Monday, 29 April 2013

என்னே ஒரு சிவத் தொண்டும் , அர்ப்பணிப்பும் _ குருவி ராமேஸ்வர கோவிலின் 87 வயதான குருக்கள்சமீபத்தில் திரு ஆர்விஎஸ் அவர்கள் திருவாருர் மாவட்டத்தில் கேகரை அருகே உள்ள குருவி ராமேஸ்வர கோவிலின் குருக்கள் பற்றி எழுதியிருந்தார். ,87 வயதான அந்த முதுமையான சிவத் தொண்டரின் பக்தியையும் அர்ப்பணிப்பும் படித்தவர்களை உருக்காமல் இருக்க இயலாது
அன்னாரது சிவத் தொண்டு சிறக்கவும் அவர் தம் ஆசிகளை பெற , அவருக்கு உறுதுணையாக இருந்திட , அவரது கட்டுரையை படித்த நல்ல உள்ளங்கள் விரும்பின .
அதற்கான முதல் படியை  அன்பர் ஒருவர் எடுத்துள்ளார். அதை பகிர்ந்துள்ள ஆர்வீஎஸ் அவர்களின் கட்டுரை இங்கே பகிர்ந்துள்ளேன். கூடவே அவர் தற்போது எடுத்து வந்துள்ள வீடியோவையும் இணைத்துள்ளேன்
படியுங்கள் . ஆதரியுங்கள்


shared  from  face book  postசட்டென்று மறக்கமுடியாதவாறு குருவிராமேஸ்வரம் என்கிற கோவிலைப் பற்றியும் அதில் உறையும் ஈசனையும் அவனுக்கு நாள்தோறும் சிரமதசையில் ஆராதனை செய்யும் எண்பத்தேழு வயது குருக்களையும் அவருக்கு ஒத்தாசையாக இருக்கும் அவரது தங்கையைப் பற்றியும் இங்கே எழுதியிருந்தேன். உள்ளம் உருகிய நண்பர்கள் பலர் உதவுதாக உறுதி பூண்டனர்.

நண்பர் Vijayaraghavan Krishnan ஒரு செயல் வீரர். ஞாயிற்றுக்கிழமை எனக்கு அலைபேசி ஆவலாய் கு.ராமேஸ்வரம் செல்வதாக உற்சாகமாகக் கூறினார். சங்கர குருக்களிடம் க்ஷேமத்தை விசாரிக்கும் போது கோயிலுக்கு தினமும் இந்தத் தள்ளாத வயதில் பத்து குடம் தண்ணீர் தூக்கி வருவதாகவும் அதற்கு உதவி புரிந்தால் தேவலை என்றும் விண்ணப்பித்தாராம். தனக்கென்று எதுவும் செய்யவேண்டாம் என்று வேறு பணித்திருக்கிறார். நண்பர்களின் திருமுயற்சியில் ஒரு ஆழ்துளைக் கிணறு (Bore well) ஒன்று கோயிலின் உள்ளேயே அமைத்துக்கொடுக்கலாம் என்று தீர்மானித்திருக்கிறோம்.

எவ்வண்ணம் உதவலாம் என்பது பற்றி விரிவாக பிறகு பதிகிறேன். உழவாரப் பணியே பெரும்பணியாகவும் தவமாகவும் செய்த அப்பர் ஸ்வாமிகள் பதிகம் பாடிய இக்கோவிலுக்கு இது போன்ற அத்தியாவசியத் திருப்பணி செய்ய அணில்கள் நிறையத் தேவை. தர்மரக்ஷகர்கள் தாராளமாக இக்கைங்கர்யத்தில் ஈடுபட்டு ஈசன் அருள் பெற வேண்டுகிறேன்.

மேலதிகத் தகவல்கள் பின்னர் இங்கு இடப்படும். நன்றி.

http://www.youtube.com/watch?v=SLzzAhDgHbE&feature=youtu.be

வீடியோவிற்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு
Published on Apr 29, 2013
திருவாரூர் அருகில் உள்ள கேகரை என்கிற ஊருக்கு அருகில் திருப்பள்ளி முக்கூடல் என்கிற ஸதலத்தில் உறையும் அப்பர் சுவாமிகளால் பத்து பதிகங்கள் பாடப்பெற்ற திரு நேத்ர சுவாமி கோவிலுக்கு 28 April 2013 அன்று சென்று இருந்தேன் ..

இந்த கோவிலில் 87 வயதுடைய குருக்களும் அவர் தம் வயதான தங்கையும்   தனியாக இறை பணி செய்து வருகிறார்கள் .

இவர்தம் மாத சம்பளம் 23/ (இருபத்து மூன்று மட்டுமே ) 2010 ஆம் ஆண்டு வரை எனக்கேட்டு ,தற்போது அது 1500/- வரை உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் மகிழ்ச்சியாக சொல்வதை கேட்டு மனம் வருந்தினேன் ..

தனக்கு எதுவும் பொருள் உதவி தேவை இல்லை என்றும் கோவிலுக்கு ஒரு நீர் இறைக்க ஒரு போர் வெல் போட்டு குடுத்தால் தேவலை .. தினமும் பத்து குடம் வீட்டில் இருந்து எடுத்து வருவது வயோதிகத்தால் ஸ்ரமமாக இருப்பதாக கேட்டார் ..

No comments:

Post a Comment