Friday, 26 April 2013

நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 23


நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 23

பேருந்தில் விரிந்த உலகம்

பேருந்து நகரத் தொடங்கி இருந்த்து. உணர்வு பூர்வமாக ஏதுவும் எனக்குள் இல்லாவிட்டாலும் இந்த நிகழ்விற்கு பின்னால் பல மனிதர்களின் செயல் இருப்பது மட்டும் புரிந்த்து.

ஏதோ அமெரிக்கா செல்வது போல என் அம்மா ஆயிரம் அறிவுரைகள் கூறி வழி அனுப்பி வைத்திருந்தார். அந்த அறிவுரைகளை எல்லாம் நான் ஒதுக்கித் தள்ளினாலும் ஒரு மாநகர வாழ்க்கை என்பது எனக்கு சற்று பயமாகத்தான் இருந்த்து.

திருச்சி அப்போது தமிழகத்தின் தலைநகராக் மாற்றப்படலாம் என்ற பேச்சு எம்ஜிஆர் காலத்தில் இருந்த்து. ஆதலால் எனக்குள் ஏதொ ஒரு பெரிய நகருக்கு செல்கிறோம் , அங்கெல்லாம் மக்கள் அதிகம் தெரிந்து வைத்திருப்பார்கள் என்ற எண்ணம்தான் மேலோங்கி நின்றது.

திருச்சி ரோட்டின் மாருதி நகரை கடக்கும் போது ஏனோ முரளியின் நினைவு வந்த்து. நெருக்கமாக இருந்த ஒரு நபர். படிப்பில் ஏன் இத்தனை வகை என்று கேள்வியாய் இருந்த்து. அனைவரும் அனைத்தும் தெரிந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படாத்து போல தென்பட்டது

இதுவே 10ம் வகுப்பிற்கு பிறகு நடேசனையும் சந்தரையும் என்னிடம் இருந்து பிரித்து வைத்த்து என்று தோன்றியது. ரவி கோவை வேளாண்மை கல்லூரியில் சேர்நது 1 வருட்ம்  பூர்த்தி செய்திருந்தாலும தொடர்ப்பில் இருந்தான் .

வலைய்ப்பட்டி , மேட்டுப்பட்டி என்று கடந்த போது இந்த மண்ணின் நினைவுகளில் நான் மூழ்கிப் போனேன். எத்தனை எத்தனை மனிதர்கள்.  பயணத்தின் எதிர்காற்று என்னை சுகமாய் தாலாட்டியது. பயணம் எப்போதும் சுகமானதுதான் . தொட்டிலில் சுகம் காணும் மனசை எளிதாய் நாம் கண்டு கொள்ளலாம்.

கண்ணில் தெரிந்த வீடியோவில் +2 வின் தமிழாசிரியர் வேதாத்ரியத்தை விளக்கிக் கொண்டிருந்தார். அற்புதமான எளிமையான மனிதர். கிராமத்து மனிதரின் சொக்கும் தமிழ் ஆன்மீகம் கலந்து வந்த்து. ஆனால் அது ஆன்மீக கருத்துக்கள் என்பது அந்த வயதில் தெரியவில்லை. அவருக்கு த்த்துவம் அதிகம் பிடிக்கும் போல என் நான் நினைத்திருந்தேன்.

அந்த தமிழின் நினைவில் குற்றால குறவஞசியும் , மருது சகோதர்ர்களும் , காளையார் கோவில் ரதமும் உலா வந்தன. மருது சொன்ன அந்த வார்த்தைகள் என் மனதில் எதிரொலித்தன.  தேரை உருவாக்கிய அந்த ஆசாரிதான் எவ்வளவு பேராசை படைத்தவனாக ஒரு ஷணத்தில் உருவாகிப் போனான்

மருது வந்தாலும் தேரோடாது - அவன்
மச்சினம் வந்தாலும் தேரோடாது
தேருக்குடையவன் குப்பமுத்தாச்சாரி - அவன்
தேர்வட்ம் தொட்டாலே தேரோடும்

பெரிய மருதுவால் ஆசாரிக்கு அஞசலி செலுத்திய வரிகள் ஆழமாய் பரஸ்பர அன்பை வெளிப்படுத்தின. மரணத்தை கண்டு அஞ்சாது வாழ்ந்த மனிதர்தாம் எத்தனை எத்தனை . அந்த மனிதர் வாழ்ந்த சோழ தேசத்தில் நானும் காலம் கடந்து பின்னோக்கி சென்று கொண்டிருந்தேன்.

என்னோடு சேர்ந்து நாமக்கல்லும் வளர்ந்த்து போல ஒரு பிரமை. ஒரு பரமசிவம் ஒரு குமாரசாமி என்று டாக்டருக்கு படித்து தம் ஊருக்கு சேவை செய்து வந்த மனிதர் பரம்பரையில் திருமதி கண்ணகி ராஜ்குமார், கண் மருத்துவர் திரு குமணபூபதி ஆகியோர் அடுத்த தலைமுறைகளாக வந்திருந்தனர். 

திருமதி கண்ணகி ராஜ்குமார் எங்களது தெருவிற்கு அடுத்தபடியாக தட்டாரத் தெருவிலும், திரு குமணபூபதி நான் படித்த ராஜாஜி பள்ளிக்கு அருகாமையிலும் தங்களது கிளினிக்குகளை ஆரம்பித்தமையால் இவர்கள் பழக்கமானார்க்ள்.  மேலும் அன்றைய உலகம் பெரும்பாலும் எங்களது எந்த தேவைக்கானாலும கடைவீதியின் எல்லைக்குள் முடிந்துவிடும்.

அப்பா செட்டியார் சமுகத்தின் புரோகித்த்தையும் , அவர்களது மடத்திற்கு சொந்த்மான கன்னிகாபரமேஸ்வரி கோவிலையும் பராமரித்து வந்த்தால் அனைத்து வீடுகளும் , அனைத்து நபர்களும் பழக்கமாயிருந்தனர். இவர்களில் பலர் மளிகைக் கடை வைத்திருந்தாலும , தட்டாரத்தெருவில் கேபிஆர் மண்டப்த்தின் பின்னால் மளிகை கடை வைத்திருந்த அன்பழகனே எங்களுக்கு ஆஸ்தான் மளிகை சப்ளையராக இருந்தார்.

பெத்தநாயக்கன் பாளையம் ராமாபட்லு தர்த்தா மற்றும் ராசீபுரம் தாத்தா போன்றோர் இறைவனடி சேர்ந்த்தால் ஈரோடு மாமாவும் இன்னும் சிலரும் என் அப்பாவின் குழுவில் புதிய வரவு பெற்றிருந்தனர்.

ராமாபட்லு தாத்தா தலைமையில் சிரத்தையாக நடைபெற்ற கன்னிகா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் ஒரு அற்புதமான நினைவு. அதில் தான் அவரது சீடர் சீனு மாமா உள்பட பல புதிய மனிதர்களை வாழ்க்கை அறிமுகம் படுத்தியது.

ராமாபட்லு மாமாவின் காலத்திற்கு பிறகும் அவரது குடும்பத்தினர் மேல் அவர் கொண்டிருந்த பக்தியும் அன்பும் அளவிடமுடியாத்து.  இப்போது இவர்களை எல்லாம் நினைத்துப் பார்த்தால் , நினைவில் வருவது எல்லாம் அவர்களது எளிமையும், அன்பும்தான் . உண்மையிலேயே இத்தகைய மனிதர்கள் கொண்ட வாழ்வு ஒரு பெரிய வரம்தான்,

இவர்களைப் போலவே துத்திக்குளத்தில் இருந்து ஒரு மாமா வருவார். ஆனால் அவர் புரோகிதங்களுக்கு எல்லாம் வரமாட்டார். ஏழைக் குசேலனைப் போல தான்ங்கள் பெற்றுப் போவார். இவரை வேலைக்கு செல்வதற்கு முன்பு மட்டுமே காணமுடியும் .

தானம் பெற்ற கையோடு நேராக ஊருக்கு சென்று விடுவார். இப்படி தானங்கள் பெறுவபவர்கள் பெரும்பாலும் வறுமையில்தான் இருக்கின்றனர். எங்கள் அப்பா சம்பளமே ரூ 300 அப்படி இருக்கையில் இவர்களை வறுமை என்று சொல்கிறேன் என்றால் .............. அந்த நிரந்த்ர வருமானமும் இல்லை என்றே அர்த்தம்

ஆனாலும் முகத்தில் சிறிதும் வருத்தமோ, கவலையோ இராது. குழந்தைகளோடு குழந்தையாக பழகுவார். இவரது குடும்பத்தினரை நான் சந்தித்து இருப்பேனா என்பது கூட சந்தேகமே. ஆனால் இவரை எங்கள் காலத்திய மக்களால் நிச்சயம் மறக்க இயலாது என்பது மட்டும் உறுதி.

ஆனால் ஒரு கிராமத்து வாழ் மனிதனுக்கு தேவையான அனைத்தும் அவருக்கும் கிடைத்தன எனறே சொல்லவேண்டும். என்ன ஒரு வங்கி கணக்கோ அல்லது பெரிய வீடோ இருந்திருக்காது. அவரை கிண்டலடித்தாலும அவர் தம் குழந்தைகளையோ அல்லது குடும்பத்தினரையோ , ஏன் அவரையோ கூட யாரும் தனியாக விட்டு விடவில்லை.

உரிய காலத்தில் உரிய வற்றை அனைவரும் சேர்ந்தே செய்து வந்தனர். இப்படி இன்னும் ஒரு சிலர் இருக்கத்தான் செய்தனர். சேலம் அனுப்பூர் சரஸ்வதி அத்தையும், மாமாவும் குடிசையில்தான் வாழ்ந்தனர். அவரோ சாய் பாபா பார்த்துக் கொள்வார் என்று எதையும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

இவர்களுக்கு கர்மா, விதி , ஜாதகம் போன்றவற்றில் மூர்க்கத்னமான நம்பிக்கை இருந்த்து. சில சமயம் இவர்களது வறட்டுத் தனமான சிந்தாந்தங்களை விட்டொழித்திருந்தாலே இன்னமும் நல்ல ஒரு  சூழலில் இருந்திருக்க முடியுமோ என்றெல்லாம் எண்ணியிருக்கிறேன்.

ஆனால் இப்படி எண்ணுவதும் கூட ஒரு வகையான சிந்தாந்தமே என்று இப்போது எனக்கு படுகிறது. இப்போதெல்லாம் எத்தகைய கருத்தும் சொல்லாதிருப்பதே உத்தம்ம் என்று படுகிறது. ஒருவேளை இப்படித்தான் அவர்கள் இருந்திருப்பார்களோ அதனால் தான் என் கண்ணுக்கு இப்படி தெரிந்தார்களோ என்று எண்ணுகிறேன்.

ஆமாம் நான் பல மனிதர்கள் கண்களுக்கு முட்டாள்தனமாக செய்வதைப் போன்றுதான் தென்படுகிறேன். ஆனால் இது எனக்கு ஒரு சௌகரியத்தை கொடுத்துள்ளது. என்னால் எனக்கு தேவை என்று ஆராய முடிகிறது. பிறர் நம் தவறுகளை சுட்டிக் காட்டும் போது , விளக்கங்களோ , வியாக்னங்களோ தேவைப்படுவதில்லை.

எவர்க்கும் நிறுபிக்க வேண்டிய அவசியமின்றி நான் நானாக இருக்கிறேன். அனைத்தையும் வாழ்வின் அங்கமாக , என்னுள் அங்கமாக காண்கிறேன். முரண்பாடுகளாய் விரிந்து நிற்கிறேன். முழுமையாய் ஏற்றுக் கொள்ள் முடிகிறது. நம்பிக்கையுடன் தவறுகளை செய்ய துணிச்சல் வருகிறது. அமைதியாக அலசி பார்க்க முடிகிறது. சரியெனப் படுவதை தயக்கமின்றி ஏற்றுக் கொள்ளவும் , செயல் படுத்தவும் முடிகிறது.

அநேகமாக இந்த காலகட்டத்தில் அனைத்து நகர்களுமே ஏறக்குறைய இதே நிலையில்தான் இருந்தன என்று என் சமகாலத்தவர்களை தற்போது பார்க்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் இக்கட்டுரையை நான் எழுத ஆரம்பித்த பின்னர், அதிகமான இம்மாதிரியான தங்களது பள்ளி மற்றும் இளமை கால வாழ்க்கையையும், அதில் சந்தித்த மக்களையும் பற்றி எனது நண்பர்கள் பலர் பேஸ்புக்கில் சிறிது சிறிதாக எழுதி வருகின்றனர்.

இது ஒரு வரம். எதையும் ஆனந்தமாக அனுபவிப்பது என்பது அற்புதமான வரம்.  நம்மிடையே ஒன்றை சம்பாதிப்பதற்காக மிக கடினமாக உழைப்பவர்கள் பலரை நான் கண்டிருக்கிறேன். ஆனால் அப்படி சம்பாதித்ததை ஆனந்தமாக அனுபவிப்பது என்பதை வெகுசிலரே உணர்ந்திருக்கின்றனர். அவர்களும் கூட எல்லா தருணங்களிலும் அப்படி உணர்கின்றனரா எனப்து தெரியவில்லை. வெகு வெகு சிலரைத் தவிர பெரும்பாலும் இல்லை என்பதே எனது அனுபவம்

காலமும் அதன் நொடிகளும் நமக்கு பலவற்றை அளித்திருந்தாலும் நாம் எதைச் சுமக்கிறோம் என்கிற வாய்ப்பு  நமக்களித்த அற்புதமான வரம். இதை நாமே தீர்மாணித்தாலும் பெரும்பாலும் அது நம்மை அறியாமல் விழிப்புணர்வு அற்ற நிலையிலே நிகழ்கிறது.

நம்மால் இதை சற்று கவனமாக தேர்ந்தெடுத்துக் கொள்ள இயலும் என்றே தோன்றுகிறது. எத்தனை எத்தனை நிகழ்வுகள் என்னுள் சுனாமி போல அடித்திடாது அழகான அலைகளாய் ஆனந்த தாண்டவமாடுகிறது.

சிறு பருவத்தில் எங்கள் வீட்டுக்கு 3 வீடு தள்ளி குடியிருந்த நாட்டுக் கோட்டை செட்டியார் குடும்பத்தை சார்ந்த , என்னிலும் பெரியவனும் , என் மாமா பையன் வெங்கடேஷின் நண்பனும் ஆனா அண்ணாமலையின் சுண்டு கப்பையில் அன்றைய ராஜு அண்ணா வீட்டின் முன் இருந்த தாழ்வாரத்தில் களைகட்டும்.

அது முடிந்தால் அவர்கள் வீட்டிற்கு முன் எங்களது மூன்று தெருவுக்கும் பொதுவான தண்ணீர் குழாய் அருகே கோலி குண்டு கோலாகலமாகும். இதற்காகவே சினிமா பிக்சர்ஸ், தீப்பெட்டி அட்டைகள் சேகரிப்போம்
இதே சினிமா பிக்சர்ஸை வைத்து சபாபதியின் வீட்டில் பின்புறம் கிணற்றுக்கு அருகில் இருந்து சூரிய ஒளி வாங்கி அதை ஜன்னலில் ஊடுருவச் செய்து பேசும் படங்களை பேசாத படமாக்கி இருக்கின்றோம்.

பழங்காலங்களில் எங்கள் வீதியில் எல்லார் வீடுகளும் செட்டி நாட்டு சமுகத்தில் இருப்பது போல இந்த தெருவில் ஆரம்பித்து அடுத்த தெருவில் பின்வாசல் இருந்திருக்க வேண்டும். காலப்போக்கில் நடுவில் பாகம் செய்த்து போல் இரு தெருவிற்கும் , இரு வீடுகளுக்கும் நடுவே , ஒரே வீட்டை இரண்டாக பிரித்த்து போல நெடும் சுவர் செல்லும்.

அந்த காலத்தில் திருடர்களுக்கு இது மிகவும் வசதியானது. உயரமான கட்டிடங்கள் அதிகம் எழும்பாதவை. அதனால் ஒரு வீட்டில் பின்புறம் உள்ளவற்றை திருடிக் கொண்டு அதைத் தொடர்ந்து பல வீடுகளில் கைவரிசை காட்டி சென்று விடுவர்.

அதே சமய்ம் வீடு முடிந்த்த்தில் இருந்து சுமார் 50, 60 அடி தோட்டம் இருக்கும். கிணறுகள் பெரும்பாலும் 2, 3 வீடுகளுக்கு பர்த்தியபட்டதாகவே இருக்கும். அந்த காலத்தில் அண்ணன் , தம்பி என உறவு முறைகளே அடுத்து அடுத்து வசித்த்தால் பாகப்பிரிவினைகள் பெரிய சிக்கலை உருவாக்கி இருக்காது.

எங்கள் வீட்டின் தோட்டத்தில் கிணறு வரை பூச்செடிகளும் அதற்கு பிறகு ஒரு வேப்ப மரமும், அதை ஒட்டி ஒரு முருங்கை மரமும் , வேப்ப மரத்திற்கு பின்னால் தென்னையும் அதற்கு பின்னால் நிழல் தருவது போல பாதானிகா மரமும் இருந்த்து. கிணற்றடியில் குளிக்கும் நீரும், பாத்திரங்கள் கழுவும் நீரும் இந்த மரங்களுக்கு இயற்கையாக சென்றுவிடும்.

வீட்டின் நடுவே கூடத்தை ஒட்டி முற்றங்கள் இருக்கும். முன்காலத்தில் பெரியதாக இருந்து இருக்கும் என்று எண்ணுகிறேன். அந்த முற்றத்தில் மழையும் , வெயிலும் , சந்திரனின் குளிர்ச்சியும் புகுந்து சாரல்களை நம்மீது ஆசிர்வதிக்கும். சபாபதியின் வீடு, கோவிந்தனின் வீடு இந்த முற்றத்திற்கு எடுத்துக்காட்டாய் இருந்தன.

இந்த முற்றங்களின் இரு புறமும் கூடமும் அதன் நான்கு மூலைகளிலும் நான்கு அறைகள் இருக்கும். அதில் தோட்டத்தை ஒட்டி உள்புறமாக உள்ள அறைகளில் ஒன்று சமையலறையும், மற்றொன்று பொருட்கள் வைத்துக் கொள்ளவும் பயன்படும். இரண்டுக்கும் இடைப்பட்ட வழியில் நடந்து கிணற்றடிக்குச் சென்றுவிடலாம்.

சபாபதியின் கிணற்றடியில் பின்னாலிலும் கூட ஓடுகள் போட்டு வேய்ந்த கூரை இருந்த்து, அதில் தோட்டத்திற்கான வாசல் இருந்த்து. அவர்கள் வீட்டு தோட்டம் 15 அடி நீளம்தான் இருக்கும் . அவர்களது வீடு இரு செவ்வகங்களை சேர்த்து வைத்த்து போல இருக்கும். எங்களது வீடுகள் ஒற்றைச் செவ்வகமாய் இருக்கும். ஒற்றை செவ்வகமாய இருக்கும் வீடுகளில் தோட்டம் நீளமாகவும் பெரிதாக இருந்த்து

சபாபதியின் வீடு எங்கள் வீட்டிற்கு எதிர்வரிசையில் இருந்த்து. ஒரு விநாயகர் சதுர்த்திக்கு , எங்கிருந்தோ பொருக்கி வந்திருந்த சில செங்கல்களை வைத்து , எங்களிடம் இருந்த கல்லால் ஆன பிள்ளையாரை பிரதிஷ்டை செய்து அந்த ஆலயத்தின் கும்பாபிஷேகத்திற்கு அனைத்து வீடுகளிலும் நன்கொடை வசூல் செய்து சிறப்பாக நடத்தினோம்.

எங்கள் வீதியில் இருந்த அனைவரும் அன்று வருகை தந்து விநாயகரையும் எங்களையும் ஆசீர்வதித்துச் சென்றார்கள். வந்தவர்களுக்கு எல்லாம் ஒரு தொன்னை சுண்டலும் , சர்க்கரை பொங்கலும் ஸ்பான்சர்களால் ஏற்பாடு செய்யப்பட்டன. அடுத்த 48 நாள் மண்டல பூஜையும் அற்புதமாக கொண்டாடியிருந்தோம் இம் மக்களின் ஆசியினால்.

இது ராமாபட்லு மாமாவின் தலைமையில் நடந்த கும்பாபிஷேகத்தை கண்ட விளைவு. அந்த கும்பாபிஷேகத்தின் போதுதான் விமானத்திற்கு அபிஷேகத் தண்ணீர் உற்றும் போது என் அப்பாவிற்கு அருள் வந்து விட்டது. பொருப்பாளர்களிடம் அம்மன் ஏதோ வாக்கு கேட்டது. அவர்கள் உத்திரவாதம் தந்த பின்னரே அடுத்த அடி எடுத்து வைத்த்து.

இதுமாதிரி என் அம்மாவிற்கு அடிக்கடி சாமி வந்து விடும். இத்தகைய நிகழ்வுகள் எனக்கு பரிச்சியமாயிருந்தாலும எனக்குள் இருந்த உலகம் விரிய ஆரம்பித்து இருந்த்தால் இதை ஒரு மனிதன் கடந்து செல்ல முடியும் என்று நம்பிக்கை இருந்த்து. தேவையின்றி கவனத்தை ஈர்க்கின்றார்களோ என்ற கேள்வியும் எனக்குள் இருந்த்து. இம்மாதிரி சமயங்களில் பெரும்பாலான மக்கள் அத்தகைய சாமி வந்தவர்களிடம் பயப்படுவதை நான் கண்டிருக்கிறேன்.

இந்த பயம் சாமியைக் காட்டிலும், அது தன்னைப் பற்றி அல்லது தன் தவறுகளை வெளிப்படுத்தி விடுமோ என்பதில்தான் இருக்கும். ஆனால் என் பாட்டி என் அம்மாவை அநாயாசமாகவும் அமைதியாகவும் கையாளுவார்., கோரிக்கை தன் மனதிற்கு சரியெனப்பட வேண்டும் என்ற கொள்கை வைத்திருந்தார். நான் பெரும்பாலும் இவற்றை எல்லாம் 
 கூட்டத்தோடு கூட்டமாக நின்று வேடிக்கை பார்ப்பதுடன் சரி. சில சமய்ம நம் ஸ்கிரீன் பேளேயும் சேர்ந்து ஒடும் பிறரிடம் சொல்லும்போது அவ்வளவுதர்ன்.

எங்கள் வீட்டின் பின்னால் இருந்த மண் தோட்டம், சபாபதியின் வீட்டில் இருந்த சிமென்ட் தளம் , கோவிந்தன் வீட்டிற்கு அருகில் அவர்களது காம்பெவுண்டில் இருந்த வெற்றிடம், குறுகலாகவும் திண்ணைகளோடும் இருந்த ராஜு அண்ணாவின் வீடு இவையணைத்தும் எங்களது கிரிக்கெட் பயிற்சி தளங்கள்.

இவற்றில் கிரிக்கெட் மட்டுமன்றி பம்பரம், கபடி, நொண்டி அல்லது பாண்டி, அனைத்தும் வலம் வரும். பின்புறத் தோட்டங்களும் , மலர்களும் பறவைகளை அதிகம் ஈர்த்தன. வண்ணத்து பூச்சிகளும் , சிட்டுக் குருவிகளும் , கரிச்சான் குருவிகளும் வானத்தை அண்ணாத்து பார்க்க வைத்தன.

அவற்றுக்காக மலர்ந்த மலர்கள் மண்ணோடு தொடர்ப்பு கொள்ள வைத்தன.  அந்த மண்ணில் நிலவின் ஒளியில் நணைந்த்து மண்டையில் படமாய் விரிந்த்து. பாட்டிகளின் கதைகளோடு கையில் உருண்டைகளாய் வாங்கி சாப்பிட்ட நிலாச் சோறு நினைவில் உருண்டோடியது.

நிலவின் குளிரில், நான் பள்ளியில் இருந்து 5 கி.மி தூரம் மழையில் நணைந்து வந்த்தும் நினைவிற்கு வந்த்து. முழங்கால் அளவு தண்ணீர் உருண்டோடும் அழகான மழைகள். ஆலங்கட்டி மழையைக் கூட பார்த்திருக்கிறேன். மழை எங்கள் வீட்டை தெப்பமாக்கி இருக்கும். சாரலில் நனைந்து நிற்கும் எங்களுக்கு சூடாய் பஜ்ஜி மற்றும் சன்னியாசி உருண்டை (என்று கடலைமாவில் சிறு தேங்காய் கீத்துக்களை போட்டு காரசாரமாக ) செய்து கொடுப்பார்கள். கூடவே மறக்காது காபி வந்துவிடும்

இரவு அரிசி குருணை உப்புமாதான் . உடைத்த மிளகும் ,குருணையும் இணைந்து அற்புதமாய அந்த குளிருக்கு உடலை சூடேற்றும். தொட்டுக் கொளள் வடுமாங்காய் அல்லது ஆவக்காய் உறுகாய் கிடைக்கும். இத்தோடு கெட்டி தயிரும் , வெள்ளை சர்க்கரையும் கூட வைப்பார்கள் .

மழைக்காலங்கள்  இப்படி என்றால் வெயில் காலங்கள் நேர் எதிர். மலையில் பட்டு எதிரொலிக்கும் வெப்பத்தால் வீட்டிற்குள் யாரும் உறங்க மாட்டார்கள். தோட்டத்தில் வேப்ப மரத்தின் குளிர்ந்த காற்றோடோ அல்லது வீட்டை பூட்டிவிட்டு திண்ணையிலோ உறங்குவர். ரோட்டில் வரிசையாக கிராமத்து வாழ்க்கை போல கட்டில்  போட்டு உறங்குவார்கள். 

இந்த காலங்களில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையும் பார்த்திருந்தேன்.  லாரிகளில் கொண்டு வந்து தண்ணீர் கொடுப்பார்கள். வீதியே குடங்களாய் நிறைந்திருக்கும். மனிதர்களுக்காக காத்திருந்த்து போய் தண்ணி லாரிக்காக மக்கள் காத்திருந்த காலமும் இந்நகரமும் , வீதியும் கண்டிருந்த்து.

உழைப்பிற்காக தங்களது மனைவியின் கழுத்தில் மஞசளை கோர்த்து விட்டு தாலியை அடகு வைத்து லாரி ஓட்டியவர்களை கண்டிருக்கிறேன். அத்தகைய மனிதர்களின் அயராத உழைப்பு அவர் தம் குழந்தைகளை படித்த மேதைகளாக்கியது.

கல்லூரித் தேர்தல்களில் கட்சிக் தலைவர்கள் மறைமுகமாக பங்கெடுத்தனர். அரசு கல்லூரியின் மாணவ்ர் தேர்தலில் வென்ற வணங்காமுடியும், காந்திசெல்வனும் நகரை வலம் வந்தார்கள்.

காளப்பநாயக்கன் பட்டியில் ஒரு ஸ்கவுட் முகாமிற்கு சென்று கலந்து கொண்டது கூட நினைவில் தோன்றியது. அங்கிருந்து நடுக்கோம்பை வழியாக கொல்லிமலையில் கொஞச தூரம் ஏறி வந்தோம். மலைக்கு மேலே விடுதலைப்புலிகள் பயிற்சி மையம் இருப்பதாக கேள்விப்பட்டிருந்தேன் அக்காலத்தில்.

பத்திரிக்கை செய்திகளை விட பழ்கும் நண்பர்கள் கூறும் செய்திகள் தான் அதிகம். அது உண்மையா பொய்யா என்றெல்லாம் ஆராய நேரமின்றி அதிகமான செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கும்

ஏதேதோ முதலுதவிக்ள் எல்லாம் கூட சொல்லிக் கொடுத்தார்கள் .எதுவும் நினைவில் இல்லை. ஷேக்ஸ்பியரை அற்புதமாக அறிமுகப் படுத்திய அந்த இளைய தலைமுறையின் ஆசிரியர் ஆக்சிடென்டில் அடிபட்டு இறந்து போனதை மறந்த்து போல மறக்காது மற்ந்திருந்தேன்.

எதிர் வீட்டு பட்டம்மா மாமியின் அப்பாவும் ஒரு மஹாசிவராத்திரியின் இரவில் விடைபெற்றுக் கொண்டார். அதன் பின்னர் மாமாவும் இங்கேயே மாற்றலாகி வந்து விட்டார். மாமா மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வந்தார். அவர் மட்டும் காலை 7 மணிக்கு கிளம்பிவிடுவார்.

அவரது தம்பி ராஜாமணி என் அப்பாவின் கிளாஸ்மேட் என்று நினைக்கிறேன். இருவரும் நெருங்கி பழகுவார்கள். சில காலம் கழித்து அவரும் அக்காவுடன் வந்து தங்கிவிட்டார்.

பவித்திரம் அத்தையின் கணவரும் மாமாவும் தவறிப் போனது கனவாய் எழுந்த்து. அப்போதுதான் அவர்தம் மகள் லக்ஷ்மி எனக்கு பழக்கமானாள் . 8வதோ 9வதோ படித்துக் கொண்டிருந்த்தாக ஞாபகம். நன்றாக படிப்பாள்.
அவளது அண்ணன் ரவி பாம்பேயில் வேலை பார்ப்பதாக கூறினார்கள். அவருக்கு டைப்ரைட்டிங் மற்றும் ஷார்ட் ஹேண்ட் எல்லாம் தெரியும் என்று சொல்லி அவரைப் போல கற்க வேண்டி என்னையும் வற்புறுத்தி சேர்த்திருந்தார்கள்.

எங்கள் அனைவருக்கும் ஒரே டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்தான் . அது நாமகிரி டைப் இன்ஸ்டிடியூட். அவ்ருக்கு உதவியாளராக இருந்த இருவரும் அவரது ஆசியுடன் தனி டைப் மற்றும் ஜெராக்ஸ் அலுவலகத்தை அப்போதுதான் துவங்கியிருந்தார்கள்.

அவரது டைப் இன்ஸ்டிடியுட்க்கு எதிரேதான் டிவிஎஸ் ஆபீஸ் இருந்த்து . இவற்றை கடந்துதான் மலைமீது கட்டப்பட்டிருந்த அரங்கநாதர் கோவிலுக்கு செல்ல வேண்டும்.  ராஜு அண்ணாவின் அப்பாவான டிவிஎஸ் மாமா அப்போது அவ்வளவு நேரடியாக பழக்கமில்லை.

அவர்கள் வீட்டில் நாங்கள் போடும் கூத்துக்காக அவர் வீட்டில் இருந்தால் சத்தம் போடுவார். ஒரு முறை குச்சியை எடுத்துக் கொண்டு விரட்டி வந்துவிட்டார். சிலர் வெளியே கதவு வழியாக ஒடியும் , பலர் சுவர் ஏறி குதித்து ஒடியும் , ஒட முடியாதவர்கள் அப்படியே சுவற்றில் தாவி வீட்டு கூரையின் பின்னால் ஒளிந்திருநது அவர் உள்ளே சென்றதும் கூச்சலிட்டுக் கொண்டு குதித்து ஒடியதும் இந்த 3 வீதி பையன்களுக்கும் குதுகலமான குழந்தை நினைவுகள்

மாலை நேரத்தில் பள்ளியில் இருந்து வரும் போது வழியில் இருந்த மரங்களின் வீடுகளுக்கு திரும்பியிருந்த எங்கள் குருவியார்களின் சமுகத்திடம் நலம் விசாரித்து திரும்பியது ஒரு அற்புதம்

பாஸானால் போதுமானது என்பதே இலக்காக இருந்த்தால் படிப்பு சுமையாக இருந்த்து இல்லை அவ்வப்போது ஆசிரியர்கள் மனப்பாட்ம்  என்று வற்புறுத்தும் போது தவிர அல்லது  எப்படியாவது அந்த x மற்றும் y யை எங்கள் மண்டைக்குள் புகுத்திட எடுத்துக் கொண்ட அந்த பகீரத பிரயத்தனங்களின் போது தவிர

மைதானமும் விளையாட்டூம்தர்ன் பள்ளியில் மிக முக்கியமாக இருந்த்து. அல்லது கடைசி பெஞ்சில் நூல் விட்டுக் கொணடிருப்பேன். இதெல்லாம் 10 வகுப்பு வரையில்தான். அதற்கு பிறகு மிக பொறுப்பான பையனாக முதல் பெஞ்சில் அமர்ந்து கொண்டேன் . அது எனக்கு மிக வசதியாக போனது.

ஏனெனில் வாத்தியார் கவனமெல்லாம் கடைசி பெஞ்சில் தான் இருக்கும். அதனால் இடையூறு இன்றி கண்விழித்து தூங்க முடிந்த்து. காரணம் பற்றி யாருக்கு கவலை  இருந்த்து.

மாருதி மெடிக்கல்ஸ், சரஸ்வதி மெடிக்கல்ஸ், முத்து நாவல் பண்ணை, கணேசா காபி, ஜெருஸ் காபி, தம்மண்ணா புக் ஸ்டோர்ஸ் ,பரமத்தி ரோட்டில் இருந்த லக்ஷ்மி புக் சென்ட்ர் என அன்றாட வாழ்க்கை இந்த நாலு வீதிக்குள் சுற்றி வநத்தை இனி சுற்றமுடியாது என்பதை அறியாமலே பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன்

தூக்கத்தில் வந்த கனவா அல்லது எண்ண்த்தில் பிரிவால் ஏற்பட்ட நினைவலைகளா எனத் தெரியாமல் எனக்குள் மூழ்கியிருந்தேன். இதை எதுவுமே அறியாத்து போல பேருந்து தன் கடமையில் கண்ணாயிருந்த்து.

இநத் கனவிற்கு இடைவெளி தேவை என்பது போல வண்டியை நிறுத்தியிருந்தார். சில நிமிடங்கள்தான் என்றாலும் பேருந்தின் இயக்கம் நின்றதால் தொட்டிலின் ஆட்டம் குறைந்த சுகத்தில் கண்விழித்தேன். முசிறியை தொட்டிருந்த்து. வண்டி

காவிரியின் நதிக்கரை ஒரத்தில் பேருந்து மீண்டும் பயணித்த போது நதியின் குளுமையை சுமந்து வந்த காற்றில் கண் இமைகள் தானாக மூடிக் கொண்டன. கனவுகள் மேலும் விரிய ஆரம்பித்தன.

மேலும் பல தெய்வங்கள் என் எண்ண அலைகளின் மேல் நின்று ஆனந்த தாண்டவமாடினார்கள்.

அவர்களை உங்கள்  முன் உலா அழைத்து வருவேன்

அதுவரை காத்திருங்கள்.............

No comments:

Post a Comment