Tuesday 2 April 2013

நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 9



நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 9

மலையை நோக்கிய பயணத்தில்

விடுமுறைக்கு போளுவாம்பட்டி வந்து ஒரு வாரம் ஆகியிருந்த்து. புதிய சூழல் புதிய நட்புகள் என குளிர்ந்த தென்றலாய் கொங்கு தமிழ் அழகாய இருந்த்து. எனது மாமா வீடு பழங்காலத்து மாடலில் இருந்த்து. அவரது பையன் சந்திரசேகரும் அவரது நண்ப்ர் ராஜாமணியும் ஊருக்கே பழக்கமானவர்கள்.

அவரது வீட்டில் வேலைக்கு வரும் செல்லமக்கா ஒரு அற்புதமான மனிதர். இவர்கள் வீட்டிலேயே வெற்றிலை போடும் பழக்கம் கற்றுக் கொண்டேன். எனது மாமாவும். செல்லமக்காவும் தீவர வெற்றிலை பழக்கம் உடையவர்கள். அதுவும் மாமாவிற்கு பேருரில் இருந்து நெய் வாசனை மிகுந்த பொடியும் வேண்டும். இதே பொடி பழக்கத்தை எனது தந்தை பணி செயத் மடத்தில், உடன் பணி செய்த செட்டியாரும் தவறாது அனுபவிப்பார்.

அவர் மாலைவேளைகளில் ரயில் குழல் இனிப்பும் காரமுமாய் ருசி கொடுக்கும். நான் அப்பாவுடன் மடத்திற்கு செல்ல் அப்போதுதான் பழகியிருந்தேன். சனிக்கிழமைகளில் நவக்கிரகத்திற்கு அஷ்டோத்திர பூஜை செய்து பிரசாதங்களை கட்டி வைத்திருப்பார். இதை பள்ளி முடித்து வந்தவுடன் எடுத்து சென்று 20 முதல் 25 வீடுகளுக்கு தந்து வரவேண்டும்.

பிரசாத்த்தை வீட்டு பெரியவர்கள் என்னிடமிருந்து மிக பவ்யமாக வாங்குவார்கள். ஆளுக்கு ரூ 1 குடுப்பார்க்ள். அது அந்த மாத டியுசன் பீஸுக்கு உபயோகப்படும். அதேசமயம் அவர்கள் வீடுகள் நன்றாக வசதியானதாக் இருக்கும். அவ்வளவு வசதிகள் அந்த காலத்திலேயே இருந்தும் என்ன பிரச்சனை இவர்களுக்கு இருக்க்க் கூடும் என்பது புரியவில்லை அப்போது.

சில சமயம் அப்பாவும் இதை வெறும் தொழிலாகச் செய்கிறாரா என்பதும் எனக்கு புதிராகவே இ,ருந்த்து. ஆனால் அவரவரவர்க்கு அவரவர் நம்பிக்கை. இதில் நான் தலையிட என்ன உரிமை இருக்கிறது என்று அமைதியாக இருந்து விடுவேன். ஆயினும் முதன் முதலாக இச் சூழல்கள் எனக்குள் கேள்வியை தோற்றுவித்தன. கேட்பதற்கு நிறைய பேர் இருந்தும் எவருக்கும் பதில் செர்ல்லத் தெரியவில்லை.

இதே கால கட்டத்தில் தான் ராசிபுரம் தாத்தா , பாண்டமங்கலம் தாத்தா , கணேஷின் தாய் வழி சொந்த்மான பெத்த நாயக்கன் பாளையம் தாத்தா என பலர் பணி நிமித்தமாக எங்கள் வீட்டிற்கு வந்து போய் கொண்டு இருந்தனர். பெத்த நாயக்கன் பாளையம் ராமாபட்லு அவர்கள் ஆசார அனுஷ்டானத்தில் ஒரு முன்னுதாரணமாய் திகழ்ந்தார்கள்.

அவரிட்ம் கேள்விகளை கேட்காவிடினும் அவரது நம்பிக்கையும் , வழிமுறைகளில் அவர் காட்டிய சிரத்தையும் என்னுள் ஏதோ செய்த்து. பிறருக்கும் அவருக்கும் வித்தியாசத்தை நன்றாக உணர முடிந்த்து. அவரின் வழித்தோன்றல்கள் எனறு கொல்லப்பட்டவர்களிடம் கூட பொருளாதார சிந்தனைகள் என்னால் காண முடிந்த்து. ஆனால் அவரிடம் சிரத்தை மட்டுமே என்னால் காணமுடிந்த்து. அந்த சிரத்தையே அவரின் மேல் பல மடங்கு மதிப்பை அதிகரித்த்து.

உண்மையில் அந்த சிரத்தைதான் அவரின் செயல்களுக்கு அழகு ஊட்டின எனபேன். எனக்கு- பிடிக்காத்தையும் கூட அவருக்காக செய்ய் அல்லது விட்டுக் கொடுக்க உணர்வு இருந்த்து. அதேசமயம் சிறியவர்கள் ஆனாலும், மரியாதை கொடுப்பதும் மேலும் எந்த இடத்திலும் தமது பாண்டின்யத்தை வெளிப்படுத்த முனையாத்தும் அமைதியாக கவனித்தேன்.

நிறைகுடம் தழும்பாது என்பதற்கு அவரே ஒரு உதாரணம். அவரது பால் ஏற்பட்ட ஈர்ப்பால் அவரைப்போல  ஜபங்கள் செய்திட ஆசை கொண்டேன். ஆனால் அதற்கு வேத அத்ய்யனத்திற்கு அல்லவா செல்ல வேண்டும். நானோ............ குறைந்த பட்சம் சில மந்திரங்களாவது முறையாக கற்க ஆசை கொண்டேன்.

அவரது ஆசியே அதற்கும் வழீ ஏற்படுத்தியது. எங்களது வீதியின் ஒரு கோடியில் இருந்த வக்கீல் லக்ஷ்மி நரசிம்மன் அவர்கள பிராம்மண சபா காரியதரிசியாக அப்போது இருந்தார். நகரின் பலபகுதியிலும் குழந்தைகளுக்கு விஷ்ணு சகஸ்ரநாம்ம் சொல்லித்தர அப்போது ஏற்பாடாகி இருந்த்து. எங்கள் வீதிக்கு அவரே பொருப்பாளர்.

அவரிடம் நான், எதிர் வீட்டு கண்ணன், லெப்ட் ரமேஷ், எனது சகோதரன் அனந்து ஆகிய நால்வர் பயில ஆரம்பித்தோம். குருகுல முறைப்படி அவர் சொல்ல் பின் நாங்கள் சொல்லவேண்டூம்.  சிறிது காலத்திற்கு இராமகிருஷ்ண மடத்தில் இருந்து வெளியிட்ட புத்தகம் . அழகான பூளு கலர் அட்டையுடன் பைண்ட் செய்து ஆளுக்கு ஒன்று பரிசாக தரப்பட்டது.

தினமும் மாலை 7 மணிக்கு வகுப்பு நடைபெறும். வக்கீல் வீடு மிகப் பெரியது. உள்ளே கூடம் மிகச் விசாலமானதாக இருக்கும். அவரும் எனக்கு சொந்தம்தான். ஆனால் அவரைக் காட்டிலும் அப்போது அநுசியா அத்தைதான் ஒரளவு தெரியும். அதிகம் அதிர்ந்து பேசமாட்டார்கள். அதிகம் பழக்கமில்லை யென்றாலும் அவரது செயல்களில் பாரம்பரியமும் கலாசாரமும் கலந்து நிற்பதை காண இயலும். பண்டிகை நாட்களில் வீட்டிறகு வருவார்

கூடத்தை ஒட்டி பூஜை அறையும் அதற்கு பின்னர் சமையலறையும் இருக்கும்.  அவரா அல்லது அத்தையா ,யார் அதிகம் பூஜை புனஸ்காரங்கள் செய்வார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அந்த கூடமும் வீடும் தெய்வீக மணம் கமழுவதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். அந்த வாசனைக்காகவே பலமுறை அந்த வீட்டிற்கு சென்றுள்ளேன்.

உண்மையில் இந்த காரணத்தை வைத்து இந்த வாசனையை உணர வாய்ப்பாக இருக்கும் என்றே எண்ணினேன். சிலசமயம் ஏதேனும் ஒரு ஸ்வீட் செய்வார்கள் போலிருக்கிறது அதனால்தான் இப்படி ஒரு வாசனை வருகிறது என்று கூட கருதியிருக்கிறேன். என்றாவது ஒரு நாள் அந்த ஸவீட் எனக்கும் கிடைக்கும் அதை வைத்து இந்த வாசனையின் மூலத்தை கண்டுபிடித்து விடலாம் என சாம்பு மாமா கணக்காய் எண்ணியிருந்தேன்.

ஒருவேளை அநுசுயா அத்தை இப்போது இதை படித்தால் ஐயோ குழந்தையை ஏமாற்றி விட்டோமே என அங்கலாய்ப்பு பட்டாலும் படக்கூடும். யார் கண்டார்கள் ஒருவேளை உண்மையிலேயே எனக்கு ஸ்வீட் கிடைத்தாலும் கிடைக்கலாம்

சிலசமய்ம என்னைப் பார்த்தால் எனக்கே சிரிப்பாய் வருகிறது. நான் வெள்ளேந்தியாய் இருக்கிறேனா அல்ல்து அறியாமையா என புரிவதில்லை.ஆனாலும் என் முட்டாள்தனத்திற்காக என்றுமே வெட்கப்பட்டது இல்லை. தெரியாத விஷயத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கொஞ்சம் அதிகப்டியாக தவறு செய்கிறேன் அவ்வளவுதான் என என்னை நானே சமாதான ப்டுத்துகிறேன். மேலும எனக்கே என் முட்டாள்தனம் தெரியும் என்பதால் யார் என்ன சொன்னாலும் அது அந்த க்ஷணத்தோடு கடந்து விடுகிறது.

கற்றுக் கொள்வதற்காக போனாலும் அவரது மைந்தர்கள் பழக்கமானார்கள். சுகுணா அக்காவிடம் எப்பொழுதாவது ஒரு முறை பேசியதுண்டு. பெரியவரிடம் பேசியதில்லை. ராமன் வெங்கடேஷின் வகுப்புத் தோழன் என்று நினைக்கிறேன். அதிகம் பேச மாட்டார். இவரும் லெப்ட் ரமேஷின் அண்ணன் வெங்கடேஷும் படிப்பில் கெட்டி . விளையாட்டுக்களில் அதிகமாக பங்கு கொண்டதாக ஞாபகமில்லை.

இன்னும் செர்ல்லப்போனால் சுந்தர். ஹிந்தி பண்டிட் பேரனும் சபாபதியின் அண்ணனுமான செள்ந்தா. கணேஷின் மாமா சந்திரசேகர் . லெப்ட் ரமேஷின் அண்ண்ன் வெங்கடேஷ் . வக்கீலின் பையன் ராமன் . ராஜாமணி மாமாவின் பையன் சுரேஷ் அண்ணா . வேணி‘ மாமியின் மகன் ரவி அண்ணா மற்றும் ராஜு அண்ணா போன்றவர்கள் ஒத்த வயதுடையவர்களாக இருந்தார்கள். இவர்கள் எங்கள் குழுவில் எப்போதாவதுதான் பங்கு கொள்வார்க்ள்.

இதில் சேகரும் , சுரேஷ் அண்ணா மற்றும் ராஜு அண்ணா ஆகியோர்தான் கிரிகெட்டின் வழியே எங்களோடு கலந்து . இன்றைய டென்டுல்கரைப் போல எனது அடுத்த தலைமுறைக்கு அடுத்த தலைமுறையான  ஸ்ரீகாந்த் மற்றும் கோவிந்தனுடம் விளையாடினார்கள்.

இவர்களை யெல்லாம் விட எனது சமகாலத்தவரான சுரேஷ்தான் எனக்கு ஒரளவு பழக்கம் என்பேன். பிற்காலத்தில் எங்களது பிளையிங் கலர்ஸ் கிரிக்கெட் கிளப்பில் இவர் ஒரு முக்கிய அங்கத்தினரும் கூட.

ஆரம்ப காலத்தில் வக்கீலைப் பற்றி அதிகம் தெரியாது. எமது நட்பு வட்டத்திற்குள் நிறைய கிண்டல் அடித்திருக்கின்றோம். ஆனால் இந்த வகுப்புகள் அவரது வேறு ஒரு பரிமாணத்தை எனக்கு காட்டியது.
நான் வாழ்க்கையில் கற்ற ஒரே ஒரு ஸ்லோகமும் இது ஒன்றுதான். எங்களது குழுவே முதல் பரிசையும் தட்டிச் சென்றது. அதற்குக் காரணம் அவரது உழைப்புதான்.

எனது தம்பி சித்தூருக்கு சென்றுவிட , கண்ணனும் ,லெப்ட் ரமேஷும் படிப்பு காரணமாக தொடர முடியாமல் போக , நான் எனக்கு இயல்பாக இதில் இருந்த ஆர்வக் குறைவு காரணமாக தானாக நின்று போன்து.

இந்த ஸ்லோகம் அநேகமாக அறியாதவர்கள் கூட எம்எஸ் சுப்புலட்சுமியின் குரலில் கேட்டிருப்பார்கள். அவர் அதற்கு அத்தனை ஜீவன் ஊட்டியிருப்பார். இது பீஷ்மர் தருமருக்கு உபதேசித்த்தாக கூறுவர். ஆனால் எனக்கு அது தெரியாது. எனக்கோ இன்றும் எங்காவது கேட்கும் போதெல்லாம் எம்எஸ்ஸும் வக்கீலும் எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றனர்,

நினைத்த மாதிரி பல்வேறு மந்திரங்களையும் , பூஜை முறைகளையும் கற்கும் ஆர்வம் இல்லாவிடினும் ,அதே சமயம் ராசிபுரம் தாத்தாவின் முயற்சியால் அப்பாவிற்கு உத்வி செய்ய சில அஷ்டோத்திரங்களை கற்றுக் கொண்டேன்.

மந்திரங்களை விட தாத்தாவிடம் கற்றுக் கொண்டது அதிகம். பள்ளி வாத்தியாராக இருந்து பாரம்பரிய தொழிலுக்கு வந்தவர். அப்போதே அவருக்கு வயது 80க்கு அருகில். ஆனால அந்த வயதிலும் கடின உழைப்பாளி.

காங்கிரஸ்கார்ராய் இருந்திருப்பார் என எண்ணுகிறேன். நூல் நூற்பார். மதியத்தில படுத்துறங்கமாட்டார். காந்தியைப் போல் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு மாவுக்கல் கொண்ட ஒரு குச்சியில நூலை சுற்றி சுழற்றி விடுவார். அந்த லாவகம் பார்ப்பதற்கு ஆனந்தமாய் இருக்கும்.

கண் பார்வை குறைவு என்பதால் ஒரு சோடா புட்டி கண்ணாடி அணிந்திருப்பார். அதை போட்டுக் கொண்டு புத்தகங்களை பார்த்து நோட்டு புக்கில் மந்திரங்களை எழுதி வைப்பார். எழுதியதன் மேலேயே மீண்டும் மீண்டும் எழுதுவுர்ர். அப்படி எழுதுவதாலேயே மன்னமும் ஆகிவிடும். ஆனால அந்த இடைவிடா முயற்சியும். அந்த வயதிலும் ஏதோ ஒன்றை கற்றுக் கொள்ளும் ஆர்வமும், அதையும மிக சிரத்தையெடுத்து செய்யும் திறனும் இன்றைக்கு காணக் கிடைக்காத்து, இந்த தெய்வேமே எனக்கு இடைவிடாத முயற்சியை கற்றுக் கொடுத்த்து,

சீர்க்கரை நோய் காரணமாக தலையில் அடிபட்ட புண் ஆராது இருக்கும். அது சீத்தலைச் சாத்தனாரை எனக்கு நினைவுபடுத்தும். இவரின் சம வயதுக் கார்ராக பாண்டமங்கலம்  தாத்தா (ராமைய்ய்ர்)  ஜோடி சேருவார். இவர்கள் இருவரும் திரு ராமாபட்லு அவர்களுடன் இணைந்தால் அவர்கள் காலத்திய வரலாறுகளும் சம்பாஷணைகளும் வெகுஜோராக வெளிப்படும்.

இதில் என்னவென்றால் என்தந்தை உள்பட யாருமே வேத பாடசாலையில் பயின்றது இல்லை . ராமாபட்லு தாத்தாவோ அதில் கரைகண்டவர். ஆனால் சபையில் பேசும் போது ஒருசமயம் கூட  - அவர்களுக்கு தெரியாது - என்கிற உணர்வை மற்றவர்களுக்கு ஏற்படுத்த மாட்டார்.

அதே போல் இவர்கள் மூவரும் என்னைப் போன்ற சிறுவர்களோடு பழகும் போது குழந்தைகளாகவே மாறி விடுவர். பாண்டமங்கலம் ராமைய்யர் அணிந்திருந்த கல் வைத்த ஓம டாலர் செயின் அனைவ்ரின் பார்வையும் சுண்டி இழுக்கும். உணவைப் போலவே வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவிக்க வேண்டும் என்கிற எண்ணமுடையவர்.

இந்த சமுகத்தில் பொருளாதாரம் ஒரு பொருட்டாகவே இருந்த்து இல்லை. எது எவருக்கு நடந்தாலும் , எவர் வீட்டில் எதை செய்ய வேண்டுமென்றாலும் தங்கள் கருத்து வேறுபாடுகளை களைந்து, ஒன்று கூடி கோலாகலமாய் செய்வார்கள்,

இதனால் பெண்களை பெற்றிருந்தாலும் சரி , பையனைப் பெற்றிருந்தாலும் சரி யாருக்கும் தன் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பெருத்த கவலைக்ள் இருந்த்தில்லை, அவர்களின் குழந்தைகளும் ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது என்பது இயல்பாக நடந்த்து,

என் பாட்டி அடிக்கடி கூறுவதைப் போல  வீட்டில் உள்ளதை விரும்பு என்பது வைத்தியனுக்கு கொடுப்பதைக் விட வாணிபனுக்கு கொடு என்பதும் அனைத்து குடும்பங்களிலும் தாரக மந்திரம்,

ஆரோக்கியமான உணவு முறை என்பது மட்டுமே வாழ்க்கையாகி இருந்த்து, அதே சமயம் எவர் வந்து எது கேட்டாலும் , அது அப்போதைக்கு அவர்களிடம் இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் பிரதானமாகி இருந்த்து, வாங்கிச் செலப்வர் திரும்ப கொடுப்பார்களா எனகிற எண்ணமே இல்லாமல் இருந்த்து. ஈதல் இசைபட வாழ்தல் என்பதற்கேற்ப ஆனந்தமாக கொடுப்பதை இத்தெய்வங்கள் எனக்கு கற்றுக் கொடுத்தனர்.

இப்பாடங்களை நான் கற்பதற்கு ஏதுவாக இவர்தம் குடும்ப நிகழவுகள் அமைந்தன. பெரும்பாலான திருமணங்களை நான் நாமக்கல் மற்றும் சித்தூரிலே கண்டிருந்தாலும் சில திருமணங்கள் என்னை பெரிதும் ஆச்சரியப்படுத்தியுள்ளன. அதற்குக் காரணம் அவை நடந்த கிராமங்கள்.

சேலம் வாழப்பாடி அருகே பெத்த நாயக்கன் பாளையத்தில் நடந்த அனந்தகுமார் - ராஜீ அத்தை அவர்களின் திருமணம் மற்றும் கோபி அருகே கீழவாணி கிராமத்தில் நிகழ்ந்த சரஸ்வதி அத்தையின் பெரிய மகனும் , எனது 2வது தம்பியின் மாமனாரும் ஆகிய ச்சிசேகரின் திருமணம் பசுமையான கிராமங்களை நோக்கி என்னை நடைபோட வைத்தன.

அதுவும் பெத்தநாயக்கன் பாளையத்தின் ஒரு முக்கியகர்த்தாவான திரு பிரணதார்த்தி அவர்களின் தோப்பும் வயலும் காண்பித்து இயற்கையன்ணை என்னை கிறங்கடிக்கச் செய்திருந்தாள். அங்கிருந்து தெரிந்த குப்பு கொண்டராயன் மலை,  நாமக்கல் மலைத் தவிர, புவியியல் பாடங்களில் படித்த மலைகளைத் தவிர முதல் தடவையாக பாறைகளும் எனை ஈர்க்க ஆரம்பித்தன. அதுவரை நாமக்கல் மலையைக் கூட ஏறியது இல்லை

திருச்சி தாசு மாமா அவர்களுக்கும் அதுவே குலதெய்வம், முதல் முறையாக ஒரு மலையில் ஏறினேன், மலையில் பார்த்தபோது பசுமையான வயல்களும், பரந்து விநிந்த ஆகாயமும், சில்லென்ற காற்றும் , குழந்தைத்தனமான குதுகலமும் உள்ளத்தில் உள்வாங்கியதை உணர்ந்தேன்.

ஏன் எங்கள் குலதெய்வத்தை மட்டும் மலைக்கு மேல் வைக்கவில்லை என்று யோசித்தேன். ஒரு வேளை பெண்ணாக இருப்பதால் சமவெளியில் இருந்துவிட்டாள் போலும் என்று என்னை நானே சமாதானப் படுத்திக்கொண்டேன். இதுவும் ஒருவித்த்தில் மிக சௌகரியமாக இருந்த்து,

கால் வலி இல்லாமல் , சிரம்ம் இன்றி எப்பொழுது வேண்டுமானாலும் செல்ல முடிந்த்து. முக்கியமாக கோவிலுக்கு செல்லவேண்டும் என லீவு கேட்டு போராடத் தேவையில்லை. அதே சமயம் மற்ற்வர்கள் உடன் சேர்ந்து அவர்களது குலதெய்வ கோவிலுக்கு செல்ல்லாம் என டுர் செல்ல முடிந்த்து. அதுவும் வன்ங்களிலும் , மலைகளிலும் ஆனந்தமாக இயற்கையை ரசித்துக் கொண்டு.

இப்படி நாமக்கல்லுக்கு அருகே உள்ள சேந்தமங்கலத்தில் இருநது நைநாமலைக்கும் , பவித்திரம அருகே வாழசிராமணியில் இருந்து தலமலைக்கும் ஏறி மகிழ்ந்தேன். சத்தி மாமா, கோபு மாமா, போளுவாம்பட்டி மக்களுக்கு நைநாமலை குலதெய்வமாகும்.

திருச்சி தாசு மாமாவின் மருமகன் ரத்தினம் மற்றும் ரமணி ஆகியோர் குடும்பத்திற்கு தலமலை குலதெய்வமாகும்.  தலைமலை ஏறுதல் என்பது உண்மையிலேயே மிகுந்த ஆனந்த்த்தை தரும் சற்றே அடர்ந்த வனப்குதி சூழ்ந்து இருப்பதால்.

இதற்கு செல்வதென்றால் முதல் நாள் இரவே சென்று பவித்திரம் அருகே உள்ள வாழசிராமணியில் அனைவரும் சேர்ந்து விடுவர். அங்கிருந்து வரகாபி குடித்து விட்டு இருட்டில் 3 மணிக்கு நடக்க ஆரம்பித்தால் 5,30 மணிக்கு விடியற்காலை அடிவாரம் சென்று அடையமுடியும். பேச்சு சப்த்த்தை வைத்து பின் தொடர்ந்து செல்வது மிக சவாலாக இருக்கும். இதனால்தான் மலையேற்றங்களின் போது கோஷங்களை எழுப்பிக் கொண்டே செல்கின்றனர் என்பதை வெகு காலத்திற்கு பின் புரிந்து கொண்டேன்.

பெரும்பாலான சொந்தங்கள் ஒரு குடும்பத்திற்குள் இன்னொரு குடும்பம் பிணைந்து இருந்த காரணத்தால் , யார் வீட்டு வைபவமானாலும் , எவருடைய குலதெய்வத்திற்கு ஆராதனையானாலும் அனைவரும் கூடிவிடுவர், இப்படியாக அணைத்திற்கும் செல்லும் வாய்ப்பு எனக்கு வாய்த்த்து என்றால் அதற்கு காரணம் இந்த அற்புத தெய்வங்கள் என் வாழ்வோடு பங்கு கொண்டு விளையாடியதுதான்.

நைநாமலையோ அல்லது தலமலையோ , எதுவாயினும் ரமணியின் வேகத்திற்கு யாராலும் ஈடுகொடுக்க இயலாது. ரமணி ஒரு புரிந்து கொள்ள முடியாத கதாபாத்திரம். ஓரே இடத்தில் பலமணி நேரம் அம்ர்ந்திருப்பார், அவர் வேகமாகவும் இடைவிடாமலும் பேசுவது வேடிக்கையாக இருநத போதிலும், அனைவருக்கும் ஒரு செல்லப் பிள்ளையாகவே இருந்தார்,

கடவுளின் குழந்தை என்று யாரையாவது சொல்ல வேண்டுமெனில் அது அவர்தான். தன் அம்மாவை பெயர் சொல்லி அழைக்கும் அந்த அன்புக் குழந்தை எனக்கு வாழ்வை புரிய வைத்த தெய்வம். கள்ளமில்லா மனமும். களங்கமில்லா பேச்சும். உள்ளமில்லாதவர்களை தவிர மற்ற அனைவரையும் உருக வைக்கும் தன்மையுடையது.

கடந்த புரட்டாசியில் நைநாமலைக்கு சென்ற போதுதான் , போளுவாம்பட்டி சேகர் பாவாவும் அவரது தம்பி ரவியும இணைந்து வந்தனர். அவர்களுக்கும் இதுவே குலதெய்வம்.

அப்போது பேச்சு வாக்கில் அவர் ஊருக்கு வர அழைப்பு விடுத்தார். மலையேற்றத்தில் எனக்குள்ள ஆர்வம் கண்டு அவரது ஊருக்கு அருகே உள்ள மலைக்கு கூட்டிச் செல்கிறேன் எனக் கூறினார் ஆனால் விடுமுறை சமயத்தில் தான் போவதற்கு சரியான சமயம் என்று சொல்லி எங்கள் குடும்பத்தினரிடம் அனுமதி பெற்று தந்தார்.,

நாங்களும் கோவையை இதுவரை கண்டிராத்தால் மே மாத விடுமுறைக்கு டேரா போட்டோம். சிறுவாணி தண்ணீரும், செல்லம்மக்காவின் பேச்சும், பெரியசாமியின் அனுபவ்மும் பல கதைகளை எனக்கு சொல்லின,

பக்கத்து வீட்டில் இருந்த மணியக்கார்ர் பேரன் ராஜா இன்னொரு ரமணியை எங்களுக்கு நினைவூட்டினான். அப்போது மாமா ஒரு இரட்டை மாட்டு வணடி வைத்திருந்தார். அதில் ஏறி. அமர்ந்து

ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
சல சல சல என சாலையிலே
செல் செல் செல்லுங்கள் காளைகளே
சேர்ந்திட வேணும் இரவுக்குள்ளே

என ஜானகி பின்ன்னியில் பாடி வர பேருர் , மருதமலை என சுற்றினோம்

எதிரேயும் எங்களுக்கு முன்னேயும் பின்னேயும் இம்மாதிரி மாட்டு வண்டி கட்டி ம்க்கள் போவதைக் காணும் போதும்., எப்போழுதாவது ஒரு முறை வரும் 56ம் எண் பேருந்தும் எல்லையில்லா மகிழ்வைத்தரும்.

வாழ்வு விரிந்த அதிசியத்தை எண்ணி எனக்குள் வியந்து கொண்டு வெள்ளியங்கிரியை பார்த்தபடி அவரது வீட்டின் பின்புறம் அமர்ந்திருந்தேன். அப்போது மாமாவின் குரல் என்னை அழைத்த்தால் எழுந்து வீட்டின் முன்புறம் நடந்தேன்.

பெரியசாமி மாடு பூட்டி வண்டி கட்டி வந்திருந்தார். அத்தை மாமா உட்பட கணேஷ், அனந்து மற்றும் ஸ்ரீகாந்த் என என்னைத் தவிர அனைவரும் தயாராய் ஏறி அம்ர்ந்திருந்தனர்.

சேகர் பாவாவின் வேலைகளினால் வெள்ளியங்கிரி ஏற முடியாது போன ஏக்கமிருந்தாலும், ரேக்ளா வண்டி போல திறந்த வெளி வண்டியில பெரியசாமியுடன் பேசிக் கொண்டே சில்லென்ற காற்றில் வயல்கள் நடுவே செல்வது ஆனந்தம் தநத்து.

போளுவாம்பட்டியில் இருந்து நரசீபுரம் வழியாக பூண்டி நோக்கி நகரத் தொடங்கி இருந்த்து. நரசீபுரத்தில் இருந்து பின்பாதை வழியாக சின்ன ஆறு பெரிய ஆறு ஆகிய நீரோட்டங்களை கடந்து மடக்காடு அருகே ஆற்றை கடந்து வயல்கள் சூழ்ந்த பாதையில் மாடுகள் என்னை இட்டுச் சென்ற போது மலையின் வாசம் என் சுவாசத்தில் இறங்கியது. வாழ்வில் முதல் முறையாக என்னை அறியாமல் நான் வர வேண்டிய இடம் நோக்கி நகர்ந்திருந்தேன்,

வண்டியோடே பயணியுங்கள் ..................................

மேலும் பல தெய்வங்களை எழுத்தில் படம் பிடித்து வரும் வரை கருணையோடு காத்திருங்கள்

No comments:

Post a Comment