Saturday, 27 April 2013

நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 24



நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 24

நாகைநல்லூர் - சீதா கல்யாண வைபோகம்

முசிறியில் பேருந்தில் ஏறிய நபர் டைரவருக்கு நன்கு அறிமுகமானவர் போலும் . சில விசாரிப்புக்களுக்கு பிறகு டேப்ரிக்கார்டரை போடச் சொன்னார். அவர்கள் பேச்சில் இருந்து டைரவருக்கு பழங்காலத்திய திரைப்படப் பாடல்கள் அதிகம் பிடிக்கும் என்று அறிந்து கொண்டேன்.

அதற்கு தகுந்தார் போல அவரும் பழைய பாடல்களையே தொகுத்து அந்த கேசட்டில்  வைத்திருந்தார். பெரும்பாலான பாடல்கள் திருமணக் காலங்களில் பாடுபவையாக இருந்தன. இது அந்த விடுமுறையில் நடந்த திருமணங்களை எனக்கு நினைவு படுத்தியது.

எங்களது குடும்ப திருமணங்களில் யார் இருக்கிறார்களோ இல்லையோ , ரஷிக்கலால் பாக்கும், நாகைநல்லூர் பன்னீர் ரசமும் , வேணுவின் நாதஸ்வரமும் தவறாது இருக்கும்.

மாப்பிள்ளை அழைப்பு அன்று மாலை ஸ்டேன்டர்ட் டிபன். சம்சாரம் அது மின்சாரம் பட்த்தில் விசு பேசுவது போல , நெய் செர்ட்ட சொட்ட கேசரி இருக்கும். அதற்கு காம்பினேஷன் சூடான நீள வாழ்க்காய் பஜ்ஜியும் கெட்டி சட்னியும் கிடைக்கும் .போதாக்குறைக்கு பில்டர் காபி எந்நேரமும் அடுப்படியில் தயாராய் இருக்கும்.

இந்த காபி பைத்தியம் எனக்கும் நிறைய பிடித்திருக்கிறது. என் அக்காவின் திருமணத்தின் போது பால்காரன் லேட் ஆனதால் காபி போட நேரமாகியது. அதுவரை என் சித்தப்பா மணப்பலகைக்கு கூட வரமுடியாமல் தவித்தார். காபி என்ன அவ்வ்ளவு பெரிய வஸ்துவா எனத் இன்னமும் புரியவில்லை. ஆனாலும் அது ஒரு மயக்க்த்தை , ஈர்ப்பு சக்தி வாய்ந்த்தாக் இருந்த்து.

திருச்சியில் இருந்த போது பத்மா காபி ஒர்க்ஸ் காபி சூப்பராக இருக்கும். அதே போல் தெப்பகுளத்தில் உள்ள மாயவரம் லாட்ஜ் காபியும் தேடிச் சென்று குடிக்கலாம். ஆனால் இவை எல்லாம் விட எனக்கு மிக பிடித்தமானது pgdca படிக்கும் போது , நண்ப்னான ஸ்ரீகாந்த் வீட்டு காபிதான் என்றால் அது மிகையாகாது.

அவருடைய அப்பா நாரயணசாமி அய்யர் பெரியக் கடைத் தெருவில் துணிக்கடை வைத்திருந்தார். அவரது அம்மாவின் கையில் காபி போட்டு கொண்டு வரும் போது, கைப்க்குவம் என்று சொல்வார்களே அது அப்படியே இருக்கும்,

அத்தகைய காபியை இதுவரை நான் வேறு எங்கும் குடித்த்தில்லை. அதற்காகவே அவரது வீட்டிற்கு சென்றுள்ளேன். அதை விட இதை அந்த பெரியவர்கள் இடத்திலும் நேரடியாக அஙகீகரித்து உள்ளேன் என்பதுதான் மகிழச்சி. நல்ல பெரிய லோட்டாவில் இதற்காகவே எனக்கு கிடைக்கும் .

மேலும் காபிக்கும் ரசனைக்கும் தொடர்ப்பு உண்டோ என ஆச்சரியம் எனக்குள் உண்டு. வாழ்வில் ரசனை வாய்நத் பெரும்பாலான மனிதர்கள் இடையே காபி பழக்கம் இருப்பதை கண்டிருக்கிறேன். இது காபியால் விளைந்த்தா அல்லது ரசனை மிகுந்து இருப்பதால் காபி கூட ஆனந்தமாய் இருக்கிறதா எனத் தெரியவில்லை.

ஆயினும் ஏதேனும் ஒரு உளவியல் தொடர்ப்பு இருக்க வேண்டும் எனறு தோன்றுகிறது. அதுவும பண்டைய சோழ தேசத்தின் இன்றைய காவிரிக் கரையில்  நம்மாத்து  காபியை குடிக்க  நேர்ந்தால் நிச்சயம் பேஷ் என்றுதான் சொல்லத்தோன்றும். அந்த அளவிற்கு இந்த நம்மாத்துக்களில் காபி இரண்டற கல்ந்தீருந்த்து.


இதனால்தானோ என்னவோ தியாக பிரம்மத்தின் வாரிசுகளுக்கும் காபி பிடிக்கிறது என்று நினைக்கிறேன். வெண்பொங்கலும் , வடையும் காபியோடு கலந்து எப்ப்வும் கிடைக்கும் என்று பல சங்கீதக்கார்ர்கள் சொல்ல கேள்விப்ட்டு உள்ளேன்,

மறுநாள் காலை டிபன் இட்லி , வடை , வெண்பொங்கல் , கெட்டி சட்னி , சாம்பாருடன் கூடவே மறக்காது இரண்டாவது காபி தயாராக இருக்கும்.
அப்படித்தான் கோவையில் நடந்த பாலாஜி பாவாவின் திருமணமும் இவைகளோடு நிகழ்ந்த்து.. அவரது திருமணம் ஆர் எஸ் புரம் டீபி ரோட்டில் கவர மகாஜன திருமண மண்டபத்தில் நடநத்து மிகவும் சௌகரியமாகப் போனது.

திருமணத்திற்கு முந்தைய நாள் ஜானுவாசம் எனும் மாப்பிள்ளை அழைப்பு ரத்தின விநாயகர் கோவிலில் நடைபெற்றது , நாங்கள் எங்கள் நண்பர்களோடு டீபி ரோட்டை (முதல் முதலாக கோவையை ) சுற்றிப் பார்க்க் ஆரம்பித்தோம். 

மண்டபத்திற்கு அருகே போளுவாம்பட்டி பர்வத்ம் அத்தையின் மகள் வீடும் , பரமத்தியில் தலைமை ஆசிரிய்ராக பணியாற்றிய திரு கோவிந்தாரஜன் மாமா வீடும் இருந்தன. அவ்ர் பணி ஓய்வு பெற்று இருந்தார். நலுங்கு பாட்டாக பாலாஜி பாவா நீல வாண ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா என்ற வாழ்வே மாயம் பாட்டை பாடினார்.

இரவு முதல் முதலாக தமிழநாடு வேளாண்மை கல்லூரியில் நண்பன் ரவியுடன் அடியெடுத்து வைத்தேன் . அன்றைய இரவு உணவாக அங்கு புரோட்டா பரிமாறினார்கள். ஒருவழியாக ஊர் திரும்பிய போது நாகைநல்லுர் சீதா கல்யாண வைபவத்திற்கு அழைப்பு வந்திருந்த்து

நாகைநல்லூர் எனும் குக்கிராம்ம் காட்டுப்புத்தூர் அருகே காவிரிக் கரையில் அமைந்துள்ளது. இங்கு உள்ள பிராமணர்கள் சமையல் செய்வதுதான் தொழில். நளபாகம் , பீமபாகம் என்பார்களே அதுபோல நாகைபாகம் என்று கூட சொல்ல்லாம்.

அந்த காலத்தில் இவர்களது சமையலை போலவே இவர்களோடு சேர்ந்து பிரசித்தி பெற்ற மற்றொரு பொருள் கடா மார்க் பெருங்காயம். இவர்களது சமையல் கலை திருமணங்களை அலங்கரித்த்து என்றால் அது மிகையாகாது. சமைப்பதை ஒரு கலையாக செய்வதை இம்மக்களிடம் இருந்து கற்கலாம்

அது போலவே சாப்பிடுவதும் ஒரு அற்புதக்கலை. எதை எதனோடு இணைத்து சாப்பிட வேண்டும் என்பதை அறிய வேண்டும். இத்தகைய உணவு முறைகள் சாதாரணமாக பிராம்மண குடும்பங்களில் பழக்கமாகி இருந்தன. தான் பணிபரிவதும், வாழ்வில் இதர காரியங்களை செய்வதும் இந்த ஒரு வேளை உணவுக்குத்தான் என்பதை நன்றாக அறிந்து வைத்திருந்ததைப் போன்று இவர்களது வாழ்க்கை முறை இருந்தது.

சமைப்பவருக்கும் , சாப்பிடுபவருக்கும் நிறைய நெறிமுறைகளை ஏற்படுத்தி இருந்தனர். அன்னமே ஆதார சக்தி என்பதை உணர்ந்து , சாப்பிடும் முன்பு அனைவரையும் ஆசீர்வதித்த பின்னரே ஒரு சில கவளங்களை எடுத்து இலையின் பக்கத்தில் பஞ்ச பூதங்களுக்கு நிவேதனமாக வைப்பர்.

அதே போல் சாப்பிட்டு முடித்தவுடன் எழுந்திருக்க கூடாது. பெரியவர்கள் எழும் வரை அமைதியாக அமர்ந்திருக்க வேண்டும். உணவு உட்கொள்ளும் போது , தாணியங்களை விதைத்து, அறுவடை செய்தவர்களில் இருந்து, சமைத்து , பரிமாறியவர்கள் வரை அனைவருக்கும் , அதை ஆசீர்வதித்து தந்த பூமாதேவிக்கும் நன்றியான உணர்வில் உட்கொள்ள வேண்டும் என்பதால் அமைதி காக்க வேண்டும். பேசக் கூடாது.

பாத்திரங்கள் பரிமாறும் ஒலி மட்டும் கேட்டது என்று நாயன்மார்கள் புராணத்தில் படித்திருக்கிறேன். அது போன்று உணவே உயிர்சக்தியை வளர்க்கிறது. உடலே அனைத்திற்கும் ஆதாரமாய் இருக்கிறது என்பதால் அதன் ஆரோக்கியத்தை பராமரிக்கும் விதமாக உணவு முறை அமைக்கப்பட்டு இருந்தது. 

அதே போல் சமைக்கும் பொருள்களில் உள்ள சத்துக்கள் , அதை கொதிக்க வைக்கும் தண்ணீரில் போய் விடுவதை உணர்ந்திருந்ததார்கள். அந்த என்சைம்களே அந்த தாணியங்களை , காய்கறிகளை ஜீரண்ம் செய்திட உடலுக்கு உதவுகிறது. அதை விடுத்து வெற்று சக்கையை உண்டால் என்ன செய்வது.

பருப்பு வகைகள் ஜீரணம் ஆகவில்லையெனில் வாயுக் கோளாறுகள் ஏற்படும். குடல் சுத்தமே உடல் சுத்தம் என்ற இயற்கை உணவு வழிமுறையை கடைபிடித்த போதும், அதே சமயம் வாழ்வில் ஆனந்தமான ரசனையை கொண்டு வர ரூசியாக சமைப்பதை கலையாக உருவாக்கி இருந்தனர் என்றால் அது மிகையாகாது.

இதனால் பருப்பை வேக வைத்த தண்ணீர், காய்கறிகளை வேக வைத்த தண்ணீர், அரிசி வேக வைத்த தண்ணீர் ஆகியவற்றுடன்  சீரகத்தையும், மிளகையும தட்டிப் போட்டு மஞ்சள் தூளோடு சேர்த்து கொதிக்க வைத்து ரசம் என்று ஒரு பதார்த்தை தயார் செய்தார்கள். 

மஞசள் ஒரு கிருமி நாசினியாகவும், சீரகமும் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும், மிளகு ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.  இத்தகைய மண்ணின் விஞ்ஞானத்தை, உடலை பராமரிக்கும் விஞ்ஞானத்தை அதுவும் நாக்குக்கு ரூசியாக சமைத்து போடுவதில் இவர்களுக்கு நிகர் இவர்கள்தான். 

அதே போல் சமைக்கும் போது ஒருவர் எத்தகைய மனநிலையில் , உணர்வு நிலையில் இருக்கின்றாரோ அத்தகைய மனநிலையையும் . உணர்வு நிலையையும்தான் அந்த உணவை சாப்பிடுவர்களும் பெறுகிறார்கள் என்பதை ஆழுமாக உண்ர்ந்திருந்தார்க்ள்.

அதனால் வீட்டில் பெண்கள் சமைக்கும் போது வெட்டி பேச்சுக்களை பேசாது , கோபத்தோடும், பிற உணர்வுகளோடும் சமைத்திடக்கூடாது என்பதற்காக சமையல் கட்டிற்கு செல்வதற்கு முன் கோவிலுக்கு செல்வதைப் போல குளித்து விட்டு செல்ல வேண்டும் என வைத்திருந்தார்கள்.

அதே போல் சமைக்கும் போதும் வேறு சிந்தனைகளாலும் உணர்வுகளாலும் கவனம் சிதறக் கூடாது என்பதற்காக கீர்த்தனைகளை பாடிக் கொண்டோ , ஸ்லோகங்களை சொல்லிக் கொண்டோ சமைத்தார்கள். ஆனால் இன்று இத்தகைய வழிமுறைகள் இந்த சமுகத்திலேயே குறைந்து வருவதை நான் காண்கிறேன். 

எனது பால்ய கால உறவுகள் வீட்டிலேயே இத்தகைய மாறுபாட்டை நான் உணர்கிறேன். ஆயினும் இத்தகைய முறைகள் அழிந்து விடாமல் இருக்க வேண்டி அவ்வபோது தங்கள் குலதெய்வங்களுக்கு சமாராதனை என்று விமரிசையாக கொண்டாடுவார்கள். இது அனைவரும் ஒரிடத்தில் இணைந்து வாழ்க்கையை சில ஷணங்களாவது பரிமாறிக் கொள்ள வாய்ப்பு அளிப்பதுடன், முன்னோர்களால் இத்தகைய வழிமுறைகளை தங்க்ளது அடுத்த தலைமுறைக்கு சொல்லித் தர நேரிடுகிறது.

இத்தகைய நிலையில் சமைப்பவர்களால் அந்த உணவிற்கு அதிக சுவை கூடுகிறது. அந்த சுவை உண்பவனுக்கு வாழ்வில் ரசனையை கூட்டுகிறது. ரசனை எது எப்படி இருந்தாலும் அதை அப்படியே ரசிக்க கற்றுக் கொடுக்கிறது. கற்றல் அனுபவத்திற்கு இட்டுச் செல்கிறது. அனுபவம் அமைதியைத் தருகிறது. அமைதி இறைவனை நாடுகிறது. இறைவன் செயலாய் , ஆனந்தமாய் அந்த மனிதனுக்குள் வெளிபடுகிறான்.

அப்படி வெளிபடும் ஒரு பதார்த்தம் தான் , நாகை நல்லூர் சமையலின் முக்கிய அம்சமான பன்னீர் ரசம்.  மதிய சாப்பாட்டில் இவர்கள் வைக்கும் பன்னீர் ரசத்தை டம்ளரில் வாங்கி குடிக்காதவர்கள் வெகு குறைவாக இருப்பார்கள். .இப்படி நாகை நல்லூரின் ஒரு சமையல் குழுவின் மெனுவிற்கே அத்தகைய டிமான்ட் இருந்த போது , அந்த ஊரே சேர்ந்து நின்று ஒரு கல்யாணத்தை நடத்தினால்.., அதைப் பற்றி செர்ல்லவா வேண்டும்.

ராமநவமி உற்சவம் இங்கு 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அதில் ஹைலைட் சீதா கல்யாண வைபோகம்தான். அவர்களது மகளாகவே சீதா தேவி அவதரிப்பாள். வைபவத்திற்கு வந்தவர் அனைவரும் மாப்பிள்ளை வீட்டுக்கார்ர்கள்தான் என்கிற மனோ பாவம் மேலோங்க ஊர் கூடி நின்று நடத்தும.

பெரிய பெரிய சமையல் ஜாம்பவான்கள் தங்களது குருநாதரின் கீழ் பணிபுரிவார்கள். இது ஒன்றும் பெரிய கிராம்ம் அல்ல. அக்ரஹாரத்தில் நடைபெறும் இந்த கல்யாண வைபவத்திற்க பாம்பே , சென்னை என மக்கள் திருளுவார்கள்.

நேர்த்திக்கடன், வேண்டுதல்கள் என ஊரே களைகட்டும். நம்மாத்துக் கல்யாணம் , நம்மாத்துக் கல்யாணம் என்று ஒலிபெருக்கிகளில் சொல்லிக் கொண்டே நம்மை அன்பில் மூழ்கடித்துவிடுவார்கள் இந்த ஊர் மக்கள். மாயா பஜார் போல நம் இலை முழுவதும வெவ்வேறு பதார்த்தங்களால் நிரம்பி வழியும்.

இவர்களது நளபாகத்தை தவிர பக்தர்கள் ஆங்காங்கே நேர்த்தி கடனாக பல பட்சணங்களை செய்து கொண்டு வருவார்கள். உணவு வகைகள் போலவே ராமனுக்கும் சீதைக்கும் கூட சீர்செனத்தி எங்கிங்கிருந்தோ வந்து சேரும்

அத்தனை உணவையும் விரயம் செய்யாது சாப்பிட்டு முடித்தால் மோரு சாத்த்திற்கு தொட்டுக் கொள்ள இஞ்சித் துவையல் ஸ்பெஷலாய் தயாராகி இருக்கும். எதிர் வீட்டு பட்டம்மா மாமியின் வேண்டுதல் காரணமாக இந்த வைபவத்தில் கலந்து கொணட்து நினைவில் எழுந்த்து.

அவர்களது மகள் ராதா அக்காவிற்கு காட்டுப்புத்தூர் புகுந்த வீடும் கூட. காவிரியின் கரையில் வாழையும் , வெற்றிலையும் இங்கு கொடி கட்டி பறக்கும். முதல் பந்தி பரிமாறியவுடன் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்துவதால் இரண்டாம் பந்திக்கு சற்று கால தாமதம் ஆகும்.

திருமணங்களைப் போலவே வெற்றிலை தர்ம்பூலத்துடன் திண்ணைகளில் அம்ர்ந்து வெயில் குறைவதற்காக ஓயவெடுப்பார்கள். ஆனாலும் உணவு பந்தி மாலை 4 மணி வரை தொடர்நது கொண்டிருக்கும். இந்த குக்கிராமத்தில் , அதுவும் அனைவரும் சமையல் கலைஞர்களாய் இருந்தாலும் இந்த வைபவத்திற்கு கிடைக்கும் ஆதரவு நம்மை பிரமிக்க வைக்கும்.

அதுவரை காவிரிக் கரையின் ஒரே நண்பன் எங்களுக்கு மோகனுர் சுந்தர் மட்டுமே. இனி அது கொண்டு வரப்போகும் பட்டாளத்தை அறியாதவண்ணம் நான் அறியாத வண்ணம் வாழ்க்கை பயணத்தில் சென்ற கொண்டிருந்தேன்.

இடது புறம் வயல் வெளியும் வலது புறம் காவிரி ஆறும் , இரண்டுக்கும் நடுவே வளைந்து நெளிந்து செல்லும் பாதையும் வசந்த காலத்தை நினைவூட்டின. கொள்ளிடம் பாலம் மனதை கொள்ளையடித்த்து. 

தொலைவில் ஸ்ரீரங்கத்து கோபுரம் ஆச்சரியத்துடன் பார்க்க வைத்த்து.
பலர் பகவானை எண்ணி கண்ணத்தில் போட்டுக் கொண்டனர். எனக்கு அப்போது ஸ்ரீரங்கத்து புளியோதரையை பற்றி தெரியாது. தெரிந்திருந்தால் நானும் பகவானை சேவித்து இருப்பேன் என்று நினைக்கிறேன். 

கிண்டலுக்காக சொல்லவில்லை. கோவிலில் இறைவனை விட , அதன் கலைநயங்களும், வேலைப்பாடுகளும், அவனுக்காக படைக்கபடும் நைவேத்தியங்களும் மற்றும் அவனது பக்தர்களுமே என்னை அதிகம் ஈர்ந்திருந்தனர்.

அதனால் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். மாம்பழச் சாலையின் வாசமும், அதைத் தொடர்ந்த அகண்ட காவிரின் அற்புத தரிசன்மும் , மனதை கொள்ளை கொண்டன. காவிரி பாலத்தில் செல்லும் போது எதிரே உச்சிப் பிள்ளையார் உச்சியில் நின்றபடியே வரவேற்றார். எதிரே தெரிந்த படித்துறைகளில் எதற்கு அருகில் நான் இருக்கப் போகிறேன் என்று நான் நினைத்துக் கொண்டேன்

பாலத்திற்கு அடியில் தண்ணீர் பிரவாகமாக ஓடியது. முன்பு ஒரு முறை சிறுவயதில் தாசு மாமா வீட்டிற்கு வந்திருந்த்து நினைவிற்கு வந்த்து. அவர்கள் வீட்டு ஊஞ்சலும் , அங்கு சாப்பிட்ட பலாப்பழ பாயசமும் நினைவில் ருசி கொட்டின. பின்பக்கம் அப்போது பசுக்கள் வைத்திருந்தார்கள்.

பின்பக்க வாசலை திறந்தால் 50 அடி தூரத்தில் காவிரி நதி ஒடும். முன்பு ஒரு முறை வெள்ளம் வந்த போது அவர்கள் அனைவரும் தண்ணீர் வடியும் வரை மாடியிலேயே இருந்த்தாக கேள்வி பட்டிருந்தேன்,
நரசுப் பாட்டி மற்ற பாட்டிகளைப் போல அதிகம் கதைகள் சொல்லியதில்லை, ஆனால் மடி என்றும் ஆசாரம் என்றும் கடுமையான நெறிமுறைகளை தனக்குள் வைத்திருந்தார். அவரைப் போலவே குழந்தைகளும் அதை கடைபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்.

அதே சமய்ம அதை எதற்காக கடைபிடிக்க வேண்டும் என்பதையும் எடுத்துச் சொல்வார். இந்த சடங்குகளின் பின்னால் உள்ள த்த்துவத்தை ஒரளவு அறிந்து வைத்திருந்தார். தாசுமாமாவை பார்த்தால் திரையுலக சிரஞ்சீவி கேபி பாலசந்த்ரை பார்க்க வேண்டியதில்லை . அச்சு அசலாக அப்படியே இருப்பார்.

நினைவுகள் காவிரி யாற்றைப் போல சுழித்துக் கொண்டு பிரவாகமாய் ஓடிக் கொணடிருந்தன. பேருந்து அண்ணாசிலை நிறுத்த்த்தில் நின்றது. காவிரி மண்ணில் காலடி வைத்தேன்.

இந்த மாலைப் பொழுதில் நாம்க்கல் பள்ளி மைதானத்தில் நானும் , கணேஷும் மற்ற நண்பர்களும் ரப்பர் பந்தை வைத்துக் கொண்டு, புட்பால் கோல் போஸ்டை வலையாக கருதி கைப்பந்து விளையாடியது நினைவில் எழுந்த்து.

இருள் புகும் 6,30 மணிக்கு சிவசக்தி தியேட்டரில் சீர்காழி உரக்க பாடி விநாயகனை வரவேற்பார். அந்த ஒலியின் ஓசையால் நேரம் அறிந்து விளையாட்டை முடித்து வீடு திரும்புவோம்.

அது போன்ற ஒரு மாலை நேரத்தின் இருளும் வெளிச்சமும் கலந்த பொழுதில் மேலசிந்தாமணியின் மாதுலங்கொல்லை அக்ரஹாரத்திற்கு ரிக்க்ஷா பிடித்தேன். சோழ தேசத்தின் காவிரிப் புனலில் புதிய தெய்வங்களை சந்திக்க சென்று கொண்டிருந்தேன்.

நீங்களும் பயணியுங்கள் என்னோடு ............

ச்ற்று இடைவெளி விட்டு

No comments:

Post a Comment