Tuesday 2 April 2013

நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் -11

நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 11

வெள்ளித்திரையில் ஒரு படம்

பள்ளி துவங்கிய போதும் பாடங்கள் அவ்வளவாக துவங்கியதில்லை. கைலாசம் என்கிற ஆசிரியர் பள்ளியில் புதிதாக சேர்ந்திருந்தார். எங்களுக்கு கணித பாடத்தை மனப்பாடம் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தார். அவர் +1 மற்றும் +2 வகுப்புக்களுக்கும் பாடம் எடுப்பதாக கேள்வியுற்றேன்.

இந்த காலம் படிப்பையும் பள்ளிக் கூடத்தையும் விட வெளி உலகம் அதிகமாக எனை ஈர்த்த்து. எனது தம்பி அனந்துவை தான் படிக்க வைப்பதாக கூறி என சித்தப்பா நடராஜன் சித்தூருக்கு கூட்டிச் சென்ற்ர்ர். அவர் அப்போது நியூட்ரின் சாக்லேட் கம்பெனியில் பைனான்ஸ் மேனேஜராக இருந்தார். அவரும் அந்த வீடூம் ஒரு மிகப் பெரிய ஆலமரம். அவற்றின் நிழலில் வளர்ந்தவர்கள் அநேகம் பேர்.

மேலும் இத்தகைய முறை எங்கள் அனைவரது குடும்பத்திலும் மிக இயல்பாக இருந்த்து. ஆண் பிள்ளைகளுக்கு படிப்பை அளிப்பதிலும் , பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதிலும் இப்படி யாரோ ஒருவர் முன்னின்று சுமை தாங்கினார்கள்.

இன்னும் சொல்லப்போனால் இது உன் குடும்பம் உன் குழந்தைகள்  இது என் குடும்பம் என் குழந்தைகள் என்கிற உணர்வு அற்று இருந்தார்கள். அதே சமயம் ஒருங்கிணைந்த இந்து குடும்பம் போன்ற அமைப்பும் இல்லாது அவரவர் பணிகளுக்கு தகுந்தபடி தனித்தனியே ஒவ்வொரு ஊரில் வாழ்ந்தார்கள்.

உறவு முறைகளுக்கு உள்ளேயே திருமணங்கள் பெரும்பாலும் நடந்த்தால் இது மிக இயல்பாகவும் ஆழமாகவும் வேருன்றி இருந்த்து. இன்று இடவசதி காரணமாக இது சற்று சிதைவடைந்த போதும் , இன்னமும் இந்த உதவிகள் சந்தோஷமாக நடந்து கொண்டே இருக்கின்றன.

அந்த வகையில் பலரது படிப்பிற்கு சத்தி மாமா , சுப்புதாய் மாமா, வேணி மாமா ,  சித்தப்பா நடராஜன் போன்றவர்கள் தங்களது வீட்டில் தங்களது குழந்தையாக ஏற்றுக் கொண்டு பலருடைய வாழ்வில் ஒளியேற்றி உள்ளார்கள். உண்மையில் படிப்பு சம்பந்தமாக இவர்களின் ஆலோசனை இல்லாது யாரும் மேற்படிப்பில் சேரமுடியாது.

இவர்களுக்கு அடுத்த தலைமுறையாக சுப்புதாய் மாமாவின் பையன் சுந்த்ர், சபாபதியின் அண்ணன் செள்ந்தர், சரஸ்வதி அத்தையின் பெரிய பையன் ச்சிசேகர் , ராஜம் அத்தையின் மூத்த மருமகன் பாலசுப்ரமணியம் போன்றவர்கள் எங்களது படிப்பிற்கான தலையெழூத்தை எழுதினார்கள். இதற்கு முக்கிய காரணம் இவர்களது பணி நிமித்தமான வெளி உலக தொடர்ப்புகள்தாம் என்றால் அது மிகையாகாது.

சுந்தர் , சௌந்தர்  போன்றவர்கள் வேலையில் சேர்ந்திட , அவர்களது அடுத்த தலைமுறையினரான வெங்கடேஷ் , சபாபதி, எதிர் வீட்டு கண்ணன், கணேஷின் பெரியக்கா ஜமுனா போன்றவர்கள் கல்லூரியில் காலடி எடுத்து வைத்திருந்தன்ர்.

சிவாஜீ , ராஜம் அத்தை பையன் பாபு போன்றவர்கள் பாலிடெக்னிக்கில் சேர்ந்தனர். வெங்கடேஷ் கோவை வேளாண்மைக் கல்லூரியில் படிக்கச் சென்றார். சேலம் , திருச்சி இந்த இரு நகரங்களைத் தவிர வேறு எந்த நகரையும அறிநதிறாத என் போன்றவர்களுக்கு அவரது பயணம் ஏதோ  oxford university படிக்கச் சென்றது போல இருந்த்து.

இப்படியெல்லாம் படிப்புக்கள் இருக்கிறதா என முதன் முதலாய் நான் அறியலானேன், லாந்தர் விளக்குகள் மெல்ல மெல்ல மறையத் தொடங்கி இருந்த்து. வீடுகளிலும் நகரத்திலும்  குண்டு பல்புகள் ஆங்காங்கே மெதுவாக குடியேறின. மின்சார வெளிச்சம் என்பது வசதி படைத்த நிலை என்பது மாறி அத்தியாவச நிலைக்கான காலகட்டத்தில் முதலடி எடுத்து வைத்த்து.

இக்கால கட்டத்தில் நகரின் மையத்தில் இருந்த பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்ய பணி துவங்கியதால் , மோகனூர் ரோட்டில் எங்கள் பள்ளிக்கு எதிரே டெலிபோன் அலுவலக கிரவுண்டிற்கு பஸ் ஸ்டாண்ட் மாற்றப்பட்டது.

இதனால் கடைவீதி ஸ்டாப்பிங்கில் இருந்து பள்ளி அருகே வரை மாணவர்களை ஜோதி பஸ் மற்றும் இதர தனியார் பேருந்துகள் இலவசமாக ஏற்றிச் சென்றன.

எங்கள் வீட்டிற்கு எதிராக இருந்த வீட்டில் புதிதாக துவங்கப்பட்ட , jack and jill பள்ளி வளர ஆரம்பித்து இருந்த்து. அதுவரை  நகரின் ஒரே கான்வென்டாக இருந்த கந்தசாமி கண்டர் பள்ளிக்கு போட்டி நுழைந்த்து. பள்ளியை காட்டிலும் பள்ளி வேன் மிகப் பிரபலமாகியது.
நாங்கள் படித்த ராஜாஜி ஸ்கூல் மற்றும் எங்கள் தெருவில் இருந்த பழமையான பள்ளியான நம்மாழ்வார் பள்ளிகள் தங்களது எல்லையை குறுக்கிக் கொள்ள ஆரம்பித்தன. 

வாசவி ஸ்கூலில் படித்த எனது 2வது தம்பி சுரேஷை இப்பள்ளியில் சேர்த்திட நான் ஆசை கொண்டேன். ஆனால் அது நிறைவேற வில்லை என்பதில் எனக்கு வருத்தமும் சில கணங்கள் வந்த்து. டை கட்டி ஷூ போட்டுக் கொண்டு கான்வென்ட் பள்ளிக்கு செல்லும் கனவுகள் அந்த காலத்தில் ஏக்கத்தை உண்டு பண்ணினாலும் இப்போது நிம்மதியைத் தருவதை உணர முடிகிறது.

இன்று இங்கு கோட் சூட என்பதை குளிருக்கு வேண்டி தினக்கூலியார்களும் போட்டுத் திரிவதை பார்க்கும் போது, இந்த கூலி வேலை செய்பவர் போடும் இந்த உடைக்கா இந்தியாவின் இன்னொரு பகுதியில் ஏதோ பொய்யான மதிப்பு இருக்கிறது என்று தோன்றுகிறது. பிரிட்டீஷ்காரனும் கூட குளிர் பிரதேசத்தில் இருந்து வந்த்தால் அவர்களது உடை கலாசாரத்தை அவனை கவர்வதற்காகவும், அவனது மதிப்பை பெறவும் வேண்டி இங்குள்ள மக்கள் அறியாமையாலும் , பொருளாதார நிலைமையினாலும் பின்பற்றி இருந்துள்ளனர் என்பதை உணரமுடிகிறது.

பொருளாதார நிலையில் கீழ்மட்டத்தில் இருக்கும் போது வசதி படைத்த மனிதனின் நிலையைக் கண்டு உள்ளத்தில் எழும் ஏக்கமும், அது போன்று தானும் ஆனந்தமாகவும் ,வசதியாகவும் வாழ வேண்டும் என்கிற கனவினாலும் அவனைப் போல செயல்களை செய்யத் தோன்றுகிறது. இந்த மாயையினால் நமக்குள் இருக்கும் நிம்மதியைம், ஆனந்த்த்யையும அவர்கள் தேடிக்கொண்டிருப்து நம்கண்ணுக்கு தென்படாமல் மறைந்து விடுகிறது.

அதனால் தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு வேனில் செல்வதை நடுத்தர மக்களும். கிராமத்து மக்களும் பெருமையாக உணர்ந்த்தில் வியப்பேதும் இல்லை. அது ஒன்றே அவர் தம் அறிவை வளர்த்து விடும் என கற்பனைக் கோட்டை கட்ட ஆரம்பித்து இருந்தனர்.  
எதிர் வீட்டு ராதா அக்கா போன்ற கல்லூரி படிப்பை  அப்போதுதான் முடித்திருந்தவாகள் ஆசிரியரானார்கள்.

கோபு மாமாவின் புதல்வி லக்ஷ்மி அக்கா சேலம் ரோட்டில் ஒரு நர்சரி பள்ளியில் ஆசிரியர் ஆகியிருந்தார். அவர் சின்ன குழந்தைகளுக்கு ஏபிசிடி சொல்லி தந்து வந்தாலும், ஏதோ ஒரு பள்ளியில் ஆசிரியராக பணி புரிகிறார் என்ற ஒரு தகுதியே என்னைப் போன்ற 9ம் வகுப்பு மாணவனுக்கு டியுஷன் சொல்லித் தர போதுமானதாக இருந்த்து.

உண்மையில் டியுஷன் என்பது நாங்கள் அவர் முன்னால் அமர்ந்து படிக்க வேண்டும் , அதை அவர் கவனிப்பார் , அவ்வப்போது சினிமா கதைகளையோ அல்லது ஊர் கதைகளையோ அல்லது நாட்டு நடப்புகளையோ சில சமயம் அரசியலைப் பற்றியோ பேச்சுக்கள் திரும்பும்.

அரசியலை பற்றி எங்களுக்கு அதிகம் தெரியாவிடினும் அவரது பெரிய சகோதர ர் பாலாஜி பாவா தீவீர எம்ஜிஆர் ரசிகராகவும் அதிமுக அனுதாபியாகவும் இருந்தார்.  இவரைப் போல பலரை நான் பார்த்திருக்கிறேன். இவர்களுக்கு கருணாநிதியை பிடிக்காமல் போன ஒன்றே எம்ஜிஆரை பின்பற்றுவதற்கு போதுமானதாக இருந்த்து.

அக்காலத்திலும் சரி இன்றைய நாள் வரையுலும் சரி எம்ஜிஆரை குறை சொல்ல யாரிடமும காரணங்கள் இல்லை என்றே தோன்றுகிறது. மேடையில் பேசுவதற்காக பேசியவர்கள் கூட அதை உணர்ந்திருந்த்தாகவே எனக்கு பட்டது. அது மட்டுமல்லாது சினிமாவில் அவரது தாக்கம் சமுகத்தில் மிக ஆழமாக இருந்த்து. எளிமையான மக்களுக்கு புரியும் வித்த்தில் கருத்துக்கள் சென்று சேர்ந்தன.

பல சமயங்களில் நடிகர் திலகத்தைக் காட்டிலும் எம்ஜிஆர் ஏன் அரசியலில் பிரகாசிக்க முடிந்த்து என் யோசித்து இருக்கிறேன். அதற்கு ஒரே காரணம் எனக்கு தெரிந்த அளவில் சிவாஜியை மிகச் சிறந்த நடிகனாக மக்களால் உணர முடிந்த்து . அதேசமய்ம எம்ஜிஆரை தங்களில் ஒருவனாக செய்திகள் மக்களிடையே சேர்த்த்து.

இன்றைய விளம்பர அரசியலைப் போல திட்டமிட்டு இதை அவர் செய்யவில்லை என்றே ஆழமாக நம்பத் தோன்றுகிறது. அவரது இயல்பான குணங்கள். அவரது படங்களின் பணியாளர்களும் . அவரோடு நடித்த மக்களுமே இயல்பாக அவரது புகழை நாளிதழ்களைக் காட்டிலும் செவி வழிச் செய்தியாக பரப்பினார்கள்.  அது அவர்களது அனுபவமாகவும் இருந்த்து.

இன்றைக்கு அப்படிப் பட்ட செய்திகளை எனது பிறந்த நாள் தோழரான அஜீத்தை பற்றி அவ்வப்போது கேள்விப்படுகிறேன். உண்மையில் பிறரை கவர்வதற்காக நம்மால் செய்யப்படும் செயல்கள் அவர்களுக்கும் அது தெரிந்தே இருக்கின்ற்து. இயல்பான நிகழ்வாக , நம் இருப்பை வெளிப்படுத்தாது , எதிர்ப்பார்ப்பு இல்லாது செய்யும் போது அது மிக சிறிய செயலானாலும் அடுத்தவருக்குள் மிக ஆழமாக நம்மை உணரச் செய்கிறது.

இவ்வாறு அவரது அரசியல் அறிவு, உலக நடப்புகள் உள்பட பல விஷயங்களை கற்றுக் கொள்ள லஷ்மி அக்கா மூலம் தெரிந்து கொள்ள அக்கா பெறும் உறுதுணையானார்கள். மேலும் அந்த இரண்டும் கெட்டான் வயதில் , பருவங்கள் தடுமாறும் தருணங்களில் எதையம் மொழிகளால் பரிமாறாமல் , சரியான புரிதலை இயல்பாக உணர., அக்காவின் அண்மையும் வழிகாட்டுதலும் அமைந்தன.

இது எனக்கு மட்டுமல்லாது என்னோடு படித்த நாமு மற்றும் லதாவிற்கும் மிக உறுதுணையாக இருந்த்தை நன்றாக உணர முடிந்த்து. இந்த டியுஷன் நாமுவின் வீட்டில்தான் தட்டாரத் தெருக் கோடியில் , இன்றைய நேதாஜி சிலை அருகே நடந்த்து.

நாமுவின் பெற்றோர் பற்றி தெரியாது. அவளது பாட்டியும் , தாத்தாவும் மட்டும்தான் அந்த சின்ன வீட்டில். அது பெரிய ஒண்டு குடித்தனம் ஏரியா. இவர்கள் வீட்டிற்கு அருகே என் பள்ளியின் பிடி மாஸ்டர் நடராஜன் வீடு இருந்த்து. நாமுவை பற்றி அதிகம் தெரியா விட்டாலும் , என் பெரிய அக்காவின் பெயரும் , எங்கள் குலதெய்வத்தின் பெயருமான நாமகிரி லஷ்மியை தானும் கொண்டிருந்த்தால் அவள் மேல் மிகுந்த மதிப்பு இருந்த்து.

பல சமயங்களில் வகுப்பு தோழி என்பதைக் காட்டிலும் என் அக்காவின் பிம்பமாகவே அவளை கண்டிருக்கிறேன். அதற்கு காரணம் அவளுக்கு இருந்த இயல்பான வயதிற்கு மீறிய புரிதல்தான். அவளது குழந்தை பருவமும் , குடும்பச் சூழலும் அதை தந்திருக்க வேண்டும். நாமுவும் லதாவும் நகராட்சியின் கோட்டை உயர் நிலை பள்ளியில் படித்து வந்தனர். மாலை டியுஷன் நேரம் மட்டும்தான்  எங்கள் நால்வருக்கும் படிப்போடு உலக வாழ்க்கையும் கற்றுக் கொள்ளும் தருணம்.

அந்த சமயம் அவர்கள் மூவரும் சேர்ந்து ஒரு சினிமா செல்ல முடிவு செய்தனர். தனியாக என்னை விட்டு செல்ல விருப்பமில்லாத்தர்ல் என்னையும் இணைத்துக் கொண்டனர் . மேலும் சினிமா விட்டு இரவு 9 மணிக்கு வரும் போது அக்கா மட்டும் தனியாக வரவேண்டும் என்பதாலும், நாமுவையும் அவர்கள் பாட்டி தனியே வர சம்மதிக்க மாட்டார்கள் என்பதாலும் நானும் சென்றேன்.

எங்களை யெல்லாம் விட லதா தைரியசாலி. கவுண்டர் குடும்பத்தில் பிறந்த அவள் இயல்பாகவே வாழ்க்கையை கையாளும் தைரியத்தை பெற்றிருந்தாள். ஜோதி தியட்டரோ அல்லது கேஎஸ் தியேட்டரா எனத் தெரியவில்லை ஆனால் டுரிங் டாக்கீஸ்கள் இப்போது தியேட்டர்களாக உருவெடுத்து இருந்தன. 

சேந்தமங்கலம் ரோடில் திருமகள் தியேட்டர் , திருச்சி ரோடில் ரமேஷ தியேட்டர், சேலம் ரோடிலேயே கேஎஸ் மற்றும் எம்ஜிஎம் என இரு தியேட்டர்கள் , திருச்செங்கோடு ரோட்டில் சாந்தி தியேட்ட்ர் என சினிமாக்கள் நகரில் வலம் வர ஆரம்பித்து இருந்தன.

ஒருவழியாக ராணித்தேனீ படத்திற்கு செல்ல முடிவாயிற்று. படம் ஒரு காமத்தை ஆளமுடியாது தோற்றவனின் கதை. அவனது தோல்வியை வெற்றியாய் ரசிக்கும் குணத்தால் . அந்த வெற்றிக்கு பலியாகினற்வர்களின் கிராமத்துக் கதை.  கதாநாயகியின் கஷ்டங்களை படமாக்கி இருந்தார்கள். நானோ சினிமா பார்ப்பது என்கிற உணர்வையே இழந்து அந்த கிராமத்தில் ஒருவனாய் வாழ்ந்து கொண்டிருந்தேன் அந்த கணங்களில்.

அக்காவும் நாமுவும் என்னை கவனிப்தை நான் சற்றும் உணரவே இல்லை அடுத்த நாள் அவர்கள் மூவரும் என்னை கிண்டலடிப்பது போல , எதற்காக அழுதாய் என்று கேட்கும் வரையில். சினிமா திரையை கடந்து உணர்வுகளை தொட்டது.

படைத்தவனைக் காட்டிலும் படைப்புக்களை மிக ஆழமாக உணரும் போதுதான் படைத்தவனை அறிய ஆர்வம் பிறக்கின்றது. சினிமா செய்திகளும் . அறிவும் என் வாழ்வில் அங்கமாகத் தொடங்கின. 

இதற்குக் காரணம் அந்த ஒரே சினிமா......... அது என்ன ஒரே சினிமா
ஏனென்றால் அது ஒன்று மட்டும்தான் என் அப்பாவோடு சேர்ந்து தியேட்டரில் சென்று பார்த்த முதல் படமும் , ஒரே படமும் .அப்போது புதிதாக கட்டப்பட்டிருந்த சாந்தி தியேட்டரில் திரையிட்டு இருந்தார்கள். அந்த மாபெரும் திரைக் காவியம் நடிகர் கமலஹாசன், பாலகிருஷ்ண சாஸ்திரிகளாய் மாறி போயிருந்த  சலங்கை ஒலி

இன்றும் அந்த சலங்கைகள் எனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. பாலகிருஷ்ண சாஸ்திரி இசையிலிருந்து நாட்டியத்திற்கு என்னை இட்டுச்சென்றார். அவரிடம் நாட்டியம் கற்க ஆசை கொண்டேன். என்றாவது ஒரு நாள் , ஏதாவது ஒரு ஜென்மத்தில் அவரது சீடனாகும் தகுதி எனக்கும் வரும்,

அந்த நடராஜ குருவிற்காக ஆயிரமாயிரம் ஜென்மங்கள் வேண்டுமானாலும ஆனந்தமாய் காத்திருப்பேன். அதற்காகவே அவர்தம் இதயத்தில் நுழைய இமயத்தில்  காத்திருக்கின்றேன்.

உந்தன் சங்கீத சலங்கை ஒலி
இந்த ஏழைக்கு கீதாஞ்சலி
தங்க பாதங்கள் அசையும் ஒலி
எந்தன் பூஜைக்கு கோயில் மணி
சதிரெண்டும் கண்ணாக ஆடும் இனி
உயிரோடு சேரும் ஸ்ருதி
வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள்
வந்து ஆடும் காலமிது

என இளையராஜாவோடு இணைந்து வைரமுத்துவின் வரிகளில் நான் என் காதலை ஒவியமாக வரைய் முயற்சித்துக் கொண்டு இருக்கின்றேன்.

அந்த ஓவியம் முழுமைபெறும் போது

கையிலைநாதன் நடனமாடும் சிவரூபம்
பௌர்ணமி நிலவில் ஆடும் ஒளி தீபம்

     என உங்கள் முன் வலம் வருவேன்
     அதுவரை

எனையாளும் குருவென்ற தீபம்
எதிர்கொண்டு நடமாட வேண்டும்
சலங்கைக்குள் ஒலிதானே வேதம்
சன்னிதானம் இனி உந்தன் பாதம்
நடராஜன் பாத்த்தில் தலை சாயுமா
நான் சிந்தும் கண்ணீரும் கரை மீறுமா

     என ஏக்கத்துடன்

கனவிலும் நனவிலும் அழகிய பரதங்கள் ஆடி

     என் குருநாதனின் பாதங்களுக்காக காத்திருக்கின்றேன்.

தெய்வ உலகு இன்னும் விரியும் . தரிசனத்திற்காக காத்திருங்கள்.................

நானும் கூட உங்களோடு காத்திருக்கிறேன்

2 comments:

  1. படைத்தவனைக் காட்டிலும் படைப்புக்களை மிக ஆழமாக உணரும் போதுதான் படைத்தவனை அறிய ஆர்வம் பிறக்கின்றது. சினிமா செய்திகளும் . அறிவும் என் வாழ்வில் அங்கமாகத் தொடங்கின.

    அருமையான பதிவு. நன்றி திரு Swami Sushantha.
    எனது முகநூல் பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறேன். இனிய நண்பர்கள் படிக்க கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

    ReplyDelete