Tuesday, 2 April 2013

நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 7நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 7

தென்றல் நுழைந்த்து

1980-81ம் ஆண்டு 7வகுப்பில் அமர்ந்தபோது கமலா டீச்சர் வகுப்பாசிரியர் ஆனார்க்ள். இயல்பாகவே மென்மையாகவும் அன்போடும் பழகும் அவரைக் கண்டர்ல் அனைத்து மாணவ்ர்களுக்கும் பிடித்து போவது இயல்புதான்.

அவர்தான் வகுப்பாசிரியர் என்று தெரிந்த பிறகு நாங்கள் ஆவலுடன் அமர்ந்திருந்தோம். முதல் நாள்ன்று வருகைப் பதிவேடு கூப்பிடும் போது ஒவ்வொருவரையாக எழுந்து நிற்கச் செர்ன்னார்கள். என் வரிசை வந்த போது, வருகையில் பதிவு செய்து விட்டு , அருகில் வருமாறு அழைத்து என் பெயரின் ஸ்பெல்லிங் கேட்டார்கள்.

எதற்காக கேட்கிறார்கள் என தடுமாறினேன், எழுதி காட்டச் சொன்னார்கள். sitarama krishnan என எழுதி காண்பித்தேன் . அவர் இனிமேல் இப்படி எழுதி என Seetha Rama Krishnan என எழுதி காண்பித்த்துடன், வருகைப் பதிவேட்டிலும் திருத்தி எழுதினார்கள். என்ன சரியாக எழுதி இருக்கிறேனா என்பது போல் ஒரு பார்வையை வீசி விட்டு , என்ன சம்ம்மதமா என கேட்டார்.
வகுப்பின் முதல் நாள் வேறு. பேசுவதா வேண்டாமா என பயம். டீச்சர் சொல்வதை செய்ய் வேண்டியதுதானே என வீட்டில் பேசுவார்களோ என்ற தயக்கம் என எல்லாமும் கலந்த குழப்பத்தில் தலையாட்டி விட்டு வந்து அமர்ந்தேன். எதற்க்காக மாற்றினார்கள் என்பது தெரியவில்லை. முன் எழுதியதில் என்ன தவறென்றும் எனக்கு புரியவில்லை . ஆயினும் பயணத்தின் முகவரி மாற்றி அமைத்த்து போல் உணர்ந்தேன்.

இந்த வருடம் படிப்பைக் காட்டிலும் விளையாட்டு அதிகமாய் வர்ழ்வில் நுழைய ஆரம்பித்த்து. எனது நண்பர்களான சிவாஜி , வெங்கடேஷ் , சபாபதி, கண்ணன் மற்றும் அவர்களது வகுப்புத் தோழர்களான ஸ்பின்னர் முரளி, பேம் மோகன், சுரேஷ் அண்ணா மற்றும் அவரது தந்தையான திரு ராஜாமணி மேலும் பலருடன் சேர்ந்து கிரிகெட் என் வாழ்வில் நுழைந்த்து.

அவர்கள் விளையாடும் போது , தூரத்தில் நின்று கொண்டு , ஏதாவது ஒரு டீமில் சேர்த்துக் கொள்வார்கள், பந்தை பொறுக்கி போட வேண்டும், கடைசியில் 10 பந்துகள் பேட் செய்ய கிடைக்கும் , எப்படியோ தவறுதலாக ஒரு பந்து என் பேட்டில் பட்டுவிடும்.
கிரிக்கெட்டைக் காட்டிலும் அவர்கள் அனைவரோடும் என்னையும் இணைத்துக் கொண்டது ஆனந்தமாக இருந்த்து. வீதியின் மூலையில் தண்ணீர் குழாயின் அருகில் விளையாடிய கோலி குண்டாகட்டும், அவர்களது சுண்டு கப்பை பிதாமகன் அண்ணாமலை சொல்லும் பேய் கதைகளாகட்டும், அப்போது அதிகம் பழக்கமில்லா ராஜு அண்ணாவின் வீட்டின் முன் இருந்த இடத்தில் விளையாண்ட கபடியோ அல்லது கிரிகெட்டோ என எல்லாவற்றிலும் இன்னும் சற்று சுதந்திரமாக அவர்களோடு விளையாடலர்ம் என்கிற வாய்ப்புதான் இதற்கு காரணம்,

அடுத்து இவர்களோடு பழகிய போது என் வயதிற்கு மீறியவர்கள் உடன் பழகுவது போன்று இல்லாது அவர்களைப் போலவே நானும் பெரியவனாகி விட்டதாகவும் உணர்ந்த்தும் ஒரு காரணம்.

அது எல்லாவிற்றையும் விட வெங்கடேஷைப் போல விளையாடலாம் என்கிற ஆர்வம்தான் என்னை கிரிகெட் விளையாட வைத்த்து. இதனாலேயே பேட்டிங்கை விட பவுலிங்கில் அதிக ஆர்வம் இயல்பாக காட்டினேன். ஒருவரது விக்கெட்டை வீழத்தும் போது ஏதோ ஒரு வெறி என்னுள் துள்ளிக் குதித்த்து.

ஆனால் அதேசமயம் பேட் செய்ய ஆரம்பக் காலத்தில் அதிகம் விரும்பியதில்லை. இதற்கு 2 காரணம் இருந்த்து. முதல காரணம் எல்லாரும் என்னை விட நன்றாக விளையாடினார்கள். இரண்டாவது பந்தின் மேல் கவனம் செலுத்தி அதற்கு தகுந்தாற்போல கால் நகர்த்துவதும், ஸ்ட்ரோக் மாற்றுவதும் , இவையணைத்தும் மிகச் சில நொடிகளில் தீர்மானிப்பதும் சற்று கடினமாக இருந்த்து,
கடைசி பேட்ஸ்மேனாக களம் இறங்குவதால் கூடுமானவரை டீம் தோற்கும் நிலைக்கு வந்திருக்கும். அதனால் யாரும் நாம்தான் காரணம் என்று சொல்ல மாட்டார்கள் என்பது ஒரு சௌகரியம். 

பவுலிங்கில் ரன் போனாலும் (புல்டாஸ் தவிர) மற்ற சமயம் பீல்டருக்குத்தான் அதிக பங்கு ரன்களை தடுப்பதில்.
அதனால் விக்கெட்டை வீழத்துவது மட்டும் கவனம் கொண்டிருந்தால் போதும். அதுவும் மிகச் சரியாக விக்கெட்டுக்கு நேராக தொடர்ந்து வீசிக் கொண்டிருந்தால் , ரன்கள் வராத போது பிரஷர் அதிகமாக அடித்து விளையாட ஆசைப் பட்டு அவுட் ஆகிவிடுவர். பவுலர் என்று செர்ல்லிக் கொள்ள அது போதும். இதை கவனித்த்தால் பவுலிங் மட்டும் தேர்ந்தெடுத்தேன்.

அதேசமயம் கண்மூடித்தனமாக காட்டுத்தனமாக சுற்றுவதால் , கடைசி விக்கெட் என்று அசால்டாக பந்து வீசும் போது சில ரன்களையும் அது கொண்டு வந்து விடும். ஆக வெங்கடேஷ் மற்றும் சபாபதி இருவரும முன்மாதிரியாக இருந்து எனது கிரிகெட் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தனர்.

மாவட்ட அளவில் அரசுக் கலைக் கல்லூரிக்காக விளையாடிய போது சபாபதி அடித்த ஷுக் ஷாட்களும் , அந்த 55 ரன்களும் என்னுள் டிவி ரீப்ளே போல் ஒடுகிறது. அதே போல இவர்கள் குழுவில் இணைத்துக் கொண்டது இயல்பாக பொது அறிவை வளர்த்த்து அதற்குக் காரணம் மாலைநேரத்து அரட்டை அரங்கம்தான்,

பெரும்பாலும் அது வெங்கடேஷ் வீட்டு திண்ணையாக இருக்கும் அல்லது சுரேஷ் அண்ணா வீட்டு அருகில் இருக்கும் .ஒரு விஷயத்தின் பல கோணங்கள், ஒரு மனிதனின் முரண்பாடுகள், எதிர்கால தேவைகள் என எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள முடிந்த்து,

வெங்கடேஷ் மற்றும் சிவாஜியிடம் இன்னொரு பழக்கம் இருந்த்து, இதற்கு சுந்தருடன் இணைந்து படித்த சேகரும் அவர்களோடு  சேர்ந்து இதை செய்து வந்தார். ஒரு பெரிய நோட்டில் தினசரி நாளிதழ்களில் வெளிவந்த கிரிக்கெட் பற்றிய படங்கள். ஸ்கோர் போர்டு. கட்டுரைக்ள் பொழுது போக்காக சேகரித்து வந்தனர்.

இதைப் போலவே பிற்காலத்தில் விளம்பரங்களை நான் சேகரித்து வைத்து அதில் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.
இந்த காலகட்டத்தில் எங்க்ள் பள்ளி தலைமை ஆசிரியர் திரு புள்ளியப்பன் மாவட்ட கல்வி அலுவலராக பணி உயர்வு பெற்று விடைபெற்றார், அது ஒரு இயல்பான ஒன்றாக அப்போது நான் உணரவில்லை.

மாலைவேளைகளில் எதிர் வீட்டு வேணி மாமியின் மாமனார் ஆன குமாஸ்தா தாத்தாவிடம் நான் , வனிதா டீச்சர் மகள் , எனது தம்பி மற்றும் அவளது தம்பியும் இன்றைய குழந்தைகள் டாக்டருமான கார்த்தியும் பயின்று வந்தோம்,

மனக்கணக்கு மற்றும் விடுகதைகள் மூலமாகவே பலவற்றை செர்ல்லித் தந்துவிடுவார். கதைகள் பல சொல்லி கட்டிப் போட்டு உட்கார வைப்பார்.

இந்த தெய்வங்கள் அருளாலும் , இன்னும் பெயர் செர்ல்லப்படாத எனது வகுப்பு தோழர்களாலும் எனது 7ம் வகுப்பு கால்ம் கடந்து செல்ல ஆரம்பித்து இருந்த்து.

அதிகமான கவனம் விளையாட்டில் செல்ல ஆரம்பித்த்தால் , மேலும் பாடப் புத்தகங்களைத் தவிர மற்ற புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்து இருந்த்தால் நண்பர்கள் குறித்த கவனம் சற்றே குறைந்திருந்த்து

இந்த வருடத்தின் விடுமுறையில் முதல் முறையாக நானும் வெளிநாட்டிற்கு பயணமானேன், ஆம் அது சத்தி மாமா குடியேறிய எருமப்பட்டிதான், முதல் முதலாக சின்ன சைக்கள்களை வாடகைக்கு எடுத்து பழக ஆரம்பித்தேன்.

நடந்து சென்ற காலம் போய் சைக்கிளில் செல்ல ஆரம்பித்த்தால் என் வாழ்க்கை சற்றே சூடு பிடிக்க ஆரம்பித்த்து, அந்த சமயம் சத்தி மாமாவிற்கு சற்றே உடல்நலம் பாதிக்கப் பட்டு இருந்த்து, அவரும் கொல்லிமலைக்கு மாற்றலானார். ஆனாலும் அங்கிருந்தே பயணப்பட்டார். அவருடன் மகுடிஸ்வரன் என் வாழ்க்கையில் அறிமுகமானார்

அந்த விடுமுறையின் முக்கிய லேண்ட் மார்க் சிவாஜி நடித்த எமனுக்கு எமன். அந்த ஊரின் டுரிங் டாக்கீஸில் நான் பார்த்த்தாக ஞாபகம் உள்ள ஒரே திரைப்படம்.

1980 - எனது வாழ்க்கையின் எல்லையை இன்னும் ஒரு படி விரிவடைய செய்து எருமப்பட்டி வரை கொண்டு சென்று இருந்த்து.  இதனால் மேலும் பல தெய்வங்கள் என் வாழ்வில் குடியேறி இருந்தன்ர்.

இந்த தெய்வங்கள் எல்லாம் எங்கும் நிறைந்த இறைவனைப் போல முகமற்று இருக்கின்றனர். எங்கு போய் இவர்களைத் தேடுவது ? எப்படி இவர்களுக்கு என் நன்றியுணர்வை காணிக்கையாக்குவது ?
என்னோடு வாழ்ந்த் அந்த கண்கள் எல்லாம் இவ்வுலகின் ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு இதை படித்துக் கொணடிருக்கவும் கூடும். ஆனால் அதை நான் அறியாமலே கடைசி வரை தேடிக் கொண்டு இருக்கவும் கூடும்.

தெய்வங்கள் கருணை கொண்டு தாங்களாக தம்மை வெளிப்படுத்தாவிடில் பக்தன் எதை தெய்வமாக காண்பது ? அப்படியே வெளிப்படுத்திய போதும், அன்று அந்த உருவில் வெளிப்படுத்தினார் , இன்று எந்த உருவில் வெளிப்படுத்துவாரோ என எப்போதும் எதிர்ப்ர்ர்த்து காத்திருக்க வேண்டியுள்ளது.

பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க
ஊண் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே
மதி வருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே

என கசிந்த படி கண்ணில் தெரியா இந்த தெயவ்ங்களின் காலடியில் என்னை சமர்ப்பிக்கிறேன்.

விளையாட்டாக விளையாட்டிற்காக மண்ணோடு உறவாடிய நான் , அவள் மடியில் மதி மயங்க ஆரம்பித்திருந்தேன்.

அந்த பூமா தேவியும் என் கரம் பிடித்து எல்லையை விரிவு படுத்த ஆரம்பித்திருந்தாள்.

அவள் கொண்டு வந்த அந்த அழகான புதிய தெய்வங்களை பற்றி செர்ல்லும் முன் ........................... இந்த மைதானத்தில் அவளோடு நான் தனித்து உறவாட , வெகுநாட்கள் கழித்து சந்திப்பதால் அந்த மண்ணின் துகள்கள எனக்கு சொல்ல விரும்புவதை கேட்க நேரம் தேவைப்படுவதால் , நீங்களும் மாலை நேரத்து தேனீர் பருகி வாருங்கள்.

எந்தன் வண்ண உலகில் இதுவரை அலங்கரித்த அன்பு தெயவ்ங்களின் பாத கமலங்களுக்கு சிரம் தாழ்த்தி  பணிந்து நின்று அடுத்த வகுப்பின் தெய்வங்களை சந்திக்க செல்கிறேன்

நீங்களும் வாருங்கள் என்னோடு...............................

No comments:

Post a Comment