நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 21
எது கனவு எது நிஜம்
இப்படி கவனங்கள் சிதறி இருந்தாலும் தேர்வுகளை என் நண்பன் ரவி உதவியர்ல்
நன்றாகவே எழுதினேன். விலங்கியல் படிப்பிற்கு பேப்பர் கஷ்டமானாதால் எங்களது
வகுப்பாசிரியர் புத்தகம் வைத்து எழுத அனுமதித்தார். பல அறிவு ஜீவிகளைத் தவிர என்னை
போன்ற சில ஆங்கில வழி தடுமாற்றங்கள் நோட்ஸ் மற்றும் புத்தகம் வைத்து எழுதினோம்.
உண்மையில் இப்போதுதான் எது எந்த பாடத்தில் வருகிறது என்பது அதிகம் தெரிய வேண்டியிருந்த்து,
மனப்பாடம் செய்து எழுதுவதைக் காட்டிலும் மிக்க் கடினமாக இருந்த்து
தேர்வுகள் முடிந்த போது லஷ்மி அக்காவின் தங்கை சாவித்திரிக்கு திருமணம்
நிச்சயமாகி இருந்த்து. மணமகன் ரமணாவும் சித்தூர் ரமா அத்தையின் பையன் என்பதால் இரு
பக்க சொந்தமாகி இருந்த்து, அதற்காக சித்தூர் பாட்டி மற்றும் தம்பி, தங்கைகள்
வந்திருந்தனர். அன்றுதான் திருச்சி நரசுப் பாட்டியும் வந்திருந்தார். கிரிகெட் விளையாடி வநத் நான் அவரது அன்பில்
நனைந்திருந்தேன்.
அப்போது என்னடா உடம்பு சரியில்லை போலிருக்கு இப்படி கொதிக்குது என்று கேட்டார்கள் ஆனா இப்படியே போய் விளையாடிட்டு
வர்றியே எனச் சொன்ன போதே என் உடல் உஷ்ணத்தை உணர்ந்தேன்..அதெல்லாம் ஒன்றுமில்லை நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் கையில் கொப்பளம்
வந்துள்ளது அதனால் சிறிது காய்ச்சல் எனக் கூறிய போது, அதைப் பர்ர்த்து
விட்டு என் அம்மாவிடம் காட்டினார்கள்.
என் அம்மாவும பாட்டியும் என்னை பக்கத்தில் காலியாக இருந்த கணபதி மாமா
வீட்டிற்கு அழைத்து சென்றார்கள் . பின் அப்பாயி வந்தார். எனது சர்ட் மற்றும்
டிராயரை கழட்டச் சொல்லி உடலைப் பார்த்து , அம்மன் இறங்கியிருப்பதாக கூறினார்.
விளையாட்டம்மை என்பதால கவலைப்பட வேண்டாம் . 2 , 3 தினங்களில் சரியாகிப் போய்விடும்
என்று கூறினார்,
திருமண ஏற்பாடுகளும் , உறவினர்களும் , குழந்தைகளுமாய் இருந்த்தால தனிமை
படுத்தப்பட்டேன். அப்பாயி அருகிலேயே இருந்தார். அம்மா சாப்பாடு கொண்டு வந்து
வாயிலருகில் வைத்துச் செல்வதோடு சரி .
விளையாட்டு அம்மை வேறு பல அம்மைகளோடு சேர்ந்து வந்த்தாக அப்பாயி அம்மாவிடம்
பேசினார்கள்.
வேப்பிலையில் படுத்து இருந்தேன் . அப்படியும் குறைந்த பாடில்லை. பெரிய அம்மை
போட்டிருப்பதாக கூறினார்கள். அம்மாவை மாரியம்மன் கோவிலுக்கு குளித்த ஈரத்துணியுடன்
சென்று தினமும் காலை மாலை தண்ணீர் ஊற்றி வேண்டிக் கொண்டு வரச் சொன்னார்கள்.
அப்பாயியும் அதையே செய்தார்கள். அப்பொழுதே அவர்களை அருகில் கவனித்தேன்
மிகுந்த பக்தியுட்ன் செய்தார்க்ள். இடுப்பு பகுதியில் ஒரு துண்டை மட்டூம்
போர்த்தி குழந்தை போல பாதுகாத்தார்கள். இச்சமயத்தில் மாரியம்மன் பண்டிகைக்கு
காப்பு கட்டப்பட்டது. அம்மையின் வேகத்தில் பிதற்றலானேன். உடல் கொதித்த்து. நாளாக
நாளாக இன்னும் அதிகரித்த்தே தவிர குறைந்த பாடில்லை.
ஒருநாள் காலை அம்மா அப்பா இருவரையும குளித்து ஈரத்துணியோடு மாரியம்மன்
ஆலயத்திற்கு போய் வரச் சொன்னார்கள். அதற்கு முன்னதாகவே அப்பாயி தானும் போய்
வந்திருந்தார். அவர்கள் வந்தவுடன் 1 ரூபாய் நாணயத்தை ஒரு மஞசள் துணியில் கட்டி (
இது போல 2 செய்து) ஒன்று மாரியம்மனுக்கும் , குலதெய்வத்திற்கும் வேண்டிக் கொண்டு
என் படுக்கையின் இருபுறமும் வைக்கச் சொன்னார்கள்.
பிள்ளை பிழைத்தால் முடி இறக்குவதாக மாரியம்மனுக்கு வேண்டிக் கொள்ள
சொன்னார்கள். அடுத்த 3, 4 தினங்கள் (தான் சொல்லும் வரை) யாரையும் வரவேண்டாம் என்று செர்ல்லிவிட்டார்கள்.
அம்மாவைக் கூட வீட்டிற்குள்ளேயே விடவில்லை. எனக்கு நினைவுகள் தவற ஆரம்பித்தன
அப்பாயி அருகில் அமர்ந்து தைரியம் சொன்னார்கள். குலதெய்வம் நாமகிரியை
நினைத்துக் கொள்ளச் சொன்னார்கள். உடல் முறுக்கேறியது போல கீழேயே படுக்க
முடியவில்லை. நினைவுகள் தவற ஆரம்பித்தன. அப்பாயியை பார்த்துக் கொண்டிருந்தேன்.
உடல் வில் போல வளைநதிருந்த்து. அதோடு நினைவு கழன்றது.
பின் நினைவு வந்தபோது அம்மா கண்ணில் தண்ணீரோடு நின்றிருந்தார். 4 , 5 தினங்கள் கழித்து முதல் தண்ணீர் ஊற்றும் போது 3 தினங்கள்
முழுதாய் நினைவின்றி கிடந்த்தாய் அப்பாயி சொன்னார். உயிர் பிழைத்து
வந்த்தற்கு நன்றி தெரிவிக்க அவர் அவரது மருமகளைக் கொண்டு மாரியம்மன் கோவிலில் பொங்கலிட்டார்.
சித்திரை மாத வெயில் முழுதாய் 21 நாட்கள் கடந்து போய் இருந்த்து. முதுகு
வலிக்க ஆரம்பித்த்து. 3 தண்ணீர் உற்றிய பிறகு என் வீட்டின் முன் அறையில் கொண்டு
வந்து படுக்க வைத்தார்கள். கேகேஆர் மண்டபத்தில் கோபு மாமாவின் இரண்டாவது
புதல்வி சாவித்திரிக்கும் ரமா அத்தையின் புதல்வன் ரமணா பாவாவிற்கும் திருமணம்
நடந்து கொண்டிருந்த்து.
ராதா அத்தை திருமணத்திற்கு முந்தைய நாள் வநது என்னை கவனித்துக் கொண்டதன் மூலம்
என் அம்மாவிற்கு சற்று ஓய்வளித்தார்கள். அனைவரும் என்னையும் ஒரு காட்சிப் பொருளாய்
வந்து பார்த்துப் போனார்கள். நானே பலகீனமாய் பெரும் பொழுது நித்திரையில்
இருந்தாலும் அவர்களது குரல்கள் என் நினைவில் ஆழுமாய் எதிரொலித்த்து.
முகூர்த்த்ம் நடக்க இருந்த போது தந்தி வந்த்து. திருமண வீடு என்பதால் அங்கு
கொடுக்காமல் எங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி இருந்தார்கள். அது அனுப்பூர் மாமா ,
அதாவது சாவித்திரியின் அக்கா லக்ஷ்மி அக்காவின் மாமனார் தவறிப் போன செய்தி.
அம்மாதான் கையெழூத்து இட்டு வாங்கினார்கள்.
மூகூர்த்த்ம் முடிந்த கையோடு விபரம் ஏதும் சொல்லாமல் லக்ஷ்மி அக்காவையும்
அம்புலு அத்தையையும் கோபு மாமாவையும பாலாஜி பாவாயையும் வீட்டிற்கு அவசரப்டுத்தி
அழைத்து வந்தார்கள். வந்தவர்களிடம் விபரம் ஏதும் சொல்லாது லக்ஷ்மி அக்காவிற்கு
தாம்பூலம் தர வைத்து பின் செய்தி சொல்லி சமாதானப்படுத்தி அக்காவை உடன் ஒருவருடன்
அனுப்பி வைத்தார்கள் . ருமுக்குள் இருந்தாலும் இந்த நிகழ்வுகளை காதால் கேட்டுக்
கொண்டிருந்தேன்
திரும்பிச் செல்லும் போது கோபு மாமாவும் அம்புலு அத்தையும் சில நிமிடங்கள்
எனதருகே வந்தார்கள். என்ன ஒரு அற்புதமான மனிதர்கள்.. இந்த திருமணத்தின் போதோ
அல்லது லக்ஷ்மி அக்காவின் திருமணத்தின் போதோ தான் பாலாஜிக்கும் முன்னால் அவர்களது
குடும்பத்தில் ஒரு அண்ணன் இருந்த்தை அறிந்து கொண்டேன்.
அவர் படிப்பை தொடர முடியாது சேலத்தில் ஹோட்டல் பணிக்கு சென்றதாகவும் தீடிரென
அவரது மறைவுச் செய்தி மட்டுமே அறிந்த்தாகவும் சொல்வார்கள். உண்மையில்
இக்குடும்பங்களை , இந்த அழகான தெய்வங்களை சந்தித்த்து என்னுடைய பாக்கியம்தான்.
உயிரோட்டமான தெய்வங்கள். இன்று லக்ஷ்மி அக்காவின் பையன் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி
பெற்று இந்திய அரசாட்சிப் பணியில் உள்ளான் என்று கேள்விப்டும் போது , இந்த வெற்றிக்கு காரணம் இந்த தெய்வங்களே என்றே
என் உள்மனம் நெகிழ்கிறது.
களைப்பாக படுத்திருந்த சமயத்தில்தான் எனது +1 ரிசல்டை ரவி சோகமாக வீட்டில்
சொல்லிவிட்டுச் சென்றான். புரிந்து கொண்டேன். நானும் கெமிஸ்ட்ரி
ஆசிரியர் தம்பியும் பெயில் ஆனதாக அறிவிக்கப்பட்டு இருந்த்து. க்ண்களில் நீர்
வழிந்த்து பெயில் ஆனத்ற்காக அல்ல கணக்கில் பழி வாங்கப்பட்டதற்காக
ஆம் ஆங்கிலத்தில் கூட பெயில் ஆகவில்லை கணக்கில் 2 மதிப்பெண்கள் குறைவாக
பெற்றிருந்தேன் .. இது சாத்தியமில்லை என்பது தெரிந்தாலும என் உடல் இயலாமையால் ,
கண்ணீர் வழிவதைத் தவிர வேறு எதுவும் சாத்தியமாகவில்லை.
முதல் முறையாக கோவில் பணி மீதும் வெறுப்பு வந்த்து . முழு ஈடுபாட்டுடன் நான்
ஈடுபட்ட போதும் யாருக்காக செய்கிறோமோ அவர்களோ சிரத்தையில்லாமல் பங்கு கொள்ளும்
புரோகிதங்களின் மீதும் கோபம் திரும்பியது. இந்த முறை அப்பா எனக்கு எதிராக பேச
தயங்கினார். என்னை சமாதான படுத்தவும் முயன்று தோற்றார். எந்த வேலை செய்தாலும் சரி
புரோகித்த்தில் மட்டும் ஈடுபடப் போவதில்லை என்று எனக்குள் உறுதி எடூத்தேன்
மீண்டும் + 1 . கணேஷ் என் வகுப்பு தோழனானான், அவனோடு சாலைமாணிக்கம் நண்பனானான்.
மோகனுர் கண்ணன் எங்கள் பென்ஜின் இன்னொரு அங்கம். இவன் ஒரு ஆர் எஸ் எஸ் உறுப்பினர்.
இவர்களோடு திருச்சி ரோட்டின் மாருதி காலணியில் இருந்து வந்த முரளி மிக நெருக்கமான
நண்பனானான். இவர்கள் காரணமாக இந்த தடவை என் அப்பாவின் பணிகளில் இருந்து த்ப்பிக்க
வேண்டி டியுஷனுக்கு ஆரம்பத்திலேயே ஒத்துக்கொண்டேன்,
மோகனூரில் இருந்து வந்த மோகன் எனபவரும் , பாபு வாத்தியாரும் பழ்க்கமானார்கள்.
இவர்கள் இருவரும் கோட்டை நாகராஜன் அவர்களிடம் இருந்து தனியே வந்து ஆரம்பித்து
இருந்தார்கள்.
கோட்டையில் நரசிம்ம சுவாமி கோவிலை ஒட்டி கார்னேஷன் சத்திரம் என்று ஒன்று
இருக்கும். அதன் காம்புவுண்டு சுவரை ஒட்டி உள்ளே செல்வது போன்ற இடைவெளியில் நேராக
கடைசியில ரோட்டை பார்த்த வித்த்தில் ஒரு வீடும் , அதன் வலது புறம் ஒரு விறகு கடையும்
இருக்கும். இதை ஒட்டிய சுவற் ஒரு பஜனை மடம் .
இதில் பாதி ஓடுகள் வேய்ந்து தாழ்வாரமாகவும் , மீதி பாதி வெட்டவெளியாகவும
இருக்கும் . அதை ஒட்டிய சுவற்றில் ரோட்டோரத்தில் ஒரு சைக்கிள் கடை இருக்கும்.
இங்குதான் எங்களது டியுஷன். மாலை வெயில் மலையில் பட்டு நம்மை கிறங்கடிக்கும்
மோகனும் சரி பாபுவும் சரி நான் சந்தித்த மிக அற்புதமான மனிதர்கள். பட பட வென
பேசும் இயல்பு உடைய மோகனுக்கு எதிராக மென்மையாக பேசும் பாபு . அதே சமயம் வகுப்பு
எடுக்க ஆரம்பித்தால் இருவருடைய அணுகுமுறையும் அதே விதமாய் எதிர் எதிராய்
இருக்கும். குரலை உயர்த்தி பேசுவார் பாபு , மோகனோ குழைந்து நெளிவார். எப்படியோ
இருவ்ருக்கும் ஒரு அற்புதமான புரிதல் இருந்த்து.
ஏற்கனவே படித்த வகுப்பும் , பாடமும் என்பதால் வாழ்க்கை எளிதாகியிருந்த்து.
மேலும் அப்பாவும் என் உணர்வுகளை புரிந்து கொண்டு அவரின் பணிக்ளுக்கு அழைப்பு
விடாமல் தவிர்த்து இருந்தார். இதை நானும் புரிந்துகொண்டேன். அதனால் இயல்பாகவே மிக
கடுமையாக இருக்கும் நாகபஞசமி மற்றும் ஆயுதபூஜை ஆகிய தினங்களுக்கு மட்டும் உதவியாக
இருந்தேன்.
அல்லது என்றோ ஒரு நாள் கோவில் பணிகளை மட்டும் கவனித்துக் கொள்வேன் அதன் மூலம்
அப்பாவும் சீனு மாமாவும் தங்களது பணிகளை கவனிக்க ஏதுவாக இருந்த்து. மற்றபடி
படிப்பு எல்லாம் டியுஷனோடு மட்டுமே.
அதுவும் கணித்திற்கு மட்டுமே டியுஷன். மற்றபாடங்கள் 60 சதவிகித்த்தறிற்கு மேல்
வாங்கி இருந்த்தால் ஒரளவு புரித்ல் இருந்த்து. அதனால் நானே சமாளித்துக் கொண்டேன். டியுஷன்
நாமகிரி அம்மன் சன்னதிக்கு அருகே இருந்தமையால் டியுஷன் முடிந்தவுடன் நேராக
வீட்டிற்கு செல்லாது நாமகிரி அம்மன் சன்னதியில் போய் அமர்ந்திருப்பேன்.
தொடர்ந்து செல்வதும் , அம்மன்
கோவிலுக்கு எதிரே மண்டபத்தில் அம்மனை பார்த்தவாறு அமர்ந்திருப்பதும் அல்லது அம்மன்
கோவிலுக்கு வெளியே நரசிம்ம சுவாமியின் துவஜஸ்தம்பத்திற்கு அருகே ஒரமாக தூணில்
சாய்ந்து அமர்ந்து அம்மன் கோவிலின் விமானத்தை பார்த்திருப்பதோ ஒரு வித்தியாசமான
உணர்வை ஏற்படுத்திய்து
நாளைடைவில் போகாவிட்டால் ஏதோ இழுந்த உணர்வு ஏற்பட்டது. இனம் புரியாத பந்தம்
ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் வகுப்பின் போது நான் தூங்குவதாக கணேஷ் , சுந்தர்
மற்றும் சாலைமாணிக்கம் போன்றவர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள். உண்மையில் கண்கள்
முடியதில்லை ஆனால் வகுப்புகள் கனவு போல் இருந்தன. எது நிஜம் எது கனவு என
புரியவில்லை
வகுப்பு ஆரம்பித்த சில நிமிடங்களில் கண்முன்
நிற்கும் ஆசிரியர் வெகுதூரமாகிப் போவார். அவர் பேசுவது எதுவும் எண் காதில் விழாது
. நான் தூங்கவில்லை என்று உணர்த்துவது போல் எனது பக்கத்தில் அமர்ந்திருந்த கணேஷையும்
, எதிர் பென்ஜில் அமர்ந்திருந்த சாலை மாணிக்கத்தையும் பார்ப்பேன். இப்படி
அடிக்க்டி பார்த்தாலும், பார்ப்பது நினைவிருந்தாலும சில நிமிடங்களில் எவர் முகமும்
கண்டிருக்கமாட்டேன்.
வெட்டவெளி விரிந்து நிற்கும். ஏதோ ஒரு கணத்தில் என் பேனாவோ அல்லது புத்தகமோ
அல்லது நானோ நழுவிப் போவேன் . அப்போதே பெரும்பாலும உணர்வு வரும் ஆனால் அது சில
நொடிகளுக்குத்தான். மீண்டும் என் வெளிக்குள் நழுவிவிடுவேன். எது எப்படியோ சரியாக
வகுப்பு முடிவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு முழு உணர்வு பெறுவேன்.
அடிக்கடி நடக்க ஆரம்பித்த்து. முதலில் களைப்பின் மிகுதியால் தூக்கம் என்று
எண்ணிய நான் , நாமகிரியின் சன்னதி அருகே அமர்ந்திருந்த போதும் இதே அனுபவம்
தொடர்ந்தபோது எவரிடமும் விளக்கம் கூறுவதை தவிர்த்தேன். என்ன நடக்கிறது என்று
புரியாத போதும் , அவர்கள் பாணியிலேயே நான் தூங்குகிறேன் என்று சொல்ல ஆரம்பித்தேன்
தூக்கமா விழிப்பா என்பது புலப்படாமலே இருந்த்து. விரிந்த அவ்வெளியில்
இம்மக்களும் இருந்தார்கள். எப்படி சரியான நேரத்திற்கு துவங்கி வகுப்பு முடிவதற்கு
முன் மிகச் சரியாக நான் உணர்வு பெற்றேன் என்பது ஆச்சரியமாகவே இருந்த்து. வர வர மிக
இயல்பாக பழக்கமாகிப் போனது.
என்னுள் நழுவும் கணமும எந்தன் வெளி பரவும் கணமும் பழக்கமாகிப் போயின. அதே போல்
சரியான நேரத்திற்கு விழிப்பை பெறுவதும் பயத்தை போக்கி இருந்த்து. நண்பர்கள் என்னை
கலாய்த்தாலும நான் எனக்குள் அமைதியாக ஆரம்பித்தேன்.
ஆசிரியர்கள் பாடம் எடுப்பது எங்கோ தொலைவில் கேட்பது போல இருந்தாலும எதுவும்
என் கவனத்தில் தவறவில்லை. பெரும்பாலும் கேள்விகளின் போது தடுமாறியதே இல்லை.
எப்படியோ சரியாக சொல்லிவிடுவேன் ஆனால் அவர் என்ன கேட்டார் அதற்கு சரியாகத்தான்
பதில் சொன்னேனா என்பதற்கு என் நண்பர்களையே நம்ப வேண்டியிருந்த்து.
அதேசமயம் அவர்கள் சொன்னதையும் நம்ப வேண்டித்தான் இருந்த்து , அதற்கு ஆதாரமாக
இருந்த விஷயங்கள் அவர்கள் பக்கம் பக்கமாக ஆசிரியர் புத்தகம் பார்த்து படித்த்தை எழுதி
வைத்திருந்தார்கள் நானோ ஒரிரு பக்கத்திற்கு பிறகு ஒரே புள்ளியில் அனைத்தும்
முடித்திருந்தேன்.
வகுப்பின் போது அவர்கள் ஆசிரியர் நடத்த நட்த்த புத்தகத்தின் பக்கங்களை புரட்டி
இருந்தார்கள் நானோ பெரும்பாலும் ஒன்றோ அல்லது இரண்டு பக்கத்தையே புரட்டி இருந்தேன.
இவைகள் எனக்குள் ஒரு புதிய உலகத்தை உருவாக்கிக் கொண்டு இருப்பதை நான் அறியவில்லை.
ஆனால் ஏராளமான கேள்விகளை அவ்வப்போது எழச் செய்த்து.
நான் வகுப்பில் தூங்கியது போல் இருந்த்து கணேஷ், சாலைமாணிக்கம, சுந்தர்
மற்றும் முரளி ஆகியோருக்கு தெரியும் , ஆனால் எனக்குள் என்ன் நடந்த்து என்பது (ஒருவேளை இதை படித்தாலே மட்டுமே) இதுவரை
தெரியாது.
ஆனால் பலசமயம் நான் இரவுகளின் நெருக்கத்தால் , இரவுகளில் தூங்காமல்
விழிந்திருந்த்தால் மட்டுமே இப்படி நடக்கிறது என்று நினைத்திருந்தேன். இதே போல் இரவுகளில் நான் படுக்கையில்
படுத்திருந்த போதும் விழித்திருந்தேன் என்பது எவருக்கும் தெரியாது. இன்றும் கூட பல
கனவுகள் எனக்கு இப்போது நிஜத்தில் நடப்பது போல் நினைவில் உள்ளது
சில கனவுகளை நான் படமாகவே எடுக்கலாம் அந்த அள்விற்கு பிரேம் பை பிரேம்
நினைவில் உள்ளது. பல கனவுகள் வாழ்க்கையில் அனுபவமாகி உள்ளன. அவற்றை பிறகு
சொல்வேன்.
உதாரணத்திற்கு 1989 லிருந்து 92க்குள் வந்த சில முறை தொடர்ந்து வந்த ஒரு கனவு
பல வருடங்கள் கழித்து 2006ல் தியானலிங்கத்தின் தீர்த்த குளத்தில் (இப்போதைய சந்திர
குண்டம்) மாலை வேளையில் குளித்த போது அட இதுதானா என உணர்ந்துள்ளேன் . ஆயினும் இந்த
கனவுகளுக்கு நான் எவ்வித முக்கியத்துவமும் அளித்த்து இல்லை.
இப்படி ஒரு ஷணம் என் நினைவில் இன்னும் பசுமையாக உள்ளது. அன்று மதியம் பள்ளி
முடிந்து நான், கணேஷ, சாலைமாணிக்கம் ஆகியோர் சைக்கிளில் உணவருந்த வீட்டிற்கு வந்து
கொண்டிருந்தோம்.
மெயின் ரோட்டில் கமலாலய குளத்திற்கு அருகில் ராஜகணபதி கோவில் இருந்த்து. கோவில்
ரோட்டில் அமைந்திருந்த்தால் அந்த இடம் அப்போது சற்று குறுகலாக இருந்த்து, மேலும்
வாகனங்கள் பூஜை போட எப்போதும் நின்றிருக்கும் . இதை கடந்து நாங்கள் வந்த போது சரசர
வென வந்த வாகனங்களர்ல் போக்குவரத்து தடைபட்டது.
சைக்கிளில் வந்த நாங்க்ள் கீழிறிங்கி நின்றோம் . திரும்பி பார்த்தால் எங்கள்
சைக்கிள் அருகே கலைஞர் காரில் அமர்ந்திருந்தார். நாங்கள் மூவரும ஒரு சேர , அட
கலைஞர் வந்துள்ளார் என்று சொன்ன போதே மக்கள் அவரை கண்டு கொள்ள நேர்ந்த்து.
அதற்குள் போக்குவரத்து நகர்ந்த்து.
நாங்கள் இன்னும் சில அடி தூரம் சென்று கடைவீதி அருகே உள்ள தம்மண்ணா புத்தக
நிலையத்திற்கு எதிரே நின்றிருந்தோம். அப்போது கணேஷ் என்னிடம் ஏதோ சொன்னான். நானும்
பதிலுக்கு ஏதோ சொன்னேன். பளிரென்று எனக்குள் மின்னல். இதே இடம் இதே மனிதர்கள் இதே
வார்த்தைகள் இதற்கு முன்பும் நான் கண்டிருக்கிறேன். எவ்வளவு யோசித்தும் எனக்கு
புலப்படவில்லை , ஆனால் எனக்குள் மிக உறுதியாக இருந்த்து
அதே இடம் அதே மனிதர்கள் அதே சூழல் அதே வார்த்தைகள் . இது போன்ற பல நிமிடங்கள் எனக்கு பின்னாளில்
பழக்கமாயின. எந்த தெய்வங்கள் இதை தந்தன எனக்கு தெரியாது. ஆனால் தெரியாத நிலைகளும்
புரியாத உணர்வுகளும் , முன்பு ராமய்யங்கர்ர் சொன்ன வார்த்தைகளும் , நெடிய இரவின்
நீண்ட நிமிடங்களும் என் கால்களை என் பெரும் தெய்வத்தை நோக்கி திருப்பி இருந்தன.
என்மனதிற்குள் ஏனோ இது என் இடம் இல்லை என்ற உணர்வு நிரம்ப ஆரம்பித்திருந்த்து.
என் வீடு என் சொந்தம் என்று எவரையும் கொண்டாட முடியாமல் போனது. என் மக்களே நெருக்கமாக
இருந்த போதும் தூரமாகிப் போவது போல் உணர்வானது,
மலையடிவாரமே என் வசிப்பிடம் என மனதுக்குள் தேட ஆரம்பித்திருந்தேன்.
ஆனால் இந்த திக்கு தெரியாத காட்டில் மேலும் பல தெய்வங்களை , அவர்கள்
ஆசிர்வதித்த நிமிடங்களையும் கண்டுணர்ந்தேன்.
அந்த கண்ணுக்கு புலப்படாத மலையடிவாரத்தையும் அதில் காணப் போகும்
தெய்வத்திற்காகவும என்னையறியாமல் எனக்குள்ளே காத்திருக்க ஆரம்பித்தேன்
அந்த சமயத்தில் எல்லாம் புதிதாக எவரைப் பார்த்தாலும் எனக்குள் அப்போது
வெளிவந்த இந்த பாடல்தான் நினைவிற்கு வரும்
அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன்
தெனற்ல் என்வாசல் தீண்டவே இல்லை
கண்ணீல் வெந்நீரை வார்ப்பேன்
கண்களும் ஓய்ந்த்து ஜீவனும் தேய்ந்த்து
தீபதீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய்
இந்த கண்ணில் சோகம் இல்லை இன்று ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்
பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வாரக்க வா
இந்த வரிகள் எனக்கும் நம்பிக்கையை தந்த்து . என்றோ ஒரு நாள் என் தெய்வத்தை
காண்பேன் என கனவும் நனவும் கலந்து வாழலானேன்
அந்த தெய்வத்தை காண வேண்டி மேலும் பல தெய்வங்களை என் வாழ்வில் சந்தித்தேன்
அவர்களோடு மீண்டும் உலா வருவேன்
அதுவரை காத்திருங்கள்...............................
No comments:
Post a Comment