Tuesday, 2 April 2013

நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 3நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் . -  3

இந்த தொடக்கப் பள்ளி காலத்தை பற்றி இன்னும் சில நான் சொல்லியே ஆக வேண்டும். இன்றைக்கு போல் அன்று அதிக வாகனங்கள் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் மின்சாரம் இல்லையென்ற போராட்டமும் கிடையாது. ஏனெனில் எல்லாம் லாந்தர் விளக்குதான்.  வீதியில் இருக்கும் விளக்கே எங்களுக்கு டியுஷன் சென்டர்,

என்னுடைய பழைய முன்சீப் கோர்ட் தெரு . 50 வீடுகள் கொண்ட ஒரு முந்தைய காலத்து அக்ரஹாரம்.  மிக சமீபத்தில்தான் அந்த பகுதியை எங்களது மூதாதையருக்கு திப்புச் சுல்தான் பட்டயம் எழுதிக் கொடுத்த்தை ஆவணமாக பெற்றுள்ள்தாக இப்போதும் அங்கு இருந்து வரும் மிகச் சில குடும்பங்களில் ஒன்றான எனது இளைய தமையன் கூறினான்,

உண்மையில் அவனுக்கு இருக்கும் இத்தகைய ஆர்வங்கள் எனக்கு இல்லை என்பதை ஒத்துக் கொள்ளவேண்டும். அவனால் மூதாதையர் வாழ்க்கை பற்றி . அப்போதைய நகரப்மைப்பு மற்றும் ஆலயத்தின் தொடர்ப்புகள் என நிறைய அறிகின்றேன்,

நான் வாழ்ந்த காலகட்டம் அக்ரஹாரம் என்பது கலைந்து விடவும் இல்லை ஆனால அதற்கு முன்னர் இருந்த்து போன்ற ஒரே சமுகத்தினரும் இல்லை,  வெவ்வேறு சமுகத்தினர் குடியேற  ஆரம்பித்து இருந்தாலும் அனைவர் மனத்திலும் ஒரேவிதமான மனநிலை இருந்த்து என்பேன்.  ஒரே குடும்பமாகத்தான் பழகி வந்தனர்.

வீட்டுக்குள் ஒவ்வொருவருக்கும் த்த்தமது குடும்ப வழக்கங்கள் இருந்த போதிலும் . பெருமபாலும் அசைவ உணவுகளை அடக்கியே வாசிப்பர், இது மற்ற்வர்கள் மேல் இருந்த மரியாதையினாலா அல்லது அவர்களுக்கு தமது நடைமுறைகளால் தொந்தரவு ஏற்படக்கூடாது என்கிற உன்னத எண்ணத்தினாலா என எனக்கு தெரியவில்லை.  அதேபோல் இவர்களும் அவர்களிடத்தில் ஒருநாள் கூட இதற்காக முகம் சுளித்து நடந்து கொண்டதாக சிறிதும் நினைவில்லை.

இத்த்கைய குடும்பங்களில் பொருளாதாரம் என்பது பண அடிப்படையில் இல்லவே இல்லை . ஆனாலும் பிறரை ஏற்றுக் கொள்வதில் அவர்களுக்கு நிகர் அவர்கள் தான் என்பேன்.
இவர்களது வர்த்தகங்கள் பெரும்பாலும் பண்ட மாற்று முறையில்தான். அப்பாயி வீட்டில் இருந்து புழுங்கலரிசி எங்கள் வீட்டிற்கு வரும் எங்கள் வீட்டில் இருந்து காய்கறிகள் மற்றும் பச்சரிசி போன்றவை செல்லும். காபித்தூளும் சர்க்கரை பரிமாற்றமும் ஒருவருக்கொருவர் சரளமாக நடக்கும்,

அதைவிட எல்லார் வீட்டிலும் அவர்களது குழந்தைகள் தவிர அவர்களது உறவினர் குழந்தைகளும் (கிராமங்களில் இருந்து) தஙகி ஒரே குடும்ப குழந்தைகளைப் போல இருப்பார்கள். பணவசதி மற்றும் பொருளாதாரம் பற்றிய சிந்தனையோ . அறிவோ இல்லாவிடினும் . எது வாங்கினாலும் . எதைச் செயதாலும் . அதை எவர் செய்தாலும் அது அனைத்து குழந்தைகளுக்கும் தான் .

3வது வீட்டு சரவணனின் அப்பாயி எனக்கு மட்டுமல்ல எங்கள் வீதியில் உள்ள அனைவராலும் அப்பாயி என்றே அழைக்கபடுவார் . அவரது  பெயர் என்ன என்பது அவருக்கே தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான்,.  அவர்களை பற்றி தனியே செர்ல்ல வேண்டும்.

வனிதா டீச்சர் மற்றும் நாகரத்தினம் ( டீச்சரின் அம்மா குடும்பம்) போன்றவர்கள் சௌண்டம்மனை வழிபடுவார்கள் (சரியாக நினைவில்லை ஆனால் அவர்களது பண்டிகை நாளன்று ஆண்கள் மஞசள் வேட்டி கட்டி கத்தி போட்டுக் கொண்டு பெரிய ஊர்வலமாக செல்வது காண கண்கொள்ளா காட்சியாகும்)

அப்பாயி சமுகத்தினருக்கோ குலதெய்வம் மாரியம்மன்தான்.. இப்படி கலந்து வாழ்ந்த்தால் அனைத்து மக்களும் அனைத்து கோவிலுக்கும் சென்றனர். மசூதி உள்பட எதுவுமே இன்றைய துவஷேத்தால் வளர்க்க்ப்படவில்லை

வேணி மாமியும் . மந்திராலாய மாமாவும் . லெப்ட் ரமேஷ் வீடும். மாருதி மெடிக்கல்ஸ் அவர்களின் வீடு ( இந்த வீட்டின் செல்லக் குட்டி கோவிந்தன் எங்கள் டீவிஎஸ் கிளப்பின் விராட் கொய்லி) .  போன்றவர்கள் கன்னட தேச கலாசாரத்தை கண்களுக்கு விருந்தாக்கியவர்கள்,

எதிர்வீட்டு பட்டம்மாளும் . கணேசா காபி உரிமையாளர்களும் . எங்கள் பிளையிங் கல்ர்ஸ் கிரிக்கெட் கிளப்பின் மூத்த உறுப்பினர்கள் சுரேஷ் மற்றும் ராஜீ அண்ணா குடும்பங்களும் தமிழ் ஐயர் வாழ்க்கை முறையை அன்பு கலந்து ஊட்டியவர்கள்

இப்படியெல்லாம் இருந்தாலும் யார்வீட்டு குழந்தைக்கு பாடம் போட வேண்டுமென்றாலும் மாலை வேளை தொழுகைக்கு பிறகு மசூதிக்குத்தான். எவர்வீட்டுக்கு உப்பு வேண்டுமென்றாலும் என் நண்பன் இதாயத்துல்லா வீடுதான். காபித்தூள். சாம்பார் தூள் . ரசப் பொடி என அனைத்தும் அவரின் அப்பா வைத்திருந்த மிஷின்தான். 
மதங்களும் வழிபாடுகளும் வீட்டிற்குள்ளேயே மற்ற்படி மனிதர்களாக வாழ்ந்தார்கள். ஆனால் ஒவ்வொருவருக்கும் த்த்தமது வழீமுறைகளை யாருக்கும் விட்டுக் கொடுத்து பேசியதாக நினைவு இல்லை அதே சமயம் பிறர் நம்பிக்கையை . தமது நல்வாழ்விற்காக அவரவர் அவரவருக்கு தெரிந்த வகையில் . தங்களது தெய்வங்களுக்கு வழிபாடு நடத்தி எடுத்து வந்த பிரசாதங்களை . அவர்தம் அன்பின் ஆசிர்வாதங்களை அதே பக்தியுடனும் பணிவுடனும் பெற்றுக் கொண்டனர் . அதுவும் அது அவர் தம் நம்பிக்கைக்கு எதிராக இருந்த போதும்,

பழைய முன்சீப் கோர்ட் தெரு. திருமலைசாமித் தெரு. தட்டாரத் தெரு. ரங்கர் சன்னதி தெரு மற்றும் மசூதி தெரு என ப வடிவில் அமைந்த இந்த குடும்பங்கள் அனைத்தும் ஒரு தாய் மக்களாய் வாழ்ந்தார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது,  அவர்களது கோபங்களும் . ச்ச்சரவுகளும் கூட ஒரு தாய் பிள்ளைகளைப் போலவே காலையில் தோன்றினாலும் மாலையில் மறந்து போகும். இதற்கு அவரவர் வீட்டு விசேஷங்களோ அல்லது அடுத்தவர் வீட்டு விசேஷங்களோ அல்லது பொதுக்காரியங்களோ மேடை அமைத்து அலங்கரிக்கும்.

மாலைவேளைகளில் வீட்டுப் பெண்கள் திண்ணைகளில் அமர்ந்து பேசும் போது அவர்தம் கணவரது அறிவும் சேர்ந்து விரிந்து நிற்கும். கிழங்களோ காலணா . அரையணா கணக்குகளை கதைத்துக் கொண்டு இருப்பர். குழந்தைகளான எங்களின் உலகமே தனி.

உயிர் கொடுத்தல் விளையாடும் போது தின்ணைகளிலும் தெருக்களிலும் ஓடி ஆடி விளையாட நேர்ந்த்தால் இயல்பாக நீளம் தாண்டுதல் . உயரம் தாண்டுதல் . ஒற்றைக் காலில் நொண்டியடித்தல் என எல்லாம் கலந்து இருக்கும் . ஆனாலும் இங்கு வெற்றி தோல்வி கடந்து விளையாடுதல் மட்டுமே விரிந்து பரந்து மயக்கும்.

ஐஸ் என்று அழைக்கப்படும் ஒவ்வொருவரும் ஒளிந்து கொண்டு கண்டுபிடி கண்டுபிடி என்று சொல்லும் போது 3 தெருக்களின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி வந்துவிடுவோம்

இவற்றினால் எங்கள் கால்கள் மட்டுமல்ல உறவுகளும் மிகவும் பலப்ட்டு இருந்த்து , மேற்படிப்புக்கள் மற்றும் உத்தியோகங்கள் என்று சொல்லி காலம் எங்களை பிரிக்கும் வரை

தாத்தாக்களின் விடுகதைகளும் . மனக்கணக்குகளும் லாந்த்ர் வெளிச்சத்தில் கூர்ந்து கவனிக்கும் திறமையையும் . நோட்டு புத்தகங்கள் இல்லாது படிக்கும் வகையிலும் தயார்படுத்தின .
தின்ணைகளில் அமர்ந்து வெளியே பார்த்தால் மலையின் பிரம்மாண்டம் மனதில் உ ருவெடுக்கும்.  சமீபத்தில் சில வருடத்திற்கு முன்பு சென்ற போது இந்த பிரம்மாண்டம் வளர்ந்து நின்ற கான்கீரிட் கட்டிடங்களால் காணாமல் போய் இருந்த்தை கண்டு நெஞ்சம் வறண்டு போயிருந்த்து

இந்த தெய்வங்களெல்லாம் இன்னமும் நெஞ்சில் ஆனந்தமாய் உலா வருகின்றனர் . இவர்களுக்கெல்லாம் அந்த கால கட்டத்தில் என்னிடம் எத்தகைய எதிர்பார்ப்பும் இருந்த்தில்லை . அதன் பிறகு இப்படி சராசரி வாழ்க்கைப் பாதையில் இருந்து ஒதுங்கி தனியே நடைபோட முயன்ற போது கொஞ்ச நஞச எதிர்பார்ப்புக்களும் கலைந்து போயிருக்கும் என்று கருதுகிறேன்,

ஆனாலும் தங்களது ஆனந்த்த்தையும் . அறிவையும் என்னோடு பகிர்ந்து ஆரோக்கியமாக நான் வாழ அடித்தளமிட்டவர்கள்,  அவர்கள் வேறு நான் வேறு என்று பிரிக்க இயலாத வகையில் என் உயிரில் கரைந்திட்டவர்கள்.

அவர்களின் விருப்பத்தை சற்றேனும் நிறைவேற்றிய திருப்தியில் தற்போது நான் இருக்கின்றேன். எனது நண்பர்களும் . பள்ளித் தோழர்களும் காலத்தின் சுழற்சியில் பல இடம் சென்று வந்திருந்தாலும் இன்று நான் இதை ஒரளவு சம்பாதித்து இருப்பதை உணர்ந்து மகிழ்வுடன் ஆசீர்வாதங்களை தங்கள் அன்பு கலந்து பொழிகின்றனர்.

இந்த நடமாடிய மற்றும் நடமாடும் தெய்வங்கெளுக்கெல்லாம் என்னால் என்ன கொடுக்க இயலும் . எல்லாம் நிறைந்த ஆனந்தமாய் ஏதுமற்ற பிச்சைக்காரனாய் ...............நான்

அன்பு தெய்வங்களே என் வாழ்வை அலங்க்ரித்தமைக்காக உங்கள் பாதம் பணிகிறேன் , ஆசீர்வதியுங்கள்

இன்னும் சில தெய்வங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் வரை சற்றே இளைப்பாறுங்கள் எனது பர்ல பருவத்தில்...........

No comments:

Post a Comment