Tuesday 2 April 2013

நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 1 A (தொடர்ச்சி )



    நினைவில் நிற்கும் மனிதர்கள் - 1 (தொடர்ச்சி(

ஆம் என்னை பெற்றதினால் பெற்றோரானர் இருவர் . அவர்கள் மூலம் பல சொந்தம் பல பந்தம் . ஆனால் இவரோ .......... அன்றைய ஸ்வாமி நிராகாரா என் கேள்விகளுக்கு எல்லாம் விடை தந்தவர் என்பேன்

அவ்விடைகள் அன்று வந்திராவிடில் இன்று என்வாழ்வும் இப்படி இருக்குமா என தெரியாதநீங்களும் என் வாழ்வை அலங்கரித்து இருப்பீர்களா என்பதும் தெரியாது

இதற்கும் அவர் அந்த விடையை அன்று என் கேள்விகாக கொண்டு வந்த தருணம் அவரோ அல்லது நானோ நிச்சயமாக இது விடை மட்டுமல்ல விடியலும் கூட என அறிந்து இருக்க மாட்டோம என்றே கருதுகிறேன்,

அவர் என்று சொல்வதை காட்டிலும் அந்த மூவரின் பிம்பமாக எனக்கும் என் குடும்பத்தினருக்கும் என் நண்பர்களுக்கும் நன்கு பரிச்சயமான அவரையே நான் முழு பிரதியாக பார்க்கிறேன் . ஆம் அந்த மூவர் இவரோடு சேர்த்து . அஞ்சலி தங்கராஜ் மற்றும் நிர்மலா அக்கா (அப்போது அதிகம் பழ்க்கம் இல்லாவிடினும் இவரையும் எனக்கு நன்கு தெரியும்)

அது கல்லுரி படிப்பு முடிந்து . அவரது நண்பர்களுடன் இணைந்து நடத்தி வந்த இலவச வங்கி தேர்வு பயிற்சி முகாமில் கலந்து கொண்டு . பயன் பெற்று . வங்கியில் பணிபுரிந்து கொண்டு இருந்த காலம் . அவரோடும் அவரது நண்பர்களோடும் என்னையும் இணைத்த அந்த இலவச பணிகளை செய்து கொண்டு இருந்த நேரம்,

இந்த இடத்தில் நான் இதைப் பற்றி சொல்ல வேண்டும , சேவை மட்டுமே குறிக்கோளாக கொண்டு . எங்கள் நட்பு வட்டமும் அதனால பயன் அடைந்தவர் வட்டமும பெருகி பெருகி . நாமக்கல்லை ஒரு தேர்வு மையமாக வங்கி தேர்வு மையம் அறிவத்ததே இதன் பணியை உணர்த்தும்,

ஆனாலும் அந்த சேவைகளை கடந்து உண்மையான மனித சேவைக்கு என்னை சற்றே வலுக்கட்டாயமாக இட்டுச் சென்றவர் ஸ்வாமி நிராகாரா என்றால் அது மிகையாகாது.

அந்த காலகட்டத்தில் இயற்கை மருத்துவமாகட்டும். பல்வேறு சேவைகளாகட்டும் . மக்களுடைய வாழ்விற்கு பயனுள்ள எதுவானாலும் அதை தமது நகருக்கு கொண்டு வருவ்தில் அவருக்கு நிகர் அவர்தான், வங்கி பணி நேரம் தவிர மற்ற நேரம் முழுவதும் சமுகப்பணிகள்தான், அதே சமயம் அவை அனைத்திலும் திருப்தியடையாத அவரின் உள்முகம் உணர்ந்ததால் அவரோடு மிக நெருக்கமானது மிக இயல்பானது,

அவர் மூலம் பெற்ற நட்பு வட்டத்தை . வர்களோடு சேர்ந்து அனுபவித்த அந்த நாட்களை . அதில் பங்கெடுத்த அனைவரும் தன் உயிரோடு சுமந்து செல்வது நிச்சயம். இதில் என் தம்பி உள்பட பலரும் அடக்கம்,

இன்னும் சொல்லப்போனால் 1989 முதல் 1995 வரை நாமக்கல வரலாற்றிலேயே மிகப் பொன்னான நாட்கள் என்று கூறுவேன் . எங்களோடு தொடர்பில்லாத மாணவ மாணவிகளே இல்லை, அதைவிட பெரிய ஆனந்தமான விசயம் பல ஆணடு காலமாக ஒருவருக்கொருவர் பள்ளிகள் மூலம் . டியுசன்கள் மூலம். விளையாட்டுக்கள் மூலம் என அறிமுகமாகி இருந்ததால அனைவரும் ஒரு குடும்பம் போலவே உணர்ந்தேன்

ஆனாலும் அவரது இயற்கை உணவு ஆர்வத்தால் பலரால் அவரோடு மூழுமையாக ஒட்ட இயலவில்லை, ஆனாலும் எங்கள் அனைவருக்கும் அவர்தான் குரு, அவரும் அவரது ந்ண்பர் சிலரும் இணைந்து ஆரம்பித்த அந்த விதையே ஆலமரமாய் வளர்ந்து படர்ந்து இருந்தது

அந்த காலகட்டத்தில் யோகாவை நாமக்கல்லில் அறிமுகபடுத்த முனைந்தார் இவர். கிரிகெட் பைத்தியமான எனக்கு யோகா ஈர்ப்பை தந்தாலும் . அதன் மூலம் இன்னும் (இன்றும்) ந்ன்றாக பந்து வீச இயலும் என உணர்ந்தாலும் . சன்னியாசிகளையோ அல்லது சாமியார்களையோ அல்லது மதசடங்குகளையோ நெருங்குவதை தவிர்த்து வந்த காரணத்தால் அவரது அழைப்பிற்கு பெரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை

இதற்கு காரணம் என் படிப்பறிவும் . கொஞ்சம் பாலகுமாரனின் தாக்கமும் கூட. அதுவும் அப்போது பாலகுமாரன் . பாக்கெட் நாவல் அசோகனிடம் ஊடல் கொண்டு கடிதங்களை பகிரங்கப் படுத்திய நேரம் . தனிப்பட்ட வரவு செலவுகளை விற்பனை செயப்வராகவே எனக்கு தோன்றியதால் . அவரது எழுத்தில் இருந்த அனுபவம் . வாழ்க்கையில் வெளிபப்ட வில்லை என உணர்ந்ததால் . அவரது எழுத்தின் வழியே எனக்கான குரு என்று வருவாரோ என காத்து இருந்த நேரம் அது.

அந்த சமயத்தில் யோகா என்று ......... நெடும் போராட்டத்திற்கு பிறகு நான் எனை உடைத்த போது . அவர் சொன்ன பதில் . இவர் சன்னியாசியும் இல்லை சாமியாரும் இல்லை என்று சொன்ன போது என்னிடமிருந்த சமாதானங்கள் தோல்வியுற்றன. கடைசி அஸ்திரமாக இது மாச கடைசி என்னிட்ம் பணம் இல்லை மேலும் ரூ 300 யோகாவிற்கு குடுத்துவிட்டால் அடுத்த மாதம் கிரிகெட் விளையாடமுடியாது ( அப்போது வங்கி சார்பாக " A " division மேட்சுகளில் கல்ந்து கொண்டு எனது கனவை கொஞ்சம் நனவாக்கி இருந்தேன் ) என்ற போது . உனக்காக நான் செலவு செய்கிறேன் கண்டிப்பாக வருகிறாய் என்று என்னை இழுத்து அந்த நாளின் விடியலை காட்டினார்

வாழ்வில் முதல் முறையாக விடியற்காலையில் எந்த பிரச்சனையும் இல்லாது எழுந்து. அதுவும் காபி குடிக்காது . அதைவிட எனது கிரிகெட் பயிற்சியை தியாகம் செய்து ..... கிளம்பிய போது எனது வீடே என்னை ஆச்சரியமாக பர்ர்த்தது

ஆம் அன்று 02 / 08 / 1993 காலை 5,50 மணிக்கு எனது இருள் விலக ஆரம்பித்தது அந்த வெண்ணொளி சூரிய ஒளி பட்டு எனை ஈர்த்ததினால்

என் மனம் ....
விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் . வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும்கயிற்றால் கட்டி
புறந்தோல் போர்த்து புழ்அழுக்கு மூடி
மலஞ்சோறும் ஒன்பது வாயிற்குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா - உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்துள் உருகும்
நலம்தான் இலாத சிறியோற்கு நல்கி
நிலம்தன் மேல் வந்தருளி நீள்கழ்ல்கள் காட்டி
நாயிற்கடையாய்க் கிடந்த அடியேற்க்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே

என திருவாசம் பாடிக் கொண்டு இருந்தது

அடுத்த 3 மணி நேரம் மட்டுமல்ல அடுத்த 13 தினங்களும் அவர் பேசியது எதுவுமே என் காதில் விழ்வில்லை . அவருக்காவே அவருடன் இருப்பதற்காகவே நேரங்களை கழித்தேன் , ஆம் என் காதலை கண்டு கொண்டன்

எந்தன் கழுத்து வரை உந்தன் காதல் வந்து இரு கண்விழி பிதுங்கி நின்றேன் என்று சொன்னேன்

வாய்மொழியும் என் தாய்மொழியும் என் வச்ப்படவில்லையெடி என எனக்குள் பிதற்றினேன்

வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருளை உருளக் கண்டடேன்

கண்டுகொண்டேன் நான் கண்டுகொண்டேன் என டிஎம்எஸ் பாடக் கேட்டேன்

என்னை நானே மீண்டூம் பெற்றெடுக்க ,,,,,,,,,

இவருக்கு என்னிடம் தர ஏதுமில்லை அதனாலேயே என்னையே காணிக்கையாக்குகிறேன்

ஏற்று என்னை ஆசிர்வதியுங்கள் ஸ்வாமி நிராகாரா

அடுத்தவர் வருவார் ................ அதுவரை காத்திருங்கள்

No comments:

Post a Comment