத்தகைய பணிகளுக்கு அவரால் ஒரு அங்கீகாரம் பெற்றுத் தர முடிந்த்து
இன்றைக்கும் பாம்பே ஜெயஸ்ரீ இப்படி பல நிகழ்ச்சிகளை நடத்தித் தருவதை நான்
கண்டிருக்கிறேன். இன்னும் சிலர் இருக்கலாம். என் சிற்ற்றிவுக்கு தெரியவில்லை .ஆனால்
என் அறிவுக் கெட்டிய வரை இதெல்லாம் குறைந்து விட்டது தன்னை விட தர்ன் ஒப்பந்தம்
செய்து கொண்டுள்ள கம்பெனிகளுக்கு லாபம் வராது என்றால் கச்சேரிகளை கூட ஒப்புக்
கொள்ளாதவர்களும் இருப்பார்கள் என்றே என்னுகிறேன்.
ஏன் இத்தகைய கலைஞர்கள அனைவரும் சமுகத்தில் பலரைக் காட்டிலும் நல்ல
நிலையிலேயேதான் வாழ்கின்றனர். அவர்களது ஒப்பந்தங்களை இனி நீடிக்க வேண்டாம் என்று
முடிவு செயது முன்னுதாரணமாக விளங்கட்டுமே.
இனி எவரும் இப்படி ஒப்பந்தங்கள் போடவேண்டாம் என்று தீர்மாணங்கள் இயற்ற்ட்டுமே,
அதே சமய்ம அற்புதமான இசைக் கச்சேரிகளை பொதுவான அமைப்பின் மூலம் ஒலி நாடாக்களாய்
வெளியிட்டு அதன் மூலம் கலைக்கும் அந்த கலைஞனுக்கும் ஆதரவாய் செய்ல்பட்ட்டுமே
பாட்டுக் கச்சேரிக்கு பணம் வாங்கும் கலைஞர்கள், ஒலி நாடா வெளியிடும் உரிமையை
வேறு கம்பெனிக்கு கொடுத்து பணம் சம்பாதிப்பதால் அந்த நிகழ்வில் பாடிய பாடல்கள் வெளியிட்ட
ஒலிநாடாக்கள் மூலம் வரும் தொகை அத்திருப்பணிகளுக்கு செல்வதில்லை, மாறாக ஏதோ ஒரு
நாட்டின் சோனிக்கோ அல்லது வேறு ஏதோ ஒரு கம்பெனிக்கோ செல்கிறது. ஆனால்
வாங்குபவர்கள் எல்லாம் அதை அறிந்த மக்கள் மட்டுமே
வீடியோ ரிக்கார்டிங் ரெட்லைட் பட்டன் எரிவதை முன்னால் பார்த்தால் அதற்கு ரேட்
பேசவில்லை என்று அணைக்கச் சொல்லும் இசைக் கலைஞர்களை நான் கண்டிருக்கிறேன். எங்கு
போய் செர்ல்வது இதையெல்லாம்
ஆனால் நீங்களோ அல்லது உங்களைப் போன்றவர்களோ இத்திருப்பணிகளுக்கு உரிய அங்கீகாரம்
பெற்றுத் தருவதை மறந்தும் , மறுத்தும் உங்கள் கோட்பாடுகளுக்குள் சிக்கிக் கொண்டு
உள்ளீர்கள் என்றே நான் குற்றம் சாட்டுவேன் . சமுகத்தில் பலரால் பார்க்கப்படுபவனும், கவனிக்கப்படுபவனும், மதிக்கப்படுபவனும் எதற்கு அங்கீகாரம் பெற்றுத் தருகிறான் என்பது மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
கிராமத்திலிருந்து வந்து இன்றைக்கு மிகப் பெரிய திரையுலக பிரமுகர்கள் தங்கள் வருமானத்தை கவனித்த அளவில் 10 சதவிகிதம் தங்களது கிராமத்தையும் அதன் மக்களையும் கவனித்திருந்தால் கூட இன்று தமிழகத்தில் பல கிராமங்கள் ஆரோக்கியமான நிலையை அடைந்திருக்கும். ஆனால் உண்மை நிலவரம் என்ன என்பதை உங்களுக்கே விட்டு விடுகிறேன்.
நீங்களோ , உங்களைப் போன்றவர்களோ நினைத்தால் இத்தகைய பெரிய இசைக் கலைஞர்களை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரு
பெரிய அமைப்பை உருவாக்கி அதன் மூலம் இந்த இயல் , இசை , நாடகத்தை பட்டி தொட்டி
எங்கும் பரப்பலாமே
அதன் மூலம் வளரும் கலைஞர்களுக்கு உரிய அங்கீகாரத்தை பெற்றுத் தரலாமே. எத்தனையோ
பாரதி மணி களை உருவாக்கலாமே .அவ்வளவு ஏன் வயதால் நலிந்த கலைஞர்களை கௌரவமாக வாழ
வைக்கலாமே .
எத்தனையோ கோவில்களை கோவில்களாக பராமரிக்கலாமே. 10 ருபாய் இல்லாவிடில்
கோவிலுக்கு கூட செல்ல முடிவதில்லை. என்ன செய்வது? என் செறுப்பை எங்கு விடுவது ?அவசரமாக
மூத்திரம் வந்தால் காசின்றி எங்கு செல்வது.?
கோவில் என்பது எனக்கும் தெரியும் ஆனால் சர்க்கரை அளவில் தடுமாறுகின்ற என் உடலுக்கு
தெரியுமா என்ன? (எனக்கு இல்லப்பா இருக்கறவங்களுக்கு சொல்றேன்)
சத்குருவை ஒரு நண்பனாக , ஆசிரியனாக. குருவாக உணர்ந்திருக்கிறேன். இந்தியா முழுவதும்
கால்நடையாய சுற்றியிருக்கிறேன் ஆனால் அது போன்ற ஒரு மனிதரை நான் இன்னும் காணவில்லை
. எங்காவது இருக்கலாம். எனக்கு தெரியவில்லை , நான் இன்னும் அறியவில்லை
என்றுதான் சொல்கிறேன்.
ஆனால் அவரது திட்டங்களை ( ஈஷா வித்யா ஆகட்டும், அல்லது கிராம புத்துணர்வு இயக்கம்
ஆகட்டும், பசுமைக்
கரங்க்ள் ஆகட்டும் ) புகழ்ந்தவர்களை கண்டுள்ளேன் ஆனால் செயல் என்று வரும்
போது........ .................கோவில் எவ்வளவு தூரம் வெறும் கூப்பிடும் தூரம்தான்
என்கிற கதைதான்
எத்தனையோ பழமையான ஆலய்ஙகள் பராமரிப்பு இன்றி உள்ளது ஏன் பராமரிப்பு இன்றி
போனது? அதை பராமரித்தவர்களுக்கு சரியான பராமரிப்பு இல்லாமல் போனதால்தானே . நம்மால்
இன்றைய நவீன தொழில் நுட்பங்களை வைத்து ஒரு ஆலயத்தை உருவாக்க இயலுமா. எனக்கு .காவிரி
படுகையில் கால் வைக்கவே கூசுகிறது.
எத்தனையோ சிவனடியார்கள் வாழ்வை பற்றி தாங்கள் என்னை விட நன்றாக அறிவீர்கள். சமீபத்தில்
கூட Venkatasubramanian Ramamurthy குருவி ராமேஸ்வர கோவிலின்
குருக்களை பற்றி எழுதியிருந்தார்.
திருவாசகம் பாடியது யார் என்று கேட்டால் ” இளையராஜா ” என்பதுதான் இன்றைக்கு
பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கும். அந்த திருவாசக ஒலிப் பேழையின் வருமானம்
ஏதாவது ஒரு கோயிலையாவது பராமரித்து இருக்குமா? ............ குறைந்த பட்சம் சில
ஓதுவார்களையாவது வாழ்நாள் முழுவதும் பராமரிக்குமா? ..........................எனக்குத்
தெரிய வில்லை. இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். நான் கேள்விகளை மட்டுமே
முன்வைக்கிறேன்.
திருவாசகத்தை என்னற்ற அன்பர்கள் தினசரி பாராயணமாக ஓதுகின்றனர் ஆனால் தான் இப்படி உருகி உருகி பாடுகிறேன் என்று எவருக்கும் பறை சாற்றவில்லை. அல்லது அதை சிடியாக வெளியிட்டு விற்பனை செய்தும் சம்பாதிக்க வில்லை. ஆனால் இத்தகைய அன்பர்கள்தாம் தம்மை ஆன்மீகவாதிகள் என்று பறை சாற்றுகின்றனர். எத்தனையோ ஆலயங்களின் மண்டபத்தில் ஏதோ ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்து திருவாசகத்தோடு உருகுபவர்களுக்கு என்னவென்று சொல்லுவதாம் அல்லது என்னைப் போன்ற சன்னியாசிகள் தம்மை என்னவென்று சொல்லிக் கொள்வதாம் .
திரு இளையராஜா அவர்கள் மேல் எனக்கு எவ்வித காழ்ப்புணர்ச்சியும் இல்லை இன்னும் சொல்லப் போனால் அவரது இசையோடு வெளியிடப் பட்ட திருவாசகத்தோடு மற்றும் எண்ணற்ற பாடல்களுக்கு நான் ரசிகன். இதே திருவாசக ஒலி பேழையில் கோத்துமபி பாடலில் . நானார் என் உள்ளமார் , ஞானங்களார் என்று பவதாரிணியுடன் இணைந்து அவரது குரல் ஒலிக்கும் போதெல்லாம் உள்ளம் உருகி கண்ணீரோடு இருப்பேன் . அந்த ஒரு சில நிமிடங்களுக்கே நான் அத்தனை சொத்தையும் எழுதி வைத்துவிடுவேன் (ஒருவேளை நான் சம்பாத்தித்து இருந்தால்) ஆனால் ” மாணிக்க வாசகரின் திருவாசகம் ” எனது இசையோடு கலந்து என்று புகழ் பரப்பி இருக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து
எனது பக்தியை யாருக்கு பறை சாற்ற வேண்டும் என்பதுதான் கேள்வி. எத்தனையோ பாடல்களை சத்தமின்றி வெளியிட்டு இருக்கின்றார் அந்த அற்புத மனிதர் . ஆனால் இதற்கு மட்டும் எதற்கு இத்தனை ஆரவாரம். ? இதுவும் வியாபார நோக்கமே என்பது என்து கருத்து. ஒரு வேளை என் கருத்து தவறாகவும் இருக்கக் கூடும். சரியாக இருந்தாலும் தவறொன்றும் இல்லை. ஆனால் அதன் பல்ன் எவருக்கு செல்கிறது என்பதுதான் எனது கேள்வியாக வைக்கின்றேன்
25 வருடம் ஆரோக்கியமாக இருக்க யோகா சொல்லிக் கொடுத்தேன் அதை யாரும் பாராட்ட
முன்வரவில்லை இன்று நோய்க்கு இலவச
மருத்துவமனை திறந்தால் அனைவரும் பாராட்டுகிறார்கள் . இது கோவை ஆலாந்துறை
கிராமத்தில் மருத்துவமனை திறப்பு வைபவத்தில் சத்குரு சொன்ன வாசகம்.
யோகாவை இலவசமாக சொல்லிக் கொடுக்கலாமே எதற்கு இவ்வளவு பணம் என்று என்னிடம்
கேட்டவர்கள் பலர். அதையே டிஷ டிவிக்கு ஏன் இவ்வளவு பண்ம் இலவசமாக கொடுக்கலாமே
என்று யாரும் கேட்கவில்லை.
அந்த காலத்தைப் போல நான் பரதேசியாய் சுற்றித் திரிந்தால் எத்தனை பேர் என்னை பிச்சைக்காரனாவது மதிப்பார்கள். எனக்கு பிச்சைகாரனும் , பேஸ்புக்கும் ஒன்றுதான். ஆனால் ரோட்டில் நான் இருந்தால் நான் உங்கள் வாழ்க்கையில் ஒரு அற்புதமான மனிதராக உணர வாய்ப்பு இருந்தாலும் திரும்பிக் கூட பார்க்காமல் செல்வார்கள்
அல்லது 10 ருபாய் தாளை போட்டதற்காக ஏதாவது பேச ஆரம்பித்தால் இவன் ஏதோ நம் சொத்தையே கேட்கப் போகிறான் என்று எண்ணி தப்பித்து செல்லும் மக்கள்தான் தன்னை பக்தன் என்று சொல்லிக் கொள்கிறான்
2, 3 முறை நான் தொடர்ந்து முயற்சி செய்தால் மறுபடி கோவிலுக்கே வரமாட்டார்கள் அல்லது கோவிலுக்கு வேறுவழியாக செல்வார்கள் ஆனால் பேஸ்புக்கில் அமர்ந்தால் , சாமிக்கு ஆங்கிலம் , கம்யூட்ட்ர் எல்லாம் கூடத் தெரியும் என்று பெருமை பேசுவார்கள்
அதை உணர்நதுதான் காலத்திற்கேற்ப எங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. சிந்ததாங்கள் ஒரு காலத்திற்கு உட்பட்டது சிந்தாத்ங்கள் தவறல்ல ஆனால் தவறான விளக்கங்களோடு சரியான சிந்தாத்தையும பேசவோ , கடைபிடிக்கவோ முடியும் . அதே சமயம் சரியான விளக்கங்களோடு தவறான சிந்தாத்தையும பிரபலபடுத்த முடியும்.. இதை உணர்ந்துதான் மாற்றுக் கருத்துக்களை இந்த மண்ணின் கலாச்சாரம் என்றும் மதித்துள்ளது. ஆனால் இன்றைய நிலைமை எங்கு செல்கிறது என்பதை நான் சொல்ல வேண்டியது இல்லை.
சரியான சிந்தாத்தை சரியான காலத்தில் சரியான மனிதர்களால் கடைபிடித்தால்தான் வேதாந்தத்தையும் பேசவோ உணரவோ முடியும் இல்லேயெல் அது வெட்டிப் பேச்சுதான் எத்தனையோ சிந்தாந்தங்கள் தோற்றுப் போனது அதை தன் செள்கரியத்திற்காக மாற்றிக் கொண்ட மனிதர்களால்தான். அவர்கள் அதை ஊழல் படுத்தியதால்தான். ஏனென்றால் சிந்தந்தத்தையும் , வேதாந்தத்தையும் விட அதை கடைபிடித்த மனிதனையும் தன்னையுமே ஒப்பிட்டு பார்க்க முடிந்தது மற்றவர்களால்.
இந்த சிரமங்கள் எதுவும் தேவையில்லை என்றுணர்கிறவன் மௌனமாகிவிடுகிறான். ஒரு சிலர் தான் பெற்றதை மற்றவரோடு பகிர்ந்து கொள்ள அனைத்து சிரமங்களையும் விருப்பமோடு ஏற்றுக் கொள்கிறார்கள்.
பாறைகளில் மோத வேண்டியிருக்கிறதே என்று பயந்து நதியாக பயணிக்காமல் இருக்க முடியுமா. ?
கல்விச் சாலைகளில் அதிகப்படியான கட்டணம் பற்றி என்னை விட அதிகம்
அறிந்திருப்பீர்கள் ஏன் யாரும் இதைப் பற்றி பேசவோ போராடவோ முன்வரவில்லை
சமீபத்தில் மற்றொரு நாட்டில் நிகழ்ந்த பிரச்சனைக்கு இங்கு போராடுவதாக கூறி ஒருவன் தன் உடலில் தீ வைத்துக் கொண்டு ஓடுகிறான் . அதை பலரும் நின்று கொண்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள். போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போட்டு பிரபலமாக்குகிறார்கள். இது எத்தகைய கொடுமை ?
ஒருவன் தன்னை சாகடித்துக் கொள்வதையும், அதை மற்றவர் ரசிப்பதும், பெருமைப்படுத்துவதும் தீவிரவாதியின் மனநிலையைக் காட்டிலும் மிக மோசமான வன்மம் கொண்ட மனநிலை. இத்தகைய வன்மத்தை மக்களுக்குள் விதைத்தது யார்? மரணத்தைக் கூட விற்க கற்றுக் கொடுத்தது யார்? இதுதான் பத்திரிக்கை தர்மமா? இதுதான் மதங்களின் தர்மமா? இதுதான் இந்த மண்ணின் தர்மமா?
இப்படி தர்ம்ம் பிற்ழ்ந்து இருக்கும் போது கல்வியையும் வித்தையையும் பிறருக்கு தானமாக கொடுக்க , அதை நினைவுறுத்த , மலர வைத்து மணம் வீசச் செய்ய இன்னும் பல பாரதி மணி இந்த
நாட்டில் உருவாக வேண்டுமல்லவா, அதற்காகவாவாது ஒரு சில ஆசிரியரும் பள்ளியும்
வேண்டுமல்லவா.
அத்தகைய பள்ளிகள் கிராம்ம் தோறும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
உங்களைப் போன்ற இத்தகைய ஆசிரியர்கள் அங்கெல்லாம் வறுமை நீங்கி ஆனந்தமாய் வாழ்
ஆசைப்படுகிறேன்
அத்தகைய பாரதி மணியை நானா உருவாக்க முடியும்? நீங்கள் அல்லவா ? இன்றைக்கு
உங்கள் பேச்சை மதித்து பணம் இன்வெஸ்ட் பண்ண தயாராக இருப்பார்கள் . ஏனென்றால்
ஆர்விஎஸ்., பிரியா கல்யாணராமன் போன்ற அற்புதமான பெரியோர் எழுதிய வரிகள் உங்களுக்கு பக்கபலமாக
உள்ளது.
உங்களது நாடகங்களுக்கு கூட்டம் வருகிறது என்பதால் அவர்களது விளம்பரங்களுக்கு
மதிப்பு வந்துவிடும். நீங்கள் மறுத்தாலும் அவனே தியேட்டருக்கு முன்னால் 4 பேரை
வைத்து நோட்டீஸ் கொடுத்தே வியாபாரம் செய்துவிடுவான்.
என்னைப் போன்றோர் உங்களை அங்கீகரிப்பது போல ஊர் ஊராக வேண்டுமானால் கூட்டிச்
செல்வதாக கூறி உங்களது வயதைக் கூட யோசிக்காது , பொது சேவை எனச் சொல்லி
அலைகழிக்க இயலும்
கடவுள் வந்திருந்த்தாலேயே பலர் அவருக்கும் கட்டுரை எழுதினார்கள். கடவுளை
கொண்டு வந்த மனிதனாலேயே இதையும் முன்னெடுத்து செல்ல முடியும். இதன் மூலம் பிற்காலத்தில்
திறமை கொண்ட நாடக கலைஞர்கள ஊரெங்கும் பவனி வர ஸ்பான்சர்கள் கிடைக்கும்.
இவர்களை கண்டு இன்னும் சில நடிகர்களும். ஏன்
கடவுள்களும் கூட உருவாகலாம்.. நான் முன்னே நின்று செய்தால் மத்த்தை பரப்புகிறேன்
என்று புறம் கூறுவான்.
அதற்கான விதைகளையாவது விதையுங்கள் என்றுதான் கேட்கிறேன். அதுதான் சத்குருவின்
கனவும் கூட .அவருடையது மட்டுமல்ல இந்த தேசத்தின் உன்னதமான மகான்களின் கனவும் ,பணியும் கூட. உங்களை சம்மதிக்கச் சொல்லவில்லை. நீங்கள் கொள்ளையடிக்க வேண்டாம்
கொஞசம் கொள்கையை தளர்த்துங்கள் என்று கேட்கிறேன். மேலும் உக்கிரமாக படைதிரட்டி உலா வாருங்கள் என்று கேட்கிறேன்.
டிடிஎச் என்று சொல்லி 400 சேனல் வீட்டிற்குள் புகுந்து கலாசார சிதைவை புகுத்திக் கொண்டிருக்கும் இக்காலத்தில்
குறைந்த பட்சம் கிராம்ம் தோறும் சென்று இத்தகைய விதைகளையாவது விதையுங்கள் என்று கேட்கிறேன்.
இத்தகைய நிலையை காணும் போது எந்தன் உயிர் கொதிக்கிறதய்யா . குருநாதரிடம்
சென்றாலோ அவரோ முதலில் உன் உயிர் கொதிப்பை அடக்கு இல்லையெனில் ரத்த அழுத்தம்தான்
கூடும் என்கிறார் அமைதியும் ஆனந்தமும் உன்னுள் நிலை கொள்ள விடில் தெளிவாய் எதையும
காண முடியாது என்கிறார். உண்மை என்று உணர்ந்த்தாலேயே ஒதுங்கி வாழ்கிறேன் நான்.
ஏனெனில் முதலில் சரிபடுத்தவேண்டியது என்னை. எப்படியும் புனரபி ஜென்னம் புனரபி
மரணம் . குறைந்த பட்சம் அடுத்த ஜென்மத்திலாவது செயலை புரிந்திட இந்த ஜென்மத்தில்
அமைதியாக வாழ் ஆசைப்படுகிறேன் ஹ ஹ
நான் தங்களைப் போன்ற அனுபவஸ்தர்களிடமோ அல்லது பிரபலங்களிடமோ பேசி பழக்கமில்லை.
அதற்கான தேவை இருந்ததும் இல்லை , இனி தேவையும் இல்லை. ஆனால் ஏணியில் ஏறிச் சென்றவர்கள் எல்லாம் இப்படி பேசிவிட்டு ,
செய்துவிட்டு இந்த கலாசாரத்தை, பாரம்பரியத்தை போற்றுவதாகவும், வளர்த்து
வருவதாகவும் சொல்வது மிகப் பெரிய காமெடிதான்
உண்மையை சொன்னேன் பைத்தியம் என்றார்கள் பொய்யைச் சொன்னேன் கடவுள் என்கிறார்கள்
---- உங்கள் நாடக வசனம்தான்.. பரவாயில்லை
நான் பைத்தியமாகவே இருக்கிறேன் கடவுளாக விரும்பவில்லை
ஆனால் கடவுளை வரவேற்கும் ஆனந்த பைத்தியக்காரனாகவே என்றும் இருக்க
ஆசைப்படுகிறேன். பைத்தியகாரனுக்கு பார்ப்பது அனைத்தும் கடவுள்தான். ஏனென்றால் எந்த
கடவுளும் என்னை தொந்தரவு செய்வதில்லை. நான் நானாக , பைத்தியமாக , ஆனந்தமாக
இருக்கிறேன்
ஆனால் இப்படியே என்றும் இருந்து விடுவேன் என்று மட்டும் நினைக்காதீர்கள்.
நிச்சயம் இன்னும் பல பைத்தியங்களை இந்த பூமியில் நானும் விதைப்பேன். ஆனால் அதற்கு
முன்னர் மேலும் பல பைத்தியங்கள் முளைத்திருக்கும் . அவை என்னை விட வலிமையாகவும்
புத்திசாலியாகவும் இருக்கும்
ஏனென்றால் அவை அகத்தியரும், அவர்தம் அடியார்களும் விதைத்த விதைகள். இது கர்ம
பூமி . கடவுள் பூமி அல்ல,. அதன் தர்மச் சக்கரங்களை மட்டும் சற்று தள்ளி விடுங்கள்
என்று வேண்டி கேட்கிறேன்.
இதுகாறும் மனிதர் பலர் முயற்சி செய்து தோற்றார்கள். தற்போது கடவுள்
வந்துள்ளார். அதுவும் 76 வயது அனுபவம் கொண்ட இளைமையான கடவுள். அவருக்கு நல்ல அற்புதமான விளம்பரதார்ர்களும் (ஆர்விஎஸ் போன்றோர்) கிடைத்துள்ளனர். மேலும் கிடைப்பர்.
just requesting you
to capitalize this moment to turn
the wheel ,
தங்கள் அனுபவத்தாலும் சரியான குழுவாலும் இதை முன்னெடுத்துச் செல்ல இயலும். அதன்
மூலம் கிராமங்களில் இருந்தும் இன்னும் பல கடவுள்கள் மேல் எழுப்ப இயலும்
அத்தகைய கடவுள்களை மட்டுமல்ல அவர்களை படைக்கும் சிற்பிகளையும் இதே
அர்ப்பணிப்போடும், எளிமையோடும், அனுபவத்தோடும், நோக்கத்தோடும் நம்மால் உருவாக்க
இயலும்.
நீங்கள் சரி யென்று மட்டும் சொல்லுங்கள் குறைந்த பட்சம் ஈஷாவின் கிளைகளிலாவது
நான் முயற்சிக்கிறேன். தாங்கள் கூறிய படி தியேட்டர் செலவு , தங்களது குழுவிற்கான
செலவுகளை தாங்கள் கூறிய படியே யாராவது சிலரிடம் யாசகம் கேட்கிறேன்
அதில் வரும் பார்வையாளர்களின் டிக்கெட் பணமூம், நன்கொடையும் அதே அரங்த்திலேயே
தங்கள் திருக்கரங்களினாலேயே ஈஷா வித்யாவின் அரசாங்க பள்ளிகளை த்த்தெடுக்கும்
திட்டத்திற்கு , அம்மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அளிக்க வைக்கின்றேன்.
அல்லது இதை விட சிறந்த திட்டங்களும் , சிறந்த பணியாளர்களும் தங்க்ள்
பார்வையில் கிடைக்கப் பெற்றால் நிச்சயமாக அதற்கு
பொற்கிழி வழங்குங்கள்.
என் பார்வையில் இது சிறந்த்தாகவும், எனக்கு இது மட்டுமே தெரியும் என்பதாலேயுமே
, என்னால் இது மட்டுமே செய்ய இயலும் என்பதாலும் ஈஷாவின் திட்டத்தை
பரிந்துரைத்தேன்.
என்னை போன்ற சன்னியாசிகளுக்கோ , அவர்கள் வைத்துள்ள ஆஸ்ரமங்களுக்கோ பணமோ ,
வசதிகளோ தேவையில்லை நாங்கள் நன்றாக அறிவோம். ஆனர்ல் வசதிகள் இல்லாவிடில் நீங்கள்
வரமாட்டீர்களே. அதற்கு யார் காசு கொடுப்பது .
யோகா கற்றுக் கொள்ளக் கூட ஏசி ரூம் வேண்டுபவர்கள் . அலலது குளுமையான மரங்கள் சூழந்த வெட்டவெளிதான் இன்று எங்கு உள்ளது
கற்றுக் கொடுக்க . இருக்கினற் மரங்களையும் ரோடுகளில் 4 லேன் 6 லேன் போடுவதற்காக
வேரோடு வெட்டி சாய்த்த புண்ணியவான்கள் வாழும் நகர்கள் அல்லவா
ஆனால் இந்த செயலுக்கு எந்த சுற்றுச் சூழுல் ஆர்வலரும் கோர்ட்டில் த்டை
வாங்கவில்லையே குறைந்த பட்சம் அம்மரங்களே வேரோடு பிடுங்கி அருகில் உள்ள வனங்களில் நட்டு இருக்கலாமே . அதற்கு கூட ஏன் எந்த சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் முயற்சி செய்யவில்லை. மூச்சுவிட்டதற்கு முன்னுரு கேஸ் போட்டு பிரபலமாகும் வியாபாரிகள் , சமுக ஆர்வலர்கள் இதற்கு எத்தகைய முயற்சியும் எடுக்கவில்லையே.அது ஏன்.?
மரம் வெட்டினால் பரவாயில்லை நம் கடை போகாமல் இருந்தால்
போதும் என்ற அற்புத மனிதர்கள் வாழும் ஊர்கள் அல்லவா இன்றைய தமிழ்நாடு . ஆனால் இன்று ஏப்ரல் வந்தவுடன் கரண்ட் இல்லை என்றும், வெயில் வாட்டுகிறது என்று கூறி ஜெனரேட்டர் வைத்து ரெப்ரிஜிரேட்டரை ஓட்ட வைத்து கோலாவையும் பெப்ஸியையும் தண்ணீரை விட அதிகமாக விற்று காசு வாங்கி கல்லாவில் போட்டு ஆரோக்கியத்திற்கு ஆஸ்பத்திரியையும் அதற்கான செலவிற்கு இன்சூரன்ஸ் ஏஜெண்டுகளையும் நாடி வாழ்ந்து , தாங்களே பகுத்தறிவு பரம்பரை என்று பழங்கதை பேசுகின்றனர்.
ஒரு சராசரி மனிதனாகவே , சுற்றி நடக்கும் நிகழ்வுகளை மௌனமாக கவனிப்பவனாகவே
இவற்றை யெல்லாம் செர்ல்கிறேன். மற்றபடி யார்மீதும் குற்றம் சுமத்த்வில்லை
இத்தகைய காலகட்டத்தில் தாங்களும் நாடகத்தை பார்க்க வரும் பார்வையாளர்களிடம் பணம் வாங்காது இலவசமாக தரவேண்டும் என்பது , நல்ல நோக்கமாக இருந்த போதிலும , இந்த தர்ம சக்கரத்தை சுழற்ற முடியாமல் போய்விடுமே என்பதாலும், இத்தகைய பாரதி மணிக்ள் ஆங்காங்கே கோவில் மணியாக ஒலிப்பதும் அரிதாகிவிடுமே என்ற ஆதங்கத்தில் , இப்படி எழுதியது தவறு என்று என் மனதிற்கு
பட்டதாலேயே , செய்ய முடிந்தாலும் தற்போதைய மனநிலையில் செய்ய விருப்பமில்லை என்று
வெளிப்படையாக எழுதினேன்
தவறாக பேசியிருந்தாலோ அல்லது அதிகம் பேசுவதாக உணர்ந்தாலோ சிரம் தாழ்த்தி
வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்
நாடகத்திலாவது கடவுளை கொண்டு வந்தோடு மட்டுமல்லாமல் எங்களின் வேண்டுகோள் பட்டியலை பெற்றுக் கொள்ளாமல் சாமார்த்தியமாக தப்பிக்கத் தெரிந்த ஒரு மாபெரும் கடவுளுக்கு
நன்றியுடன்
ஸ்வாமி ஸுஷாந்தா
(economics இருக்கு
இல்ல யாரோ ஸ்பான்சர் இருக்கரார் இல்ல அதுதான் , வியாபாரின்னா லாபம் மட்டும்
சம்பாதிக்கறவர்னு தப்பா அர்த்தம் பண்ணிகிக்க கூடாது சொல்லிட்டேன் , ஒரு
முன்னெச்சரிக்கைதான் எங்க கடவுளை எப்படி நீ வியாபாரின்னு சொன்னே அப்படின்னு
கோர்ட்ல கேஸு போட்டுட்டா என்ன பன்றது )