Thursday 25 April 2013

நாடக மேடையில் சுஜாதா # கடவுள் வந்திருந்தார் # ஆர்வீஎஸ் # இளைஞ்ர் பாரதி மணி

இந்த  பதிவு  75 வயதைக்  கடந்தும்   மேடையை   அனைவரும்   ரசிக்கும் படி  ஓடியாடி  கலக்கிக்  கொண்டிருகும்  ஒரு  அற்புத  கலைஞரான  திரு பாரதி மணி   அவர்களது   உழைப்பிற்கும்  உற்சாகத்திற்கும்  நன்றிகளை  சமர்பித்திட

எழுத்துக்களும்  புத்தகங்களும்தான்  எத்தனை  எத்தனை  விதமான மனிதர்களை  நமக்கு  அறிமுகப்படுத்துகின்றன

படிக்கும்  பழக்கம்  உருவாக்கிய  பலரது  எழுத்துக்கள்  பஜ்ஜிக்கு சுற்றித்தரும்  காகிதத்தை  கூட  விட்டு  வைத்தது  இல்லை என்பதுதான்  உண்மை

எழுத்து   அதை  சரியாக  உப்யோகப்படுத்துபவனின்  கையில் வெளிவருமேயானால் அது  மனித சமுகத்திற்கே  வரம்   அதனால்தான்  சுஜாதா காலம்  கடந்து  நிற்கினறர்ர்

நான்  படித்த  சாண்டியல்னும் ,  கோவி மணிசேகரனும்,  அனுராதா ரமணனும்,  இந்துமதியும்,  லக்ஷ்மியும்,  தேவனின் அப்புசாமியும் சீதேபாட்டியும்  தமிழ்வாணனின் சங்கர்லாலும் எத்தனை  சொல்லிக்  கொடுத்தார்கள்  என்பதை படடியலியடமுடியாது

சுஜாதாவின்  அறிவியல் முளை  பகிர்ந்த  கதைகளை  அளவிடமுடியாது.. ஆன்மிக  தேடுதலுக்கு   அச்சாரமிட்ட பாலகுமாரன்  , அவர்தம் தோழர்  மாலன் ,  சுதாங்கன்,  கிரைம் நாவலை அறிமுகப்படுத்திய ராஜேஷ்குமார் ,  சுபா,  பட்டுக்கோட்டை பிரபாகர் என வரிசை   நீண்டுகொண்டே போகிறது

ஆனந்த விகடனில்  அறிமுகம்  கொண்ட  வண்ணதாசன்,  நாஞ்சில் நாடன்,  ராகி ரங்கராஜன் ,  உலக சினிமாவை வரிசைப்படுத்திய அஜயன் பாலா என இன்றும் இவை தொடர்ந்து கொண்டே போகிறது

நாடகங்கள்  அதிகம்  கண்டிராவிட்டாலும்   கிரேஸி மோகன்.  எஸ்வி சேகர்.  வொய்ஜி ,  சோ என  பலர்  டிவிக்களில்   தோன்றி  ரசிக்க வைத்திருக்கின்றனர். . ஆனால்  நேரடியாக  அனுபவிக்கும் வாய்ப்பை கிரேஸி மோகன்  ஒரு  ஈஷா திருவிழாவில் கொடுத்தார்

இந்த வகையில் எனது வாழ்வின் சமீபத்திய வரவுகள்  எழூத்துக்கு ஆர்வீஎஸ்ஸும் ,  நாடகத்திற்கு  பாரதி மணியும்  அதுவும்  இவர்கள் பேஸ்புக்  தந்த  வரங்கள்

ஆர்வீஎஸ்ஸை  குருவி  ராமேஸ்வரம்   சிவனார்  கோவில்  குருக்கள் கொண்டு வந்தார் என்றால்  பாரதி மணியை  சுஜாதாவின்  கடவுள் வந்திருந்தார் கொண்டு வந்தார்

அதுவும்  பாரதி மணியின்  இந்த நாடகத்திற்கு  நேசமணி  ராஜகுமாரன் , ஆர்விஎஸ்  மற்றும்  பிரியா கல்யாணராமன்  என பலர் எழுதிய விமர்சனங்கள்  மேடைக்கு வந்திருந்த கடவுளையும்  பாரதி மணியையும்  என்னருகே கொண்டு வந்ததிருந்தார்கள் என்றால் அது மிகையாகாது

நாடக்த்தை காண நான் சென்னையில் இல்லாவிட்டாலும் , பிரசவத்திற்கு செல்லும் பெண்ணைப் போல பாரதி மணி . நாடகத்திற்கு 2 தின்ங்கள் முன்பு அவஸ்தையை வெளிப்படுத்தியிருந்த அந்த பேஸ்புக் ஸ்டேட்டஸ் என்னால் மறக்க முடியாது

நான் உன்னை காணாவிட்டாலும் . இதுவரை சந்தித்திராவிட்டாலும் இவர்கள் மூலம் உன்னையும் தரிசித்தேன்

அற்புதம் பாரதி மணி சார்

என் வாழ்த்துக்களையும் அன்போடு ஏற்றுக் கொள்ளுங்கள்

தாங்கள் படித்து மகிழ இதோ ஆர்வீஉஸ்ஸின் நாடக விமர்சனம்

http://www.facebook.com/photo.php?fbid=10151425491832545&set=a.499151987544.257845.553282544&type=1

இதோ இதே நாடகத்தையும் திரு பாரதி மணி அவ்ர்களை  பற்றியும் இன்னொரு அற்புத எழுத்துக்கள்

 http://balhanuman.wordpress.com/2013/04/26/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5/

No comments:

Post a Comment