Tuesday, 2 April 2013

நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 5



நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 5

பிரம்மாண்டத்திற்கு தயாராகிறேன்

ஒருவழியாய் ராஜாஜி ஸ்கூலில் இருந்து தெற்கு மேல் நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பில் சேர தயாரானேன் . எங்களது வீட்டிற்கு எதிரே இருந்த சுப்புதாய் மாமாவின் பெரிய பைய்ன் சுந்தர் , ராஜாஜி பள்ளியில் லக்ஷ்மி டீச்சரிடம் பேசி, டீ,சி வாங்கி வீட்டிற்கு கூட்டி வந்தார்.  என் அப்பாவுடன் என்னை அழைத்துச் சென்று தனக்கு தெரிந்த ஆசிரியருடன் பேசி என்னை அப்பள்ளியிலும் சேர்த்தார் . என் அப்பா கையெழுத்து போட்டு பணம் கட்டியதுடன் சரி .

ஒருவேளை வாழ்க்கையின் ஆழம் அப்போது உணர்ந்திருந்தால் , மறுபடி அந்த நண்பர்களை எல்லாம் (பெரும்பாலானவர்களையாவது) சந்திக்கும் வாய்ப்பு இந்த வாழ்க்கை சுழற்சியில் மிக அரிது  என்று உணர்ந்திருந்தால் அவர்களுக்கு நான் நன்றி சொல்லியிருக்க்க் கூடும்.

வீடுகளும் , பள்ளியும் , வீதிகளும் எல்லைகளற்று இருந்த்தால் பிரிவென்ற உணர்வு எழவேயில்லை . மேலும் எனது மாமா பையன்கள் சுந்தர் , வெங்கடேஷ் , சிவாஜி , சபாபதி, லெப்ட் ரமேஷ் , ஸ்ரீனிவாசன் , எதிர் வீட்டு கண்ணன் , என பெரிய நட்பு மற்றும் உறவு குழாம் மேல்நிலை பள்ளிக்கு சென்றிருந்த்தால் அவர்களுடைய சகவாசம் என்னை மேலும் செம்மைபடுத்தும் என வாழ்க்கை நினைத்திருக்கலாம்,

ஆனால் என் பெற்றோர்க்கு இது பாதுகாப்பை அளித்த்து என்பேன். மேலும் உறவின் முறையாலும் , வீடுகள் அருகருகே இருந்தமையாலும், சிறுவயது முதல் அறிந்தமையாலும் எமக்குள் ஒரு அன்னியோன்னியமும் இயல்பாக வள்ர்ந்து இருந்த்து என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும் , முக்கியமாக எங்கள் அனைவருக்கும் பொதுவாக ஒரு ஈர்ப்பு இருந்த்து , அது கிரிகெட்,

மோகனுர் ரோட்டில் அமைந்த அந்த தெற்கு மேல் நிலைப் பள்ளி (அப்போது + 2 சிஸ்டம் அமலாகவில்லை ) கடல் போன்று பரந்து விரிந்து இருந்த்து. 2000 மாணவர்கள் படித்த அந்த பள்ளியும் வடக்கு மேல்நிலைப் பள்ளியும்தான் அநத் நகருக்கு அப்போது, அனைத்து கிராமங்களில் இருந்தும் மாணவர்கள் சைக்களில் வருவார்கள்,

அன்றைய சேலம் மாவட்டத்திலேயே மிக பெரிய மைதானத்தை கொண்ட ஒரே பள்ளி அதுதான்.  இன்றைக்கு நாமக்கல்லில் மாநில அளவில் நண்பன் படத்தில் வருவது போல் மனப்பாடம் செய்து எழுதவைக்கும் நிறைய கல்வி தொழிற்சாலைகளில் மாணவர்களின் ஆரோக்கியத்தையும் உடல் நலத்தையும் பேணச் செய்யும் மைதானங்கள் இல்லை என்பதை அறிவேன், மேலும் இத்தகை ஒரு பிரம்மாண்டமான ஒரு பள்ளியை இனி எப்போதும் உருவாக்குதல் மிக மிக கடினம் என்பதையும் அறிவேன்.

எங்கள் பெற்றோர்களோ இன்றைய பெற்றோர்களைப் போன்று நிறைய படிக்காத்தால் எப்படியோ மகன் நன்றாக ஓரளவு மார்க் எடுத்து படிப்பை நிறுத்தாது  மேல்படிப்பிற்கு சென்று படித்து முடித்து ஒரு குமாஸ்தா வேலையில் அமர்ந்தாலே போதும் என்கிற நிலையில்  ஆனந்தமடைபவர்களாக இருந்தனர். வருமானத்தின் அளவைக் காட்டிலும் நிரந்தர வருமானம் என்பதே அவர்களது கனவாக இருந்துது, அதனால எனக்கு இது மிக சௌகரியமாயிற்று .

மேலும் இப்பள்ளிக்கு நான் சம்மதித்த காரணம் அங்குள்ள பிரம்மாண்டமான விளையாட்டு மைதானமும், பள்ளியின் தொலைவும். நடந்து செல்ல நேரம் அதிகம் ஆவதால் வெகுமுன்பாக சென்று பள்ளி துவங்குவதற்கு முன்பு 1 மணி நேரம் மண்ணோடு மண்ணாக புரளலாம், அதே போல் பள்ளி முடிந்தவுடன் குறைந்த பட்சம் 6 மணி வரை விளையாடி , வரும் போது மரங்களின் கிளைகளில் பட்சிகளின் சப்தங்களோடு உறவாடி வீட்டிற்கு வந்து உண்டு உறங்கிவிடலாம்.

மேலும் தினமும் பள்ளிக்கு சாப்பாடு தூக்கு போனியில் எடூத்துச் செல்வது எண்ணமே மிக ஆனந்தமாய் இருந்த்து, பரந்து விரிந்த இப்பள்ளிக்கு 4 முக்கிய நுழைவாயில்கள் உண்டு .
நகரின் தெற்கு பகுதியான மோகனுர் ரோட்டில் உள்ள கிராமங்களில் இருந்து வரும் மாணவர்கள் அப்பகுதியின் ஓரத்தில் உள்ள நுழைவாயில் மூலமாக உள்ளே வருவர். நகரின் மையப்பகுதியிலும் , சேலம் ரோட்டின் பகுதியிலும் இருந்து வருபவர்கள் கோர்ட் வளாகத்தை ஒட்டிய நுழைவாயில் மூலமாக உள்ளே வருவர். கோட்டை பகுதி மற்றும் பரமத்தி வேலுர் ரோட்டில் உள்ள கிராமங்களில் இருந்து வருபவர்கள் , தில்லை நகர் பகுதியில் உள்ள பின்பகுதி வழியாக வருவர்,

பள்ளியின் தெற்கு பகுதியில் 6 மற்றும் 7 வகுப்பிற்கான வகுப்புகளுக்கு தனியாக இருந்தன. இன்றைய காலத்தில் அந்த அளவு இடம் இருந்தால் போதும் ஒரு புதிய மனப்பாட தொழிற்ச்சாலையை, கல்வி நிறுவனம் என்ற பெயரில் துவங்கி விடுவர்.
அதற்கு முன்னதாக ஒரு பெரிய ஆலமரம் இருந்த்து. இன்றும் அம்மரம் அப்படியே உள்ளது.  அந்த கட்டிடத்தை ஒட்டிய இடது புறம் கூடைப் பந்து மைதானமும்.  விளையாட்டு பொருள் மற்றும் ஆசிரியர்கள் அறை இருந்த்து, இப்போது நவீன படுத்துகிறோம் என்கிற பெயரில் இந்த விளையாட்டு வகுப்பு அறைகளை மாவட்ட கல்வி அலுவலகமாக்கிவிட்டனர்,

இதற்கு பின்புறம் டென்னிஸ் மைதான்ம இருந்த்து,  இந்த கட்டிடங்களுக்கும் , இ,றைவணக்கம் நடக்கும் மைதானத்திற்கும் இடையே மிக பிரம்மாண்டமாக மைதானம் விரிந்து இருந்த்து, அது 5 பகுதிகளாக பிரிக்கப் பட்டு இருந்த்து ,

விளையாட்டு வகுப்பறைக்கு முன்புறம் கைபந்து மைதானம் . அதற்கு முன்புறம் கால்பந்து மைதான்ம் இருக்கும் அதன் முடிவில் பள்ளியின் முக்கிய நுழைவாயில் இருக்கும். அதன் இருகோடியிலும் 2 நுழைவாயில்கள் இருக்கும்,

முக்கிய நுழைவாயிலில் நுழைந்தவுடன் 1980 களில் கட்டப்பட்ட கெமிஸ்ட்ரி லேப் இருக்கும். அதை கடந்தவுடன் நூறாண்டுகள் கடந்த மிகப் பழமையான கட்டிடம் இருக்கும். இதில் தலைமை ஆசிரியர் அறை, +2 மாணவர்களுக்கான தாவரவியல் லேப் , ஆசிரியர்கள் ஓய்வறை , 10ம் வகுப்பு பாடப்பிரிவுக்ள் அடக்கம் 10 A     முதல் 10 K வரை ஒவ்வொரு வகுப்பிற்கும் 30 மாணவர்கள் இருப்பர், இதற்கு பின்னால் இருந்த கட்டிட்ங்களில் 9ம் வகுப்பு மற்றும் +1 மற்றும் +2 வகுப்புகள் இருந்தன, அதே பகுதியிலேயே இயற்பியல் மற்றும் விலங்கியல் லேப்களும் இருந்தன்

இந்த பின்பகுதி கட்டிடங்களில் தமிழ்நாடு கால்நடை வேளாண்மை பல்கலைக்கழகமே சில ஆண்டுகள் செயல்பட்டது என்பது இப்பள்ளியின் பிரம்மாண்டத்தை உணர்த்தும்,
நடுவில் இறைவணக்கம் நடைபெரும் இடம் கிரிகெட் மைதானமாகும்.  அதை ஒட்டி தடகள வீர்ர்களுக்கான பயிற்சி இடங்களும் அதன் பின்புறம் இன்னொரு கால்பந்து மைதானமும் இருக்கும்

கடைசியில் உள்ள மைதானத்தில் ஹர்க்கி விளையாட . காம்பெவுண்ட் சுவரை ஒட்டி சுடுகாடு தெரியும். காலை நேரத்தில் சுமார் 2000 மாணவர்கள் "    " வடிவில் நிற்பது காண கண்கொள்ளா காட்சியாகும் மாலை வேளைகளில் மாஸ் டிரில் வகுப்புகளும் இதே இடத்தில்தான் நடைபெறும், கொடியை ஒட்டிய மேடையின் மீது நின்று பார்த்தால் மைதானத்தில் எவர் இருந்தாலும தெரியும்.

நூறு ஆண்டுகளுக்கு மேல் சரித்திரமும் வரலாறும் கொண்ட இந்த பள்ளியின் இந்த கட்டிடங்கள் இன்றைக்கு கவனிப்பாரற்று போய் .தரையின் மேல் கரையான் புற்றுக்கள் எழும்பி இருந்த்தை கடந்த 2009ம் ஆண்டு . (14 ஆணடுகள் கழித்து) சத்குருவின் சத்சங்கத்திற்கு சென்று இருந்தபோது கண்டு கண்களில் நீர் வழிய நின்றிருந்தேன்.

இத்தகைய ஒரு பிரம்மாண்டத்தை . இவ்வளவு மாணவர்களுடன் அடுத்த சில ஆண்டுகள் வாழூம் வாய்ப்பை எனக்கு மட்டுமல்லாது எனது நண்பர்களுக்கும் அளித்திட .., பல ஆண்டுகளுக்கு முன்பு அடித்தளம் இட்ட அந்த முன்னோர்களும் எனக்குள் ஒரு பாகமே.
அந்த தன்னலம் கருதாக மக்களும் . அவர் தம் தொலைநோக்கை 1995 வரை சிதிலமடையாது (நான் நாமக்கல் நகரில் இருந்து வெளியேறும் முன்பு வரை) பாதுகாத்தும் , பராமரித்தும் வந்த அத்தனை மகோன்னதமான  மக்களும் என் வணக்க்த்திற்குரியவர்களே

அந்த மனிதர்கள் ஒரு க்ஷணமேனும் தெய்வமாக வாழ்ந்திருக்காவிடில் இன்று என்னுள் இத்தகைய நெகிழ்வு இருக்க வாய்ப்பில்லை என்று திடமாக நம்புகிறேன்.

அந்த முகமறியா தெய்வங்களையும் என்னுள்ளே ஒரு பாகமாகவே உணர்வதால் அவர்தம் பாதங்களை என் சிரம் பட வணங்குகிறேன்.

ஒவ்வொரு ஊரிலும் , ஒவ்வொரு மண்ணிலும் இப்படி மனிதர்கள் வாழ்ந்திருக்கின்றனர். இன்னமும் இருக்கின்றனர். அவர்களை பற்றிய பதிவுகளோ அல்லது வரலாறுகள் இல்லை. அவர்களை பற்றி நினைவகளும் நம்முள் பெரும்பாலானோர்க்கு இல்லை. ஆனால் அவர்களே என் (நம் ) வாழ்வை எப்போதும் ஆசிர்வதித்துள்ளனர்.

என் தெய்வ உலகு பரந்த சமவெளிக்கு பாய்ந்துள்ளது. முதன் முதலாக நதியும், வனமும், பறவைகளும் , வயலும் நிறைந்த வண்ண உலகை கண்டதில் களிப்படைந்திருக்கிறேன்.

இந்த களிப்பு இதுகாரும் நடந்து வந்த என் பிஞ்சு பாதங்க்ளுக்கு மிகுந்த வலிமையை கொடுத்துள்ளது. அந்த கால்களுக்கு நன்றி செலுத்தும் உணர்வில் என் வண்ண உலகின் அழகான தெய்வங்களை வர்ணிக்க புறப்படுகிறேன்.

என் வர்ணங்களை தேர்ந்தெடுப்பதிலும் , தெய்வங்களை வரைவதிலும் குறைபாடுகள் உங்கள் விழிகளுக்கு தென்படலாம். அதை மன்னித்து இக்குழந்தையை ஆசீர்வதிப்பீர்களாக.

இந்த பூமியில் இப்படி ஒரு பள்ளிக்கு விதைத்தவர்களும், அதை உருவாக்கியவர்களும் , அதை தம்சக்திக்கேற்ப பராமரித்து வருபவர்களும் என அத்தனை தெய்வங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நமஸ்காரங்களை அவர்தம் பாத தூளிகளில் சமர்ப்பித்து அவர் தம் ஆசியுடன் பள்ளிக்குள் முதன் முதலாய் அடியெடுத்து வைக்கிறேன் ஒரு மாணவனாக

பள்ளி வாழ்வு தமிழ்த்தாய் வாழ்த்துடனும், இறைவணக்கத்துடனும் , தேசிய கீத்த்துடனும் துவங்க இருப்பதால் சற்றே காத்திருக்க வேண்டுகிறேன் நான் மீண்டும் இடைவேளையில் சந்திக்கும் வரையில்....................

அதுவரை தெய்வங்களுக்காக கருணையுடன் காத்திருங்கள்

(குறிப்பு  ---இன்றும் கூட பல பள்ளிகள் துவங்கப்பட்டதாலேயே இத்தகைய ஒரு பள்ளியில் 2000 மாணவர்கள் என்பது போய் வெறும் 400 மாணவர்கள் . ஒரு ஓரத்தில் கட்ட்ப்பட்ட கான்கீரிட் கட்டிடத்தில் படித்து வருகின்றனர், ஆசிரியர்களும் நிர்வாகிகளும் அரசு அமைப்புகளும் இவ்வளவு பெரிய இடத்தை பல தீர்மானங்கள் மூலம் புதிது புதிதாய் மைதான அளவை குறைத்து கட்டிடத்தை எழுப்பி வருகிறது,

தமிழகத்தின் தற்போதைய எம்பி காந்திச் செல்வன் உட்பட இந்த பள்ளியில்தான் படித்திருப்பார்கள். என்னற்ற அற்புதமான மனிதர்கள் இப்பள்ளி உருவாக்கியுள்ளது, அரசியலுக்கும் , பொது வாழ்விற்கும் , ஏன் எந்த அம்சத்திற்கும் இப்பள்ளிக் கட்டிங்க்ளும் , இதற்கு அடித்தளம் இட்ட அந்த முன்னோர்களும் விதைத்து உள்ளது,
இப்பள்ளியில் படித்த பலர் இன்று மிகப் பெரிய நிலையில் அதே ஊரிலேயே இருக்கின்றனர். நாமக்கல்லில் இருந்து சுமார் 10 கிமி சுற்றளவு (குறைத்துச் சொல்கிறேன்) பகுதியில் இந்த் மண்ணில் கால் வைத்திடாத மனிதன் இருந்திட முடியாது. ஆயினும் கறையான் புற்றுக்க்ளாலும் , புதர்களாலும் நிரம்பி வழிந்த்தை 2009ல் கண்ட போது நெஞ்சில் ரத்தம் வடிகிறது என்கிற வசனத்தின் ஆழத்தை உணர்ந்தேன்.

அதை அந்த மைதானத்திலேயே எனக்கு தெரிந்த சிலரிடம் பகிர்ந்தும் கொண்டேன், அதில் ஒருவர் அப்போது அந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் . எனது நெகிழ்வை கண்டு , எனக்கு உறுதியளித்த்து மட்டுமல்லது , சில பணிகளை செய்திருப்பதாகவும் பின்னொரு நாளில் தெரிவித்தார், அவருக்கு என் சிரம் தாழ்த்தி நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறேன். அந்த மண்ணுக்கு உரிய மரியாதை நிச்சயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் ...................   )

No comments:

Post a Comment