Friday 19 April 2013

நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் ---20



நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் ---20

இரவுகளின் இருட்டில் நழுவினேன்

சிரஞ்சீவிகளின் தரிசனத்தால் ஆங்கிலம் பற்றிய பயம் போயிருந்த்து. முதல் முதலாக சைக்கிளில் ஊர் சுற்ற ஆரம்பித்திருந்தேன். சித்தூரில் இருந்து பாபாய்  தனது சைக்கிளை பரிசளித்து இருந்தார். பழைய சைக்கிளானாலும் தேவைக்கும் மேலாகவே உழைத்த்து. என் அப்பாவுடன் ஜபங்கள் , ஹோமங்கள் மற்றும் கோவில் பணி என பணிகளுக்கும் செல்ல ஆரம்பித்தேன்.

புரோகித பணிகளுக்கு சென்ற போதும், மந்திரங்களை உற்சாகமாக சொன்ன போதும் , அதுவும் அவர்கள் அதே முனைப்போடும் கவனத்தோடும் செய்யாமல், உறவுகளை குசலம் விசாரிப்பதில் இருப்பதை பார்க்கும் போது, உள்ளே சலிப்பு ஏற்படும்.

இது குறித்து எங்கள் வீட்டில் நான் நடித்துக் காட்டியுள்ளேன். யாகங்களை செய்பவர்கள் மந்திரங்களை பின் தொடர்ந்து கவனமாக சொல்லாது , அவர்களது உறவுகளை வரவேற்பதிலும் இடைஇடையே ஸ்வாஹா எனறு சொல்லிக் கொணடு நெய்யை யாகத்தில் ஊற்றுவதும் நடப்பது , யாருக்காக செய்கிறோம் என்ற எண்ணத்தை தேர்ற்றுவிக்கும்

உதாரணமாக 
வாங்க மாமா வாங்க ..... ஸ்வாஹா
அத்தைய கூட்டிக்கிட்டு வரலயா ....... ஸ்வாஹா
என்ன கொண்டு வந்தீங்க ...................... ஸ்வாஹா என செய்தால் எப்படி ஹாஸ்யமாக , காமெடியாகுமோ அப்படித்தான் பல யாகங்கள் நடந்தன.

இம்மாதிரியான மனநிலையில்தான் பெரும்பாலான மக்கள் அற்புதமான கருவிகளை , விஞ்ஞானத்தை வெற்று சடங்காக்கி இருந்தனர். இந்த நிகழ்வுகளை அதை நடத்தி வைப்பவர்களும் கண்டு கொள்வதில்லை. ஒருவேளை இதையெல்லாம் சுட்டிக் காட்டி அவர்களை முழு கவனத்துடன் இருக்க வைத்தோமேயானால் எத்தனை பேரால் செய்ய இயலும் என்பது யோசனை இருந்த்து.

இதே போன்ற மனநிலையில்தான் யாகத்தை நடத்தி வைப்பவர்களும் இருந்த்தாக நான் உணர்கறேன். வாய் மந்திரங்களை உச்செரித்தாலும் . செல் போனில் எஸ்எம்எஸ் அனுப்பிக் கொண்டோ அல்லது வேறு ஏதாவது ஒன்றின் மேல் கவனத்தை வைத்துக் கொண்டோ இருப்பவர்களை நான் இன்றும்  காசி போன்ற இடங்களில் காண்கிறேன்.

மனம் , வாக்கு , காயம் ஒரே நேர்கோட்டில் ஒன்றிணையாது இருப்பதை கவனிக்கும் போதெல்லாம் இப்படி நாம் இருக்க்க் கூடாது என்று உணர்வேன். அதே போல் பல செலவுகளை படாடோபமாக செய்யும் இவர்கள் புரோகிதர்க்ளுக்கு தட்சிணை தரும் பொழுது மிக அதிகமாக யோசிப்பதும , கணக்கிடுவதும் என் கவனத்தை ஈர்த்த்து. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக இப்பணிகளுக்கு செல்வதை குறைத்துக் கொண்டேன்.

இதற்கு காரணம் மநதிரங்களும் , ஜபங்களும் நமக்காக நாமே செய்யும் போது ஏற்படும் திருப்தி பிறருக்காக செய்யும் போது அவர்களது ஈடுபாட்டையும் எதிர்பார்க்க வேண்டியுள்ளது. ஆனாலும் அவ்வப்போது கோவிலுக்கு பணிகளுக்கு செல்வேன். அதில் இத்தகைய பிரச்சனை இல்லாத்துதான் காரணம்.

இந்த காலகட்டத்தில் என் அப்பா ஹெர்னியா அறுவை சிகிச்சைகாக சித்தூர் சென்றார். அவருக்கு உதவியாக என் அம்மாவும் சென்றார் இதனால் சீனு மாமாவிற்கு உதவியாக காலை வேளைகளில் நானும் கோவிலுக்கு செல்ல வேண்டி இருந்த்து. ஆரம்பத்தில் ஆர்வமாக சென்ற நான் வெகுவிரைவில் களைப்படைந்தேன்.

இதற்குக் முக்கிய காரணம் விடியற்காலையில் எழுந்திருக்க வேண்டியிருந்த்துதான். 6 மணிக்கு முன்பு என்பது கூட மிக அதிகமான எதிர்ப்பார்ப்பாக இருந்த்து. அதைவிட வேறு ஒரு காரணமும் இருந்த்து. அது வகுப்பு நேரங்களில் களைப்பின் மிகுதியால் மந்தமாக உணர்ந்த்துதான். குறிப்பாக இது இயற்பியல் வகுப்பிலும் தாவரவியல் வகுப்பிலும் பாடங்களை ஆசிரியர்கள் ஆர்வமாக எடுத்தாலும் எனக்கோ போர் அடிக்க ஆரம்பித்த்து.

விடியற்காலையில் எழுந்து இருப்பதும் , கோவில் வேலைகளுக்கு பிறகு அவசர அவசரமாக பள்ளிக்கு செல்வதும்தான் என் மந்தநிலைக்கு காரணம் என வெகுநாட்கள் நினைத்திருந்தேன். .அது மட்டுமல்ல அந்த பாடங்கள் ஏனோ எனக்கு ஈர்ப்பு வரவில்லை. அதுவும் ஆங்கில வழி என்பதால மிகவும் தடுமாறினேன்.

என் அப்பாவோ உடல் நிலை தேறியிருந்த போதும் ஏனோ திரும்ப வர மனம் இல்லாத நிலையில் இருந்தார். எனக்கு இது சற்று கோபத்தை உண்டு பண்ணியது. முக்கியமாக காலையில் கோவில் பணி , பள்ளி வகுப்பில் மந்த நிலை , ஆங்கில வழி கல்வியால் ஏற்பட்ட போராட்டம் என அனைத்தும் சேர்ந்து எனக்குள் தடுமாற்றத்தை உண்டு பண்ணியது.

இங்கே குடும்ப டாக்டர் பரமசிவத்திடமே சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கலாமே எனத் தோன்றியது.  நாமக்கல் நகரே உண்மையில் டாக்டர் பரமசிவம் மற்றும் டாக்டர் நாகராஜன் ஆகியோருக்கு என்றும் நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

டாக்டர் நாகராஜன் 76களில் நாமக்கல் அரசாங்க மருத்துவமணையில் வேலை பார்த்து வந்தாலும் கடைவீதியில் மாலை வேளைகளில் மருத்துவம் பார்த்து வந்தார்.குழந்தைகள் நல மருத்துவர். என் அம்மாவிற்கு கடைசி பிரசவத்தை பார்த்தவர்.

எனது தம்பி சுரேஷ் எனது அம்மாவிற்கு மூன்றாவது பிரசவம், அப்போது என் அம்மாவிற்கு பல்வேறு உடல் உபாதைகள் இருந்தன. உப்பு அதிகமாக இருந்த காரணத்தால் பிரசவத்திற்கு முன்பு பத்தியம் இருந்தார்க்ள். பிரசவத்தின் போது ஜன்னி கண்டது மட்டுமல்லாது ரத்த அழுத்தம் மிக அதிகமாக கூடியது. மேலும் கருப்பையில் புண் ஏற்பட்டது என்று நினைக்கிறேன். இதன் காரணமாக 3 , 4 மாதங்களுக்கு மேல் தினசரி டாக்டரிடம் செல்ல வேண்டியிருந்த்து.

அம்மாவை கூட்டிச் செல்வதற்காக குதிரை வண்டி சரியாக இரவு 8 மணிக்கு வீட்டிற்கு வந்துவிடும். அம்மாவுடன் நரசு பாட்டியும் செல்வார்கள். சில சமயம் நானும் குதிரை வண்டி பயணத்திற்காக சென்றுள்ளேன். டாக்டர் நாகராஜன் மிக பொறுமையாக , நிதானமாக மருத்துவ ஆலோசனைகளை வழங்குவார்.

ஒரு டாக்டரிடம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வே நமக்கு ஏற்படாது. ஏதோ நம் குடும்ப உறுப்பினர் போல பழகுவார். கடைவீதியில் இருந்து எங்கள் வீதியில் இருந்த கோவிந்தன் வீட்டிற்கு பின்பு மாறினார். 6 மாத கால தினசரி பராமரிப்பிற்கு பின் அம்மாவின் உடல்நிலை தேறிவந்தாலும் உயர் ரத்த அழுத்தம் கலையாது தங்கிவிட்டது.

டாக்டர் நாகராஜன் மதுராந்தகத்திற்கு மாற்றலாகி போன பிறகு ரங்கர் சன்னதி தெருவில் கிளினிக் வைத்திருந்த டாக்டர் பரமசிவம் குடும்ப டாக்டராகிப் போனர்ர். இவருக்கும் நாமக்கல் முழுவதும் நல்ல பழக்கம். அதுவும் சொந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதால் எப்போதும் கூட்டம் இருக்கும்.

இவர்கள் காலத்திற்கு பிறகு சிறந்த குழந்தைகள் நல மருத்துவராக எனது தம்பி அனந்துவுடன் படித்தவரும் , எனது வகுப்புத் தோழி புவனாவின் சகோதரனும் ஆன டாக்டர் கார்த்திகேயன் சொந்த ஊரில் சிறந்த பெயரை பெற்றுள்ளார் என்பது எனக்குள் மகிழ்வைத் தரும்.

அதே சமயம் டாக்டர் பரமசிவத்திடம் சிகிச்சை எடுத்திருந்தால் அறுவை சிகிச்சைக்கு பின்னால் அவருக்கு கிடைக்க வேண்டிய ஓய்வு முழுமையாக கிடைத்திருக்காது என்பதையும் என்னால் உணர முடிந்த்து. 

ஆனால் பண்டிகை காலங்களின் நெருக்கம், சீனு மாமாவை முழுபொருப்பையும் பார்த்துக் கொள்ளச் சொல்ல முடியாத ஏக்கம் , பாட்டியின் எதிர்பார்ப்புகள் என இவைகளே படிப்போடு சேர்ந்து  அழுத்த்தை தந்த்து.

ஒருவழியாக அப்பா திரும்பி வந்து தனது பொறுப்புக்களை பெற்றுக் கொண்டு என்னை கோவில் பணியில் இருந்து விடுவித்தார். இந்த காலத்தில்தான் என் அப்பாவிற்கு மாதசம்பளம் ரூ 300 தான் என்பதை தெரிந்து கொண்டேன். எப்படி என்கீறிர்களா ? கடந்த சில மாதங்களாக நான் தானே கையெழுத்து போட்டு பெற்று வந்தேன். எப்படி இந்த  தொகையில் குடும்பத்தை நிர்வகித்தார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்த்து.

இந்த நிலையில் பேபி அத்தை இறைவனடி சேர்ந்தார். எலும்பும் தோலுமாக இருந்தாலும் உடல் ஒத்துழைக்கும் வரை ஒயாமல் உழைக்கும் குணம் படைத்தவர். இவரது நிலை என் பாட்டி உணர்ந்திருந்தார் போல தோன்றியது. வேலைக்காக இவர் வந்தாலும் குடும்பத்தில் ஒருவராகவே கருதப்பட்டார். காலையில் எங்களோடு அமர்ந்து பழைய சாதம் சாப்பிடுவார்.

ஆனாலும இவரது நாத்தனார்களை பற்றி ஒரு குறையும் எவரிடத்தும் பேசியது இல்லை. இவரது குழந்தையை நன்றாக வளர்த்து வந்த்தே இவருக்கு போதுமானதாக இருந்த்து. ஒயாமல் உழைத்தவர் ஒருநாள் அமைதியாகிப் போனார். அவரது கணவர் வராமலே காரியங்கள் நடைபெற்றது. கல்கத்தாவில் இருந்து எப்படியோ ஒரு வழியாக ரயில் பிடித்து 3 தினங்களில் வந்து சேர்ந்தார். மீண்டும் அவர் கல்கத்தா செல்லவே இல்லை.

அப்போது முதல் முதலாக பள்ளி ஆசிரியர்களும் அவர்களது நண்பர்களும்  சேர்ந்து ஒரு டுடோரியல் சென்டர் ஆரம்பித்து இருந்தார்க்ள். கணக்கு பாடத்திற்கு டியுஷன் சேரச் சொல்லி அழைப்பு வந்த்து.

நானோ காலை மாலை கோவில் பணி செல்ல வேண்டி இருந்த்தால் எனது கணக்கு ஆசிரியர் டியுஷனுக்கு அழைத்த போது என்க்கு செல்ல நேரமில்லாது போனது. அது மட்டுமல்லாது கணக்கு கண் மூடிக் கொண்டு போட்டாலும் எப்படியோ மிகச் சரியாகவே செய்து வந்தேன்.

உண்மையில் ஆங்கிலம்தான் தடுமாறச் செய்த்து. இயற்பியலும் , தாவரவியலும் போரடிக்கச் செய்தன . ஆதலால் அதற்குத்தான் எனக்கு உதவி தேவைப்பட்டது. நானும் , கெமிஸ்ட்ரி ஆசிரியரின் தம்பி இருவரைத் தவிர அனைவரும் டியுஷன் சென்றார்கள். +1 ல் ஆல் பாஸ் என்றார்கள் சில்ர் . சிலரோ டியுஷன் போக ஒத்துக் கொள்ளாத்தால் பெயில் ஆக்கப்படுவோம் என்று பயமுறுத்தினார்கள்.

அப்பாவின் உடல்நிலை காரணமாக அவ்வப்போது அவருக்கு உதவி செய்ய வேண்டியிருந்த்து. இதன் மூலம் கிடைத்த வருமானத்தால் கிரிக்கெட்டும் நன்றாக விளையாட முடிந்த்து. அவ்வப்போது கடைகளில் நொறுக்கு தீனியும் சாப்பிட முடிந்த்து. சைக்கிள் பயணங்கள், விளையாட்டு , வேலை என ஓயாது சுற்றியதால் சினிமாவிற்கு செல்வதும் , கடைகளில் சுண்டல் மற்றும் நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதும் , டீ குடிப்பதும் வழக்கமாயிற்று. மேலும் இதற்கான தேவைகளை பணிகள் பூர்த்தி செய்து வந்தாலும களைப்பும் பசியும் அதிகமாக உணர்ந்தேன்.

நான் மிக ஆர்வமாக தனது பணிகளில் பங்கு பெறுவதாக எண்ணி என் அப்பாவும் என்னைக் கேட்காமலேயே பணிகளை ஒப்புக் கொண்டு சொல்ல ஆரம்பித்தார். இப்புரோகிதங்களில் வருமானம் இருந்த போதும் , அவர்களின் முழுமையான ஈடுபாட்டை என்னால் உணர முடியாத்தால் ஆத்மார்த்தமாக செய்ய வேண்டிய விஷயங்களை மேலோட்டமாக செய்வது போன்று உணர்வு ஏற்பட்டது. இது குறித்து எதுவும் செய்ய இயலாமை, பொருளாதார நிலை ஆகியவை கோபமாக அவ்வப்போது வெளிப்பட்டன.

ஆனால் இந்த கோபத்தை தனிக்கும் விதமாக பாலியில் விஷயங்கள் வாழ்க்கையில் நுழைந்தன. சிறு வயதில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒரிரு சம்பவங்கள் நடந்த போதும் இந்த காலகட்டத்தில் பல விதங்களில் வெளிப்பட்ட அத்துமீறல்களுக்கு அடிமையானேன். இதனோடு சேர்ந்து இயற்கையின் தடுமாற்றங்கள் கவனத்தை ஈர்த்தன.

இக்காலகட்டத்தில் சிலர் என்னுள் ஆழமான பாலியல் உணர்வுகளை தூண்டினார்கள். அவர்களுடைய கனவுகள் என்னை உண்ர்வுகளுக்குள் தள்ளியது,  என்னை தவறாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்று சொல்ல இயலவில்லை. அவர்களும் இயல்பாக சந்தோஷத்தையே தேடியுள்ளார்கள் அது அவர்களுக்கு தெரிந்த வழி முறையில், அவ்வளவுதான்

மேலும் பொருளாதார சூழல் , தங்கை அல்லது அக்காவின் திருமணத்திற்காக தானும் காத்திருக்க வேண்டிய சூழல் , அல்லது திருமண்ம் செய்வதற்காக ஒரு நிரந்தர வருமானம் தரும் வேலைக்காக காத்திருத்தல் மற்றும் பெண்களுடன் பழகுவதில் இருந்த சமுக மற்றும் ஆசார கட்டுப்பாடுகளால் அவர்களை புரிந்து கொள்ள இயலாமை என பல காரணங்களால் அவர்களை கட்டுப்படுத்தி வைத்திருந்தது வாழ்க்கை. 

போதாக்குறைக்கு சிறுவயதில் இருந்தே இந்த இயற்கையை ஏற்றுக் கொள்ளமுடியாத வகையில் சுற்றியுள்ளவர்களால் உருவாக்கப்பட்ட எண்ணங்கள், பருவத்தின் வயதில் இயல்பானது என்று உணரமுடியாத அளவிற்கு ஏதோ பாவச் செயலாய் சித்தரித்த அனைத்து மதபோதகர்கள் என பல்வேறு காரணங்கள் அடங்கியிருந்தது. 

இதனால்தானோ என்னவோ பழங்காலத்தில் ஆணோ , பெண்ணோ 20 வயதிற்குள் திருமணத்தை முடித்தனர். இதன் மூலம் உணர்வுகள் அவர்களை ஆக்ரமிக்கும் வயதில் அதை நெறிப்படுத்திக் கொள்ள சூழல் அமைந்தது. 

ஆனால் பெரிய குடும்பம் , பொருளாதார தேடல் , முற்போக்கான சிந்தனைக்ள் என இந்த காலகட்டத்தில் அவை அதற்கே உரிய குறைபாடுகளுடன் முளைக்க ஆரம்பித்தன. Every action has equal and opposite reaction என்பதைப் போல ஒவ்ொன்றிலும்   ஏதோ  ஒரு  சௌகரியமும் ., குறைபாடும்  சேர்ந்தே   இருந்தன.

இதனால்   எப்போதாவது   பக்க விளைவுகள்  ஏதும்   இருக்காது   என்றும் , எல்லா    ோய்களுக்கும்  ஒரே   மருந்து   என்று   சீனாவின்  பழங்கால  முலிகை   மருந்துகள்   என்ற   விளம்பரங்கள்   உலா   வநத் போது ஆமாமாம் , பக்க விளைவு   ஏற்படுவதை  உணரும்  வரை  உயிரோடு    இருந்தால்தானே  என்று   கிண்டல் செய்வேன்  நான்.

த்தகைய நிகழ்வுகள் , பெரும்பாலும அனைவரும் சேர்ந்து தூங்கும் போது நிகழ்ந்த காரணங்களால் ,  நானும் தூங்குவது போல நடித்து விழித்திருக்க ஆரம்பித்தேன் என்று சொல்லலாம். மேலும அந்த வயதில் நானும் அதை அந்த வயதிற்கேற்ப ரசித்தேன் என்கிற போது எப்படி அவர்கள் மீது மட்டும் பழி சுமத்த இயலும்.

ஆனால் இதிலும் நன்மை இருக்கவே செய்த்து. பகலில் தெரிந்த மனிதர்களுக்குள் இருட்டில் இன்னொருவர் வாழ்வது புலப்பட்டது. அந்த இன்னொருவர் என்னை இரவில் விழீக்க வைத்திருந்த்தார்.

இது தினசரி நிகழ்வு அல்ல என்றாலும் இத்தகைய மனிதர்கள் இருக்கும் இட்த்தில் இரவு தங்க நேர்ந்தால் இந்த அத்து மீறல்களை எதிர்பார்த்து விழித்திருந்தேன்.  மற்ற இடங்களிலும் இவர்களைப் போன்றவர்கள் இருப்பார்களோ என இரவுகளில் உறக்கம் கலைந்தது.

அவ்வப்போது என ஆரம்பித்து , அடிக்கடி என தொடர்ந்து, அனுதினமும் நான் தனியாக படுத்து இருந்த போதும் காரணமே இன்றி விழித்திருக்க ஆரம்பித்தேன். இது இருட்டை மேலும் ரசிக்கச் செய்த்து.

வீட்டின் முற்றத்தில் ஊடுறுவும் வானத்து நிலவின் ஒளி பல வண்ண விஷயங்களை அள்ளித் தெளித்த்து. தோட்டத்தில் கேட்ட கீச்சாம்பூச்சிகளின் பேச்சுகளும், இருட்டில் பறக்கும் மின்மினிப் பூச்சிகளின் விளக்கொளியும் , கூடத்தில் படுத்திருந்த மக்களின் கனவுகள் என்னவாக இருக்கும் என்கிற எண்ணங்களும் ஆனந்தமாய் இருட்டை ரசிக்க வைத்திருந்தன.

இரவு சினிமா முடிந்து செல்பவர்கள் விமர்சனங்கள் , எப்போழுதாவது ஏதாவது கேட்கும் பெரிசுகளின் பேச்சுக்கள், அடங்கிப் போன இரவின் அமைதி என அனைத்தும் கவனிக்கலானேன்.

எதற்காக இப்படி பேந்த பேந்த விழித்துக் கொண்டிருக்கிறேன் என்பது போல் எனக்குத் தோன்றும். அதே சமயம் அந்த இரவுகள் எனக்காக ஏதோ ஒன்றை தன்னிடத்தே மறைத்து வைத்திருப்பது போலவும் தோன்றும் . எப்போது தூங்குவேன் எனத் தெரியாது.

பெரும்பாலும் தூங்க ஆரம்பித்த கணங்களில் பாட்டியோ அல்லது அப்பாவோ எழுந்து காப்பி போட ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்து இருப்பர். மேலும் நான் இப்படி விழித்திருப்பதை உணர்ந்து விட்டார்கள் போலும் , பலருக்குள் அந்த இன்னொருவரை காண இயலவில்லை. ஆயினும் என்னை விழிக்கச் செய்த அந்த மனிதர்களின் அவர்களுக்குள் இருந்த அந்த இன்னொரு தெய்வங்களுக்கே நான் கோடி நமஸ்காரங்களை செய்ய வேண்டும்.

ஏனெனில் வெகுசிலரே ஆயினும்.  இந்த நரநாராயணர்களே என்னை எனக்குள் விழிக்க வைத்தவர்கள். எந்தன் இரவு வானத்தை நட்சத்திரங்களாய் முதல் முதலில் அலங்கரித்தவர்கள். அந்த இரவு வானத்தையும் இந்த நட்சத்திர தெய்வங்களையும் உணர்ந்திராவிட்டால் இன்று ஒரு முழு நிலவையும என்னால் ரசித்திருக்க முடியாது.

அந்த நிலவின் குளிர்ச்சியில் ஆனந்தமாய் இதமான் கதகதப்பை உணர முடியாது போயிருக்கும்.

இவர்கள் எல்லாம் சாதாரண மானுடர்கள்தாம். வாழ்க்கை அவர்களை வறுமையில் வைத்திருந்தாலும் உள்ளத்தில் நல்ல வளத்துடன் வாழ அனுபவத்துடன் அவர்களுக்கு கற்றுக் கொடுத்திருந்த்து.

செடிக்கு உரமாகும் கழிவுகளைப் போல பல தடைகளை கடந்து பலரை மலராய் மலர வைத்திருந்தார்கள். அவற்றின் நறுமணத்தால் பொருளாதாரம் புதிய நிலையை அவர்தம் வாழ்விலும் , அவரை சர்ர்ந்தவர் வாழ்விலும் எட்டியது என்றால் அது மிகையில்லை.

இன்று வரை அவர்கள் தம் வறுமை காலத்தை குறை கூறியதே இல்லை. ஊடல்களும் சாடல்களும் அவர்களுக்கும் அன்பை பலப்படுத்தவே செய்தன. இதை அவர்தம் குழந்தைகள் அனுபவிப்பதை நான் காண்கிறேன்.
உண்மையில் இந்த அற்புதமான சூழல் இன்றைய சமுகத்திற்கு இனி கிடையாது என்றுதான் சொல்லவேண்டும்.  இவர்களால் இருட்டை இயல்பாக ரசிக்க முடியாது என்பதால் தான் பெரிய பெரிய ரெஸ்டாரண்ட்களில் கேண்டில் லைட் டின்னருக்கு கொட்டிக் கொடுக்கின்றனர்.

இரவுகள் மென்மையானவை , அது ஒரு இளம் பெண்ணின் கதகதப்பில் ஒளிந்து கொள்ளும் சுகம். வெற்று சரீர சுகமல்ல. மனதை கிறங்கடிக்கும் மயக்கம்.  அந்த மயக்கத்தை உணர்ந்தவர்கள் மானுடப் பெண்ணுக்கு மயங்குவதில்லை.

இரவுகள் தேவியின் கருவரை.  அதில் புகுந்து கொள்ளும் மனிதன் அற்புதமான உலகை தன்னுள் உணர்கிறான். அதனால் இந்த புறஉலகு தன் மாயையை இழக்கின்றது. தன் வலிமையை இழக்கின்றது. இதனால் தான் சாக்தம் எனப்படும் தேவி வழிபாடுகள் பெரும்பாலும இரவிலேயே நடக்கின்றன என கேள்வி பட்டுள்ளேன்.

கனவைப் போல விரிந்த வாழ்க்கையின் கிறக்கத்தில் மயங்கி கிடக்கிறேன்.
சற்று நேரத்தில் விழித்த்தும் மீண்டும் உலா வருவேன் இன்னும் பல தெய்வங்களோடு

அதுவரை காத்திருங்கள்.......................

No comments:

Post a Comment