நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 19
சிரஞ்சீவிகள்
நாமக்கல்லில் வந்து இறங்கிய போது மாரியம்மன் திருவிழர் ஆரம்பம் ஆகியிருந்த்து
. இந்த வருடம்தான் குன்னக்குடி வைத்தியநாதன் சிறப்பு கச்சேரிக்கு
அழைக்கப்பட்டிருந்தார் என நினைக்கிறேன். வாழ்க்கையில் முதல் முதலாய் நேரில் பார்த்து
ரசித்த இசைக்கச்சேரி . சாதரணமாக சினிமா பாடல்களை பாடும் ஆர்கெஸ்ட்ரா
கச்சேரிகளைத்தான் ஏற்பாடு செய்வார்க்ள்.
திண்டுக்கல் அங்கிங்கு குழுவினர், இசைப்பறவைகள், ராம்ஜியின் அபஸ்வரம் போன்றவை
மிக பிரசித்தமானவை . மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்று இருந்தன. மிக அருமையான
பாடகர்கள் இருந்தார்கள். டிஎம்எஸ், சீர்காழீ , எஸ்பிபி, ஜேசுதாஸ், எல்ஆர் ஈஸ்வரி ,
பி சுசிலா போன்றவர்கள் உடனுக்குடன் உயிர்த்தெழுந்து உற்சாகப்படுத்துவார்கள்.
குன்னக்குடி , இவருக்கு நிகர் இவர்தான். சாதாரணமாக இவரைப் போன்ற கர்நாடக இசை
பாரம்பரியத்தில் இசை பயணம் செய்பவர்கள் அதிகமாக சபாக்களில்தான் நடத்துவது வழக்கம்.
எம் எஸ் சுப்புலட்சுமி போன்றவர்களாவது பாடுவார்கள் இவரோ வயலினில் இசைப்பதால்
எப்படி நடக்குமோ என்ற் பேச்சு நடந்து கொண்டு இருந்த்து. ஆனால் எல்லார்
எதிர்பார்ப்பையும் தவிடு பொடியாக்கினார்.
வயலின் மக்களோடு மக்களாக பேசியது. வாய் மொழி தேவையின்றி போனது. பக்தி
பாடல்களும் ஜனரஞ்சகமான பாடல்களும் மக்களை ஆட்டம் போட வைத்தன. பிற்காலத்தில் இவரது
வரலாறை படித்த போது பிரமித்துப் போனேன். மக்கள் அறிய வேண்டிய மனிதர்கள் , உணர
வேண்டிய மனிதர்கள். சாதகம் என்பதற்கும் உழைப்பு என்பதற்கும் அர்த்தம் தந்த
தெய்வங்கள்.
பிரபலமானவர்களின் உழைப்பை அவர்கள் பிரபலமாவதற்கு முன்பு யாரும் அறிய
முடிவதில்லை. அறிந்தாலும் அந்த காலங்களில் அதை பற்றி பெரிய அக்கறை எவரும்
கொள்வதில்லை . ராகங்களும் பாடல்களும்
தெரியாவிட்டாலும் ரசனையை மேம்படுத்த இசை ஏதோ ஒரு வகையில் செவிகளில் நுழைந்து
கொண்டே இருந்த்து.
இப்படி ஆனந்தமாய் தினங்கள் கடந்த வேளையில் ஒரு நாள் மாலைவேளையில் செமத்தியாய்
அடி விழுந்த்து. அது வேறு ஒரு காரணத்திற்காகவும் அல்ல. சித்தூரில் இருந்து
வந்திருந்த எனது தம்பிகளில் யாரோ ஒரு புண்ணியவான் அங்கு விடுமுறையில் இருந்த போது
ஒரு நாள் வீட்டு மாடி வழியே கூரை மீது இறங்கி அமர்ந்து தில்லாக சிகரெட் பிடித்த்தை
என் அப்பாவிடம் செர்ல்லி நல்ல பெயர் வாங்கியிருந்தான்.
அவருக்கோ தனது கௌரவத்தை காப்பாற்றுவதில் இருந்த அன்பும் அக்கறையும் என் மீது
இல்லாது போனது. அவரது இயலாமை அவரின்
கோபமாய் வெடித்த்து. அதற்கு காரணம் நான் கேட்ட அந்த சொன்ன பதிலும் அதோடு இருந்த
கேள்வியும்தான். ” ஆமாம் பிடித்தேன் அதற்கென்ன இப்போ பந்தயம் வைச்சோம் செஞ்சேன் மத்தபடி அதை டெய்லி
செஞ்சேனா அது முடிந்து போன விஷயம் , இது ஒரு தப்பா ? ”
இது அவரை உசிப்பிருக்க வேண்டும். நான் நேர்மையாக ஒத்துக் கொண்டதை கூட அவர்
மூளையில் பதிய விட வில்லை. முதல் முறையாக அடி வாங்கினேன். இனிமேல் இப்படி செய்ய
மர்ட்டேன் என சத்தியம் செய்யச் சொன்னார். வன்முறையாக பட்டது எனக்கு . சத்தியம் செய்து அதே
கணத்தில் இதை ஒரு நாள் மீறுவேன் என உறுதி எடுத்தேன்.
நான் ஒத்துக் கொண்டதை கூட ஏற்க முடியாத வறட்டு கௌரவத்திற்காக என் வாழ்க்கை
வீணடிக்க விரும்பவில்லை. முதன் முதலாக எனக்கு எது சரியெனப் படுகிறதோ அதையே இனி
செய்வது என தீர்மாணித்தேன் .என்க்கு புரிய வைத்து திருத்துவதைக் காட்டிலும் தனது
கௌரவத்தை காப்பாற்றுவதிலேயே இருந்த்தாக பட்டது எனக்கு. இருந்தாலும அதை வளர்க்க
விருமபாதால் அமைதியாக , எனக்கு எது நல்லது என யோசனை செய்தேன்.
இந்த காலத்தில் வீட்டில் புதிய நபர் நுழைந்தார். அவர் எங்கள் வீதியிலேயே
கடைசியில் இருந்த பேபி அத்தை. எனது இரண்டாவது தம்பியின் பிரசவத்திற்கு பிறகு என்
அம்மாவிற்கு இயல்பாகவே பிளட் பிரஷர் அதிகமாகவே இருந்த காரணத்தால் அதிக ஓய்வு
தேவைப்பட்டது. அதே சமயம் என் அப்பாவின் பணிகளுக்காக பலரும் வந்து செல்ல
வேண்டியிருந்த்து. இதனால் என் பாட்டிக்கு உதவி செய்ய வேண்டி புதிய அங்கத்தினராக
இவர் நுழைந்தார்.
இவரது வாழ்வை பற்றி ஒரு கதையே எழுதலாம். கணவனோ கல்கத்தாவில். நாத்தனார்களின்
பிடியில் இவர். தங்களையும் இவரது பெண் குழந்தையையும் நன்றாக கவனித்துக் கொண்ட
அவர்கள் ஏனோ இவரை அதிகம் கவனிக்க வில்லை என்றே பலரும் பேசினார்கள். எனக்கும்
அப்படியே மனதிற்கு பட்டது. ஆயினும் உண்மை என்ன்வென்று யாருக்கும் தெரியாது.
இவருக்கு ஆஸ்துமா தெர்ந்தரவு வேறு இருந்து வந்த்து.
இந்த சமயத்தில் 10ம் வகுப்பில் 349 மதிப்பெண் பெற்று தேர்வடைந்தேன். வழக்கம்
போல நவக்கிரகங்களை விட சக்தி வாய்ந்த
கிரகங்களை மறுபடி உணர்ந்தேன். பொதுவாக
நவக்கிரகங்கள் ஒருமனதாக ஒத்துழைக்காது எவருக்கும். இவர்கள் அப்படி அல்ல . கடந்த
வருடம் வரை வேலைவாய்ப்புக்கு பாலிடெக்னிக் என்ற இவர்களது பாலிசி மாறி இருந்த்து.
கணக்கில் 100க்கு 4 மதிப்பெண்கள் குறைவானது வருத்தமளித்தாலும ஆங்கிலத்தில் 50+
பெற்றது எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்த்து. எந்த ஆசிரியர் எனது விடைத்தாள்களை
திருத்தினாரோ அந்த முகமறியா தெய்வம் எனக்கு மதிப்பெண்களை விட நம்பிக்கையை அதிகம்
அளித்திருந்த்து. இதை கண்டு எனது அப்பாவின் ஆலோசகர்கள் +1 வகுப்பில் முதல்
குருப்பில் அதுவும் ஆங்கில வழியில் சேர்ந்திட சதி தீட்டினார்கள்.
ஆம் எனக்கு அப்படித்தான் உண்மையிலேயே இருந்த்து . அதுவும் எனது நண்பன் சந்தா
பாலிடெக்னிக்கில் சேர்ந்தான் என்பதை அறிந்தவுடன். நான் படிப்பை முடிப்பதற்குள்
அவன் வேலையில் சேர்ந்து விடுவான் என் நினைத்தேன். ஆனால் நாம் எதிர்பார்த்த
வித்த்தில் நடக்கவில்லை யெனில் இறைவன் நமக்கு இன்னும் அழகான ஒன்றை
வைத்திருக்கிறான் என்று சமாதானப் படுத்திக் கொள்ளுதல் என் வழக்கம் . அந்த வகையில்
இதை மறந்து போனேன்.
எனது நண்பன் ரவியும் நானும் ஒரே வகுப்பு . ரவி மராட்டிய பிராம்மண குடும்பத்தை
சார்ந்தவர். அவனது குடும்பம் அப்போதுதான் எங்கள் வீதியில் ., கோவிந்தன் வீட்டில்
குடிபுகுந்திருந்த்து. அவனது இரு அண்ணன்களும் எங்களது கிரிகெட் டீமில் அங்கத்தினர்
ஆனதால் மீண்டும் கிரிகெட் விளையாட 11 பேர் கிடைத்த்தால் மறுபடி உயிர்த்தெழுந்த்து.
அப்படி யென்றால் இதுவரை மரணமடைந்து இருந்த்து என்று அர்த்தம் இல்லை.
நாங்கள்தான் எமகாத்க கில்லாடிகள் ஆயிற்றே . சில டென்னிஸ் பால் டோர்னமென்களில்
நடைபெறுவதைப் போல டீமுக்கு 8 பேர் மட்டுமே
வைத்து விளையாடக் கற்றுக் கொண்டிருந்த்தோம். சில சமயம் ஆஃப் சைட் மட்டுமே
இருக்கும் .ரவி எனது வீட்டிற்கு அருகில் வசித்த்தால் நண்பனானான். பெரிய குடும்பம்.
அவரது அப்பா நிறைய சில்லறைக் கடன்கள் வாங்குவாராம். அதனால் ஏற்பட்ட பளுவை சமாளிக்க
அவ்வப்போது இடம் மாறி விடுவது சகஜமானது எங்களுக்கு என்று கூறினான்.
தந்தையின் குணம் அறிந்திருந்தாலும் ஒரு போதும் பிள்ளைகள் யாரும் அவரை குறை
சொன்னதில்லை. பல இடங்களில் வசித்த்தால் அனைத்தும் அறிந்தவர்கள் போல் அவரது
அண்ணன்கள் பேசியதையும் கவனித்தேன். உண்மையில் இவர்களது வாழ்க்கை ஒரு பெரிய
புதிர்தான். இவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பது எவருக்காவது புரிந்துவிட்டால்
அவர் இந்த பிரபஞ்சத்தின் சூத்திரத்தையே அவிழ்த்து விடுவார் என்பது எனக்கு நிச்சயம்.
ஆனால் மிக அழகான மனித்ர்கள். கற்றுக் கொள்ள ஏராளமாய் இருந்தன இவர்களிடம்,
அதுவும் என்னைப் போன்ற எங்கள் வீதியே என் உலகம் என்று இருந்த மக்களுக்கு.
வகுப்பில் ரவி , ஸ்கந்த குமாரின் தம்பி சீதாராமன் , பொதுக்ஸ் என்று
எல்லாராலும் அன்பாக அழைக்கப்படும் செல்வகுமார் , மணி மற்றும் கெமிஸ்ட்ரி
ஆசிரியரின் தம்பி (ஏனோ கிருஸ்துவ பெயர்கள் நினைவில் இல்லை என கண்டர்
கான்வென்ட்டில் படித்த ஆங்கில மேதைகள் அறிமுகமானார்கள். ஆம் என் ஆங்கில அறிவிற்கு
அவர்கள் மேதைகளாகவே தெரிந்தனர் அப்போதய வயதில்.
அதில் பொதுக்ஸ் ,தான் என் ஆங்கில பயத்தை (
எங்களின் - என்னைப் போன்றவர்களின்) போக்கினான். அதற்கு காரணம் நாங்கள் 7ம் வதில்
இருந்து மனப்பாடம் செய்து வைத்திருந்த ஒரே ஆங்கில லெட்டரையும் ( லீவ் லெட்டர்)
தவறாக எழுதி அனுப்பி கான்வெண்ட் இமேஜை கண்ணாபின்னாவாக்கினான். அவ்ன் மட்டும் அந்த
வயதில் அந்த வகுப்பில் அதை செய்யாமல் போயிருந்தால் எனக்கு ஆங்கிலம் என்றென்றும்
தூரமாகிப் போயிருக்கும்.
அடுத்து அந்த இளம் வயது ஆங்கில ஆசிரியர். பணியில் சேர்நது சில வருடங்களே
ஆகியிருக்கும் என நினைக்கிறேன். ஷேக்ஸ்பியரை அறிமுகப்படுத்தினார். அவரது நடிப்பு
கலந்து சொல்லித்த்தந்த விதம் என்னை ஆங்கிலத்தையும நேசிக்க வைத்த்து.
இந்த சமயத்தில் எனது சுப்பு பெரியப்பா வீட்டிற்கு வந்திருந்தார். அவர்
ஷேக்ஸ்பியரின் சீசரை மேலும் ரசிக்க வைத்தார். இவர்கள் வாயிலாக சீசர் , பூருட்டஸ் ,
ஆன்டனி, மற்றும் பல ரோமபுரி மக்கள் என் வாழ்க்கையை அழகுபடுத்தினார்கள்.
இப்படி பல தெய்வங்கள் காலம் கடந்து இன்றும் வாழ்கின்றன. துரியோதனர்களாலேயே பாண்டவர்கள் இன்னமும் நம்
மனதில் நிற்கின்றனர். கிருஷ்ணரை நினைக்கும் போதே சகுனியும் நினைவிற்கு வருகிறான்.
ராவணன் இல்லையெனில் ராமனும் ஒரு சாதாரண அயோத்திய வம்சத்து அரசனாகவே போயிருப்பானோ
என்னவோ ?
விநாயகனும் அனுமனும் வீதிக்கு வீதி கொலு வீற்றிருக்கின்றனர். இவர்களைப் பற்றி
ஏராளமான செவி வழி கதைகள் இன்றும் உலவுகின்றன. அதுவும் சினிமாக்கள் வந்த பிறகு
சிரஞ்சீவிகள் அதிகமாகி போனதாக ஒரு எண்ணம் எனக்குள்
முன் எப்போதும் இல்லாது இறந்தவர்களையும இருப்பவர்களைப் போல் வெண்திரையில்
காண்கிறோம். ஒலி நாடாக்கள் மூலம் இன்றும் தங்கள் குரலை ஒலித்துக்
கொண்டிருப்பவர்களை காண்கிறேர்ம்.
யார் யாரோ பாடுவது போல உருவகப்படுத்திய் மாயையில் தியாகராஜரும், சியாமா
சாஸ்திரிகளும், முத்துசுவாமி தீட்சிதரும், பாபநாசம் சிவனும் இறைவனுக்காக
உருகுகின்றனர்.
யார் யாரோ பேசுவது போல் தன் முகம் காட்டாது வசனகர்த்தாக்கள் பேசுகின்றனர்.
தனித்து வாழும் சிலரிலும் தன் முகம் மறைத்து வாழும் தெய்வங்கள் பல பல.
அவர் தம் வாழ்க்கையில் செய்த தவறுகளை நாமும் செய்யாது நினைவுபடுத்துகின்றன.
அவர் தம் வாழ்க்கையில் தந்த அர்த்தங்களை நாமும் பெற உதவுகின்றன.
இந்த கட்டுரைகளில் வடிவமைக்க முடியாத அளவுக்கு இவர்களது எண்ணிக்கை
எண்ணிலடங்காது விரிந்து நிற்கின்றன . அந்த தெய்வங்களுக்கும் , அவர்களை என்
வாழ்வில் கொண்டு வந்த இத் தெயவ்ங்களுக்கும் எனது நன்றிகளை தெரிவிக்க
கடமைபட்டுள்ளேன்.
ஏனென்றால் இவர்கள் அனைவரும் என்னுள் பாகமாகிப் போனவர்கள் . என்னை எல்லைகளின்றி
விரிய வைத்தவர்கள்.
பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்ல்லாகுமா
என்னென்று நான் சொல்ல வேண்டுமா
பூ ஒன்று கண்டேன் முகம் காண வில்லை
ஏனென்று நான் செர்ல்ல்லாகுமா
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா
நான் பார்த்த் பெண்ணை நீ காண வில்லை
நீ பார்த்த பெண்ணை நான் காணவில்லை
உன் பார்வை போலே என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை
என் விழியில் நீயிருந்த்ர்ய்
உன் வடிவில் நானிருந்தேன்
நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை
கண்ணின் பார்வையையும் காணும் தெய்வங்களையும் கண்ட காட்சிகளாய் பிபி
ஸ்ரீனிவாசும் டிஎம்எஸ்ம் வானொலியில் விவரித்துக் கொண்டிருந்தார்கள்
இத்தகைய பல சிரஞ்சிவிகளின் தரிசனத்தால் வாழ்வு அல்லோகல்லப் பட்டது என்றால் அது
ஆனந்தமே
அந்த ஆனந்த்த்தை மேலும் பல தெய்வங்கள் என் வாழ்வில் தந்தருளினார்கள்.
அவர்களோடு மீண்டும் திருவீதி உலா வருவேன்
அதுவரை என் தெய்வங்களுக்காக பொறுமையோடு காத்திருங்கள்........................
No comments:
Post a Comment