Saturday 6 April 2013

நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 15



நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 15

உலகை விரிய வைத்த தெய்வங்கள்

இதுவும் கடந்து போகும் என்கிற வாழ்க்கையில் எதுவும் தப்புவதில்லை. சேது மாமாவின் மரணம் குறித்து , ஏதோ நானே நேரில் பார்த்த விதமாய் பல தகவல்களை கேட்பவரிடம் எல்லாம் விவரித்துக் கொண்டு இருந்தேன். அதை விட பெரிய ஆச்சரியமான ஒரு விஷயம் என்ன வென்றால் , ஒருவரது மரணத்தைப் பற்றி , அது நிகழ்ந்த்தைப் பற்றி பெரியவர்களிடம் பேசாமல் ஏன் ஒரு சிறுவனிடம் அந்த பெரியவர்கள் கேட்கிறார்கள் என்பதுதான்.

செய்திகளின் நம்பகத்தன்மையைக் காட்டிலும், சொல்பவனின் நேர்மையைக் காட்டிலும் அது சொல்லும் விதம் சுவாரஸ்யமாக இருக்கிறதா என்பதே செய்தியை மனிதர்களிடேயே கொண்டு சேர்க்கிறது . இன்று வரை இந்த நுட்பமான ஒரு நுணுக்கத்தை , அதே சமயம் உண்மைத் தன்மை மாறாது சொல்லிட இன்னமும் நான் கற்கவில்லை என்றே உணர்கிறேன்.

அதே சமய்ம் இந்த நுணுக்கத்தை கற்ற்றிந்த இரு நண்பர்களை எனது வகுப்பில் பெற்றிருந்தேன். அவர்கள் செல்வராஜ் மற்றும் மணி என்பவர்கள ஆவார்கள். பொது அறிவு, பொருளாதாரம், சினிமா மற்றும் பள்ளியின் சிறப்பு கிசு கிசு , அரசியல்  என பாடத்தைப் தவிர , படிப்பைத் தவிர இதர பல விஷயங்களைக் வாசிக்கும் செய்தியாளர்கள் ஆனார்கள்.
தங்களுக்கு  தெரிந்தவை  அறைகுறை அறிவோ அல்லது முற்றிலும் தெரியாதவையோ ஆனால் முழுமையாக என்னோடு பகிர்ந்து கொண்டனர். எங்களது மீட்டிங் பாயின்ட் வகுப்பில் கடைசி பெஞ்ச்தான்.

இந்த கடைசி பெஞ்ச் குறித்து ஆசிரியர்கள் வைத்திருந்த முன்முடிவுகள் எனக்கு பாடங்களைத் தவிர இதர விஷயங்களை தெரிந்து கொள்ள பெரிதும் உதவியது. இல்லையெனில் தமிழகத்தின் மனப்பாட போட்டியில் முதல் மாணவனாக வந்து எனது பெற்றோருக்கும் , ஆசிரியருக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்து என்னை புகழுக்கு தியாகமாக்கி , ஏதோ ஒரு மூலையில் என்னை எதற்கோ தொலைத்து விட்ட கோபத்தை என் குடும்பத்தினர் மேல் காட்டிக் கொண்டிருப்பதோடு, எனக்கு குற்ற உணர்ச்சி வந்து விடக்கூடாது என்பதற்காக என் வாரிசையும் என்னைப் போலவே தயார் செய்து கொண்டிருப்பேன்.

எங்கள் கடைசி பெஞ்சின் தன்னிகரற்ற தலைவனாக செல்வராஜ் விளங்கினான். இதற்கு காரணம் நாங்கள் எதை பற்றி பேசினாலும் அதைப் பற்றி பேசினான். அவன் படித்த தினத்தந்தி அனைத்தையும் தெரிந்தவனாய் அவனைக் காட்டியது, வெகுகாலம் கழித்து அதில் செய்திகளை விட விளம்பரங்கள்தான் அதிகம் வருகிறது என்பது புரிகிற வரை.

ஆனாலும் பேப்பர் படிக்காவிடினும் சரி அப்பழக்கம் உடையவர்களோடு கொண்டுள்ள தொடர்ப்பே நமக்கு பல செய்திகளை தெரிய வைப்பதுடன், உலக நடப்பு, நாட்டு நடப்பு என அனைத்தையும் தெரிந்து கொள்ள முடிந்த்து. இந்த அனுபவ அறிவு பிற்காலத்தில் எனது வங்கி பணிக்கான நேர்முகத் தேர்வை மிக கர்வமாக கையாளத் உதவியதுடன், இலகுவாக கையாள முடிந்த்து.
இம்மாதிரி நண்பர்கள் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு மனிதராய் இருந்து வந்த போதிலும் , அந்த பாரம்பரியத்தை துவக்கி வைத்த முன்னோடியாய் செல்வராஜ் இருந்தான் என்றால் அது மிகையாகாது. 

மேலும் இது போன்ற நண்பர்களால் நான் இச்செய்திகளுக்காக, இவற்றை எல்லாம் படித்து தெரிந்து கொள்ளும் நேரம் மிச்சமாகியதுடன் , அதை வேறு விஷயங்களை தெரிந்து கொள்ள டைம் மேனேஜ்மென்ட்டில் காலடி எடுத்து வைத்திருந்தேன்.

இது மேலோட்டமான அலைகளைக் கடந்து ஆழமான கடலில் எனக்கு பிடித்த பகுதிகளில் எல்லாம் குதிக்க முடிந்த்து. அதே சமயம் எனது கிருஸ்துவாக வந்த அந்த நண்பன் (ஸ்டாலின் என நினைக்கிறேன், பெயர் மறந்து விட்டது) பாடங்களைக் குறித்து எனக்கு இருந்த சந்தேகங்களை தீர்த்து வைத்தான்.

ஆனால் நடுவிலேயே அவனது அப்பாவிற்கு மேட்டுருக்கு மாற்றலாகிப் போனதால் , தானும் பள்ளியை மாற்றிக் கொண்டான். இதை அவன் எனக்கு சொன்ன போது , அவனது அப்பா செல்வதற்கு இவன் எதற்கு போக வேண்டும் என்பது எனக்கு அப்போது புரியவே இல்லை.

அதுதான் அம்மா இருக்கிறார்களே , வீடு இருக்கிறது , உணவும் இருக்கிறது என்றெல்லாம் எண்ணினேன். ஒருவேளை நாம் நம் அப்பாவிற்கு உதவி செய்வது போல இவனது தேவை இவனுடைய அப்பாவிற்கு தேவை போல என புரிந்து கொண்டேன்.

ஆனால் பாடங்களைக் குறித்த தெளிவை உண்மையிலேயே நடேசனிடமும், சந்தரிடமும் பகிர்ந்து கொண்ட போதுதான் பெற்றேன். இயல்பாக கணித்ம் நன்றாக வந்த்தால் அது ஒன்றே இதர பாடங்களுக்கும் அவர்களது ஆலோசகனாக இருக்க போதுமானதாக இருந்த்து. மேலும் நடேசனும் , சந்தரும் தட்டாரத் தெருவில் இருந்த்தாலும அவர்கள் வீட்டில் சென்று படிக்க முடிந்த்து.
சந்தர் பாட சம்பந்தப்பட்ட ஏதாவது விஷயங்களை அவனது வீட்டில் சொல்லாமல் விட்டிருப்பான். இது எனக்கு தெரியாமல் பலசமயம் இது குறித்து இயல்பாக நான் கேட்டதால் , பதில் சொல்ல முடியாமல் தடுமாறுவான். இதற்காக அவனது அப்பாவிடம் இருந்து பரிசும் கிடைக்கும். இப்படி எல்லாம் தர்மசங்கடங்களை நான் தந்திருப்பினும் ஒரு நல்ல உற்ற நண்பனாக எனை புரிந்து கொண்டிருந்தான்.

உண்மையில் அவன் பெற்றோரிடம் எதையும் மறைக்க ஆசை கொண்டதில்லை. ஆனால் அவனது தந்தை கோபம் வந்த போதெல்லாம் குடும்பத்துக்குள் நடந்து கொண்ட விதமே , அவனை அப்படி செய்யத் தோன்றியுள்ளது என்பதை சிலகாலம் கழித்து புரிந்து கொண்டேன். அதே சமயம் எனது வெகுளித்தனத்தால் பல சமயம் மாட்டிக் கொண்டாலும ஒரு முறை கூட என்மீது விரோதம் பாராட்டாத்து மட்டுமல்ல , மிகுந்த உற்ற நண்பனாகவும் இருந்தான்.

நடேசன் அவனது அக்கா வீட்டில் தங்கி படித்தான். அவனது சொந்த ஊர் திருச்செங்கோடு பக்கத்தில் ஏதோ ஒரு கிராம்ம். அவனது மாமா பொதுப்பணித்துறையில் பொறியாளராக இருந்தார். பணிகளுக்கு இடையே எங்களது பாடங்களை குறித்து கேட்பதுடன் , எங்களுக்கு உற்ற நண்பனாக இருந்து வந்தார். அக்கா படிப்பை பற்றி பேச மாட்டார்கள். ஆனால் அன்போடு கவனித்துக் கொள்வார்கள்.

இவர்கள் மட்டுமல்லாது இன்னும் சில அற்புதமான தெய்வங்களாக உறவுகள் கொண்டு எனக்கு நிறைய கற்றுத் தந்த்தோடு , தகுந்த புரிதலையும் ஏற்படுத்தின.

அத்தெய்வங்களை உங்களுக்கு தரிசனம் தர அழைத்து வரச் செல்வதால் அதுவரை கருணையோடு காத்திருங்கள்

இதோ நானும் வந்துவிடுகிறேன்

No comments:

Post a Comment