Tuesday, 2 April 2013

நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 2 தொடர்ச்சிநெஞ்சததில் நிற்கும் தெய்வங்கள் - 2

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்று சொன்னவர்கள் எழுத்தை கற்றுக் கொண்டவன் என்ன வேண்டுமானாலும் ஆகலாம் என்பதை சொல்லாமல் போய் விட்டதைப் போல உணர்கிறேன்.
அப்படி என் வாழ்வில் வீசிய மலர்களின் நறுமணங்களை சொல்ல முற்படுகையில் அடுத்ததாக இவர்களையே வரிசைப் படுத்த நினைக்கிறேன் . இவர்கள் இல்லையேல் இந்த கட்டுரையும் கிடையாது. நீங்களும் கசிந்துருக இயலாது.

எத்தனையோ ஆசிரியர்களை என் பயணத்தில் கண்டு இருந்த போதும் . இன்றும் கண்டு கொண்டு இருக்கும் போதும் . இப்பயணத்தை ஆசிர்வதித்து - அ  - என்ற முதல் எழுத்தை எழுத வைத்தவர் திரு சுப்ரமணிய வாத்தியார்.

அன்றைய ராஜாஜி ஸ்கூலில் படித்தவர்களுக்கெல்லாம் பிள்ளையார் சுழி இவராலேயே  எமது பக்கங்களில் போடப்பட்டது.  1974ல் முதன் முதலாய் பள்ளிக்கு எனை கொண்டு விட்ட போது . நான் சந்தித்த முதல் அன்னிய மனிதர்,

எனது பாதுகாவலாக்ளாக எனது மாமா பையன் திரு லேட் சுந்தர்  கைபிடித்து அழைத்துச் சென்று அமர வைத்த இடம்,  எனக்கு வரையும் திறமை நன்றாக வருமேயானால் அந்த வகுப்பையும் . பள்ளியையம் இப்போதும் பிழையில்லாமல் வரைய முடியும் .

அப்பள்ளியில 5 வரை படித்தாலும் பல ஆசிரியர்கள் பேர் மறந்துவிட்டாலும் அவர் தம் முகங்கள் இன்னும் மறக்கவில்லை, 

அதே பள்ளியில் எனக்கு 3 வகுப்பிற்கு பாடம் எடுத்த வனிதா டீச்கரையும் நான் குறிப்பிட்டாக வேண்டும்.. இவரது வீடு எனது வீட்டிற்கு மிக அருகாமையில். இவரது புதல்வி புவனா எனது வகுப்பு தோழி (5ம் வகுப்பு வரை) அவளது தம்பி இன்றைய டாக்டர் கார்த்திகேயன் தீவிர பாகிஸ்தான் கிரிகெட் பிளேயர் ஜாகீர் அப்பாஸின் ரசிகன் .

இதே சுப்ரமணிய வாத்தியார் பள்ளியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஒரு காவி வேட்டி கட்டிக் கொண்டு என் தந்தை பணி புரிந்த மடத்தில் கணக்குபிள்ளையாக சேர்ந்திருந்தார். அவர் ஏன் அப்படி சேர்ந்தார் என்பது இன்னமும் புரியாத புதிர்தான்.

இதே ராஜாஜி ஸ்கூலில் படித்த போதுதான் . 5வது படிக்கம் போது . முதல் முறையாக மரணம் என்பது என் வாழ்வில் எனக்கு நினைவில் நுழைந்தது இன்னமும் ஞாபகம் உள்ளது. 

அது எனது நண்பன் ஆதில் ஷா . அவனது மாமா பையன் இதாயத்துல்லாவும் எனது வகுப்புதான் . தூசுர் ஏரிக்கு அருகே விளையாட சென்ற போது புதைகுழியில் சிக்கி காணாமல் போனான் . எங்கே போனான் என்பது இன்னமும் நான் விடையறியாத கேள்வி.

அந்த பள்ளி நிறைய நண்பர்களை இன்னமும் என் நினைவில் வைத்துச் சென்றுள்ளது. எனது வகுப்புத்தோழன் ராஜா வீட்டில் . பாவடித் தெரு அருகே . ஒரு நாள் மதியம் எலுமிச்சை சாதம் கெட்டி தயிரோடு சேர்த்து சாப்பிட்டது இன்னமும் பசுமையாக நினைவில். இன்று வரை அவ்னது அம்மா தந்த அத்தகைய அன்பான ருசியான உணவு இன்னமும் சாப்பிடவில்லை

பாவடித்தெருவில் 4வது படிக்கும் போது . என் நண்பன் சந்தர் . அவனது சிலேட்டை உடைத்துவிட்டதால் அவனது அழுகை இன்னமும் நினைவில் உள்ளது.

முத்து முத்தான கையெழத்தை கொண்டு இருந்த இன்னொரு ராஜா . எங்களைப் போல 5வது முடித்தவுடன் வேறு பள்ளிக்கு செல்ல முடியாமல் . எட்டாவது வரை அதே பள்ளியில படித்துவிட்டு பின் ஆட்டோ ஓட்டக் கற்றுக் கொண்டது இன்னமும் எனக்கு கண்ணீர் கதைதான்

அந்த ராஜாஜி பள்ளி பல மாறுதல்களை சந்ததித்து விட்டது. அதில் படித்தவர்களும் கூட. ஆனாலும் அப்பள்ளியும் அதன் ஆசிரியர்களும் . எங்களது நண்பர்களும் . ஜாதி மதம் கடந்தது எங்க்ளது மனத்தில் மிக பசுமையாக

அப்போது எந்த எதிர்கால திட்டமும் எங்களுக்கு இல்லை என்றே நினைக்கிறேன் . எங்கள் ஆசிரியர்கள் கூட இன்னமூம் அப்படியேதான் உள்ளார்கள். அவர்களின் பிம்பமாக . அவர்களின் பிரதிநிதியாக வனிதா டீச்சர் மட்டுமே சில வருடங்களுக்கு மூன்பு சந்தித்த போது

இவர்கள் எல்லாம் என்னிடம் என்ன எதிர்ப்ர்த்தார்கள் . அல்லது இந்த மக்களுக்கு என்று அளித்திட என்னிடம் என்ன உள்ளது,

என்னில் ஒரு பாகமாகவே எப்போதும் உள்ளார்கள், கருணை கொண்டு என்னை ஆசீர்வதித்த இந்த மானுட தெய்வங்களின் திருவடிகளை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்,

இவர்கள் நிச்சயம் என்  நெஞ்சில் நின்று கொண்டிருக்கும் தெய்வங்கள்தான்,

No comments:

Post a Comment