Thursday 11 April 2013

நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 18



நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 18

சைவமும் வைணவமும் இணைந்த பாதையில்

முதல் தடவையாக சிறிது விபரம் அடைந்த பிறகு சித்தூர் வந்திருந்தேன். இதற்கு முன்னர் 1970 களில் வந்த்துதான் நினைவுகளில் இருக்கிறது.  

அப்போது 2ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த்தாக ஞாபகம். முதன் முதலாக ரயில் பயணம் அதுவும் என் அப்பாவுடன், சிவா பாபாயின் மற்றும் சுமதி திருமணத்திற்காக வந்த பயணம் அது. அதில் நடந்த இரு சம்பவங்கள் மிக நன்றாக நினைவில் உள்ளது. ஒன்று திரும்பி வரும் போது காட்பாடி ரயில் நிலையத்தில் மாலை நேரத்தில் எனது அப்பாவின் பாக்கெட் களவாடப்பட்டதால் என் தம்பியின் சட்டை பாக்கெட்டில் இருந்த பணத்தைக் கொண்டு மீண்டும் சித்தூர் வந்து இரவு தங்கி , மறுநாள் கிளம்பிச் சென்றது.

மற்றொன்று அந்த கல்யாணத்தின் போதுதான் முதல் முதலாக சரஸ்வதி அத்தையின் மகள் பத்மா அக்காவை சந்தித்த்தாக் ஞாபகம். அவர்கள் அப்போது 10ம் வகுப்போ அல்லது ஏதோ ஒன்று படித்துக் கொண்டிருந்தார்க. முதன் முதலாகஆங்கில எழுத்துக்களையும் அதற்குண்டான வார்த்தைகளையும் மற்றும் வாய்ப்பாடுகளையும் சரிபடுத்தினார்கள் . மேலும் ஒரு சில புதிய ஆங்கில சொற்களையும் சொல்லிக் கொடுத்த்தும் நினைவில் உள்ளது.

சுப்பு பெரியப்பா இருந்த வீட்டில் ஒரு திண்ணை இருந்த்து, அத்திண்ணையில் அமர்ந்து சொல்லிக் கொடுத்தார். அப்போது சுப்பு பெரியப்பாவின் அம்மாவும் இருந்திருக்கின்றார்கள். அவரையும் சந்தித்த்தாக நினைவில் உள்ளது. அதன் பிறகு அந்த வீட்டை அவர் கட்டி கொண்டிருந்த போது சென்ற ஞாபகம். அது இப்போதுதானா என்பது நினைவில் இல்லை. இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.

இவர்களது குடும்பத்தை சொல்லும் போது அது மிகப் பெரிய ஆலம்ரம் என்று ஒற்றை வார்த்தையில் குறிப்பிடலாம். அதுவும் அனைவரும் சொந்த்த்திற்குள்ளேயே பெண்களை திருமணம் செய்த காரணத்தால் , ஒவ்வொருவரையும் இரு வகை சொந்த்த்தில் குறிப்பிட இயலும்.

பலவருடங்கள் யாரை எந்த சொந்த்த்தில் அழைப்பது என்பது எனக்கு புரிந்த்தே இல்லை. கேரளாவில் தாய் வழியில் மட்டுமே சொந்த்த்தை குறிப்பிடுவதாக பிற்காலத்தில் ஈஷாவில் சௌந்தர் அண்ணா சொல்ல கேட்டிருக்கின்றேன். அது போல் இவர்களுக்குள் தந்தை வழி மட்டுமே உறவுகள் குறிப்பிடப்படுகின்றன.

பண்டையகாலத்தில் சமுகம் ரிஷிகளைச் சார்ந்து ஆன்மீக நோக்கத்தில் இருந்தன. ஒவ்வொரு மனிதனும் தன் இறைநிலையை அடைவதே நோக்கமாக இருந்த்து. ஆனால் எல்லோரும் ஒரே விதமாக செயல்பட முடியாதென்பதாலும், மேலும் இதற்கு எதைச் செய்திடினும் சரிரமே ஆதாரமாக இருப்பதால் , அதை சரியான முறையில் பராமரித்திட இதர பல செயல்களும் தேவைப்படுகின்றன எனப்தை உணர்ந்து இவைகளை சமுகத்தின் அங்கமாகவும் அதே சமயம் ஒருவர் தன்னை சரியான முறையில் தயார்படுத்திக் கொள்ள வேண்டியதற்கான அவகாசமாகவும் வடிவமைத்து இருந்தனர்.

குடும்பஸ்தர்களும் தீவீரமான ஆன்மீக சாதகர்களும் இணைந்து சின்ன சின்னதாக சமுகங்களை வடிவமைத்திருந்த்தால் இவற்றில் வாழ்விற்கு தேவையான அனைத்து அம்சங்களும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட்ட்து. குடும்பஸ்த்ர்களுக்கும் கூட தாங்கள் பராமரிக்க வேண்டிய லெள்கீக விஷயங்களும்., பொருளாதார முறைகளும் கூட அவர்களின் ஆன்மீக பயணத்திற்கான ஒரு சாதனாவாக அமைக்கப்பட்டிருந்த்து.

ஆஸ்ரமத்திற்கு தேவையான அனைத்தையும் இவர்களே எடுத்து வந்திருந்தாலும் , அவை பொதுவான பொருளாக பாவிக்கப்பட்டு அவரவரின் செயலுக்கு ஏற்ப தேவையுணர்ந்து பகிர்ந்தளிக்கப் பட்டது. அதே சமயம் இவர்களின் இந்த அர்ப்ணிப்பிற்கு ரிஷிகளாலும் , சாதகர்களாலும் தங்களது அறிவை அளிக்கப்பட்டு அவர்களது வாழ்க்கை முறை வளப்படுத்தப்பட்டது. இதுவே இன்றைய கம்யுனிச சிந்தாத்திற்கு அடிப்படையானது.

உடலை ஆரோக்கியமாக பேணக்கூடிய விஷயங்கள் மருத்துவ மற்றும் சுகாதார வழிமுறைகளாக பிற்காலத்தில் உருவெடுத்தன. குழந்தைகளின் கல்வி மற்றும் அறிவு சார் விஷயங்கள் , கலைகள் என எல்லா அம்சங்களும் அதில் அதில் ஆளுமை பெற்றவர்கள் மூலம் எடுக்கப்பட்டன.

அதேசமயம் விஷய ஞானம் என்பதும் சரி , அனுபவ ஞானம் என்பது சரி அது பிறரோடு பகிர்ந்து கொள்ளும் போதே இன்னும் ஆழப்படுகிறது என்பதை உணர்ந்து கொண்டதால் குருகுல கல்வி முறை தேர்ன்றியது. இதனால் தானே ஒருவரிடத்தில் மாணவனாக இருந்த போதும் , தனது குருவின் ஆணைக்கேற்ப தான் இன்னும் சிலருக்கு ஆசிரியராக பணியாற்றும் தேவை வந்த்து

இதன் மூலம் ஒரு மிகச் சிறந்த பயன் இருந்த்து. எக்காலத்திலும் தானே அனைத்தும் அறிந்தவன் என்கிற கர்வம் ஏற்பட்டுவிடாமல் இருந்த்து. மேலும் இந்த சம்வாதங்கள், விவாதங்கள், எதிர்வாதங்கள் ஒருவருக்குள் தெளிவை ஏற்படுத்தித் தந்து தான் செல்ல வேண்டிய பாதையை தனக்கேற்றவாறு முடிவு செய்ய இயல்பாக இயன்றது.

இப்படிப்பட்ட சமுக்கங்கள் யாரை தனது தலைமை குருவாக, யாரால் தோற்றுவிக்கப் பட்டதோ அவரின் வழித்தேர்ன்றல்களாகவே , தங்களை அடையாளப்படுத்தப் பட்டன. இதை சம்பிரதாயங்கள் எனச் சொல்வது நாம் புரிநது கொள்ள ஏதுவாகிறது. இதன் மூலம் நான் இன்ன சம்பிரதாயத்தை, சிந்தாந்த்த்தை , வழிமுறைகளை பின்பற்றுகிறவன் என்பதை பிறருக்கு அறிவிக்க பயன்படுத்தப்பட்டது.

இதுவே காலப்போக்கில் கோத்திரங்களாக உருவெடுத்த்து. மேலும் குறிஞசி ,மருதம், முல்லை , நெய்தல் , பாலை என அந்தந்த மண் சார்ந்த சமுகங்களைப் போன்று , காடுகளில் ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாக இருந்தமையால் அவர்களது உடற்கூறுகளும் பெரும்பாலும ஒரே விதமாய் ஒத்து இருந்தன. இதனால் பல பிரச்சினைக்களுக்கு ஒரே தீர்வாகவும் அமைந்திருந்தன. குறிப்பாக மருத்துவ ரீதியில் .

இந்த டிஎன்ஏக்களின் அறிவை பெற்றமையால் சில விஷயங்கள் அந்த டிஎன்ஏக்களே தலைமுறை தலைமுறையாக சுமந்து செல்வதை கண்டறிந்தனர். இந்த அறிவுகளை , ஞானத்தை பாதுகாத்திட இந்த டிஎன்ஏவை பாதுகாத்தாலே போதுமானது என்பதை உணர்ந்தனர், இதைச் சார்ந்த் இன்றைய நவீன விஞ்ஞானம் அடைய துடிக்கின்ற விஷயங்களை அவர்கள் அன்றைய காலத்தில் , இந்த பூமியில் அனுபவத்தால் பெற்றிருந்தனர்.

அத்தகைய ரிஷிகளைக் கொண்டு கோத்திரங்களின் பெயர்களை குறிப்பிடப்படுவதால் அவரின் வம்சாவளியாகவே இன்றும் பார்க்கின்றனர். அதனால் பெண் திருமணம் ஆன பிறகு கணவனின் குடும்பத்தை சார்ந்தவளாகிறாள். அதனால் அவனது கோத்திரமே அவளது கோத்திரமும் ஆகின்றது.

இந்த கோத்திரங்களை இன்றைய அறிவியலில் ஹெரிடிடி என்றழைக்கப்படுகின்ற டிஎன்ஏக்கு ஒப்பிடலாம். இது குறித்து  சத்குருவும் ஒரளவு பேசிய போதுதான் இதன் விஞ்ஞானம் எனக்கு புரிந்த்து. இரு வேறு பெற்றோர்களுக்கு பிறந்திருந்தாலும் , ஒரே கோத்திரத்தை சார்ந்தவர்களானால் அண்ணன் தம்பி உறவைக் பெற்றுவிடுகின்றனர். 

ஆயினும் இதன் விஞ்ஞானமெல்லாம் எவரும் அறிந்த்தாக தெரியவில்லை அல்லது புரியும படி சொல்லத் தெரியவில்லை . ஆ ஊ என்றால் ஏதோ ஒரு சமஸ்கிரத ஸ்லோகத்தையே மேற்கோள் காட்டினார்கள்.

இதை பற்றி 2 வருடம் கழித்து , 1987ம் ஆண்டு விடுமுறையின் போது சுப்பு பெரியப்பாவிடம் கேட்ட போது , ஒரு முழு நாள் இந்த உறவுகளைக் குறித்து ட்ரீ சார்ட் போட்டுக் காண்பித்த போதுதான் ஒரளவு புரிந்த்து. அவர் இது போன்ற ட்ரீ சார்ட் பல தலைமுறைக்கு போட்டு வைத்திருந்தார். இது அன்றைக்கு அவரிடம் ம்ட்டுமே இருந்த்து. தற்போது எனது இளைய தம்பி பெரு முயற்சி எடுத்து மூதாதையர்களின் உறவுகளை கண்டறிந்து வைத்திருப்பதாக் கூறினான்.

எனக்கு இது வியப்பை தந்தாலும் , தெரிந்து கொள்ள பெரிதும் ஆர்வம் இருந்த்து இல்லை. உண்மையில் அவரிடம் கேட்டது கூட ஆர்வத்தினால் அல்ல , எனது குழப்பத்தை தீர்த்துக் கொள்ள வேண்டித்தான்.

சிறு வயதில் சாப்பிடாத சாக்கெலெட் கணக்குகளையும் பிஸ்கட் கணக்குகளையும் சித்தப்பா வீட்டில் இருந்த போது சரிகட்டினேன். மேலும் நாமு அக்காவோடும் , தங்கை உஷாவோடும் , இளைய தங்கை ஹரிணியோடும் பழக முடிந்த்து. அதே போல் எனது தம்பிகள் பத்ரீ, காஸ்யப் மற்றும் ராமன் . இன்னும் சொல்லப்போனால் எனது பெரிய தம்பி அனந்துடன் சற்று பக்குவத்தோடும், எவ்வித எதிர்ப்பார்ப்பும் இன்றி பழகியதும் இந்த காலத்தில்தான். அவன் படிப்பிற்காக சென்ற கால இடைவெளி எனக்குள் சிறிது பக்குவத்தையும் தந்திருந்த்து.

பிரிவு எனக்கு பெரிய விஷயமாக இல்லாத போதும்., நான் அவனோடு இல்லை என்று உணர்ந்திருப்பானோ என்று சற்று கரிசனம் கொண்டு பழகினேன். உலகில் சாதாரணமாக மற்றவர்கள் செய்வது போன்று அன்பை வெளிப்படுத்துவது என்பது எனக்கு எப்போதும் சற்று கடினம்தான். மென்மையாக வெளிப்படுத்த தெரியாவிட்டாலும் கடினமாக வெளிப்டுத்துவதை சற்று குறைத்திருந்தேன் எனறு கூட செர்ல்ல்லாம்.

சித்துர் பாட்டி நிறைய விஷய ஞானம் கொண்டிருந்தார்கள். ஹரிகதைகள் , உபன்யாசங்கள் என நிறைய கேட்டு வளர்ந்த்தாலும், பள்ளிக்கு செல்லவில்லையானாலும் புத்தகங்கள் படிக்க கற்றுக் கொண்டிருந்த்த்தால் நிறைய செய்யுள்களை மனப்பாடம் செய்து வைத்திருந்தார்கள். கதைகளை சொல்லும் போது பாடல்களை சேர்த்து மிக சுவரஸ்யமாக சொல்வார்கள்.

இவரும் சரி, என் அப்பாவை பெற்ற பாட்டியான பாகம்மாவும் சரி, திருச்சி பாட்டியும் சரி சகோதர்ர்களான தங்கள் கணவர்களால் எழுத்துக் கூட்டி படிக்க ஆரம்பித்து, சரளமாக புத்தகங்களை படிக்க கற்றுக் கொண்டிருந்த்தால் ஏராளமான விஷய ஞானம் பெற்றிருந்தனர். பொதுவாகவே இக்கால பாட்டிகள் அனைவரும் புத்தகங்களை படிப்பதை தங்கள் முக்கியமான பொழுது போக்காக கொண்டிருந்தனர்.

இந்த விஷய ஞானமே அவருக்கு பெரிய நண்பர் கூட்டத்தை சேர்த்து இருந்த்து. எதிர்வீட்டு ராமயங்கார் , அவரது தமையனார் கோபாலயங்கார், அவரது நண்பர் நடராஜ சாஸ்திரி . கிட்டு சாஸ்திரி என பெரிய படையே திண்ணையில் கச்சேரி நடத்தும். இவர்களது பேச்சுக்களில் தெலுங்கு மற்றும் தமிழ் இலக்கியங்கள், நாட்டுப்புற பாடல்கள், சமஸ்கிரத ஸ்லோகங்கள் என பலவற்றிலும் இருந்து மேற்கோள்கள் காட்டுவார்கள்.

ஒருவருக்கொருவர் கலாய்ப்பதும், சாடுவதும் என அரசியலில் இருந்து ஆன்மீகம் வரை அனைத்தும் அலசுவார்கள். இந்த மாலைக் கச்சேரிக்கு கட்டாயம் காபி ஸ்பான்சர் ஞானம் பாட்டிதான். குழந்தைகளான எங்களுக்கு செய்யும் பலகாரங்கள் இவர்களுக்கும் செல்லும்.

ராமயங்கார் எனக்கு ஒரு நண்பனானார். ஜாதகம் கணிப்பதை பற்றி சொல்லிக் கொடுத்தார். மிக எளிமையாகவும் மிக ஆழமான அறிவை கொண்டிருந்தவராகவும் இருந்த்து வியப்பாக இருந்த்து. ஜாதகத்தில் மிக ஆழமான அறிவை கொண்டிருந்தாலும யாருக்கும் ஜாதகம் பார்ப்பது இல்லை என்ற சேது மாமாவின் கொள்கையை இவரும் கொண்டிருந்தார்.

ஒரு முறை எனது நச்சரிப்பால் , தான் ஏன் ஜாதகம் பார்ப்பதில்லை என்பதற்கு சேது மாமாவைப் போன்றே  இவரிடத்தும் அதே வித அனுபவம் இருந்த்தை கூறினார். நான் என் ஜாதக படிப்பை மூட்டை கட்டி வைத்தேன். இவர்களைப் போன்ற ஆழமான அறிவு படைத்தவர்களே தங்களுடைய வாக்கு பலிதத்தால் , தேவையற்ற வேளைகளில் தேவையற்றைதை சொல்லிவிடுவோமோ என எண்ணிய போது நான் எம்மாத்திரம் என்பதுதான் காரணம்.

அப்போது எனக்கு அடிக்கடி வரும் அக்கனவை பற்றி அவரிடம் சொல்ல தோன்றியது. சிறு வயதில் இருந்தே இது அவ்வப்போது வந்திருந்த்து. ஆனால் எவரிடத்தும் சொல்லத் தோன்றியது இல்லை. முதல் முறையாக அவரிடத்தில் ஒரு அசாத்திய நம்பிக்கை எனக்கு இருந்த்து. அதனால் சொன்னேன். கவனமாக கேட்ட பின்பு , சுருக்கமான ஒரு பதிலை உரைத்தார்.

அது , காலம் வரும் போது உனக்கு புரியும் . எவரிடத்தும் விடையும் தேடவேண்டாம், சொல்லவும் வேண்டாம் . ஏனோ அவருக்கு புரிந்த்த்தை எனக்கு சொல்ல விரும்பவில்லை எனத் தோன்றியது. அதை புரிந்து கொள்ளும் பக்குவம் எனக்கில்லை எனத் தோன்றியது.

உண்மையில் இதை அவரிடம் பகிர்ந்திட ஏதுவாக ஒரு நிகழ்வு அமைந்த்து. அப்போது பூர்வீக வீடு , புதிதாக கட்ட வேண்டி பக்கத்தில் இருந்த சத்யம் பெரியப்பாவின் பெரிய வீட்டில் சித்தப்பா குடும்பத்தினர் இருந்தனர். இந்த பழைய வீடு காலியாக இருந்த்து, அதனால் அவ்வப்போது அதில் சென்று விளையாடுவோம்.

அப்படி ஒரு நாள் மாலை வேளையில் வீட்டின் பின்புறமாக நுழையும் போது , விளையாட்டின் வேகத்தில் , நுழைவாயிலில் தலையில் மோதிக் கொண்டேன். மிக சிறிய நிகழ்வாக இருந்த போதும் , வலி அதிகம் ஏற்படாத போதும், ஏனோ அந்த கணம் மிக ஆழமாக பதித்த்து மட்டுமல்லாது, ஏதோ நடக்கப்போகிறது என்கிற உள்ளுணர்வு ஏற்பட்டது.

வலியை கவனிக்க கவனிக்க இந்த உள்ளுணர்வு ஆழமாக இருந்த்து. சில நொடிகள் கூட பிசகாமல் இருந்த்தை கவனித்தேன். இரவில் அனைவரும் சாப்பிட்டு உறங்கிய பின்பும் கூட நான் உறக்கம் வராது ,ஏதோ செய்திக்கு காத்திருப்பனைப் போல , வாசலையே நோக்கிக் கொண்டிருந்தேன். அந்த நெடிய இரவின் ஒவ்வொரு ஷணமும் இன்னும் என் நினைவில் பசுமையாக உள்ளது. அந்த சிம்னி விளக்கின் ஒளியில் படுத்துறங்கிய மனிதர்களை பார்த்து சற்று பொறாமையும் வந்தது , எனக்கு உறக்கம் வராமையால்....

மனம் வீட்டில் உள்ள மற்றும் தெரிந்த பெரியவர்களின் மரணச் செய்தியை எல்லாம் யுகித்துக் கொண்டே இருந்த்து. இரவு முழுவதும் படுத்திருந்தும் உறங்காத்தால் கண் எரிந்த்து. காலையில் சில மணித்துளிகள் இதை மறந்திருந்தேன். குளித்து வந்து சந்தியவந்தனம் செய்ய அமர்ந்த போது , எந்த தேவையும் இன்றி முதல் நாள் மாலை இடித்துக் கொண்டதும், அதை தொடர்ந்து இருந்த உள்ளுணர்வும், உறங்காதிருந்த்தும் நினைவிற்கு வந்த்து.

கண்மூடி அமர்ந்த போது வாசலில் காலிங்பெல் அடிப்பது ஒலி கேட்டது. ஏதோ அதற்காகவே காத்திருந்தவன் போல எழுந்துவிட்டேன். தந்தி வந்திருந்திருப்தாக போஸ்ட்மென் கூறினார். அதை கேட்டதில் இருந்து அதை படித்து சொல்லும் வரையிலான சில நொடிகளில், யாராக இருக்கும் , என்னவாக இருக்கும் என்று,  என் மனம் அனைவரையும் அசை போட்டது  

ஆம் ராசிபுரம் தாத்தா மரணதேவனை அணைத்திருந்தார். ஓர் இரவு முழுவதுமான என் அவஸ்தை முடிவிற்கு வந்த்து. ஏற்கனவே முடிவை அறிந்திருந்தாலும் முகம் மட்டுமே அறியாதவனைப் போல அமைதியானேன். எந்த சலனமும் இன்றி என்பணிகளை மீண்டூம் தொடாந்தேன்.

மீண்டூம் மரணதேவன் எனக்கு மிக மிக நெருக்கமானான். இந்த உள்ளுணர்வை பற்றி கேட்கப் போய்தான் கனவைப் பற்றி பேசினேன்.

அவரது பதில் எனக்கு ஏமாற்றமளித்தாலும் , எவனோ ஒருவன் என் சந்தேகத்தை, கேள்வியை போக்க வருவான் என காத்திருக்க ஆரம்பித்தேன்.

இதே காலகட்டத்தில் நடராஜ சாஸ்திரிகளின் ஒரே பையன் ஆஸ்துமா பிரச்சனையால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார். அவரும் அவர் பையன் மட்டும் இருந்த்தால் பாட்டி இந்த சமயத்தில் இருவருக்கும் உணவளித்தார். அவர் வயதானவர் என்கிற காரணத்தர்ல் அவரது பையனுக்கு சாப்பாடு கொடுக்கும் பணி எனக்கு அளிக்கப்பட்டது.

முதல் நாள் அவருக்கு சாப்பாடு கொடுக்கும் போது , ஏனோ எனக்கு கர்மா பற்றிய சிந்தனையும் , மரணம் பற்றிய சிந்தனையும் ஒரு சேர வந்த்து, அத்துடன் அவர் மருத்துவர்கள் உதவியால் சற்று ஆரோக்கியமாகவே காணப்பட்டபோதும் , எனக்கு அவர் வீடு திரும்ப மாட்டார் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. எவ்வளவு ஆராய்ந்தும் முன்பின் தெரியாத , அதிகம் பழக்கமில்லாத ஒரு நபரை குறித்து வந்த இச்சிந்தனையை இன்றளவும் புரிந்து கொள்ள இயலவில்லை

எனது 10 நாள் சேவைகளை பெற்றுக் கொண்டு என்னை ஆசீர்வதித்துவிட்டு சென்றான். மரணம் என்னை தொடர்ந்த்து.  ஆனால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான அனுபவத்தை தந்து சென்றிருந்தாலும் மரணம் பற்றிய பயம் ஓரளவு போயிருந்த்து. மரணம் ஆச்சரியமானது. மரணம் பற்றிய சிந்தனை எப்போதம் இருந்த வண்ணம் இருந்த்து.

யாரவது நோய்வாய்ப் பட்டால் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்ப்பதையே தவிர்த்து விட்டேன் . இதனால் நான் இரக்கமற்றவன் என்பதாய் கண்டிருந்திருக்கின்றனர் . ஆனால் அதற்கு முக்கிய காரணம் நோயாளிகளை பார்க்கும் போதெல்லாம் ஏதோ அவரது கடைசி நாட்களை முடிவு செய்து விடுவேனோ என்பது போல எனக்கு தோன்றியது.   

அவரை பார்க்காமலே இருந்து விட்டால் இந்த எண்ணம் வராமலே போய் விடும் என நம்பினேன். இது குறித்து ராமயங்காரிடம் மட்டுமே அதுவும் ஒரே ஒரு முறை பேசியுள்ளேன். வேறு எவரிடத்தும் பேசியது மட்டுமல்லாது, பதில் இருக்காது என்ற ஆழமான உணர்வும் இருந்த்து. ஆனாலும் சுற்றமும் நட்பையும் ஆழமாய் கவனித்து வந்தேன்.

இந்த காலகட்டத்தில் நாமு அக்காவும் , தங்கை உஷாவும் நன்கு பரிச்சியமானார்கள். நாமு அக்காவைப் போல் , சுப்பு பெரியப்பாவின் மகள் லக்ஷ்மி அக்காவும் நெருங்கிய தோழி ஆனார்கள்.  இவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தனர். லக்ஷ்மி அக்கா நாமுவைக் காட்டிலும் 1 வயது பெரியவர்கள் என நினைக்கிறேன். அவரது கல்லூரிக் கால போட்டோக்களை எல்லாம் காண்பித்தார்கள்.

அவரது கனவுகள் , சமுகத்தின் கட்டுப்பாடுகளை உடைத்தெறிய விரும்பும் குணம் , ரசனைகள் என அனைத்திற்கு அதில் பல வகையில மாடலிங் செய்திருந்தார்.. ஒரு பெரிய குடும்பத்தில் வளர்ந்த சின்ன குழந்தைக்கு என்ன கனவெல்லாம் வரமுடியும் என்பதை அழகாக வெளிப்படுத்தியிருந்தார்.

இவரும் இவரது வயதை ஒத்த நாமு அக்காவும் , 30களின் பிற்பகுதியில் அல்லது 40களின் ஆரம்பத்தில் இருந்த சகோதரிகளுடன் பழகிய போது பெரும்பாலும் பெண்களின் உடை , அலங்காரங்கள் குறித்து அறிந்து கொண்டேன். சின்னச் சின்ன விஷயங்களை இப்படி யெல்லாம் கூட ரசிக்க முடியுமா என்பதற்கு இவர்கள் முன்னுதாரணமானர்கள். 

இந்த ரசனை இவர்களையும் எனக்குள் ரசிக்க வைத்த்து. என்ன ஒரு அற்புதமான யுவதிகள். கம்பனும் பிற கவிஞர்களும் பெண்களையோ அல்லது அவர்களது புற அழகையோ வர்ணனை செய்ய வில்லை என்ற எண்ணம் தோன்றியது. இயற்கையின் அழகுகள் இயல்பாக வெளிப்படும் போது நுட்பமாக கவனிக்கும் தன்மையுடயவன் , அவனது உணர்வை வெளிப்படுத்த வார்த்தைகள் தோற்றுப் போவதை உணர்வதால் வர்ணனையாக வரைகின்றான்.

இவர்களோடு இணைந்து வீட்டின் மாடியில் நின்று கொண்டு , எதிரே நடந்து கொண்டிருந்த திருமண வரவேற்பை கவனித்தேன். இவர்கள் சுட்டிக் காட்டி பேசும் புடவைகளை , எப்படி ஒரு மனிதனை ஆடை அழகாக்கிறது , எது இவர்களை ரசிக்க வைக்கிறது என்றெல்லாம் எண்ணிக் கொண்டு இருந்தேன். 

ஆடையின் வண்ணம் மட்டுமோ அல்லது அதன் வேலைப்பாடுகள் மட்டுமோ ஈர்ப்பை தருவதில்லை . அது அணிந்த மனிதரோடு , அவர்களின் அப்போதைய உணர்வுகளோடு பொறுந்த வேண்டும் என்பது மட்டும் புரிந்த்து.

இது ஒரு அற்புதமான அழகான கலை . இன்று fashion design படித்து வருபவர்கள் கூட இதை முழுவதும் புரிந்து வைத்திருக்கின்றனரா என்பது புரியவில்லை. பல சமயம் அழகு அலங்கோலப்படுகிறது. ஆனால் சிலருக்கு இது இயல்பாக கைகூடுகிறது. அந்த ஷணங்களில் அவரை பார்ப்பவர்கள் அவர்களது ரசிகர்கள் ஆகிவிடுகின்றனர். 

இப்படி எல்லாம் எண்ணங்கள் போய் கொண்டிருந்த போது , என்ன சைட் அடிக்கிறயா என ஒரு குரல் பின்னால் எழுந்த்து.
குரல் கேட்டு அதிர்ச்சியாய் திரும்பினேன். என் அக்காக்கள் இருவருக்கும் நான் கலாய்க்கப்படும் பொருளானேன். இப்படி என் அக்காக்களின் அன்னியோன்யம் வாழ்வில் அற்புதமான ரசனையை தந்த்து.

தம்பிகள் பத்ரி . காஸ்யப் மற்றும் ராமன் (சித்தப்பாக்களின் புதல்வர்கள்) மூவரும் மூன்று விதம். ஒருவனுக்கு என்டிஆர் மற்றொருவனுக்கு சிரஞ்சீவியும் அடுத்தவனுக்கு நாகார்ஜுனாவும் என எப்பொழுதும் எதிலேயும் அழகான முக்கோணத்தை உருவாக்குவார்கள். அதன் நடுவில் பெரிய தங்கை உஷாவும் , கடைக்குட்டி ஹரிப்பிரியாவும். அனைவரும் ஒன்று சேர்ந்தால் மகாபாரத்ம் சுவாரஸ்யமற்றதாகிவிடும். அந்த அளவிற்கு லூட்டி அடிப்பார்கள்.

இவர்களைப் போன்ற பெரியவர்களுடன், வயதில் மூத்த சிறியவர்கள் சேர்ந்து கொள்வதால் எனது வால்தனம் செய்ய் வழியின்றி போய்விட்டது. ஆயினும் கிடைத்த சைக்கிள் கேப்பில் செய்திருப்பேன் என்றே எண்ணுகிறேன். 

இவர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டி சித்தப்பாவின் அறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டு விட்டு புத்தகங்கள் படிப்பேன் அல்லது உறங்கி கனவு காண பயிற்சி செய்வேன். அவர் நிறைய ஆங்கில கதை புத்தகங்களை வாங்கி வைத்திருந்தார். தனிமை பிடித்திருந்தது.

விடுமுறை என்பதால் வீடு நிரம்பி வழிந்த்து. போளுர் மாமா மற்றும் அவர் தம் குடும்பம் , ராதா அத்தை மற்றும் ரமா அத்தை என்று பலர் வந்து போய்க் கொண்டிருந்தார். இத்தனை பேர் வர போக காரணம் பாட்டிதான். பாட்டிதான் இவர்களுக்கு எல்லாம் மூத்தவள். இந்த பெண்கள் எல்லாம் நிதர்சனத்தில் வழுவாது வாழ்ந்தவர்கள். நம்பிக்கைக்கும் இடைவிடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தவர்கள். வாழ்க்கை அவர்களை புடம் போட்டு மினுமினுக்கச் செய்திருந்த்து.

இளம் வயதிலேயே தங்கள் கணவனை எமதர்மராஜன் கூட்டிச் சென்ற போதும் எக்குற்றமும் வாசிக்காதவர்கள். ஏதும் வார்த்தைகள் இன்றியே பிறர் உள்ளம் அறிந்து , அவர்களை தம் குடும்பத்தினராய் உணரச் செய்து அன்பின் வலிமையை பரிமாறியவர்கள் என சொல்லிக் கொண்டே போகலாம்.

சரஸ்வதி அத்தை நிறைவான குணமும் சௌந்தர்யமும் கூடி லக்ஷ்மிகரமாய் விளங்குவார்கள். இவர்களை பார்த்தால் எம் எஸ்ஸை பார்க்கவில்லை என்ற குறை ஏற்படாது. இவர்களது கணவரான வரதராஜுலு மாமாவோ இருக்கும் இடம் தெரியாது , அதிகாரத்தைக் கூட அதிராது வெளிப்படுத்தும் திறமை கொண்டவர்.

போளுர் மாமாவும் சரஸ்வதி மாமாவும் 12 மணி வரை ஜபதபங்களை கவனம் பிசகாது செய்து வரும் பொழுது மதிய உணவு அனைவருக்கும் தயாராகி இருக்கும். இவர்களைக் பார்த்து பத்ரியும் , காஸ்யபனும் இணைந்து செய்யும் ருத்ராபிஷேகம்  வீட்டை சப்தங்களால் , மந்திர ஒலிகளால் நிரப்பிவிடும். அதுவும் பத்ரி செய்யும் அழகு இறைவன் மயங்காமல் போகமுடியாது.

எனக்கோ எப்படி இவன் இவ்வளவு மந்திரத்தை சொல்லுகிறான் என ஆச்சரியமாய இருக்கும். அதற்கு காரணம் நான் மந்திரங்களை கற்காத்துதான். மேலும் பெரும்பாலானவர்கள் இடத்தில் இவற்றை செர்ல்லுபோது சிந்தைக்கும் செயலுக்கும் இடைவெளியை கண்டதாலும வெற்று சடங்காகவே செய்கிறார்கள் என்ற உணர்வு ஏற்படும்.

அதைவிட, உடற்பயிற்சிகள் செய்யாமல் , சரியான தேர்ந்தெடுத்த உணவுகள் உண்ணாமல் வெறுமேனே ம்ந்திரத்தை ஜபித்தால் என்ன நடந்துவிடும் என்பது போன்ற் கேள்விகள் அதிகம் இருந்தன. உழைப்பில்லாமல் பலன் பெறுவதற்கு மந்திரங்கள் ஒரு போது துணை போகாது என்று எண்ணம். இன்னும் சொல்லப் போனால் காலநேரம் கடந்து மந்திரங்கள் உச்சரிப்பதும் கூட ஒரு வகை உழைப்புதான், செயல்தான் அப்படியிருக்க அதற்கான சரியான செயலை தேர்ந்தெடுக்காது ஜபங்களும் ,தபங்களும் செய்து வருவதால் என்ன பயன் என்றும் கேள்வி இருந்த்து.

குழந்தை பருவம் என்பதால் எவ்வித கணக்குகளும் இருக்காது. வேண்டுதல்கள் கூட இருக்காது. இருப்பதை வைத்து இல்லாத்த்தை இறைவனாக்குவார்கள். இதுவே பூஜைகளை விட அவர்களின் செயலுக்கு அழகு சேர்க்கும்.

விளையாட்டுக்ள் என்பது கூட இக்குழந்தைகளுக்கு பெரும்பாலும இதைச் சுற்றியே இருந்த்து. தம் பணிகளை செய்ய வேண்டி இவர்களை அமைதியாகவும் ஒரமாகவும் தம் பூஜைகளை செய்ய்ச் சொன்னவர்கள் கூட அந்த முழுமையான ஷணங்களில் இவர்கள் கண்முன் அசுர்ர்களாகிப் போவார்கள். பக்தர்கள் பற்றிய கேட்டறிந்த பாட்டியின் கதைகள் பலவிதமாய் அடுத்த நாளே உருவெடுக்கும்.

இவர்களை பிடித்து நேரத்திற்கு உணவருந்தச் செயது , குளிக்கச் செய்து, உறங்கச் செய்வதற்குள் இவர்தம் அம்மாக்களுக்கு மிகப் பெரிய சாதனாதான். எப்போது பார்த்தாலும் சப்த்த்தால் நிரம்பிய இந்த ஆலயத்தில் தம் இருப்பின் மூலம் அமைதியை அழகாக பரப்பியவர்களும் இருந்தார்கள்.

ராதா அத்தை போன்றவர்களைக் கண்டால் அதிகாரத்தை எப்படி அன்பு கலந்து உரிமையுடன் வெளிப்படுத்தலாம் என்பதை அழகாக கற்ற்றியலாம். ரமா அத்தையே அதற்கு நேர் எதிர். அதிரும் படி ஒரு வார்த்தை கூட சபையில் பேசமாட்டார்கள். சிலசமய்ம அப்படி பேசுவது கூட , வடிவேலு நானும் ரவுடிதான் என்பது போல காமெடியாக நம்மையும் சிரிக்க வைத்து அவர்களையும் சிரிக்கச் செய்திடும்.

எப்பொருள் யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காணப்தறிவு  ------- என்பது இச்சபைகளில் வழக்காகி இருந்த்து.

யார் வேண்டுமானாலும் தம் கருத்தை சொல்ல்லாம். ஆனால் விவாத்திற்கு தயாராக இருக்க வேண்டும் . அது எப்பக்கத்தில் இருந்து வேணடுமானாலும் வரலாம். கோபித்துக் கொள்ளுதல் கூடாது. இன்றைக்கும் சரி இவர்கள் அனைவரும் கூடி இருக்கும் போது கூர்ந்து கவனித்தால் இன்றைய ஆளுமைத் திறன் அம்சங்களை அழகாக கற்றுக் கொள்ளலர்ம். அனைத்தும் இருக்கும்.

தோற்றவர் கூட தம் கருத்து எதனால் எடுபடாமல் போனது என்பதை உணர்வதால் சமாதானமாகி இருப்பார்கள்.. மேலும் அனைத்தும் ஒரே நோக்கத்திலேயே இருந்த்து என்பேன். பெரியவர்களின் சம்பிரதாயங்களை கைகழுவி விடாமல் அதே சமயம் பொருளாதாரத்தில்  ஸ்திரத்தை குடும்பத்திற்குள் ஏற்படுத்திக் கொள்வது.

இந்த பெரிய பம்பரம் சுழலுவதின் மைய்மாக சித்தப்பா நடராஜன் இருந்த்தார். இவருக்கு சமைப்பதில் அலாதியான ஆர்வம். இவர் அடுப்படிக்குள் நுழைந்துவிட்டால் மறுவார்த்தை பேசாது இவரின் கட்டளைக்குள் அனைவரும் அடங்கிவிடுவர். இதற்கு இன்னொரு காரணமும் இருந்த்து. அது இவரின் மேல் அனைவரும் கெர்ண்டிருந்த மரியாதை என்பேன்.

அதே சமயம் இவருடன் சரஸ்வதி மாமாவின் புதல்வன் ராமனோ., சிவா பாபாய் , ராதா அத்தை போன்றவர்களோ ஒன்று சேர்ந்தால் கச்சேரி பலமாக களைகட்டும்.

இப்படி பல அற்புதமான விஷயங்கள் இருந்த போதும் கூட்டுக் குடும்பத்தின் அசௌகரியங்களும் என் கண்களுக்கு தப்பவில்லை.  மருமகள்கள் சுதந்திரமாக செயல்பட முடியாமல் இருந்த்து. அவர்களுக்கென்று தனியான எந்த ஒரு கனவோ , ஆசையோ  இருந்திடாமல் இருத்தலே நல்லது என்பது போன்று இருந்த்து.

திருமண பந்தந்தில் அன்னியோன்னியம் உணர அவர்களுக்கென்று ஒரு பிரைவேசி இல்லாமல் இருந்த்து. இந்த பெண்களின் அபிலாஷைகள் குறித்து எவர்க்கும் சிந்தனை இல்லாமல் இருந்த்து. என்னதான் சேவைகளிலும் , பணிகளிலும் , பந்தங்களிலும் தம்மை மறக்கடித்துக் கொண்ட போதும் ஒரு வித ஏக்கம் இவர்களிடத்தில் நீங்காமல் தங்கி விடுவதாக நான் உணர்கிறேன்.

அவர்களின் கணவர்கள் கூட மனைவிக்கென்று தனியாக எதையும் சிந்தித்த்தாக உணர முடியவில்லை. வளரும் வரை அப்பா , திருமணமான பின் கணவன் , வயதான பிறகு மகன் என இவர்களே அவர்களுக்காக முடிவுகளை எடுக்கின்றனர். இது தனிமனிதர்களின் இயலாமையா அல்லது எல்லையா அல்லது இவ்வகை வாழவு முறையின் குறைபாடா என்று என்னால் உணர முடியவில்லை. என் புரிதல் தவறாக்க் கூட இருக்கலாம். 

இருப்பினும் ஒருவர் விரும்பினால் தன் வாழ்வை எப்படி வேண்டுமானாலும உருவாக்கிக் கொள்ளலாம் என்கிற அடிப்படையில் , பிறர் என்ன சொல்வாரோ எனறு இவர்களும் அந்நிலை தொடர முக்கிய பங்கு வகித்தார்கள் என்பதையும் கண்டேன்.

ஏனென்றால் ஒரு சமுகமாக சேர்ந்து இருக்கும் போது எதைச் செய்தாலும் அனைவரையும் சார்ந்த ஒரு முடிவாகவே எடுக்க வேண்டியிருந்த்து. மற்றவர்களுடைய எல்லைகளை புரிந்து கொண்டு அவர்கள் மனம் நோகாதவாறு தன் செயல்களை திட்டமிட வைக்கிறது. ஆயினும் இதுவெல்லாம் ஒவ்வொருவரும் ஒரு ஒரு மாதிரி எடுத்துக் கொளகின்றனர் . ஒரே விதிமுறை என்றெல்லாம் குழப்பிக் கொள்ளாமல் இருப்பதே சாலச் சிறந்த்து.

ஒவ்வொன்றிலும் ஏதோ ஒரு அசௌகரியமும் அதே சமயம் அற்புதமும் சேர்ந்தே இருக்கிறது. இந்த முரண்பாட்டை உணர முடியாதவர்களும், உணர்ந்தாலும் புரிந்து கொள்ள இயலாதவர்களும் குறைகளை சொல்ல நேரிடுகிறது. இது தவிர்க்கமுடியாது என்று உணர்ந்து ஆனந்தமாக ஏற்றுக் கொள்ப்வன் தனக்குள் அமைதியடைந்து ஆனந்த்த்தின் உருவமாகிறான்.

சித்தூர் ஷணங்கள் வாழ்க்கையை , அதன் முரண்பாடுகளை சேர்த்த அழகான மலர்களை , அவற்றின் நறுமணங்களை ரசிக்க கற்றுக் கொள்ள  எந்தன் தடாகத்தில் பல தெய்வங்கள் மலர்ந்து என் வாழ்வை அழகாக்கின.

அவையே கேள்விகளை நறுமணமாக்கி என் சுவாசத்தில் கலந்து உயிரில் தீ முட்டின . மறுநாள் புறப்பட வேண்டிய பயணத்தை எண்ணி மாலைப் பொழுதின் மஞ்சள் வெயிலில் பட்சிகள் படபடக்க மாடியில் நின்றிருந்தேன்.

இது ஒரு பொன்மாலைப் பொழுது
வாண மகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
                பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ
வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதிதரும்
உலகம் ஒரு நாள் நீதி பெறும்
திருநாள் நீகழூம் சேதி வரும்
                கேள்விகளால் வேள்விகளை நான்செய்வேன்

ரேடியோ  மூலம்  விவிதபாரதியில் வைரமுத்து தெய்வங்களை வர்ணித்துக் கொண்டிருந்த்தார்

அந்த வர்ண்ணையின் கிறக்கத்தில் நானும் கண்மூடி ....... நேரம் போனது தெரியாமல்

என்னடா சாப்பிட வரலயா ? ஊருக்கு போகனும்னு கவலையா ? பாட்டி தெய்வம் குரல் கேட்டு இருட்டில் கண் விழித்தேன்

எனது தெய்வங்கள் வானில் நட்சத்திரங்களாய் விரிந்து இருந்தார்கள்

எத்தனை தரிசித்தேன் என்று தெரியவில்லை

எத்தனை எனக்காக இன்னும் காத்திருக்கிறது என்றும் தெரியவில்லை

எத்தனை இருந்தாலும் என் வானிற்கு அழகு சேர்ப்பது அந்த ஒரு நிலா மட்டும்தான்

அதன் ஒளியில்தான் இத்தகைய தெய்வ நட்சத்திரங்களையாவது தரிசிக்க முடிகிறது

மேலும் பல தெய்வங்களை நட்சத்திரங்களாய்  என் வானில் வலம் வரச் செய்வேன் .

அது வரை காத்திருங்கள் .................................................

No comments:

Post a Comment