Tuesday, 2 April 2013

நெஞ்சத்தில் நிற்கும் தெயவ்ங்கள் - 6



நெஞ்சத்தில் நிற்கும் தெயவ்ங்கள் - 6 

ஜனதா காலம்

1979ம் ஆண்டு ஜூன் மாதம் 10ம் தேதி பள்ளியில் முதலில் அடிஎடுத்து வைத்தேன். காலை இறைவணக்கத்தில் முதல் முதலாக கிராம போனில் நீராரும் கடலுடத்த.......  கேட்டு மகிழ்ந்தேன்  பின் தலைமை ஆசிரியர் திரு புள்ளியப்பன் அவர்கள் கொடி ஏற்றி மரியாதை செலுத்த,  தேசிய கீதம் பாடப்பட்டது.

அது கிராமபோன் என்று அப்போது எனக்கு தெரியாது. யாரோ இவ்வளவு அழகான குரலில் மிக ராகம் போட்டு கட்டிடத்திற்குள் இருந்து பாடுகிறார்கள் என்றே நினைத்திருந்தேன் . 7ம் வகுப்போ அல்லது 8ம் வகுப்போ போன போதுதான் கிராம போன்  மற்றும் டேப் ரிக்கார்ட்டா பற்றிய அறிவைப் பெற்றேன்.

ராமாவரம் புதூரில் இருந்து வரும் ராமாயி டீச்சர்தான் எனது 6வது வகுப்பிற்கு டீச்சர். ராமாயி டீச்சர் , ஒரு 6ம் வகுப்பு மாணவனுக்கு , உலகில் ஏதும் தெரியாத வெள்ளேந்திக்கு நிச்சயம் ஒரு பொக்கிஷம்தான். 

கிராமத்து பெண்மணியான அவர்தம் குரலில் அந்த மண்வாசனை அழகாக இழைந்தோடும். அவரைப் பற்றி வேறு எதுவும் அறியாவிடினும் , இந்த பிரம்மாண்ட உலகின் முதல் பிரம்மா என்கிற வகையில் , இன்று வரை எனக்கு மதிப்பும் மரியாதையுமே.
இன்னும் சொல்லப்போனால் ஒருவரைப் பற்றி நமக்கு தெரிந்த விஷயங்களைக் காட்டிலும் தெரியாதவையே அவரிடம் நமக்கு மதிப்பை தருகிறது.

முதல் நாள் சற்றே தயக்கத்துடன் சக மாணவர்களுடன் பழகினேன். அதற்கு காரணம் பாக்கியராஜின் சுந்தர காண்டம் படத்தில் வருவது போல , அந்த வகுப்பில் 4 வருடங்களுக்கு மேலாக உறுதியாக அஸ்திவாரம் இட்டிருந்த மிக அருமையான அன்பான மனிதர்கள்.
பள்ளி தேர்வில்தான் , ஆசிரியர்கள் பார்வையில்தான் அவர்கள் தேற்மாட்டார்கள் என்ற என்கிற எண்ணம் இருந்த்து. எனது தயக்கமும் அவர்களது கிராமத்து மண்வாசனையும் கலந்து கடைசி பெஞ்சுக்கு ஐயிக்கிமானேன்.  அவர்களது பெயர்கள் மறந்துவிட்டாலும் முகங்கள் இன்னமும் மறக்கவில்லை. எப்படி மறக்க முடியும் ? என் பிரம்மாண்ட உலகின் முதல் தெய்வங்களே அவர்கள்தான்.

எங்கள் வகுப்பு இருந்த கட்டத்தினுள் நடுவே மிகப் பெரிய வெட்டவெளி இருந்த்து, அந்த மண் பிரதேசத்தில் ஒவ்வொரு வகுப்பிற்கும் இடம் ஒதுக்கி இருந்தனர், அங்கு புளிச்சக்கீரை, வெண்டைக்காய், தக்காளி , கத்தரி , கீரை வகைகள் என பயிர்கள் வளர்ப்போம்.

கிராமத்து நண்பர்கள் மூலம் விவசாயம் பழ்கவும் , மண்ணோடு தொடர்ப்பு கொள்ளவும் வாய்ப்பாக இது அமைந்த்து. சில சமயம் அந்த காய்கறிகள் எங்கள் வீட்டு சமையலிலும் இடம் பெற்றது, அப்போது எல்லாம் அந்த சாப்பாட்டில் இனம் புரியாத ருசி உணர முடியும்,

இந்த கட்டத்திற்கு வெளியே முன்புறம் , வலது புறம் பள்ளியின் நுழைவாயிலை நோக்கி செல்லும் வழியில்,  அருகே அமைந்த மிகப் பெரிய ஆலமரம் பல பட்சிகளின் சந்தோஷ வீடு . அதைக் கடந்து நேராக  செல்கையில இடதுபுறம் மிகப் பெரிய கால்பந்தாட்ட மைதானமும் வலதுபுறம் பிடி ரூம் மற்றும் பிடி ஆசிரியர்கள் அறை இருக்கும்.  அதன் பின்னால் டென்னிஸ் கோர்ட் இருக்கும் (தற்போது இது மாவட்ட கல்வி அலுவலகமாக செயல்படுகிறது, கால்பந்து மைதானத்திலும் அதன் அழகை கெடுத்த வித்த்தில் ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளது)

அந்த தெற்கு பகுதி நுழைவாயிலுக்கு அருகே ரோட்டை கடந்தால் எதிரே ஒரு முருகன் கோவிலும் அதை ஒட்டி ஒரு வீதியும் செல்லும். அந்த வீதியின் ஆரம்பத்தில் , வலதுபுறத்தில் , ரோட்டை ஒட்டினார் போல சத்தி மாமா குடும்பத்தினர் இருந்தனர்.  அவர்களது தந்தை எனது பாட்டியின் சகோதர உறவு ஆவார். 

பிற்காலத்தில் எனது வகுப்புத் தோழனாகிய கணேஷ் அப்போது சிறு பையன். எங்கள் தந்தையின் தலைமுறையில் அரசாங்க உத்தியோகத்தில் இருந்த விரல் விட்டு எண்ணக் கூடிய நபர்களில் சத்தி மாமாவும் ஒருவர்.

இந்த வீட்டில் இருந்த போதே அவரது தகப்பனாரும் , எனது பாட்டியின் சகோதர்ரும் காலமானதாக எனக்கு ஞாபகம். ஸ்ரீராமனை பற்றி ஒரு ஸ்லோகத்தில் ஆஜானுபாகு அரவிந்த தளாயதாக்க்ஷ்ம்...... என்றெல்லாம் வரும். அப்படி அவர் சிறுகுழந்தையான கணேஷை தன் தோள்களில் சும்ந்து நிற்கும் திருவுருவத்தை காணும் போது  இந்த வரிகளே என் நினைவில் எழும, அவரது ஈமச்சடங்குகளில் , காலை 7 மணி அளவில் சூரிய கிரணங்கள் பூமிக்குள் நுழைந்த நேரத்தில், ஆலமரத்திடியில் ஏதும் புரியாதவனாக கலந்து கொண்டது நினைவில் உள்ளது.

சேந்தமங்கலத்தில் இருந்த அவர்களது பூர்வீக வீடு இன்னும் அழகாக இருக்கும். முன்புறம் கம்பி போட்டபெரிய ஜன்னல். வீட்டிற்குள் சென்றவுடன் சற்றே சில படிகள் கீழிறங்கி கூடத்திற்குள் செல்லவேண்டும். வீட்டின் பின்புறம் பெரிய தோட்டமும் . பாதானிக்கா மரமும் இருக்கும். அணில்களும், பறவைகளும் இடும் அந்த சப்த்த்தை கண்மூடி ரசிக்கலாம்

இந்த வீடும் ரோட்டின் ஒரத்தில் அமைந்திருந்த்தால் , வீட்டிற்கு வெளிய அமைந்த மாடிப்படியில் ஏறி மேலே சென்றால் அங்கிருந்து பள்ளியையும் . அதன் மைதானத்தின் பிரம்மாண்டத்தையும அணுஅணுவாய் ரசிக்கலாம். அங்கிருந்து மாற்றலாகி அருகேயுள்ள கிராம்மான எருமப்பட்டிக்கு குடிபெயர்ந்தார்கள். 

இந்த வீட்டில் அவர்கள் இருந்த போதே , ஒரு நாள் , இப்பள்ளியின் மைதானத்தில் , அதே ஆலமரத்துக்கு அருகில் , கப்பலோட்டிய தமிழன் படத்தை மண்தரையில் அமர்ந்து இரவில் கண்டேன். யார் ஒருங்கிணைத்தார்க்ள் எதற்காக போட்டார்க்ள் என்பது குறித்த கவனங்கள் அன்றைய நாளில் எனக்கு இருந்த்தாக நினைவில்லை.

பள்ளி வாழ்க்கையும் , தினமும் பல மைல் தூர நடைபயணமும் பலவற்றை எனக்கு அறிமுகப்படுத்தின. சத்தி மாமா நிறைய புத்தக்ங்கள் படிப்பார். அதைவிட பழைய புத்தகங்களை , கல்கி மற்றும் ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகளில் வரும் தொடர்களை சேகரித்து பைண்டிங் செய்து பத்திரமாக சேகரித்து வைத்திருப்பார்.  இது புத்தகங்கள் சேகரிக்கும் பழக்கத்தை எனக்குள் விதைத்த்து.

எளிமையான மனிதராக , எதற்கும் பெரிதாக அலட்டிக் கொள்ளதாவராக குழந்தைகளோடு குழந்தையாக எங்களோடு பழகுவார்.. ஜெயமணி, உறவினரும் கூட , நன்றாக புரோட்டா போடுவார். இவரது வீட்டில்தான் நான் வாழ்வில் முதல் முதலாக புராட்டா சாப்பிட்டதும் கூட. ஆக புராட்டா கூட இவர்களது அருளாலேயே என் வாழ்வில் இடம் பெற்றது,

அவர் சேகரித்து வைத்திருந்த புத்தகங்களை படிக்கும் போது அக்கால அரசியலிருந்து அன்றாட வாழ்க்கை வரை எனக்கு அறிமுகமானது. இன்னும் சொல்லப்போனால் மேலும் மேலும் கற்கத் தோன்றியது.
வெற்று பாட புத்தகங்களை மனப்பாடம் செய்யும் இயந்திரத்தனமான முறை எனக்குள் வளராமல தடுத்த்துடன் மட்டுமல்லாது, புத்தகம் படிக்கும் ஆர்வத்தை பன்மடங்கு அதிகரித்த்து. படிக்க படிக்க நிறைய தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றோமே என்கிற ஏக்கம் இருந்த்து,

எம்ஜிஆர் முதல் மொரார்ஜி தேசாய் வரை அவரது சேகரிப்பினால் என் வாழ்வில் நுழைந்தார்கள்.  அப்புசாமியும் சீதேபாட்டியும தேவனோடு இணைந்து ஹாஸ்யம் நிகழ்த்தினார்கள். துப்பறியும் சாம்பு மற்றும் தமிழ்வாணனின் சங்கர்லால் புதுப் புது யுக்திகளை கண்டுபிடித்தார்க்ள்.

இவர்கள் மட்டுமல்லாது மந்திரவாதி மான்டேரேக் , இரும்புகை மாயாவி , என லிஸ்ட் வளர ஆரம்பித்த்து.  எழுத்தாளர்கள் லக்ஷ்மி , சாண்டில்யன் , கோவி மணிசேகரன் , சுஜாதா என பலரும் என் வாழ்வை நேரம் கிடைத்த போதெல்லாம் அலங்கரித்தார்கள்

பள்ளியிலோ மதிய நேரம் வருடம் முழுவதும் தூக்கு வாளியில்  புதிய மோர் சாத்த்துடன் வடுமாங்காவோ அல்லது எலுமிச்சை ஊறுகாயோ இருக்கும். பண்டிகை நாட்களிலோ அல்லது ஏதாவது விருந்த்தினர்கள் வந்து இருந்தாலோ அன்று காலையில் வார்த்த் இட்லி , பொடி தடவி கொடுப்பார்கள்.

எல்ல்ர்ருடைய சாப்பாடும் அதே பேர்ன்று இருந்த்தால் மனதளவில் ஒரு பெரிய பிரச்சனை இல்லை கிராமத்து மாணவ்ர்கள் கம்பு சோறு எடுத்து வருவார்கள் . ஆனால் பெரும்பாலும் அனைவரது மதிய சாப்பாடும் மோர் சாப்பாடுதான் .

1979 முதல் வருடம் முழுவதும் , 6 வகுப்பு முடியும் வரை எனது மாமா பையன் சிவாஜி என்கிற சிவக்குமார் கை பிடித்து செல்வேன். இதற்கு காரணம் தூரமும் , வாகனங்கள் செல்லும் மெயின் ரோடும்தான், பிறகு மெதுவாக கற்றுக் கொண்டேன்.

லாரிகளில் public transport  or public carrier என்பதை எனது ஆங்கில புலமையின் காரணமாக police transport or police carrier என்றே வெகுநாட்கள் படித்து புரிந்து கொண்ட்து இன்றும் நன்றாக நினைவில் உள்ளது.

இதே காலகட்டத்தில்தான் மொரார்ஜி தேசாய், சரண்சிங் , இந்திராகாந்தி என்று அரசியல் தலைவர்களை குறித்தும் , நாட்டு நடப்புகளைக் குறித்தும்  பத்திரிக்கைகளில் படிக்க ஆரம்பித்தேன்.
எங்கள் ஊரின் இரு டுரிங் டாக்கீஸ்களான ஜோதி தியட்டரும் , சந்தை பேட்டை புதூரில் இருந்த சிவசக்தி தியேட்டரும் பல சாதாரண மக்களை எங்கள் முன் பிரபலங்கள் ஆக்கினார்கள்

இதே காலகட்டத்தில் எனக்கும் என் தம்பிக்கும் உபநயனம் நடந்த்து. முதல் முறையாக நினைவு தெரிந்து உறவுகளுக்குள் வாழ்க்கை நுழைந்திருந்த்து. இத்தனை நாட்கள் இவர்கள் எல்லாம் எங்கிருந்தார்க்ள் என்பது போல் எனக்குள் கேள்வி எழுந்த்து.

ஏனென்றால் இத்தகைய உறவுகளையும் அவர்களது பெயர்களையும் வீட்டில் பேசுவது கேட்டிருந்தாலும் அவர்கள் எல்லாம் ஏதோ கடல் கடந்து ரொம்ப தூரத்தில் இருப்பது போன்று கற்பனை செய்திருந்தேன்.

இத்தகைய நிகழ்வுகளால் என் உலகம் வெற்று பழைய முன்சீப் கோர்ட் மட்டுமல்ல என்பதை முதல் முதலாய் உணர்ந்தேன். இந்த தெரிந்த உலகை கடப்பதற்கும் அவர்களே சொல்லித் தந்தனர்.

அந்த சூட்சுமத்தை என் தந்தை என் செவிகளில் மந்திரமாய் உபதேசித்தார்.. என் தம்பிக்கு என் சித்தப்பா உபதேசித்தார். ஆனால் என் கவனம் எல்லாம் எப்போது இந்த சடங்குகள் முடியும் என்பதிலேயே இருந்த்து. வேறு என்ன சாப்பாடுதான்.

அந்த நேரம் பார்த்து பிச்சைக்காக கையில் துண்டை விரித்து நிற்கச் சொன்னார்கள். சடங்கின் நீளம் அறியாத்தால் , சாப்பிட ஏதேனும் குடுப்பார்கள் என்கிற புரிதலில் ஆர்வமுடன் கையேந்தினேன். ஆனால் முதல் முறையாக பசியாக இருந்த போது பக்குவமாகவும் , பணிவுடனும் நடந்து கொள்ள ஏதும் சொல்லாமலே கற்றுக் கொடுத்தனர்.

அந்த க்ஷணத்தில் அருள்மழை அன்னையின் வடிவில் பொழிய ஆரம்பித்த்து. அது எந்தன் உபநயனத்தின் போது என் அம்மா இட்ட முதல் பிச்சைதான்.  அதன் பின்னர் அனைவரும் வரிசையாக வந்து நின்று ஒவ்வொருவரிடமும் நான் பிச்சை கேட்டபின்னர் அவர்களது அன்பையும் ஆசீர்வாத்த்தையும் கலந்து இட்டது பெருகி பெருகி என் வாழ்வை நிரப்பிக் கெர்ண்டுள்ளது

எதற்காக பிச்சை கேட்கிறேன் என்று தெரியாமலே , என்ன பிச்சை கேட்கிறேன் என்பதை அறியாமலே , யாரிடம் பிச்சை கேட்கிறேன் என்பதை உணராமலே இயல்பாக ஆரம்பித்த இந்த பயணம் , தற்போது பிச்சைக்காரனாக இருப்பதற்கும் தகுதியில்லை என்று உணர்ந்த பின்னரும் , தகுதியில்லாதாதால் பிச்சை கேட்க மாட்டேன் என அடம்பிடித்தாலும் தேடி வந்து அருள் மழை பொழிந்து பிச்சையிடும் பித்தனை , பிறை சூடிய எந்தன் பெருமானை, அருளாளனை , எந்தன் பேதைமையால் எப்படியே  எதையே நினைத்தாலும் அது உன்னையே பலவாறாக நினைத்துக் கொண்டிருக்கும் விதமாக கருதி என்னை மறவாது இருக்க வேண்டுகிறேன்.

இப்படியாக நாமக்கல் என்பது என் பழைய முன்சீப் கோர்ட் எல்லையை கடந்து விரிய ஆரம்பித்த்து.  நானும் அருள்பிச்சையும், அறிவுப் பிச்சையும் பெற்றிட எல்லை கடந்து என் தெய்வங்களை தேடி நடக்க ஆரம்பித்தேன்,

நெஞ்சினில் ஏற்கனவே ஆவாஹனம் ஆகிய தெய்வங்களுக்கு என் நன்றி கலந்த வணக்கங்களை சிரம் தாழ்த்தி அவர்தம் பாத கமலங்களில் சம்ர்ப்பித்திட சற்றே விடைபெறும்...............

நீங்களும் உங்களின் களைப்பு தீர சற்றே ஒய்வெடுங்கள் . அதற்குள் நான் இன்னும் சில தெய்வங்களோடு வருகிறேன்

No comments:

Post a Comment