Wednesday, 3 April 2013

நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 12

நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 12

வள்ளுவனின் வாய்மொழி

ஆனந்தமான இந்த நினைவுக்ள் என்னை எனக்குள் அலங்காரப்படுத்தியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. மனிதர்க்ளும் நிமிடங்களும் அலங்காரப்படுத்தியதை அறியாமலே நான் வாழ்வின் அழகை ரசிக்கத் தொடங்கி இருந்தேன். இந்த ரசனை என்னை ஒவ்வொரு சூழலிலும் அழகை தேட வைத்த்து.  இந்த சமயத்தில் நானே அலங்காரம் செய்ய கற்றுக் கொள்ளும் வாய்பைப் பெற்றால் ............................ அதுதான் தெய்வ சங்கல்பம் என்பதோ,  நான் அறியேன்.

அப்படி ஒரு வாய்ப்பை சிவ பக்தரான நாகாஜல குருக்களிடம் நான் பெற்றேன். இதற்கெல்லாம் காரணம், மார்க்குள் வாங்குவது பற்றிய சுமை மனதில் இல்லாத்தால் மனதிற்கு பட்டதையெல்லாம் கற்க முனைந்தேன்.

ஏற்கனவே அப்பாவின் பணிகளுக்காக வீட்டிற்கு வநது போய் கொண்டிருந்த தாத்தாக்கள் மற்றும் 30களின் நடுவில் இருந்த பாண்டமங்கலம் கிருஷ்ணன் மாமா போன்றவர்களின் தொடர்ப்புகளினால் மந்திரங்களை புத்தகம் பார்த்து படிக்க்க் கற்றுக் கொண்டேன். மந்திரங்களிலும் , புரோகிதங்களிலும் எனக்கு பெரிய ஈடுபாடு வரவில்லையெனினும் சில சௌகரியங்களை அது எனக்கு தந்தமையால் அது சற்று பிடித்திருந்த்து.

முதலாவதும் முக்கியமானதுமான பயன், இவர்களோடு பணிகளுக்குச் எடுபடி வேலையாக சென்றாலும் , எனக்கு என்று சில ரூபாய்த்தாள்கள் கிடைத்தன. 

இது போன்ற மூலதனம் எனது செலவுகளான , எங்கள் வீதி கிரிக்கெட் கிளப்பிற்கான வார உறுப்பினர் தொகை ( அப்போது மாதம் ரூ 5 தரவேண்டும் ) , மாரியம்மன் கோவில் அருகே சங்கம் ஸ்வீட்ஸில் 1 பிளேட் சுண்டல் வாங்கி 4 ஸ்பூன் போட்டு பகிர்வது , ரங்கர் சன்னதி தெருவின் முக்கு கடையில் தாகம் தணிக்க பன்னீர் சோடா மற்றம் சினிமா , புத்தக்ங்கள் வாங்க , மாதாந்திர டியுஷன் செலவு உள்பட பல வகையில் பயன்பெறும். 

பெரும் செலவுகள் தவிர சில்லரை செலவுகளுக்கு அப்பாவையோ அல்லது வீட்டையோ எதிர்பார்க்க்த் தேவையில்லை.  இது எல்லாம் விட அந்த சிறு வயதில் , அனுபவுமும் வயதும் நிறைந்த மனிதர்களால் நாம் கவனிக்கப் படுகிறோம் என்பதும் , அவர்களுக்கு தெரியாத்து எனக்கு தெரியும் என்பதும் கொஞ்சம் கர்வத்தையும் , சந்தோஷத்தையும் மனதுக்குள் ஏற்படுத்தியது என்பதும் உண்மை,

சிறிய நகரமாக இருந்த்தாலும் , இப்பணிகளின் காரணமாக அப்பாவின் வாரிசைப் போன்று அனைவரது வீட்டிற்கும் செல்ல நேர்ந்த்தால் பலரது வாழ்க்கை முறையை அறியவும் முடிந்த்து. நடுத்தர வருமானம் உள்ள  செட்டியார்கள் வீடு பெரும்பாலும் குடேர்ன்கள் போலவே இருந்தன.

கடைகளில் மட்டுமல்லாது வீட்டையும் விற்கவேண்டிய பொருட்களால் நிரப்பி இருந்தார்கள். பல வீடுகளில் ஆரோக்கியமான காற்றோட்டத்திற்கு வழியே இல்லாத்து போல தென்பட்டது,
இதற்குக் காரணம் பெரும்பாலானவர்கள் தலைமுறை தலைமுறையாக ஒரே இடத்தில் வாழ்ந்த்தும், இந்த காலகட்டங்களில் முன்பு போல அல்லது தனிக் குடித்தனங்கள் அதிகமாக ஆரம்பித்தன. 

அதனால் பாகம் பிரிவதும் , இருப்தற்குள்ளேயே கடைகளையும் வீட்டையும் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதுமே ஆகும்,
பணம் பந்தங்களை ஆளுமை செய்ய ஆரம்பித்தை தெளிவாக உணரமுடிந்த்து,  இப்பிரச்சினைகள் குடும்பத்திற்குள் அரசல் புரசலாக துவங்கியதில் இருந்து ஜாதகங்களை நாடினார்கள். 

அந்த 9 கிரக்ங்களின் மேல் வைத்த நம்பிக்கையை , அதை பார்த்து கிரகித்து சொல்பவர்களின் மேல வைத்த நம்பிக்கையை, மகன் தந்தை மேலோ , தந்தை மகன் மேலோ, அண்ணன் தம்பி மேலோ அல்லது தம்பி அண்ணன் மேலோ இப்படி உறவுகளுக்குள்ளேயே வைக்க இயலவில்லை என்பதை நுட்பமாக கவனித்தேன.

உண்மையில் இவர்களுக்கு நான் நன்றி சொல்லியே ஆகவேண்டும். ஏனென்றால் இத்தெய்வங்களே எது வாழ்வின் அடிப்படை என்பதை எனக்கு உணர்த்தியவர்கள்.

அவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் அளவிற்கு எனக்கு ஜாதக அறிவு ஏற்படாத்தும் அதற்கு காரணமானது. மிக ஆழமாக சுற்றி நடக்கும் விஷயங்களை அதில் சம்பந்தபடாமல் கவனிக்க ஆரம்பித்திருந்தேன். அப்போதே நமது பெரியோர்கள் சொன்ன அருள் மொழிகள் வாழ்க்கையில் மன்ப்பாடம் செய்ய கற்றேன் . தவறியும் நான் அதை மறந்து விடக் கூடாது என்பதற்காக எனது கொள்கையை சற்று தளர்த்தி மனப்பாட்ம் செய்தேன்.

இதற்கு காரணம் ஏற்கனவே சொன்ன தமிழாசிரியர் புலவர் நடராஜனும் அவர் விரிவான பொருளோடு சொல்லிக் கொடுத்த திருக்குறளும்தான். அது அந்த காலத்திற்கும், எனது சூழலுக்கும் ஒத்துப்போனது என்பது இறையருள் என்றுதான் சொல்ல வேண்டும், 

அச்செய்யுள்கள்

'' தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாது 
  நாவினாற் சுட்டவடு  ''

'' யாகாவராயினும் நாகாக்க காவாக்கால்
  சோகாப்பர் சொல்லிழுக்கு பட்டு ''

'' சொல்லுதல் யாருக்கும் எளியவாம் அரிய
  செர்ல்லிய வண்ணம் செயல்  ''

'' குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
  மிகை நாடி மிக்க்க் கொளல் ''

'' எப்பொருள் யார்வாய் கேட்பினும் அப்பொருள்
  மெய்பொருள் காண்பத றிவு ''

'' சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்
  என்னும் ஏமப்புனைச் சுடும் ''

'' மழீத்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
  பழீத்த்து ஒழித்து விடின் ''

இவைகள் எல்லாம் சேர்த்து கிராமத்து சொல் வடையான " குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை "   என்பதை என் வாழ்வில் கொண்டு வந்த்து

இதில் மட்டுமல்ல எதிலும் விதிவிலக்குகளும் அற்புதமான முன்னுதாரணங்களும் இருக்கத்தான் செய்தார்கள். அவற்றை கவனிப்பதற்கும் , அதனை புரிந்து கொள்ளவும் நம்முடைய புத்தி அந்த குறுகிய ஷணத்தில் சரியான பணி செய்திட இறையருளும் , குருவருளும் கண்டிப்பாக தேவை. இந்த ஒரு காரணத்திற்காக , அதற்கான சக்தியை நம்முள் அனுமதிக்கவும், பெற்றிடவும் வேண்டியே கோவில்களை உருவாக்கி , மக்கள் ஏதேனும் ஒரு வகையில் அந்த சக்தியுடன் தொடர்ப்பு கொள்ள வழிபாடுகளை ஞானிகளும் சித்தாக்ளும் ஏற்படுத்தினார்கள் என்பார் சத்குரு.

மேலும் இத்தகைய அருளை பெற்றிடவே ஞானிகளை தேடிச் சென்று அவர்களது ஆசியை பெறுத்ல் மிக முக்கியமாக இந்த மண்ணில் கருதப்பட்டது என்று கூறுவார். அவர்களது ஒரு கடைக்கண் பார்வை நம்மீது பதிந்தாலே போதும் நம்முடைய கர்ம வினைகள் கரைந்தோடும் என்று புராணங்கள் சொல்கின்றன. 

இது நாம் சென்று அவர்களை பார்ப்பதால் ஏற்படும் பார்வை பரிமாற்றமல்ல . நாம் இயல்பாக எந்த எதிர்ப்ர்ர்ப்பும் இன்றி பணியிலோ அல்லது சேவையிலோ ஈடுபட்டு இருக்கும் போது , அல்லது நம்மை பற்றி அவர் கேள்வி படும் போது அவருக்குள் ஏற்படும் உணர்வாலும் தீட்சண்யத்தாலும் அனுக்கிரக்கும் போதோ அதையே அவரது பார்வை என்பது.

இதையே '' கடமையைச் செய் பலனை எதிர்பாராதே '' என்கிற வசனம் செர்ல்கிறது. நீ உன் கடமையை , உனது தர்மத்தை சிரத்தையாக செய்யும் போது ,அந்த சிரத்தை பக்தியை தருகிறது, பக்தி பணிவைத் தருகிறது , பணிவு அருளைத் பெறுகிறது. அருளை உணர்ந்தவன் அமைதியாகிறான். அமைதியானவர்களிடத்தில் எதிர்ப்ப்ர்ர்ப்புகள் இருப்பதில்லை. எதிர்ப்பார்ப்புகள் இல்லாததால் இயல்பாக முழுமையாக அதில் ஈடுபட முடிகிறது. முழுமையான செயலோ ,ஷணமோ சில நொடிகளே ஆனாலும் பேரானந்தத்தை வெடிக்கச் செய்கிறது. இந்த பேரானந்தமே அமிர்தம். இந்த அமிர்த்தை உணராவிடில் வெறும் விஷத்தைத் தான் உண்கிறோம்.

வினைகளே விஷம் என்பதை உணர்ந்தால், விஷமுறிவிற்கு வழி தேடுவது இயல்புதானே. விஷம் மரண பயத்தை கொடுக்கும். மரண பயத்தை வென்றவன் மரணத்தை வென்றவனாகிறான். மரணத்தை வென்றவன் மஹாதேவனாகிறான். மஹாதேவனாக அவனது அருள் வேண்டும். அவனது அருளைப் பெற பணி செய்திடல் வேண்டும். செய்திடல் என்பதே மீண்டும் வினையாகிறது.  

மீண்டும் அதே இடம் அதே சுழற்சி.  இநத் பிறப்பு இறப்பு சுழற்சியை உடைக்க சரியான நேரத்தில் சரியான புரிதலும் , செயலும் இணைத்ல் தேவையாகிறது. அதை எப்படி பெறவது. வார்த்தைகளால் யார் விளக்க இயலும்.  அதனாலேயே மௌனத்தாலேயே அதை விளக்குகிறான். அதை புரிந்து கொள்ளும் அறிவையும தருகிறான்,


அதுபோல எப்படி நான் இருக்க்க் கூடாது என்பதற்கு முன்னுதாரணங்கள் இருந்தனவோ அதற்கு சம்மாக எதை நான் கற்க வேண்டும் , எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் நிறைய முன்னுதாரணங்கள் இதே சமுகத்திலேயே இருந்தன.

சேலம் ரோட்டில் வாழ்ந்த திரு பாண்டுரங்க செட்டியாரும், கோட்டை ரோடு சேரும் இடமான சேலம் ரோட்டின் முனையில் மளிகைக் கடை வைத்திருந்த திரு ஜனார்த்தன செட்டியாரும், மெயின் ரோட்டில் கிராமத்து மக்களின் தெயவ்மாக விளங்கிய சரஸ்வதி ஸ்டேர்ஸ் செட்டியாரும், பண்பிலும் பழகுவதிலும் கற்க நிறைய வைத்திருந்த ஸ்ரீனிவாசா ஜவுளி கார்ப்பரேஷன் குடும்பத்தினர்கள் , சுப்ரமணியம் ஜவுளி ஸ்டேர்ர்ஸ் குடும்பத்தினர்கள் என இதற்கும் லிஸ்ட் பெருகிக் கொண்டே போகும் 

இவர்களும் அதே ஜாதக்ங்களை அணுகி வந்தாலும் அவர்களது அணுகுமுறையில் வித்தியாசத்தை உணர்ந்தேன். இது எல்லாம் விட அதை சொல்பவரின் மேல் வெளிப்படுத்திய அவர்களது அசாத்திய நம்பிக்கை என்னை ஆச்சரியப்படுத்தியது,. ஏனென்றால் என் அப்பாவிடம் ஜாதகம் பார்த்துவிட்டு சில தினங்களுக்குள் என் மாமாவான கோபு மாமாவிட்ம் சென்று பார்ப்பவர்களையும் கண்டிருக்கிறேன்.

ஆனால் என் அப்பாவிற்கும் சரி , கோபு மாமாவிற்கும் சரி ,ஏன் அத்தொழிலில் இருப்பவர்கள் மட்டுமல்ல எத்தொழில்  இருப்பவர்களும் சரி இப்படிப்பட்ட மனிதர்களை நன்றாகத் தெரியும். இவர்கள் ஒருவரையும் முழுமையாக நம்ப மாட்டார்கள் , அதற்கு காரணம் தன் மீதே சந்தேகம் இருக்கும்.  இருப்பினும் அதைப் பற்றி என் அப்பாவிற்கும் சரி கோபு மாமாவிற்கும் சரி கவலையே கிடையாது. மாறாக இவர்கள் சொல்லிய விதமே சரி யென்றும் வாதாட மாட்டார்கள். 

உண்மையில் சொல்லப்போனால் சொன்ன விஷயத்தில் மாற்றமிருக்காது ஆனால் சொன்ன வித்த்தில் மாற்றமிருக்கும். எனக்கு புரிந்த இச் சிறு விஷயம் கூட இவ்வளவு அனுபவம் வாய்ந்த மக்களுக்கு , அதுவும் அன்றாடம் மக்களுடன் பழகும் வாய்ப்பு உள்ளவர்க்ளுக்கு புரியாத்து ஆச்சரியமாக இருக்கும்.

இது பற்றி ராசிபுரம் தாத்தாவிடம் நிறைய கதைத்திருக்கிறேன். என் புதிர்களை அவர் அநாயசமாக விடுவித்து இருக்கின்றார். இதற்கு காரணம் அவரது ஆசிரியர் பணி அனுபவமும், இவர்களைப் போல மந்திரங்களையும் கணக்குகளையும மட்டுமே தெரிந்தவர் அல்ல அவர். இத்தனைக்கும் அவருக்கு ஜாதகம் பார்க்கத் தெரியுமா என்பது பற்றி எனக்கு நினைவில் இல்லை. ஒருநாளும் அப்படி அவரை கண்டதும் இல்லை.

ஆனால் எங்களது குடும்பங்களில் இது போன்ற விஷயங்கள் குறித்து காரசாரமான விவாதங்களும், சம்வாதங்களும், ஆண்களிடையே நிறைய நடைபெற்றுக் கொண்டே இருந்த்தால் பெண்கள் உட்பட அனைவரும் இந்த விஞ்ஞானத்தை பற்றி ஒரளவு அறிவு கொண்டிருந்தனர், விதிவிலக்காக என்னைத் தவிர

அதற்கு காரணம் நான் அந்த 9 கிரகங்களைக் காட்டிலும் என்னை அதிகமாக நம்பினேன். நான் தவறுகள் செய்ய முடியும் என்பதை தெளிவாக உணர்ந்தேன். பல சமயங்களில் இல்லாவிடினும் பெரும்பான்மையான சமயங்களில் அதன் பலன்களையும் இயல்பாக எதிர் கொள்ள முடிந்தது.  அனைத்தும் ஏதோ ஒரு காரணத்திற்கு நடக்கிறது என்பதையும், அது நம்மை அடுத்த நிலை பற்றிய புரிதலுக்கு தயார்படுத்துகிறது என்றும் நினைத்துக் கொண்டிருந்த்தேன். 

இத்தகைய எண்ணம் எனக்கு எதனால் ஏற்பட்டது என்பது நினைவில்லை. ஆனால் மிகச் சிறு வயது முதல் , எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இது இருப்பதை நான் அறிவேன் .
இது மாதிரி இன்னும் சில எண்ணங்கள் மிக ஆழமாக குழந்தைத்தனத்தில் இருந்து வநதுள்ளது என்பதை அறிவேன். அது எப்படி என்பது மட்டும் இன்னும் எனக்கு புரியவில்லை எனவும் சொல்ல்லாம்..

ஆனால் மிக முக்கியமானதும், மிக ஆழமாகவும் ஒரு விஷயம் இன்றைக்கும் எப்படியோ அது போன்ற ஒரு தினம்  வாழ்க்கையில் தொடர்வது , எனக்கு புரியாத சம்பவங்களையும் எளிதாக எடுத்துக் கொள்ள வைத்த்துடன், என்னை எனக்குள் மிக ஆழமாக பயணப்பட உதவியது என்றால் அது மிகையாகாது.

'' நாள் என்செய்யும் கோள் என் செய்யும் '' என்று பதிகம் பாடினாலும் அது என்னவோ இந்த நாளின் மேல் மட்டும் தனியாக ஒரு ஈர்ப்பு எனக்குள் இருந்த்து. இன்னும் சொல்லப் போனால் எனக்கு அதன் மேல் இருந்த ஈர்ப்பைக் காட்டிலும் , அது மிக அதிகமாக என்மேல் கொண்டிருந்த்து என்றே பல சமயங்களில் உணர்கிறேன். அதன் காரணமாக அடிக்கடி அந்த நாளின் கருணையில் நனைந்திருக்கிறேன், இன்றும் நனைந்து கொண்டு இருக்கிறேன்.

அதை விட அதை அதுவே என்க்கு புரிய வைத்த்தும் , அறிய வைத்த்தும் தான். அதற்கு நான் என்ன கைம்மாறு செய்ய இயலும். என்னையே கொடுத்தாலும் அதற்கு ஈடாகாது. மனிதர்கள் மட்டுமல்லாது தினங்களும் கூட என்னுள் தெய்வமாகின, கருணையாகின. அதை உணரும் அறிவையும தந்தன.

'' நாயேனையும் இங்கு ஒருபொருளாக நயந்து வந்து
  நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம்
  பேயேன் அறியும் அறிவுதந்தாய் என்ன் பேறுபெற்றேன்
  தாயே மலைமகளே செங்கண் மால்திருத் தங்கைச்சியே ''

என் அபிராமி பட்டர் பாடுவார்
         அப்படி

சிவனவன் என் சிநதையுள் வநது நின்று
அவனருளாலே அவன் தாள் வணங்கச் செய்த்தினால்

இன்று அவன் தந்த மொழியாலே , அவனது உணர்வாலே அவன்து குணங்களையே அவனது உருவமாய் தாங்கி நிற்கும் அற்புதமான தெய்வங்களை அடிபணிந்து வணங்குகிறேன்.

அத்தெய்வங்களுக்கு கருணையோடு இடமளித்த ஷணங்கள், நொடிகள், மணிகள் மற்றும் தினங்களுக்கும் , அவற்றை வடிவமாக நின்று கொண்டு அருள்பாலிக்கும் அந்த கால பைரவனையும் நமஸ்கரிக்கின்றேன்.

அப்படி என்ன புரிதல் அது ?

என்ன அறிந்தேன் நான் ?

அவனது தெய்வங்களோடு உங்களை மீண்டும் சநதிக்கும் போது சொல்கிறேன்,

அதுவரை காத்திருங்கள்................................................./

No comments:

Post a Comment