Friday, 5 April 2013

நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 13

நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 13

நவராத்திரி தேவதைகள்

ஒன்றே செய் நன்றே செய் அதுவும் இன்றே செய் எனச் சொல்வார்கள். அப்படி இருக்க குறிப்பிட்ட ஒரு நாளுக்காக மட்டும் காத்திருப்பது என்பது வாய்ப்புகளை இல்லாது போகச் செய்திடலாம். மறுபடி அத்தகைய வாய்ப்புகள் வந்தாலும் வரலாம் அல்லது வராது போனாலும் போகலாம்.

ஆனால் இன்றும் இத்தகைய நம்பிக்கைகள் ஒரு மனிதனுக்கு அசாத்திய பலத்தை அளிக்கின்றன என்று உளவியலாளர்க்ள் இன்று ஒப்புக் கொண்டு உள்ளனர். பாலகுமாரனின் தலையணைப் பூக்களில் கதையின் 13வது அத்தியாயத்தில் அப்பாவிற்கும் பையனுக்கும் நடைபெறுவதாக ஒரு சம்பாஷனை வரும்.

எதற்காக இறைவனிடம் வேண்டுவது என்பதைப் பற்றி பையனின் சந்தேகத்தை அப்பா போக்குவதாக பாத்த்திரங்களை பேச அழகாக வைத்திருப்பார். வாழ்கையின் கடினமான நேரத்தில் கோவிலுக்கு சென்று இறைவனிடம் மனம் விட்டு பேசுவது என்பது ஒருவனது மனச் சுமையை மிகவும் குறைத்து இலேசாக்கி விடுவதால் அவனுக்குள் தெளிவு பிறக்கிறது. தேவையான பலம் வருகிறது. தற்போது அதை கையாள தேவையான பக்குவம் பிறக்கின்றது.

இதற்கு காரணம் சமுக உறவுகளில் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசும் சூழல்கள் இல்லாது போவதால்தான். அதைக் காட்டிலும் . அவரிட்ம் இதைச் சொன்னால் அவர் என்ன நினைப்பாரோ என்பதும், வேறு எவரிடமாவது சொல்லி விட்டால் ..... என்ற கேள்வியும், நம்பிக்கைகுரிய சூழல் இல்லாமையும்  நாம் நாமாக இருப்பதற்கும் , நாம் நினைத்த மாறு செயல் புரிவத்ற்கும் தடையாக இருக்கின்றன.

இப்படி உள்ளே ஒன்று இருப்பதும் ஆனால் வெளியே வேறு விதமாக நடிப்பு போடவும் சிறுவயதிலிருந்தே சமுகம் நமக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பித்து விடுகிறது. இதனால்தான் வள்ளலார் , உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவுதனை கலவாமை வேண்டும் என வேண்டுகிறார்.

இன்றைக்கு பகுத்தறிவு என்கிற போர்வையில் கோவிலுக்கு செல்வதை தவிர்ப்பவர்கள். உளவியல் ஆலோசகர்களிடம் சென்று காசு கொடுத்து அனைத்தையும் சொல்லி இலகுவாகின்றனர் என்பதை அறியும் போது என்னே பேதமை என்றே நினைக்கத் தோன்றுகிறது. நமது சம்பிரதாயங்களின் விஞ்ஞானத்தை உணர்ந்திடாது, வெற்று புத்தக அறிவை நம்புகிறோம்.

அதே சமயம் அறிவுப் பூர்வமாக சிந்தித்தால் இது முட்டாள்தனமான மூடநம்பிக்கையாகவும் தெரிகிறது. இத்தகைய மூடநம்பிக்கைகளை ஷேக்ஸ்பியர் தம்து கதைகளில் மிக அழகாக கையாளுவார். 

இன்றும் கூட நமது கிரிக்கெட் உலகில் இக்கதைகளுக்கு சிறிதும் பஞ்சமில்லை. தான் விளையாடுவதில்தான் ஆட்டத்தின் போக்கு இருக்கிறது என்பதை உணர்ந்தாலும் , முதல் சில பந்துகளை வீசுவதிலும் , முதல் சில பந்துகளை பேட் செய்வதிலும் உளவியல் மிக அதிகமாக சோதனைக்குள்ளாகிறது.

இதை அந்த ஷணத்தில் மிகச் சரியாகவும் லாவகமாகவும் கையாளுபவரே ஆட்டத்தின் போக்கை நிர்ணயிக்கின்றார். எத்தனை அனுபவம் வாய்ந்தவரையும் இந்த உளவிய்ல் கீழே தள்ளி விடுகிறது. இதே ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற (1983) புருடென்சியல் உலக் கோப்பை இந்தியாவின் விளையாட்டு வரலாறில் மிக முக்கியமான ஒன்று.

அதுவும் மிகப் பெரிய ஜாம்பவான்களாக திகழ்ந்த வெஸ்ட் இன்டீஸ் அணியை தோற்கடிப்பது என்பதே யாரும் நினைத்து பார்க்க் முடியாத்தாக அந்த காலகட்டத்தில் இருந்த்து. ரேடியோவில் கேட்ட வர்ணனைகள் உலகின் பல ஆட்டக்கார்ர்களை, இங்கிலாந்தின் பல மைதானங்களை கண் முன்னே விரியச் செய்த்து.  பலரும் கையில் ஒரு டிரான்ஸ்சிஸ்டருடன் அலைந்தார்கள்.

ஜிம்பாப்வேயுடனான ஆட்டத்தின் போது 5 விக்கெட் இழப்பிற்கு 17 ரன் குவித்திருந்த இந்திய அணி கபில்தேவின் 175 ரன்கள் மூலம் மனதளவில் மாபெரும் சக்தி பெற்றது. இதைக் குறித்து இன்றும் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்கள் பேசுகின்றனர்.  ஆட்டத்தைக் குறித்து பேசும் போதே அவர்கள் இத்தகைய நம்பிக்கையின் காரணமாக , தாங்கள் அம்ர்ந்திருந்த சேர்களில் இம்மி அளவு கூட அசையாது பல மணி நேரங்கள் அமர்ந்திருந்தைக் குறிப்பிடுகின்றனர்.

ஒருவேளை சிறிது அசைய நேர்ந்து அங்கு கபில் அவுட் ஆகி விட்டால்....... என இப்போது 25ம் ஆண்டு கொண்டாட்டத்தின் போது கூட அதைப் பற்றி பேட்டி கொடுக்கின்றனர். இந்த நம்பிக்கை சரியோ தப்போ எனக்கு தெரியாது . ஆனால் மனிதனுக்கு நன்மையே செய்கின்றது என்றே நான் இன்று உணர்கிறேன். 

எத்தனை ஆசனா செய்தாலும் , யோகப் பயிற்சிகள் செய்தாலும் , தியானத்தின் போது ஆடாமல் அசையாமல் சில மணி நேரங்கள் அனைவராலும் அமர்ந்திருக்க முடிவதில்லை அப்படி இருக்க இந்த அசைவற்ற நிலையில் அனைவரும் , அதுவும் கவனம் சிதறாது அமர்ந்திருக்க வேண்டுமெனில் ............எங்கிருந்து இச்சக்தி மனிதனுக்குள் பிறக்கின்றது.

கபில்தேவ் என் ஹிரோவாகிப் போனார். சுரேஷ் அண்ணா. வல்லுனர் மணியின் வாரிசு ஸ்பின்னர் முரளி . அவனது சகோதரன் நரசிம்மன் போன்ற சிறந்த வர்ணனையாளர்களோடு மற்றும் பலர் இணைந்து எங்களது வீதியில் தினமும் நடைபெற்ற எக்ஸ்ட்ரா கிரிக்கெட் . ஆட்டத்தையும் ஆடுபவர்களையும் பற்றி ஆழமாக அறிய முடிந்த்து. ஆப் ஸ்பின் பவுலிங்கை விட்டு வேகப் பந்து வீச்சிற்கு மாறினேன். என்னை நம்பி ஓவர் கொடுக்கும் அளவிற்கு இக்கால கட்டத்தில் டீமில் வள்ர்ந்திருந்தேன்

இப்படி கிரிக்கெட் வீர்ர்கள் மற்றும இன்றி வல்லுநர் மணி போன்ற வர்ணமையாளர்களும் என் கிரிகெட் வாழ்கையை செதுக்கி, எனையும் ஒரு கிரிக்கெட் விளையாட்டு வீரனாக உருவாக்கும் பிரம்மாக்கள் ஆயினர் .இப்படிப்பட்ட சமயத்தில்தான் அந்த கிழமை மீண்டும் என் வாழ்வில் வந்த்து. அது குருவாரம் என்று அழைக்கப்டும் வியாழக்கிழமை.

அது என்னவோ தெரியவில்லை, வியாழக்கிழமைக்கும் என் வாழ்விற்கும் ஒரு ஆழமானதும அன்னியோன்யமானதுமான தொடாப்பு எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இருக்கின்றது. இது இன்றும் கூட தொடர்கின்றது. என வாழவின் அனைத்து முக்கிய மைல்கற்களோ அல்லது திருப்பு முனையோ அது எதுவாயினும் அதை வியாழக்கிழமையே கொண்டு வந்த்து.

அப்படி ஒரு வியாழக்கிழமையில்தான் இநத் முறை நாகாஜல குருக்கள் நவராத்திரி விழா மற்றும் விநாயகர் சதுர்த்தி உற்சவ அலங்காரங்கள் செய்வது குறித்து அப்பாவிடம் பேச வீட்டிற்கு வந்து இருந்தார்கள். இவருக்கும் சேந்தமங்கலமே பூர்வீகம். இவரது தந்தை மணி குருக்கள் எங்கள் குடும்பத்தினருக்கு நன்கு பழக்கம்.

சேந்தமங்கலம் அக்ரஹாரத்தில் , அநுசியா அத்தை வீடு , நாகம் பாட்டி வீடு இரண்டுக்கும் எதிரே இவரது பூர்வீக இல்லம். தற்போது திருச்செங்கோட்டில் அரப்பளீஸ்வர்ர் ஆலயத்தில் பணி புரிந்தார். சேந்தமங்கலத்தில் அவரது மாமா இருந்தார். அநுசியா அத்தையின்அப்பாவும் , சத்தி மாமாவின் அப்பாவும் எனது பாட்டியின் சகோதர்ர்கள் ஆனதாலும் , அனைவருக்கும் சேந்தமங்கலமே பூர்வீகமாக இருநத்மையர்ல் மணி குருக்கள் குடும்பத்தினர் எங்களுக்கு முன்னரே பழக்கமாயிருந்த்து.

இவர்கள் சிவாச்சாரியார்கள் வழியில் வந்தவர்கள். கோவில் குடமுழுக்கு மற்றும் சிவ பூஜைகளோடு , திருவிழாக் காலங்களில் கோவில்களில் உற்சவ விக்ரகத்தை பல விதமாய் அலங்காரங்களை செய்து வருவார்க்ள். இத்தகைய அலங்காரப் பணிகளில், வைணவ ஆலயங்களில் வைஷ்ணவ்ர்களும் இதர ஆலயங்களில் சிவாச்சாரியார்களுமே பெரும்பாலும் செய்து வருகின்றனர்.

என் தந்தை பணிபுரிந்த கன்னியகா பரமேஸ்வரி மடத்தில் நவராத்திரி விழா 9 நாளும் இருவேளை அலங்காரங்களுடன் விமரிசையாக கொண்டாடப்படும். அதே போல் அவர்களது ந்ந்தவனத்தில் உள்ள விநாயகருக்கு , விநாயகர் சதுர்த்தி அன்று சந்தனக் காப்புடன் கூடிய அலங்காரம் , சில சமயம் நவக்கிரகங்களுக்கும் அலங்காரங்கள் செய்வார்கள்.

நாகாஜலத்தின் சிறுவயதில் இருந்தே என் தந்தையுடன் பழக்கம் இருந்த்தாலும எங்கள் குடும்பத்தோடு மிக உரிமையுடன் பழகுவார். மேலும் நாங்கள் சிறுகுழந்தைகளாக இருந்த காரணத்தால் எங்களது தொந்தரவுகள் அவருக்கு மிக பிடித்து போயிருந்த்து,

இந்த முறை என்னையும் அலங்காரம் செய்ய கற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்தினார். பொதுவாக ஈடுபாடு காட்டாத நான் , இந்த நாளின் மேல் கொண்டிருந்த நம்பிக்கையில் , ஈடுபாட்டில் சரி என அவருக்கு எடுபிடி ஆகினேன்.  இது மட்டுமல்லாது, நவராத்திரி ஒன்பது நாளும் எனக்கும் கொண்ட்டாட்ம்தான்.

அதற்கு பல காரணங்கள் இருக்கின்றது. ஆரத்தி தட்டில் இருந்து கிடைக்கும் சில சில்லரைகளுக்கு சந்தனக் கடை ஜெயராமன் கடையில் கற்பூர மிட்டாய் வாங்கலாம். பூஜைக்காக தினமும் சர்க்கரை பொங்க்ல் மற்றும் சுண்டல் கிடைக்கும். இதை எல்லாம் விட நாகாஜலம் அண்ணா கொண்டு வரும் புளியோதரை சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்கலாம். குருக்கள் வீடுகளில் புளியோதரை இப்படித்தான் இருக்குமா எனத் தெரியாது .

ஆனால் இவரது அம்மா செய்யும் புளியோத்ரையை இறைவனுக்கு நைவேத்தியம் செய்தால் கண்டிப்பாக கடவுள் உயிற்பெற்று எழுந்து வரும் என்பது போன்ற நம்பிக்கை எனக்குள் இருந்த்து. இதே போன்றுதான் சனீஸ்வர பகவானுக்கு அபிஷேகங்கள் தரும்போது , நைவேத்தியத்திற்காக எள்ளு சாத்ம் செய்திட எனது பாட்டி 2 தினங்கள் மெனக்கெடுவார். அந்த ருசி இதுவரை எந்த எள்ளு பொடியிலும் வந்த்து இல்லை.

ஆஞசநேயர் கோவில் வடைமாலை வடை, ஸ்ரீரங்கத்து பெருமாளின் புளியோதரை , திருப்பதி லட்டு என  இறைவனுக்காக செய்யப்படும் பதார்த்தங்கள் இயல்பான நாட்களை விட அதிக சுவையை பெறுவதுடன் . இறைவனைக் காட்டிலும் அதிகமாக மக்களை ஈர்க்கின்றன என்பதை என் அனுபவத்தில் கண்டுள்ளேன். இச்சுவை சமையல் பதார்த்தங்களை விட அவர்களின் ஈடுபாட்டினாலும், பக்தியினாலும் மட்டுமே ஏற்படுகின்றது என்று எண்ணுகிறேன்,

அவர் கொண்டு வரும் புளியோதரையை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் என்பதால் , அவர் அம்மாவை அதிகமாகவே செய்து தரச் சொல்லி எடுத்து வருவார். என் தந்தைக்கும் இது மிக பிடிக்கும்.  அதுவும் இதில் கெட்டி தயிர் கலந்து சாப்பிடும் போது ஏற்படும் சுவை இன்னமும் கொஞ்சம் நம்மை சாப்பிட வைக்கும்.

இவை மட்டுமல்லாது பூஜைக்கு வரும் மக்கள் முன்னிலையில் நாம் கவனிக்கப்படுவது மகிழ்ச்சியை தரும். இப்படி பல காரணங்கள் இருந்த்தால் அவருக்கு உதவியாளராக பணி புரிந்த்திட ஒத்துக் கொண்டேன்.

மேலும் இந்த விழாக்களுக்கும் சரி எங்களது குடும்ப விழாக்களுக்கும் சரி இன்னொரு நபர் முக்கியமாக தவறாமல் பங்கெடுத்துக் கொள்வார். அவர் நாதஸ்வர வித்வான் வேணுகோபால். இவருடன் இருந்த அன்றைய தவில் வாசிக்கும் பெரியவ்ர் மிகுந்த மரியாதையை வெளிப்படூத்துவார்,

சினிமா பாடல்கள் மூலம் பெற்றிருந்த இசை அறிவும் ஆர்வமும் இவரால் வளர்க்க்ப்பட்டு ,கீர்த்தனங்களை பற்றி அறிய முடிந்த்து. இந்த 9 நாட்களும் அனைவரும் மடத்திலேயே த்ங்குவதால் பல விதமான மனிதர்கள், பலருடைய அனுபவங்கள் என காலம் எனக்கு நிறைய பரிசளித்த்து.
இந்த உற்சவங்கள் ஆயுத பூஜை நாளன்று இரவு 12 மணிக்கு அநேகமாக அனைவரும் பூஜைகளை முடித்தவுடன், சேலம் ரோட்டு சந்திப்பில் திரு ஜனார்த்தன் செட்டியர்ர் தனது மளிகைக் கடை பூஜையை வைத்திருப்பார். 

எதற்காக இவ்வளவு நேரம் என்று பலசமயம் யோசித்திருக்கிறேன். இந்த நாளில் கூட வியாபாரத்தை விட மனமில்லை போலிருக்கிறது என்று சிலசமயம் எண்ணியும் உள்ளேன். ஆனால் பூஜை செய்ய் வருபவர் எந்த வித அவசரமும் இன்றி , ஆனந்தமாக தன்னையே அர்பணித்து ,முழுமையாக ஈடுபட் ஏதுவாக அந்த நேரத்தை அவர் தேர்ந்தெடுத்து உள்ளார் என்பதை பின்னால் அறிந்தேன். அதனால் அவர் மீது இன்னும் மதிப்பு கூடியது.

அந்த உற்சவ விக்ரகங்களை (தெய்வங்களை) எல்லாம் அழகு படுத்தியதைப் போலவே, நாகாஜலமும் , நாதஸ்வர வேணுகோபால் போன்றவர்கள் தன் அண்மையால்  என்னையும் எனக்குள்ளே அழகு படுத்தியிருந்தார். அதனால் இந்த சம்பிரதாயங்கள் , திருவிழர்க்கள் மற்றும் பூஜைகள் பற்றிய என் கணிப்பு மாறி இருந்த்து.

நாம் நம்முள் இறைநிலை உணர்வதற்காக ஞானிகள் , நமது உணர்வுகளை வழிமுறைப்படுத்திக் கொள்ள எவ்வளவு அழகான வழிமுறையை உருவாக்கியுள்ளனர் என்பதை அறிந்தேன். 

குழந்தைக்கு விதவிதமாக அலங்காரங்களும், உடைகளும் அணிவிக்கும் போது ஒரு தாய்க்கு எவ்வளவு ஆனந்தம் ஏற்படுமோ அப்படி, தன் வாழ்வை ஆனந்தமாக உணரும் ஒரு மனித்ன், தன் வாழ்வு இவ்வளவு ஆனந்தமாகவும் அழகாகவும் அமைந்திட அதற்கு பங்களித்த முகமறிந்த மற்றும் முகமறியாத மக்களுக்கு நன்றி வெளிப்படுத்திட முனையும் போது ஏதோ ஒரு முகம் அவனுக்கு தேவைப்படுகிறது.

அந்த தெய்வத்தின் முகம் தேடி மீண்டூம் ஒரு கிராமத்திற்கு பயணமானேன்

அந்த கிராமத்து தெய்வங்களை அலங்காரம் செய்து அழைத்து வரும் வரை காத்திருங்கள்

நானும் அவர்கள் தங்கள் அலங்காரத்தை முடிக்கும் வரையில் உங்களோடு காத்திருக்கின்றேன்.

No comments:

Post a Comment